தற்பெருமை இல்லா அழைத்தல் வாழ்வு
இந்த உலக வாழ்வை வாழ்ந்து முடிக்கின்ற தருவாயில் பெரும்பாலான மனிதர்கள் கேட்கக்கூடிய கேள்வி “எனது வாழ்வின் பொருள் என்ன?” என்பதுதான். இந்த கேள்வி நிச்சயம் அழைக்கப்பட்டவர்களின் வாழ்விலும் எதிரொலிக்கக்கூடிய ஒன்றாகத்தான் இருக்கிறது. கடவுளுக்காக, இந்த உலக இன்பங்களை மறந்து, இந்த உலகம் சார்ந்து வாழாமல், தங்கள் வாழ்வை இறைவனுக்காக அர்ப்பணித்த, இறைவனின் ஊழியர்களுக்கு என்ன தான் கைம்மாறு? என்பது பேதுருவின் கேள்வி. நிச்சயம், இயேசுவைப் பின்தொடர்வதற்கு வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய ஆசீர்வாதம். அப்படியிருக்கிறபோது, யாரும் நிச்சயம் கைம்மாறு என்று எதிர்பார்ப்பது இல்லை. இயேசுவின் ஊழியர்களாக இருப்பதே, நிறைவான செயல்தான். இருந்தாலும், மனித கண்ணோட்டத்தில் பேதுருவின் கேள்விக்கு இயேசு அருமையான செய்தியைத்தருகிறார். இயேசுவின் ஊழியர்களாக இருக்கிறோம் என்கிற தற்பெருமை, நம்மை தவறான இடத்திற்கு அழைத்துச் சென்றுவிடும், என்பது இயேசு நமக்கு விடுக்கும் எச்சரிக்கையாக இருக்கிறது. பேதுரு இந்த மனநிலையோடு தான் கேட்கிறார். நான் இயேசுவின் சீடன். எனவே, எனக்கென்று இந்த சமூகத்தில் ஒரு...