Category: இன்றைய சிந்தனை

ஆண்டவரே இரக்கமாயிரும். ஏனெனில் நாங்கள் பாவம் செய்தோம்

இரக்கத்தின் பரிமாணங்களாக நாம் பலவற்றைப் பார்க்கலாம். அந்த இரக்கத்தின் பரிமாணங்களும் முக்கியமான ஒன்று மன்னிப்பு. அந்த மன்னிப்பு பற்றிதான் இந்த திருப்பாடல் நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. பொதுவாக, நாம் கடவுளிடத்தில் செபிக்க வருகிறபோது, நமது மனநிலை எப்படிப்பட்ட மனநிலையாக இருக்கிறது? ஒருபோதும் மன்னிப்பிற்காக நாம் செபிப்பது கிடையாது. கடவுளின் இரக்கத்தைப் பெறுவதற்காக மன்றாடுவது கிடையாது. நம்முடைய தேவைகளை நிறைவேற்றுவதற்காகத்தான் கடவுளிடம் செபிக்கிறோம், கடவுளைப் புகழ்கிறோம். ஆக, தேவையை நிறைவேற்றுவது தான், நமது செபத்தின் மையக்கருத்தாக இருக்கிறது. ஆனால், இறைவனின் மன்னிப்பைப் பெறுவதற்கும் நாம் செபிக்க வேண்டும். அதனையும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை, இந்த திருப்பாடல் அழகாக எடுத்துக்காட்டுகிறது. இந்த திருப்பாடலை(திருப்பாடல் 51: 1 – 2, 3 – 4, 10 – 11, 12, 150)  “மன்னிப்பின் பாடல்“ என்று நாம் சொல்லலாம். கடவுளின் மன்னிப்பிற்காக, கடவுளின் அருளுக்காக, தாவீது கதறிய பாடல் தான் இந்த திருப்பாடல். இந்த திருப்பாடல்...

ஆண்டவரே! உமது வழியை எனக்குக் கற்பியும்

இந்த திருப்பாடல் (திருப்பாடல் 86: 1 – 2, 3 – 4, 5 – 6, 11) “தாவீதீன் செபம்” என்று சொல்லப்படுகிறது. இது ஏதோ குறிப்பிட்ட நிகழ்வை மையமாக வைத்து எழுதப்பட்ட திருப்பாடல் அல்ல. மாறாக, அன்றாட வாழ்க்கையில் தாவீது கடவுளோடு பேசக்கூடிய வார்த்தையாக இது நம்பப்படுகிறது. கடவுளின் தயவு, வழிகாட்டுதல், செய்யக்கூடிய எல்லாக்காரியங்களிலும் கிடைக்க வேண்டி பாடப்பட்ட, விண்ணப்பப்பாடல் தான், இந்த திருப்பாடல். இந்த திருப்பாடலை நாம் தியானிக்கிறபோது, வெறும் உதடுகளால் மட்டும் வார்த்தைகளைச் சொல்லாமல், உள்ளத்தோடு இணைந்து, கடவுளிடத்தில் வேண்டுதலை எழுப்ப வேண்டும். ஒவ்வொருநாளும் நமது வாழ்க்கையில் புதிய நாளைத் தொடங்குகிறபோது, கடவுளிடம் இந்த திருப்பாடலைச் செபித்து, அவருடைய வழிநடத்துதலைக் கேட்கலாம். ஒவ்வொருநாளும் பல முடிவுகளை நமது வாழ்க்கையில் நாம் எடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். படிக்கிற மாணவர்கள் முதல் வீட்டில் இருக்கிற பெரியவர்கள் வரை, ஒவ்வொருவரும் முடிவு எடுக்கக்கூடிய நிலையில் இருக்கிறார். அந்த முடிவுகளை...

நொறுங்கிய உள்ளத்தை இறைவா, நீர் அவமதிப்பதில்லை

திருப்பாடல் 51: 1 – 2, 3 – 4, 16 – 17 – நொறுங்கிய உள்ளம் என்பது என்ன? ஒருவர் செய்த நன்மைகளை மறந்து, அவருக்கு எதிராகச் செய்த தவறுகளை எண்ணிப்பார்த்து, மனம் வருந்துகின்ற உள்ளமே நொறுங்கிய உள்ளம். நன்மை செய்தவருக்கு எதிராகச் செய்த தவறுகளை நினைத்துப்பார்க்கிறபோது, குற்ற உணர்வுகள் மேலோங்கி, தன்னையே வெறுக்கக்கூடிய மனநிலை, இவ்வளவுக்கு கீழ்த்தரமாக இருந்திருக்கிறோமே என்று கழிவிரக்கம் கொள்கிற நிலை தான், நொறுங்கிய உள்ளம். தனக்கு மன்னிப்பு கிடையாதா? தான் தவறு செய்தவர், தன்னுடை பலவீனத்தைப் புரிந்துகொண்டு தனக்கு மன்னிப்பு வழங்கிட மாட்டாரா? என்று வேதனையோடு, மனத்தாழ்மையோடு, ஏக்கத்தோடு காத்திருக்கிற நிலை தான் நொறுங்கிய உள்ளம். திருப்பாடல் ஆசிரியர், நொறுங்கிய உள்ளத்தினராகக் காணப்படுகிறார். தன்னுடைய வாழ்வில் ஏராளமான நன்மைகளைச் செய்த இறைவனுக்கு எதிராக, தான் தவறுகளைச் செய்துவிட்டேனே, நன்றி உணர்வு இல்லாமல் வாழ்ந்துவிட்டேனே என்று வேதனைப்படுகிறார். அந்த நொறுங்கிய உள்ளத்தோடு கடவுளை ஏறெடுத்தும்...

ஆண்டவர் மீது நம்பிக்கை கொண்டவரே பேறுபெற்றோர்

கடவுள் மீது நம்பிக்கை கொண்டவரே பேறுபெற்றவர் என்று திருப்பாடல் ஆசிரியர் கூறுகிறார். ”ஆற்றலாலும் அல்ல, சக்தியாலும் அல்ல, ஆண்டவரின் ஆவியாலே ஆகுமே” என்கிற இறைவார்த்தையின் பொருள் இங்கே வெளிப்படுகிறது. இந்த உலகத்தில் வாழும் எல்லாருமே தொடக்கத்தில் கடவுளைப் பற்றிப்பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு கட்டத்தில், அவர்கள் அடையாளம் பெற்ற பிறகு, அந்த அடையாளத்தைக் கொடுத்தவரை மறந்துவிடுகிறார்கள். தங்களது சக்தியினால் தான் எல்லாம் முடிந்தது, என்று கடவுள் மீது வைத்திருந்த நம்பிக்கையை தங்களின் ஆற்றலின் மீது வைத்துவிடுகிறார். அது தான் அழிவிற்கான ஆரம்பம் என்பதை மறந்துவிடுகிறார்கள். இந்த திருப்பாடலைப் (திருப்பாடல் 1: 1 – 2, 3, 4 & 6) பொறுத்தவரையில் தன்னுடைய தனிப்பட்ட அனுபவத்தையும், இஸ்ரயேல் மக்களின் அனுபவத்தையும் ஒன்றிணைத்து ஆசிரியர் இதனை எழுதுகிறார். தாவீது அரசருக்கு அடையாளம் கொடுத்தவர் கடவுள். சாதாரண ஆடு மேய்க்கக்கூடிய சிறுவனாக இருந்த தாவீது, இஸ்ரயேல் மக்கள் போற்றக்கூடிய அரசராக மாற முடிந்தது என்றால், அது...

ஆண்டவரே இரக்கமாயிரும்

கடவுளுடைய இரக்கத்திற்காக திருப்பாடல் ஆசிரியர் இறைவனிடம் கெஞ்சி மன்றாடுகிறார். இந்த திருப்பாடலின் பிண்ணனி அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். பத்சேபாவுடனான தன்னுடைய தவறான செயல், இறைவாக்கினர் வழியாக உணர்த்தப்பட்டபோது, தாவீது உள்ளம் நொந்து வேதனையில், தன்னுடைய பாவக்கறைகளை மன்னிப்பதற்காக உருகிய பாடல் தான் இந்த திருப்பாடல். தன்னுடைய பலவீனத்திற்காக, தான் செய்த தவறுக்காக மன்னிப்பு வேண்டுகிறார். உண்மையான, உள்ளார்ந்த மனமாற்றத்தோடு இறைவனை நாடுகிறபோது, நிச்சயம் இறைவன் மனமிரங்குவார் என்கிற நம்பிக்கையை வெளிப்படுத்தக்கூடிய திருப்பாடல் இந்த திருப்பாடல் (திருப்பாடல் 51: 3 – 4, 5 – 6, 12 – 13, 14 & 17). இன்றைய நாளில் இந்த திருப்பாடலை நாம் சிந்திப்பது மிகவும் பொருத்தமான ஒன்று. ஏனென்றால், இன்று தவக்காலத்தை தொடங்குகிறோம். நமது வாழ்வை மாற்றுவதற்கான முயற்சியாக இந்த தவக்காலத்தைப் பயன்படுத்திக்கொள்ள அன்னையாம் திருச்சபை நமக்கு அழைப்புவிடுக்கிறது. இன்றைய நற்செய்தி வாசகமும் ஒட்டுமொத்த நமது வாழ்க்கை எப்படி அமைய...