Category: இன்றைய சிந்தனை

மதிப்புப் பெறுதல் !

இயேசுவின் ”செயல்வழிக் கற்றல் ” முறை இன்றும் தொடர்கிறது. உணவு அருந்தும் வேளையைப் பயன்படுத்தி இயேசு நல்ல மதிப்பீடுகளை மக்களுக்குக் கற்றுத் தருகிறார். குறிப்பாக, இயேசுவின் சீடர்கள் முதன்மையான இடத்தையும், மதிப்பையும் விரும்பித் தேட வேண்டாம் என்று அறிவுரை பகர்கின்றார். அதற்காக நடைமுறை எடுத்துக்காட்டுகளையும் தருகிறார். விருந்துக்கு செல்லும்போது விருந்தளிப்பவர் தருகின்ற மதிப்பைப் பற்றி இயேசு கூறுகின்ற எடுத்துக்காட்டு நமது வாழ்விலேகூட எப்போதேனும் நடந்திருக்கச்கூடிய ஒரு நிகழ்வுதான். நாம் முதன்மை இடத்தைத் தேடினால், அதை இழந்து பி;ன்னிடத்திற்கு செல்ல நேரிடும். கடைசி இடத்தைத் தேர்ந்தெடுத்தால், அனைவரின் முன்பாக மேலிடத்திற்கு அழைத்துச் செல்லப்படும் பெருமைக்கு உள்ளாகியிருப்போம். ஆகவே, முதன்மை இடத்தை, பெருமையை, பாராட்டை பிறருக்கு விட்டுக்கொடுக்கின்ற நல்ல பழக்கத்தை ஒரு வாழ்வு மதிப்பீடாக ஏற்றுக்கொள்வோம். அப்போது, இறைவன் நம்மைப் பெருமைப்படுத்துவார். மன்றாடுவோம்: தாழ்ந்தோரை உயர்த்துகின்ற இயேசுவே, எங்கள் வாழ்வில் நாங்கள் உம்மைப் பெருமைப்படுத்தி வாழும் அருளைத் தாரும். பிறரிடமிருந்து பாராட்டை, முதன்மையை, மதிப்பை...

இயேசுவோடு இருக்க…..

இயேசு 12 அப்போஸ்தலர்களை தோ்ந்தெடுத்த நிகழ்வு இன்றைக்கு தரப்பட்டிருக்கிறது. எதற்காக இயேசு இந்த சீடர்களைத் தேர்ந்தெடுத்தார்? என்ற கேள்வி நமக்குள் எழலாம். அதற்கான காரணம் மாற்கு நற்செய்தி 3: 14 – 15 ல் தரப்பட்டுள்ளது. 1. தம்மோடு இருக்க 2. நற்செய்தியைப்பறைசாற்ற அனுப்பப்பட 3. பேய்களை ஓட்ட அதிகாரம் கொண்டிருக்க. இவற்றைப்பற்றி இங்கே சிந்திப்போம். தம்மோடு இருப்பது என்பது அவர்களை தன்னுடைய நண்பர்களாக ஏற்றுக்கொண்டிருப்பதைக்குறிக்கிறது. நட்பிற்கு இலக்கணமாக இயேசு இருக்கிறார். எனவேதான், நண்பர்களுக்காக உயிரைக்கொடுப்பதைவிட சிறந்த அன்பு ஒன்றுமில்லை என்கிறார். தம்மோடு இருக்கிற அவர்களை தயார்படுத்துகிறார். தன்னைப்பற்றி அவர்களுக்கு வெளிப்படுத்துகிறார். அவர்களோடு உறவாடுகிறார். உரையாடுகிறார். அவர்களை தனது பணிக்காகப் பக்குவப்படுத்துகிறார். தனக்குப்பிறகு நற்செய்தியைப் பறைசாற்ற இருக்கும் தூதுவர்களாக இயேசு அவர்களைப்பார்க்கிறார். இயேசுவைப்பற்றி பேசும் ஊடகங்களாக சீடர்கள் அனுப்பப்படுகிறார்கள். தாங்கள் பார்த்தவற்றை, கேட்டவற்றை, உணர்ந்தவற்றை, அனுபவித்தவற்றை அவர்கள் தங்களின் நற்செய்தியின் சாராம்சமாகப் போதிக்கின்றனர். சாத்தானின் அரசிற்கு எதிரான போர் ஆரம்பித்துவிட்டதை இது...

மூன்றாம் நாளில் பணி நிறைவுபெறும் !

நல்ல தலைவர்களிடம் இருக்கின்ற பண்புகளுள் ஒன்று தங்களின் பணி பற்றிய இலக்குத் தெளிவு. தாங்கள் ஆற்ற பணிகள் என்னென்ன, அவை எவ்வளவு காலத்திற்குள் முடிக்கப்படும், அந்தப் பணியைச் செய்து முடிப்பதற்குத் தேவையான ஆற்றல்கள் எவை என்பவற்றையெல்லாம் திறன்மிகு தலைவர்கள் நன்கு தெளிவாக அறிந்திருப்பர். இயேசுவிடம் அத்தகைய தலைமைப் பண்புகள் நிறைந்திருந்தன என்பதைச் சிந்திக்கும்போது நமக்கு மகிழ்ச்சி கலந்த வியப்பு மேலிடுகிறது, இயேசு தன் பணியைப் பற்றியும், அதில் உள்ள இடையூறுகளைப் பற்றியும் அறிந்திருந்தார். எனவே, அச்சமின்றி துணிவுடன் பணியாற்றினார். அத்துடன், தனக்குள்ள காலக் குறைவையும் கணக்கில் கொண்டு, விரைந்து செயலாற்றினார். ஓய்வெடுக்கவும், உண்ணவும்கூட நேரமின்றிப் பல நேரங்களில் அவர் பம்பரமாய்ச் சுழன்று பணியாற்றினார் என்பதை நற்செய்தி நூல்கள் தெரிவிக்கின்றன. எனவேதான், ”இன்றும் நாளையும் பேய்களை ஓட்டுவேன். பிணிகளைப் போக்குவேன். மூன்றாம் நாளில் என் பணி நிறைவுபெறும். இன்றும் நாளையும் அதற்கடுத்த நாளும் நான் தொடர்ந்து சென்றாகவேண்டும் ” என்றார் இயேசு. அவரிடமிருந்து...

நேரிய வழியில் நடப்போம்

வாழ்வுக்குச் செல்லக்கூடிய வழி அவ்வளவு எளிதானதல்ல. அது மிகவும் கடினமானது. நம்முடைய உழைப்பில்லாமல், அர்ப்பணம் இல்லாமல் நிச்சயமாக நம்மால் மீட்பு பெற முடியாது. நாம் அனைவருமே கடவுள் விரும்பக்கூடிய வாழ்வை வாழ வேண்டும். அப்படி வாழ்கிறபோதுதான், நாம் கடவுளின் அன்பைப் பெற்று, அவரது விருந்திலே பங்கெடுக்க முடியும். எது எளிதானதோ, அவ்வழியில் செல்லவே அனைவரும் விரும்புவர். கடினமான வழியில் செல்ல எவருமே விரும்ப மாட்டார்கள். கடினமாக உழைத்துப்படிக்கலாம். தவறான வழியில் எளிதாகவும் மதிப்பெண் வாங்கலாம். இந்த உலகம் இரண்டாவது வழியைத்தான் தேர்ந்தெடுக்கும். இந்த உலகத்தில் இருக்கிற பலரும், இந்த இரண்டாம் வழியைத்தான் தேர்ந்தெடுக்கிறார்கள். உண்மையாக வாழ வேண்டும் என்று நினைக்கிறவர்களை, இந்த உலகம் அவமானப்படுத்துகிறது. கேலி செய்கிறது. உதாசீனப்படுத்துகிறது. அவர்களுக்கு ஏராளமான சங்கடங்கள் வாழ்வில் இருந்தாலும், அவர்கள் பெறக்கூடிய பரிசு மிகப்பெரிதானது. நமது வாழ்வில் நாம் எத்தகைய வழியைத் தேர்ந்தெடுக்கிறோம்? என்று கேட்டுப்பார்ப்போம். எப்போதுமே, உண்மையான, நேர்மையான பாதையில் நடக்க விரும்புகிறவர்கள்...

நீதி எங்கே? நியாயம் எங்கே?

இயேசு தொழுகைக்கூடத்தில் மக்களுக்குப் போதித்துக்கொண்டிருக்கிறார். போதனை என்பது வார்த்தையோடு நின்றுவிடுவது கிடையாது. வாழ்வைத் தொட வேண்டும். வாழ்வைத் தொடாத போதனையும், வாழ்வில் மாற்றம் ஏற்படுத்தாத போதனையும், வெறும் சடங்குதான். இயேசு தனது போதனை அவ்வாறு இருக்க விரும்பவில்லை. எனவே, அவர் போதித்துக்கொண்டிருக்கிறபோதே, மக்களுக்கு இறைவனுடைய அருளையும் பெற்றுத்தந்து கொண்டிருக்கிறார். அவர்களுக்கு சுகம் கொடுத்துக்கொண்டிருக்கிறார். அவ்வாறு மக்களின் நோய்களைக் குணப்படுத்திக்கொண்டிருக்கிறபோது, தொழுகைக்கூடத்தலைவன் மக்களிடத்தில், தனது கோபத்தைக் காட்டுகிறான். ஓய்வுநாளில், இயேசு குணப்படுத்துவது அவனுக்குப்பிடிக்கவில்லை. ஏனென்றால், சட்டப்படி, அது ஓய்வுநாளை மீறிய செயலாகும். எனவே, தான் சொல்வது நியாயம் என்று நினைக்கிறான். ஆனால், இயேசுவிடம் சொல்லத்துணிவில்லாமல், சாதாரண பாமர மக்களிடத்தில் காட்டுகிறான். ஒருவேளை, அவன் இயேசுவிடம் சொல்லியிருந்தால், அவர் விளக்கம் சொல்லியிருப்பார். ஆனால், அவனோ, மக்களிடத்தில் தனது கோபத்தைக்காட்டுகிறான். அதனால், இயேசுவின் கோபத்திற்கு ஆளாகிறான். இன்றைக்கு, நாமும் இந்த தொழுகைக்கூடத்தலைவன் போலத்தான் இருக்கிறோம். நம்மைவிட கீழாக உள்ளவர்களிடம், நமது அதிகாரத்தையும், ஆணவத்தையும் காட்டுகிறோம். நம்மைவிட,...