சிலுவை அடையாளம்
தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே - ஆமென்.
இயேசு கற்றுத் தந்த இறை வேண்டல்
விண்ணகத்தில் இருக்கின்ற எங்கள் தந்தையே,
உமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக,
உமது ஆட்சி வருக,
உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல,
மண்ணுலகிலும் நிறைவேறுக,
எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும்,
எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல,
எங்கள் குற்றங்களை மன்னியும்,எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும்,
தீயோனிடமிருந்து விடுவித்தருளும் - ஆமென்.
மங்கள வார்த்தை மன்றாட்டு
அருள் மிகப் பெற்ற மரியே வாழ்க,
ஆண்டவர் உம்முடனே,
பெண்களுக்குள் ஆசி பெற்றவர் நீரே.
உம்முடைய திருவயிற்றின் கனியாகிய ஏசுவும் ஆசி பெற்றவரே,
தூய மரியே, இறைவனின் தாயே,
பாவிகளாய் இருக்கின்ற எங்களுக்காக,
இப்பொழுதும், எங்கள் இறப்பின் வேளையிலும், வேண்டிக்கொள்ளும் - ஆமென்
மூவொரு இறைவன் புகழ்
தந்தைக்கும் மகனுக்கும் தூய
ஆவியாருக்கும் மாட்சிமை உண்டாகுக,
தொடக்கத்தில் இருந்தது போல இபோழுதும்,
எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக - ஆமென்.
திரித்துவப் புகழ்
பிதாவுக்கும் சுதனுக்கும் பரிசுத்த ஆவிக்கும் மகிமை உண்டாவதாக
ஆதியிலே இருந்தது போல் இப்பொழுதும் எப்பொழுதும்
என்றென்றும் இருப்பதாக ஆமென்.ஓ என்
இயேசுவே எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்.
எங்களை நரக நெருப்பிலிருந்து இரட்சித்தருளும்.
சகல ஆத்துமாக்களையும் பரலோக பாதையில் நடத்தியருளும்.
உமது இரக்கம் அதிகமாய் வேண்டியவர்களுக்கு
விசேட உதவி செய்தருளும்.
தூய ஆவியை நோக்கிய செபம்
தூய ஆவியே என் ஆருயிரே உம்மை ஆராதிக்கிறேன்.
என்னில் ஒளியேற்றி என்னை வழிநடத்தும்.
எனக்கு திடமளித்து என்னை தேற்றும் நான்
செய்யவேண்டியதைச் சொல்லும். ஆணையிடும்.
உமது திட்டத்தை தெயப்படுத்தினால் போதும்
எனக்கு நடக்க வேண்டுமென்று நீர் விரும்புவதை
நான் அன்புடன் ஏற்று அடிபணிகிறேன்.
- கர்தினால் மெர்சியா
சுருக்கமான காலை வழிபாடு
என் இறைவா,
உம்மை நான் வணங்கித் தொழுகிறேன்.
என் முழு மனதோடு உம்மை அன்பு செய்கிறேன்.
என்னைப் படைத்துக் கிறிஸ்துவனாக்கிக் கடந்த
இரவில் காப்பாற்றியதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன்.
இந்நாளின் செயல்களையெல்லாம் உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன்.
உமது திருவுளத்திற்கு ஏற்றவாறு அடியேன் நடக்க அருள் புரிவீராக.
உம் மேன்மைக்காக என்னைப் பாவத்திலிருந்தும் ஒவ்வொரு
தீமையிலிருந்தும் காப்பீராக. என்னிடமும் என் அன்புக்குரிய
அனைவரிடமும் உம் திருவருள் இருப்பதாக.
ஆமென்.
விரிவான மாலை வழிபாடு.
பரிசுத்த ஆவியை நோக்கி
தூய ஆவியே, எழுந்தருள்வீர்,
வானின்றுமது பேரொளியின்
அருட்சுடர் எம்மீ தனுப்பிடுவீர்.
எளியவர் தந்தாய், வந்தருள்வீர்,
நன்கொடை வள்ளலே, வந்தருள்வீர்,
இருதய ஒளியே வந்தருள்வீர்.
உன்னத ஆறுத லானவரே,
ஆன்ம இனிய விருந்தினரே,
இனிய தன்மையும் தருபவரே,
உழைப்பில் களைப்பைத் தீர்ப்பவரே,
வெம்மை தணிக்கும் குளிர்நிழலே,
அழுகையில் ஆறுத லானவரே,
உன்னத பேரின்ப ஒளியே,
உம்மை விசுவசிப் போருடைய
நெஞ்சின் ஆழம் நிரப்பிடுவீர்.
உமதருள் ஆற்றல் இல்லாமல்
உள்ளது மனிதனில் ஒன்றுமில்லை,
நல்லது அவனில் ஏதுமில்லை.
மாசு கொண்டதைக் கழுவிடுவீர்.
வரட்சி யுற்றதை நனைத்திடுவீர்.
காயப் பட்டதை ஆற்றிடுவீர்.
வணங்கா திருப்பதை வளைத்திடுவீர்,
குளிரானதைக் குளிர் போக்கிடுவீர்,
தவறிப் போனதை ஆண்டருள்வீர்.
இறைவா, உம்மை விசுவசித்து,
உம்மை நம்பும் அடியார்க்குக்
கொடைகள் ஏழும் ஈந்திடுவீர்.
புண்ணிய பலன்களை வழங்கிடுவீர்.
இறுதியில் மீட்பும் ஈந்திடுவீர்.
அழிவிலா இன்பம் அருள்வீரே.
ஆமென்.
மூவேளைச் செபம்
ஆண்டவருடைய தூதர் மரியாளுக்கு தூதுரைத்தார்.
தூய ஆவியால் அவள் கருத்தாங்கினாள்.
- அருள் நிறை...
இதோ ஆண்டவரின் அடிமை. உமது சொற்படியே எனக்கு ஆகட்டும்.
- அருள் நிறை...
வாக்கு மனிதனானார். நம்மிடையே குடிகொண்டார்.
- அருள் நிறை...
கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதி
பெறும்படி இறைவனின் தூய அன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
.
செபிப்போமாக
இறைவா/ உம் திருமகன் மனிதனானதை /
உம்முடைய வானதூதை வழியாக அறிந்து இருக்கின்றோம்.
அவருடைய பாடுகளினாலும் மரணத்தினாலும் நாங்கள்
உயிர்ப்ப்பின் மகிமை பெற உமது அருளைப் பொழிவீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
- ஆமென்
பிற்பகல் 3 மணிக்கு பொருத்தமான சிறு ஜெபம்
இயேசுவே! நீர் மரீத்தீர்.
ஆனால் இந்த மரிப்பு ஆன்மாக்களின் வாழ்க்கை ஊற்றாகவும்,
இரக்கத்தின் கடலுமாகவும்,வழிந்தோடியது.
ஓ ! வாழ்வின் ஊற்றே ! கண்டு பிடிக்க முடியாத இறைவனின் இரக்கமே !
உலக முழுமையும் உம்முள் அடக்கி உமது இரக்கம்
முழுமையும் எம்மீது பொழிந்தருளும்.
இயேசுவின் இதயத்திலிருந்து இரக்கத்;
தின் ஊற்றாக வழிந்தோடும் இரத்தமே !
தண்ணீரே ! உம்மீது நம்பிக்கை வைக்கிறேன்.
அனுதின வேலைகளை ஒப்புக் கொடுக்கும் செபம் :
தெய்வீகத் தொழிலாளியாகிய இயேசுவே, அடியேன் இன்று செய்யும்
ஜெபங்களையும், தொழில்களையும், எனக்கு ஏற்படும்
களைப்பு,ஆயாசம், துன்ப வருத்தங்கள் அனைத்தையும்,
தொழிலாளிகளின் மனந்திரும்புதலுக்காகவும், அர்ச்சிப்புக்காகவும்
தேவரீருக்கு ஒப்புக்கொடுக்கிறேன் . -ஆமென் .
இயேசுவின் திரு இருதயமே, உமது அரசு வருக !
நாசரேத்து அன்னையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் .
தொழிலாளரின் மாதிரியாகிய புனித சூசையப்பரே, எங்களுக்காக
வேண்டிக்கொள்ளும்
தூய ஆவியானவருக்கு செபம்
அப்பா பிதாவே! நான் வாழ்வதற்காக,
உமது ஏக மகனாகிய கிறிஸ்து இயேசுவை எனக்காகவே அனுப்பினீர்.
மகிமையான அந்தப் புதுவாழ்வு என்னில்
இப்பொழுது செயல்படுவதற்காக உமக்கு நன்றி கூறுகின்றேன்.
இந்தப் புதுவாழ்வை முறையோடு வாழ எனக்குக் கற்றுத் தாரும்.
உமக்கு பணி புரியவும், உம் சித்தத்தை நிறைவேற்றவும்,
என்னில் உதிக்கும் தீய எண்ணங்களும்,
எனது அறியாமையும் தடையாய் இருக்கின்றன
என்பதை ஒப்புக் கொள்கின்றேன்.
இப்பொழுது எனக்கு நீங்கள் கொடுத்து
என்னில் வேலை செய்யும் இந்தப் புதிய
வாழ்வில் இருக்கும் பரலோகத்தின் சக்தியை நான் நம்புகிறேன்.
இந்தப் புதிய வாழ்வை வாழும் வழிகளை எனக்குக் காட்டி,
என்னைத் தன் பரிசுத்த ஆவியின் வல்லமையில்,வாழ்வும்,
வழியுமான என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து,
தன் அன்பின் போதனையினால் என்னை உம்மிடம்
ஒப்படைப்பார் என நம்புகிறேன். ஆமென்.
தூய ஆவியானவருக்கு நவநாள்
தூய ஆவியே எழுந்தருளிவாரும்,
இறைமக்களின் உள்ளங்களை உமது அன்புத் தீயால் நிரப்பியருளும்.
உமது ஞானக்கதிர்களை வரவிட்டு
உலகினரின் உள்ளங்களை புதுப்பித்தருளும்.
இறைவா! உமது இறை மக்களின் உள்ளங்களை தூய ஆவியின்
கொடையினால் தெளிவுபடுத்தினீர்.
அந்த ஆவியால் நாங்கள் சரியானவற்றை உணரவும்,
அவரின் ஆறுதலால் மகிழ்வு பெறவும் அருள்புரிவீராக.
எம் ஆண்டவராம் கிறிஸ்து வழியாக இவற்றை
எங்களுக்கு அருளும். ஆமென்.
சுருக்கமான உத்தம மனஸ்தாபம்
என் சர்வேஸ்வரா சுவாமி,
தேவரீர் அளவில்லாத நன்மையும்
அன்பும் நிறைந்தவராய் இருப்பதினால்
என் பாவங்களால் உமக்குச் செய்த
துரோகத்துக்காக உத்தம மனஸ்தாபப்படுகிறேன்.
இனி உமது வரப்பிரசாதத்தின் உதவியால்
இப்பேர்ப்பட்ட பாவங்களைச் செய்வதில்லை
என்று உறுதியான பிரதிக்கினை செய்கிறேன்.ஆமென்.
விசுவாசப் பிரமாணம்
பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத்த
எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேஸ்வரனை விசுவசிக்கிறேன்.
இவருடைய ஏக சுதனாகிய நம்முடைய நாதர்
இயேசு கிறிஸ்துவையும் விசுவசிக்கிறேன்.
இவர் பரிசுத்த ஆவியினால் கர்ப்பமாய்
உற்பவித்து கன்னி மரியிடமிருந்து பிறந்தார்.
போஞ்சுப் பிலாத்துவின் அதிகாரத்தில்
பாடுபட்டு சிலுவையில் அறையுண்டு
மரித்து அடக்கஞ்செய்யப்பட்டார்.
பாதாளத்தில் இறங்கி மூன்றாம் நாள்
மரித்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார்.
பரலோகத்திற்கு எழுந்தருளி எல்லாம் வல்ல
பிதாவாகிய சர்வேஸ்வரனின் வலது
பக்கத்தில் வீற்றிருக்கிறார்.
அவ்விடத்திலிருந்து சீவியரையும்
மரித்தவரையும் நடுத்தீர்க்க வருவார்.
பரிசுத்த ஆவியை விசுவசிக்கிறேன்.
பரிசுத்த கத்தோலிக்க திருச்சபையை விசுவசிக்கிறேன்.
புனிதர்களுடைய சமுதீதப் பிரயோசனத்தை விசுவசிக்கிறேன்.
பாவப் பொறுத்தலை விசுவசிக்கிறேன்.
நித்திய சீவியத்தை விசுவசிக்கிறேன்.
சரீர உத்தானத்தை விசுவசிக்கிறேன்.
சுருக்கமான மனத்துயர் செபம்:
என் இறைவனாகிய தந்தையே! நீர் நன்மை நிறைந்தவர்,
எனவே எல்லாவற்றிற்கும் மேலாக உம்மை நான் அன்பு செய்கிறேன்.
என் பாவங்களால் உமது அன்பை மறந்ததற்காக மனம் வருந்துகிறேன்.
உமது அருளுதவியால் இனிமேல் பாவம் செய்வதில்லையென்று உறுதி கூறுகிறன். ஆமென்.
ஒப்புரவு அருட்சாதனத்தில் சொல்லத்தகும் மனத்துயர் செபம்:
என் இறைவா, நன்மை நிறைந்தவர் நீர்.
அனைத்திற்கும் மேலாக அன்புக்கு உரியவர் நீரே.
என் பாவங்களால் உம்மை மனநோகச் செய்துவிட்டேன்.
ஆகவே, நான் குற்றங்கள் பல செய்தேன் எனவும்,
நன்மைகள் பல செய்யத் தவறினேன் எனவும்,
மனம் நொந்து வருந்துகிறேன். உமது அருள்
துணையால் நான் மனம் திரும்பி இனிமேல் பாவம்
செய்வதில்லை என்றும், பாவத்துக்கு ஏதுவான
சூழ்நிலைகளை விட்டு விலகுவேன் என்றும் உறுதி கொடுக்கிறேன்.
எங்கள் மீட்பராம் இயேசு கிறிஸ்துவின்
பாடுகளின் பயனாக, இறைவா, என்மேல் இரக்கமாயிரும். ஆமென்.
நீண்ட மனத்துயர் செபம்:
என் சர்வேசுரா சுவாமி தேவரீர்
அளவில்லாத சகல நன்மையும் அன்பும்
நிறைந்தவராய் இருப்பதினால் எல்லாவற்றிற்கும்
மேலாக உம்மை நான் முழுமனதுடனே நேசிக்கிறேன்.
இப்படிப்பட்ட தேவரீர்க்குப் பொருந்தாத
பாவங்களைச் செய்தேனே என்று மிகவும் மனம்
நொந்து மெத்த மனஸ்தாபப்படுகிறேன்.
எனக்கிதுவே மனஸ்தாபம் இல்லாமல் வேறு மனஸ்தாபமில்லை.
எனக்கிதுவே துக்கமில்லாமல் வேறு துக்கமில்லை.
இனிமேல் ஒருபொழுதும் இப்படிப்பட்ட பாவங்களைச்
செய்வதில்லை என்று உறுதியான மனதுடனே பிரதிக்கினை செய்கிறேன்.
மேலும் எனக்குப் பலன் போதாமையால் இயேசுநாதர்
சுவாமி பாடுபட்டு சிந்தின திருஇரத்தப்
பலன்களையெல்லாம் பார்த்து, என் பாவங்களை
எல்லாம் பொறுத்து, எனக்கு உம்முடைய
வரப்பிரசாதங்களையும், மோட்ச பாக்கியத்தையும்
தந்தருள்வீரென்று முழுமனதுடனே நம்பியிருக்கிறேன்.
திருச்சபை விசுவசித்து கற்பிக்கின்ற சத்தியங்களை
எல்லாம் தேவரீர் தாமே அறிவித்த படியினால்
நானும் உறுதியாக விசுவசிக்கின்றேன் -ஆமென்.
கிருபைதயாபத்து செபம்
கிருபைதயாபத்துக்கு மாதாவாயிருக்கிற எங்கள் இராக்கினியே வாழ்க,
என் சீவியமே, எங்கள் தஞ்சமே, எங்கள் மதுரமே வாழ்க .
பரதேசிகளாயிருக்கிற நாங்கள் ஏவையின்
மக்கள் உம்மைப் பார்த்துக் கூப்பிடுகிறோம் .
இந்தக் கண்ணீர் கணவாயிலிருந்து பிரலாபித்தழுது
உம்மையே நோக்கி பெருமூச்சு விடுகிறோம் .
ஆதலால் எங்களுக்காக வேண்டி மன்றாடுகிற தாயே,
உம்முடைய தயாளமுள்ள திருக்கண்களை எங்கள்மேல் திருப்பியருளும் .
இதனின்றியே நாங்கள் இந்தப் பிரதேசம் கடந்த
பிற்பாடு உம்முடைய திருவயிற்றின் கனியாகிய
இயேசுநாதருடைய பிரத்தியட்சமான தரிசனத்தை
எங்களுக்குத் தந்தருளும் .கிருபாகரியே தாயாபரியே,
பேரின்ப இரக்கமுள்ள கன்னிமரியே .
ஆமென் .
தேவதாயை நோக்கி புனித பெர்நார்துவின் செபம்
இரக்கம் மிகுந்த தாயே/
உன் அடைக்கலம் நாடி உதவியைத் தேடி
தமக்காய் பரிந்து பேச மன்றாடி வந்த
எவரும் ஏமாந்தார் என உலகில் என்றுமே கேட்டதில்லை.
அம்மா இதனை நினைத்தருள்வாயே.
கன்னியருள் உயர் கன்னியே/ தாயே /
இப்பெரும் நம்பிக்கையால் உந்தப்பட்ட
நான் உன்னிடம் ஓடிவருகிறேன்.
பாவி நான். உன் தாள் விழுகிறேன்.
வார்த்தையின் தாயே/ தள்ளிவிடாதே/
என் மன்றாடைத் தயவாய் கேட்டருளும்.
புனித பெர்னதத்து கன்னிமரியிடம் வேண்டின ஜெபம்:
மிகவும் இரக்கமுள்ள தாயே!
உமது அடைக்கலமாக ஓடிவந்து,
உம்முடைய உபகார சகாயங்களை இறைஞ்சி மன்றாடிக்
கேட்ட ஒருவராகிலும் உம்மால் கைவிடப்பட்டதாக
ஒருபோதும் உலகில் சொல்லக் கேள்விப்பட்டதில்லை
என்று நினைத்தருளும். கன்னியருடைய இராக்கினியான
கன்னிகையே!
தயையுள்ள தாயே!
இப்படிப்பட்ட நம்பிக்கையால் ஏவப்பட்டு
உமது திருப்பாதத்தை அண்டி வந்திருக்கிறோம்.
பெருமூச்n;சரிந்து அழுது பாவிகளாயிருக்கிற
நாங்கள் உமது தயாபரத்தில் காத்து நிற்கின்றோம்.
அவதரித்த வார்த்தையின் தாயே எங்கள் மன்றாட்டைப்
புறக்கனியாமல் தயாபரியாய் கேட்டுத் தந்தருளும் தாயே -ஆமென்
ஜென்பப்பாவமில்லாமல் உற்பவித்த அச்சிஸ்ட மரியாயே,
பாவிகளுக்கு அடைக்கலமே, இதோ உம்முடைய அடைக்கலமாக ஓடிவந்தோம்.
எங்கள் பேரில் இரக்கமாயிருந்து எங்களுக்காக உமது
திருக்குமாரனை வேண்டிக்கொள்ளும். -அருள்நிறைந்த (மூன்று முறை)
ஆபத்தான வேளையில்அன்னையை நோக்கி ஜெபம்
நிரந்தர சகாயத்தின் நேச ஆண்டவளே!
மாசணுகாத்தாயே உம்மை நாங்கள் இவ்வீட்டின் ஆண்டவளாகவும்,
எஜமாட்டியாகவும் தெரிந்து கொள்கிறோம்.
கொள்ளை நோய், இடி, மின்னல் புயல் காற்றிலிருந்தும்
விமானத்தாக்குதல் விரோதிகளின் பகை குரோதத்திலிருந்தும்
இவ்வீட்டைப் பாதுகாத்தருளும், மிகவும் அன்புள்ள தாயே!
இங்கு வசிக்கிறவர்களை ஆதரியும்.
அவர்கள் இங்கிருந்து வெளியில் போகும் போதும்,
உள்ளே வரும் போதும் அவர்களுக்குத் துணையாயிருந்து
சடுதி மரணத்தினின்றும் அவர்களை இரட்சியும்,
எங்களை சகல பாவங்களிலும் ஆபத்துக்களிலும்
நின்றும் காப்பாற்றும். இவ்வுலகில் நாங்கள்
சர்வேஸ்வரனுக்கு பிரமாணிக்கமாய் ஊழியம் செய்து
உம்மோடு கூட நித்தியத்திற்கும் அவரின் இன்பமான
தேவ தரிசனத்தை அடைந்து சுகிக்க எங்களுக்காகப்
பிரார்த்தித்தருளும் தாயே! - ஆமென்.
தேவமாதாவை நோக்கி அனுதினம் வேண்டிக்கொள்ளும் செபம்
தேவதூதர்களுடைய இராக்கினியே,
மனிதர்களுடைய சரணமே,
சர்வ லோகத்துக்கும் நாயகியே,
நாங்கள் எல்லாரும் உம்முடைய பிள்ளைகளாய் இருக்கிறோம்.
எப்படியாகிலும் எங்களை இரட்சிக்கவேணும்
என்று தேவரீரை மன்றாடுகிறோம்.
தாயாரே, மாதாவே, ஆண்டவளே, உம்மை நம்பினோம், எங்களைக் கைவிடாதேயும்.
விசேஷமாய் நாங்கள் சாகும்போது பிசாசுகளுடைய
தந்திரங்களையெல்லாம் தள்ளிப்போட்டு உம்முடைய
திருக்குமாரன் இயேசுநாதரிடம் நாங்கள்
வந்து சேருமட்டும் தேவரீர் துணையாயிரும்.
இது நிமித்தமாக உம்முடைய திருப்பாதத்தில்
விழுந்து உம்முடைய ஆசீரைக் கேட்கிறோம்.
இதை அடியோர்களுக்கு இரக்கத்தோடே கட்டளை
பண்ணியருளும் தாயாரே, மாதாவே, ஆண்டவளே.
ஆமென்.
நற்படிப்புக்கு பாதுகாவலாகிய தேவதாய்க்கு செபம்
உலகத்தின் நித்திய ஒளியும் எங்கள் மீட்பருமாகிய
இயேசுநாதரைப் பெற்றெடுத்த புனித கன்னிகையே.
அறிவீனமும் அந்தகாரமும் நிறைந்த மனதில்
உமது பரிசுத்த மன்றாட்டினால் அறிவிலும்
பக்தியிலும் வியப்புக்குரிய வளர்ச்சியை
அநேக முறை கொடுத்தருளிய தேவஞானத்தின் தாயே,
அடியேன் தேவரீரை என்னை ஆதரிப்பவளாகவும்
என் படிப்புக்குப் பாதுகாவலாகவும் தெரிந்துகொள்கிறேன்.
ஓ பேறு பெற்ற ஆண்டவளே,
நற்படிப்புகளுக்குப் பாதுகாவலே,
உமது மன்றாட்டுகளைக் கேட்டு,
தூய திரு ஆவியார் எனக்கு நிரம்ப வெளிச்சத்தையும்
பலத்தையும் விவேகத்தையும் தாழ்ச்சியையும் தந்தருள்வாராக.
எனக்கு நேர்மையான மனத்தையும்,
போதுமான புத்தி,
ஞாபகம் வல்லமைகளையும் அளித்து முக்கியமாய்
நான் அனைத்திலும் தேவ ஞானத்தின் திருவுளப்படி
நடப்பதற்கு வேண்டிய மன இருதயக்
கீழ்ப்படிதலையும் கொடுத்தருள்வாராக.
என் நல்ல தாயே, ஆங்காரம், தற்பெருமை,
வீண் விநோதப்பிரியம், யோசனையற்றதனம்,
இவைகளினின்று என்னைக் காப்பாற்றும்.
என் விசுவாசத்தையாவது ஆத்தும
சமாதானத்தையாவது குறைக்கக்கூடிய
எந்தக் காரியத்தினின்றும் என்னைப் பாதுகாத்தருளும்.
ஓ மரியாயே, நான் உமது பாதுகாவலின்
உதவியால் அன்னையும் ஆசிரியையுமாகிய பரிசுத்த
திருச்சபையின் போதனைக்கும் நடத்துதலுக்கும்
எப்போதும் கீழ்ப்படிந்து சத்திய நெறியிலும்
புண்ணிய வழியிலும் தவறாமல் தைரியத்தோடும்
விடா முயற்சியோடும் நடந்து கடைசியாய் உமது
திருமைந்தனும் எங்கள் ஆண்டவருமான இயேசுக்
கிறிஸ்துவின் விண்ணுலக அரசை அடைந்து மூவொரு
கடவுளின் வாழ்வில் பேரின்பம் கொள்ளக் கிருபை செய்தருளும்.
ஆமென்.
வேலை, படிப்பு துவங்கும் முன் செபம்
இறைவா, எங்களுடைய செபம்,
வேலை எல்லாம் எப்பொழுதும்
உம்மிடமிருந்து துவங்கவும்,
துவங்கினவை
உம்மாலே முடிவு பெறவும் செய்தருளும்.
ஆகையால் எங்கள் செயல்களை நீரே விரும்பி, முன்னதாக ஏவியருளும்.
அவை உமது உதவியால் நடந்து முடிவு
பெற எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக மன்றாடுகிறோம்.
ஆமென்.
நம்பிக்கை முயற்சி
என் சர்வேஸ்வரா சுவாமி,
தேவரீர் வாக்கு கொடுத்தபடியினாலே இயேசுநாதர்
சுவாமி பாடுபட்டுச் சிந்தின திரு இரத்தப்
பலன்களைப் பார்த்து என் பாவங்களை எல்லாம்
பொறுத்து எனக்கு உம்முடைய வரப்பிரசாதங்களையும்
மோட்ச பாக்கியத்தையும் தந்தருளுவீர் என்று
முழு மனதோடு நம்பியிருக்கிறேன்.
ஆமென்.
விசுவாச முயற்சி
என் சர்வேஸ்வரா சுவாமி,
திருச்சபை விசுவசித்துக் கற்பிக்கிற
சத்தியங்களை எல்லாம் தேவரீர் தாமே
அறிவித்திருப்பதினால் நானும் உறுதியாக விசுவசிக்கிறேன்.
ஆமென்.
நம்பிக்கை மன்றாட்டு
என் இறைவா /
உமது திருச்சபை நம்பிப் போதிக்கிற /
உண்மைகளை எல்லாம் /
நீரே அறிவித்திருப்பதால் /
அவற்றை நான் உறுதியாக நம்புகிறேன்./ ஆமென்.
எதிர்நோக்கு மன்றாட்டு
என் இறைவா /
நீர் தந்துள்ள வாக்குறுதிகளை நான் ஏற்றுக்கொள்கிறேன்.
எங்கள் ஆண்டவர் இயேசுவின் இரத்தத்தால் /
என் பாவங்களைப் பொறுத்து /
எனக்கு உமது அருளையும் /
வானக வாழ்வையும் அளிப்பீர் என /
உறுதியாக எதிர்நோக்கி இருக்கிறேன். / ஆமென்.
அன்பு முயற்சி
என் இறைவா!
நீர் அளவில்லாத அன்புக்கு உரியவர்
என்பதால் அனைத்திற்கும் மேலாக,
உம்மை நான் முழுமனதோடு அன்பு செய்கின்றேன்.
அவ்வாறே என்னை நான் நேசிப்பது போல் எல்லோரையும் நேசிக்கிறேன்
வேலை துவங்குமுன் ஜெபம்:
தூய ஆவியே தேவரீர் எழுந்தருளிவாரும்.
உம்முடைய விசுவாசிகளுடைய இருதயங்களை நிரப்பும்.
அவைகளில் சிநேக அக்கினியை மூட்டியருளும்.
உம்முடைய ஞானக் கதிர்களை வரவிடும்.
அதனால் உலகத்தின் முகத்தைப் புதுப்பிப்பீர்.
ஜெபிப்போமாக சர்வேசுரா சுவாமி!
விசுவாசிகளுடைய இருதயங்களை பரிசுத்த
ஆவியின் பிரகாசத்தால் படிப்பித்தருளினீரே.
அந்த பரிசுத்த ஆவியினால் சரியானவைகளை உணரவும்,
அவருடைய ஆறுதலால் எப்பொழுதும்
மகிழ்ந்திருக்கவும் அனுக்கிறகம் செய்தருளும்.
இவைகளையெல்லாம் எங்களாண்டவராகிய இயேசு
கிறிஸ்துநாதருடைய திருமுகத்தைப் பார்த்து தந்தருளும் -ஆமென்.
வேலை முடிந்தபின் செபம்:
சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவே!
இதோ உம்முடைய சரணமாக ஓடிவந்தோம்.
எங்கள் அவசரங்களிலும் நாங்கள்
வேண்டிக்கொள்ளுகிறதற்கு நீர் பாராமுகமாயிராதேயும்.
ஆசீர்வதிக்கப்பட்டவளுமாய் மோட்சம்
உடையவளுமாயிருக்கிற நித்திய கன்னிகையே
சகலஆபத்துக்களிலேயும் நின்று எங்களை தற்காத்தருளும். -ஆமென்.
நற்படிப்புக்காக செபம்
சகலவிதமான ஞாயானத்துக்கும் ,
ஊற்றும் இருப்பிடமானவரே,
/உம்மை நன்றியோடு புகழ்கின்றோம் .
/தெய்வ பயமே ஞானத்தின் தொடக்கம்,
விவேகமே தூயவர்களின் அறிவு என்றும்/
ஆண்டவரில் உன் இன்பத்தைத் தேடு
/அப்போது /உன் நெஞ்சம் நாடுவதை அவர் உனக்குத்
தருவார் என்றும்
/நாங்கள் வேதாகமத்தில் வாசிக்கிறோம் .
/நாங்கள் ஒவ்வொருவரும் /ஞானத்திலும்
/அறிவிலும் சிறந்து/பக்தியும்
விசுவாசமும் உள்ள வாழ்க்கை நடத்தும் பொருட்டு
எங்களை உம் கண்களுக்கு முன்பாக //மேன்மை மிக்கவர்களாக .
/மதிப்புக்குரியவர்களாக படைத்து
/எங்கள் ஒவ்வொருவருக்கும் ஞானமுள்ள
இருதயத்தைக் கொடுத்திருக்கிறீர்.
/எங்களுடைய அறியாமையாலும் /பலவீனத்தாலும்
/ஞாபகக் குறைவினாலும் சந்தர்ப்ப சூழ்நிலையாலும்
/நாங்கள் ஞானத்திலும் அறிவிலும்
/குறைவு பட்டவர்களாகவே வாழ்கிறோம்.
உணவருந்துமுன் ஜெபம்:
சர்வேசுரா சுவாமி!
என்னையும் உமதருளினால் நான் உண்ணப்போகும்
இந்த உணவையும் எங்கள் ஆண்டவராகிய இயேசு
கிறிஸ்துநாதருடைய திருமுகத்தைப்
பார்த்து ஆசீர்வதித்தருளும் -ஆமென்.
உணவருந்திய பின் ஜெபம்:
சதாகாலத்துக்கும் நித்தியருமாய் இராச்சிய
பரிபாலனம் பண்ணுகிறவருமாயிருக்கிற சர்வ வல்லபமுள்ள இறைவா!
தேவரிர் எனக்குத் தந்தருளின இந்த ஆகாரங்களுக்காகவும் தேவரிர்;
எனக்குச் செய்துவருகிற சகல உபகாரங்களுக்காகவும்
தேவரீருக்கு நன்றியறிந்த தோத்திரம் பண்ணுகிறேன்.
இப்பொழுதும் எப்போழுதும் ஆண்டவருடைய
திரு நாமம் வாழ்த்தப்படக்கடவது.
ஜெபிப்போமாக சர்வேசுரா சுவாமி!
எங்களுக்கு உபகாரம் பண்ணுகிறவர்களுக்கெல்லாம்
நித்திய ஜீவியத்தைக் கட்டளையிட்டருள
அனுக்கிரகம் பண்ணியருளும் சுவாமி -ஆமென் மரித்த
விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய
இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாரக் கடவது –ஆமென்
காணிக்கை ஜெபம்:
இயேசுவின் திரு இருதயமே!
நாங்கள் கட்டிக்கொள்ளும் துரோகங்களுக்குப்
பரிகாரமாகவும் தேவரீர் திருப்பீடத்தில் ஓயாமல்
உம்மைத்தானே பலியாக ஒப்புக்கொடுக்கும்
சகல கருத்துக்களுக்காகவும்,
அடியேல் இன்று செய்யும் ஜெபங்களையும்,
கிரியைகளையும், படுந்துன்ப வருத்தங்களையும்,
தூய கன்னிமரியாயின் மாசில்லாத திரு இருதயத்தின்
வழியாக உமக்கு ஒப்புக்கோடுக்கிறேன் சுவாமி.
இந்த மாதத்திற்கும் இந்த நாளுக்கும் சபையாருக்கும்
குறிக்கப்பட்ட சகல கருத்துக்களுக்காகவும்
விசேஷமாய் அவைகளை ஒப்புக்கொடுக்கிறேன் சுவாமி -ஆமென்.
காணிக்கை செபம்
அத்தியந்த மகிமையுள்ள பரலோக
இராசேஸ்வரியான பரிசுத்த தேவமாதாவே
உம்முடைய திருபாதத்தை நாங்கள்
நமஸ்கரித்து இந்தச் செபமாலைத்
தியானத்தை உமக்குப் பாத காணிக்கையாக
வைத்து ஒப்புக்கொடுக்கின்றோம்.
இதை நீரே கையேற்று உம்முடைய திருக்குமாரனிடத்திலே
கையளித்து இதிலே நாங்கள் தியானித்த மறை நிகழ்ச்சிகளுடைய
பலனை அடையவும் சுகிரேத போதனையின்
படியே நடந்து இவ்வுலகத்திற் சகல விக்கினங்களும்
நிவாரணமாகவும் பரலோகத்திலே
உம்மோடே உம்முடைய திருக்குமாரனுடைய
மோட்சமுக தரிசனையைக் கண்டு களிகூர்ந்திருக்கவும்
ஒத்தாசை பண்ணியருளும் தாயாரே. ஆமென்.
நல்ல வாழ்க்கைத் துணைக்காக செபம்
ஓ என் இயேசுவே, என் அன்பு சினேகிதிரே!
எனது முழு நம்பிக்கையுடன் என் மனம் திறந்து,
எனது எதிர்காலத்திற்காக உங்களை கெஞ்சி மன்றாடுகிறேன்.
எனக்கு ஒரு நல்ல வாழ்க்கை துணை அமைய,
உங்களின் அருளையும் ஆசிரையும்
என்மேல் பொழிந்தருளும்.
எனக்கு ஏற்ற ஒரு நல்ல வாழ்க்கை
துணையை எனக்கு அனுப்பியருளும்.
என் அன்பு சினேகிதரே,
என் வாழ்க்கை துணையாய் வருபவர்
தங்களின் திரு இருதயத்தின் மேல்
பற்றும் பக்தியும் உள்ளவராக
இருக்க மன்றாடுகிறேன்.
எனது வாழ்க்கை துணை நேர்மையானவாராக,
நம்பிக்கைக்கு உரியவராக,
புனிதமானவாராக, பற்றுறுதியானவராக,
உண்மையானவராக இருக்க உம்மை இறைஞ்சி மன்றாடுகிறேன்.
நாங்கள் இருவரும் ஓர் உடலாகவும் உயிராகவும்
தன்னலமற்ற எண்ணத்தோடும் இருக்கும்படி
எங்களை ஆசிர்வதியும்.
எங்களுக்கு நீங்கள் கொடுக்கும் பிள்ளைகளை
நாங்கள் பொறுப்பான பெற்றோர்களாக
வளர்க்க எங்களை ஆசிர்வதியும்.
நாங்கள் ஒருவருக்கொருவர் தன்னலமற்ற
அன்போடும் பரிவோடும் வாழ அருள்புரியும்.
எங்களின் வருங்கால குடும்பம் தூய
திருக்குடும்பத்தின் அடையாளமாக இருக்க மன்றாடுகிறேன்.
ஓ மாசற்ற தூய அன்னையே,
எனது வாழ்க்கையை உங்கள் கரங்களில் வைக்கிறேன்.
எனக்கு ஒரு நல்ல வாழ்க்கை துணை அமைய எனக்கு வழிகாட்டும்.
எல்லாம் வல்ல இறைவனிடம் எனக்காக மன்றாடவும்.
ஆமென்.
ஒரு பரலோக மந்திரம்
மூன்று அருள் நிறைந்த மரியே
ஒரு பிதாவுக்கும் சுதனுக்கும் பரிசுத்த ஆவிக்கும்.
தாய்மை கொண்ட பெண்கள் செபம் :
கன்னியும் தாயுமான புனித மரியாளே !
நீர் இயேசு நாதரை உமது
திருவயிற்றில் தாங்கிக் கொண்டிருந்ந
நாளெல்லாம் ஆனந்த சந்தோஷத்தில்
அமிழ்ந்திக் கடைசியாய் பேறுகாலமானபோது,
வாக்குக்கெட்டாத உன்னத பரவசத்தில் திவ்விய பாலகனைப்
பெற்றீரே !
அந்தப் புத்திக்கெட்டாத ஆனந்தத்தைப்
பார்த்து என்பேரில் கிருபையாயிரும் .
நானோ பாவத்தில் பிறந்து எல்லா
உபத்திரவங்களுக்கும் உள்ளாயிருக்கிறேன் .
ஏவைக்கு இட்ட ஆக்கினை என்பேரிலும் இருக்கிறது .
ஆகையால் என் மிடிமையைப்
பார்த்து என் பலவீனங்களின் பேரில் இரக்கமாயிருந்து,
என் வயிற்றிலிருக்கிற சிசுவுக்கு யாதொரு பொல்லாப்புமின்றி,
அதிக சிரமமின்றி ப் பிரசவிக்க அனுக்கிரகம் செய்தருளும் .
மேலும் அந்தப் பாலகனுக்கு புத்தி
சித்தம் மேன்மையுள்ளதாகி உமது திருக்குமாரனுடையவும்,
உம்முடையவும் பணியிலே நிலைக் கொண்டு,
சிறப்புடன் வளர்ந்து, பேரின்ப பாக்கியத்தின்
வழியிலே நடக்க உமது திருக்குமாரனை வேண்டிக்கொள்ளும் . -ஆமென் .
பெற்றோரின் செபம்
மனுமக்களின் தந்தையே,
இந்தப் பிள்ளைகளை எனக்குக் கொடுத்து
என் பொறுப்பில் வைத்துக் காத்து
உமக்கேற்ப நடக்கவும், அவர்களை நித்திய
சீவியத்துக்குக் கொணடு வரவும் செய்தீரே .
இந்தப் புனித ஊழியத்தையும்,
கண்காணிப்புப் பொறுப்பையும் நிறைவேற்ற எனக்கு
உதவியாக உமது ஞான வரத்தை தந்தருளும் .
நான் அவர்களுக்கு எதை கொடுக்கவேண்டியதோ அதையும்,
எதை நிறுத்த வேண்டியதோ அதையும் கற்பியும் .
எப்போது கண்டிக்க வேண்டியதோ
அப்போது கண்டிக்கவும், எப்போது அரவணைக்க
வேண்டியதோ அப்போது அரவணைக்கவும் செய்வீராக .
இன்னமும் சாந்த குணத்தில் என்னைப் பலப்படுத்தியருளும் .
அவர்கள் பேரில் கவலையும் ஜாக்கிரதையுமாய்
இருக்கவும் அந்தப் பிள்ளைகளுக்கு
இளக்காரம் கொடுக்கிறதாலும்,
அதிகமாய்த் தண்டிக்கிற மூடத்தனத்திலும்
இருந்து என்னை விடுவித்தருளும் .
சொல்லாலும் செயலாலும் அவர்களை ஞானத்திலும்,
பத்தியிலும் கூர்மையாய் நடத்த எனக்கு உதவி
செய்யும் .
அதனால் விண்ணுலக வீடாகிய பேரின்ப
அரசில் நாங்கள் அளவறுக்கப்படாத
நித்திய பேற்றினை அனுபவிக்கச்
சேர்த்துக் கொள்ளும் .
ஓ ! விண்ணுலகத் தந்தையே !
என் பிள்ளைகளை உம்மிடத்தில்
ஒப்புவிக்கிறேன் .
நீரே அவர்களுடைய கடவுளாகவும்,
தகப்பனாகவும் இரும் .
எனது இரட்சணியத்துக்கு வேண்டிய ஞான
வரங்களை தந்தருளுவதுடன் என்
பிள்ளைகள் இவ்வுலக தந்திரங்களில்
சாதுரியமாய் நடந்து,
சோதனைகளை வெல்லவும் பசாசின்
கண்ணிகளினின்று அவர்களை விடுவிக்கவும் தயைபுரியும் . அவர்கள்
இதயத்தில் உமது அருளைப் பொழிந்து
பரிசுத்த ஆவியாரின் கொடைகளைப் கொடுத்தருளும் .
அந்த அருளினால் அவர்கள் எங்கள்
ஆண்டவரான இயேசுகிறிஸ்துவிடம் உயர்ந்து,
விசுவாசத்தோடு உமக்கு ஊழியம் செய்தபின்
உம்மோடும் பரிசுத்த ஆவியோடும்
அரசுசெய்கிற எங்கள் ஆண்டவரான கிறிஸ்து
வழியாக உமது சமூகத்தில் வந்து
ஆனந்த பாக்கியத்தை அடையக்கடவார்கள் . -ஆமென் .
தூய்மைக்காக இளைஞரின் மன்றாட்டு :
எல்லாம் வல்லவரும்,
அனைத்தையும் காண்கிறவருமான இறைவா,
என் ஆத்துமத்தை உமது திவ்விய இலட்சண சாயலாக
உண்டாக்கினீரே, அதை நான் களங்கப்படுத்தாதபடி எனக்கு
அனுக்கிரகம் செய்தருளும் .
நமது ஆலயத்தை யாதாமொருமன்
அசுசிப்படுத்தினால் அவனைச் சிதைப்போம் என்று
திருவுளம்பற்றினீரே,
சுவாமி ! உமது அருள் வாக்கின்படியே என்
உடலே உமது தேவாலயமாயிற்று,
இதிலே உமது திருவருளினால்
தேவரீருடைய பரிசுத்த ஆவியார் உறைந்திடத் திருவுளம்
கொண்டது மன்றி அநேக முறை உம்முடைய திருக்குமாரனுமாகி
இயேசுநாதரும் தேவநற்கருணை வழியாக எழுந்தருளி வந்து
இதனை அர்ச்சித்தருளினார் . ஆகையால் தூய்மையின் உருவான
இறைவா, உமக்குச் சொந்தமாகிய இத்தேவாலயத்தில் தேவரீர்
மிகுந்த அருவருப்புடனே வெறுக்கிற பாவ அக்கிரமங்களை
வரவிடாதேயும் . தூய்மைக்கு விரோதமான ஓர் அர்ப்ப மாசும் என்
ஆத்துமத்திலாவது உடலிலாவது
உண்டாகாதபடி கிருபைசெய்தருளும் .
என் திவ்விய இரட்சகரான இயேசுவே ! இந்த
விலைமதியாத புண்ணியத்தை அனுசரிக்க
உமது சிறப்பான உதவி வேண்டியிருக்கிறதினால்,
தூய்மையை விரும்புகிறவரும் கன்னியர்களுக்கு
நிறைந்த தயையுள்ள அரசருமாகிய தேவரீர்
பாதத்தில் இந்தத் தூய்மையான புண்ணியத்தைக் கேட்க வருகிறேன் .
உம்முடைய வரப்பிரசாதத்தினால் எத்தனையோ
பேர்கள் இவ்வுலகில் தேவதூதர்களைப் போலத் தூயவர்களாய் நடந்தார்கள் !
அவர்களும் என்னைப் போலப் பலவீனர்களாகத்தானே இருந்தார்கள்,
ஆகையால் என் பலவீனத்தால் நான் தைரியமற்றுப்போக நியாயமில்லை .
மனத்திடம் கொடுக்கிறவராகிய கர்த்தாவே !
தேவரீர் அவர்களை உறுதிப்படுத்தினது போல்
என்னையும் தூய நெறியில் உறுதிப்படுத்தியருளும் .
அவர்களால் ஆனது போல் உம்மைக்
கொண்டு எந்நாளும் எல்லா நலமும் ஆகக்கூடும் .
உமது தோத்திரத்துக்கும் என்
இரட்ச்சணியத்துக்கும் விரோதியாகிய சத்துரு
தன் சோதனையால் என்னை மயக்கி என்
மீது வெற்றிக் கொண்டு விடாதபடி அடியேன் இடைவிடாமல்
சுறுசுறுப்போடே வேண்டிக்கொள்ளவும்,
என்மேலே காவல் காத்து எச்சரிக்கையோடே
நடக்கவும் தயைபுரியும் .
நான் என் புத்தி நினைவைத் திடமாய்
ஒழுங்குபடுத்தி என் பொறிகள்
ஐந்தினையும் எந்நேரமும் அடக்கிப்
பாவ சமயங்களையெல்லாம் தைரியமாக விலக்கி
என்னை அசுத்தப்படுத்துவதானன எல்லாவற்றையும்
மகா அருவருட்னே ஆலோசித்து ஓர் அர்ப்பக்
குற்றத்தின் சாயலுக்கு முதலாய்
அஞ்சி நுணுக்கமான பக்தியுடன்
சுமித்திரையாய் நடந்து மிகப்
புச்சியமும் மழுங்குவதற்கு எளிதுமாகிய
இந்தப் புண்ணியத்தைப் பழுதில்லாமல்
காப்பாற்ற அனுக்கிரகம் செய்தருளும் .
தூய்மைக்கு இருப்பிடமாகிய கன்னித் தாயே,
எனக்கு அடைக்கலமாயிரும் .
அடியேனுக்காக உம்முடைய திருக்குமாரனை மன்றாடியருளும் .
என் காவல் தூதரே,
சோதனையில் என்னைக் கைவிடாமல் காத்தருளும் . - ஆமென்
மனம் வருந்துதல்
அன்பின் பரிசுத்த ஆவியே
- எங்கள் விரோத குணத்தை மன்னியும்.
நம்பிக்கையின் பரிசுத்த ஆவியே
- எங்கள் சுய பரிதாபத்தை மன்னியும்.
விசுவாசத்தின் பரிசுத்த ஆவியே
- எங்கள் சந்தேக புத்தியை மன்னியும்.
மகிழ்ச்சியின் பரிசுத்த ஆவியே
- எங்கள் துயரமனதை மன்னியும்.
சமாதானத்தின் பரிசுத்த ஆவியே
- எங்கள் ஆகங்காரத்தை மன்னியும்.
பொறுமையின் பரிசுத்த ஆவியே
- எங்கள் முணுமுணுத்தலை மன்னியும்.
இரக்கத்தின் பரிசுத்த ஆவியே
- எங்கள் கொடுரமான சிந்தனையை மன்னியும்.
நன்மைத்தனத்தின் பரிசுத்த ஆவியே
- எங்கள் தீய செயலை மன்னியும்.
விசுவாசமுள்ள பரிசுத்த ஆவியே
- எங்கள் சோம்பேறித்தனத்தை மன்னியும்.
தாழ்ச்சியின் பரிசுத்த ஆவியே
- எங்கள் தற்பெருமையை மன்னியும்.
தன்னடக்கத்தின் பரிசுத்த ஆவியே
- எங்கள் பேராசையை மன்னியும்.
ஒப்புக்கொடுத்தல்
தூய ஆவியானவரே,
எங்களை வழிநடத்தும்படி,
எங்கள் வாழ்வு முழுவதையும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம்.
எங்களுக்குள்ளே ஜீவித்து இறையன்பின்
அற்புதங்களை எங்கள் வழியாக வெளிப்படுத்தும்.
மன்றாடுதல்
கடவுளின் பரிசுத்த ஊழியர்களுக்காக
- பரிசுத்த ஆவியே அவர்களை உறுதிப்படுத்தும்படி மன்றாடுகிறோம்.
நாட்டு தலைவர்களுக்காக
- பரிசுத்த ஆவியே அவர்களை நேர்மையுள்ளவர்களாக விளங்கும்படி மன்றாடுகிறோம்.
துன்புறும் ஏழைகளுக்காக
- பரிசுத்த ஆவியே அவர்களை செல்வர்களாக்கும்படி மன்றாடுகிறோம்.
கொடிய பணக்காரர்களுக்காக
- பரிசுத்த ஆவியே அவர்களை பணிவுள்ளவர்களாக் ஆகும்படி மன்றாடுகிறோம்.
கர்ப்பிணிப் பெண்களுக்காக
- பரிசுத்த ஆவியே அவர்களை ஆறுதல்படுத்தும்படி மன்றாடுகிறோம்.
நோயாளிகள், மரணத் தறுவாயில் உள்ளோருக்காக
- பரிசுத்த ஆவியே அவர்களை ஆறுதல்படுத்தும்படி மன்றாடுகிறோம்.
வேலையில்லாதவர்களுக்காக
- பரிசுத்த ஆவியே அவர்களை தேற்றும்படி மன்றாடுகிறோம்.
காணாமல்போன ஆட்களுக்காக
- பரிசுத்த ஆவியே அவர்கள் தங்கள் இல்லத்திற்கு
திரும்ப வழிகாட்டும்படி மன்றாடுகிறோம்.
உள்ளம் உடைந்தவர்களுக்காக
- பரிசுத்த ஆவியே அவர்களை குணப்படுத்தும்படி மன்றாடுகிறோம்.
துன்பவேளை மன்றாட்டு
இனிய இயேசுவே ! மக்களிடையே வாழ்வதும்,
அவர்கள் மேல் உமது ஆசியை ஏராளமாகப்
பொழிவதும் உமக்கு மிகப்பெரும் மகிழ்ச்சி .
நம்பிக்கையோடு உம்மைநாடி வந்த பக்தர்
அநேகர் வியப்புக்குரிய வரங்களை உம்மிடமிருந்து பெற்றுள்ளனர் .
அவர்கள் கோரிய மன்றாட்டுக்களையும் அடைந்துள்ளனர் .
உமது அற்புத திருச்சுரூபத்திற்கு முன் முழந்தாளிட்டு,
என் இதயத்தை திறந்து , என் விண்ணப்பங்களையும்,
கோரிக்கைகளையும், ஏக்கங்களையும் . . . . . (தேவையை உறுதியோடு குறிப்பிடவும் )
உம்மிடம் கேட்கிறேன் .
உமது விருப்பம் போல் எனக்கு ஆகட்டும் .
உமது ஞானத்திற்கும், அன்பிற்கும் ஏற்ப,
என் நன்மைக்காகவே எல்லாவற்றையும் நீர் செய்வீர் என்று நான் அறிவேன் .
இத்துன்ப வேளையிலே எனக்கு ஆறுதலாக வந்து,
மகிழ்ச்சியையும் தந்து கிருபை பாலிக்க
வேண்டும் என்று குழந்தை இயேசுவே
உம்மிடம் பணிவோடு கேட்கிறேன்
நோயுற்றோர் நலம்பெற செபம்
இடைவிடா சகாய அன்னையே!
பனிமாதாவே இரக்கமுள்ள தாயே,
நோயுற்றோரின் பிணிகளை உம்
திருமகன் சுமந்துகொண்டார்;
தன்னை விசுவாசத்தோடு நாடி வந்தோர்க்கு நலமளித்தார்.
இதோ நோயுற்றிருக்கும் எங்களை (பெயர்களை சொல்லவும்) கண்நோக்கியருள்ளும்.
எங்களுடைய பாவங்களையும் பலவீனத்தையும் பாராமல்,
திருசபையோரின் விசுவாசத்தையும் கண்ணுற்று
எங்களுக்கு நலமளிக்க இறைவனை மன்றாடும்.
நாங்கள் பிணிகளை ஏற்ப்பது இறைவனின்
திருவுளமானால் புருமையுடனும்,
மனமகிழ்வுடனும் ஏற்றுக்கொள்ள மனவுறுதியை பெர்றுதாரும்.
நோயில் நாங்கள் துவளும் போதும் உம்மைப்போலவே 'இதோ உமது அடிமை,
உமது வார்த்தையின்படியே எனக்கு ஆகட்டும்'
என்று இன்முகத்தோடு கூறி ஏற்றுக்கொள்ள
இறைவனிடமிருந்து வரங்களை பெற்றுத் தந்தருளும். - ஆமென்.
நோய் வேளை மன்றாட்டு
இரக்கமுள்ள குழந்தை இயேசுவே !
நோயாளிகளுக்கு நீர் காட்டிய
கருணை எனக்குத் தெரியும் .
இவ்வுலகிலே நீர் வாழ்ந்த போது,
நோயாளிகளையும், அங்கம் குறைந்தவர்களையும்
தீராத நோயால் துன்புற்றோரையும்,
உமது கனிவான கரத்தால் தொட்டு குணமாக்கினீர் .
இன்று இந்த உமது திருச்சுரூபத்தை
நாடி வரும் ஆயிரமாயிரக்கணக்கான பக்தர்கள் கொடூரமான,
படு மோசமான நோய்களிலிருந்து உம்மால்
தான் அற்புதமாகக் குணமடைந்துள்ளதாக கூறுகின்றனர் .
குழந்தை இயேசுவே ! நான் ஒரு பாவி :
துன்பங்களை அனுபவிக்க வேண்டியவன் :
உமது கருணையைப் பெற உரிமையே இல்லாதவன் என்று எனக்குத் தெரியும் .
என்றாலும் எண்ணற்ற வரங்களையும்,
நோய்களை நீக்கும் அற்புத குணங்களையும்,
மாபெரும் பாவிகளுக்குக்கூட நீர்
மனம் இரங்கி அளித்து வருகின்றீர் .
ஆகையால் என்னையும் நீர் குணமாக்க
முடியும் என்று இன்னும் அதிகமாக நான் நம்புகிறேன் .
வானக மருத்துவரே !
இந்த . . . நோயினின்று (நோயை குறிப்பிடுக )
நான் குணமடைய வேண்டும் என்பதற்காக
, உமது திருக்கரத்தால் என்னை ஆசீர்வதியும் .
எல்லா நோயையும், வலியையும் நீக்கி குணமாக்கியருளும் .
பெற்ற குணத்திற்கும் மூலகாரணம்
மருந்தல்ல் எல்லாம் வல்ல உமது தெய்வீக
ஆற்றல் என்பது எல்லோருக்கும்
புலனாகும்படி எனக்கு சுகமளித்தருளும் .
ஆய்ந்தறிய முடியாத உமது ஞானத்திற்கேற்ப
எந்த நிலையிலும் உமது திருச்சித்தப்படியே
எனக்கு ஆகட்டும் .
ஆன்ம நலனையும் அடியேனுக்கு அளித்தருளும் .
இந்நோயால் நான் துன்புறுகையில்,
உமது ஆறுதலின் இனிய அமுதம் என்மேல் வழிந்தோடட்டும் .
இவ்வுலகத் துன்பமெல்லாம் கொஞ்ச
நாளுக்குத்தான் என்ற உயரிய உண்மை
என் உள்ளத்தை நிரப்பட்டும் .
அன்பும், இரக்கமும் உள்ள குழந்தை இயேசுவே !
துன்பங்களைத் திடமனத்துடன் சகித்துக் கொள்ளவும்,
உமது திருவுளத்திற்குப் பணிந்து நடக்கவும் எனக்கு வரம்தாரும் .
ஓ ! இயேசுவே, என்னை ஆசீர்வதியும்
நோயால் படுக்கையாகி விட்டாலும்,
நித்திய வாழ்வை நீர் எனக்கு வழங்கும் .
உமது பேரன்பை நான் போற்றிப் புகழ அருள் தாரும் . - ஆமென்
பேய் ஓட்டுகிறதற்கு செபம் :
இதோ ஆண்டவருடைய சிலுவை சத்துராதிகளாகிய
நீங்கள் அகன்று போகக்கடவீர்கள் .
அல்லேலூயா ! அல்லேலூயா !
அல்லேலூயா ! யூதா கோத்திரத்தின்
சிங்கமும் தாவீதின் சந்ததியுமானவர் ஜெயங்கொண்டார் . அல்லேலூயா !
நரக வல்லமையை அடக்கின புனித அந்தோணியாரே !
இயேசு கிறிஸ்துநாதருக்கும் சத்திய
வேதத்திற்கும் சத்துராதிகளாய் இருக்கிறவர்கள்
எல்லோரையும் சிதறடிப்பதுமல்லாமல்
துன்மார்க்கங்களையும் துர்க்குணங்களையும்
நிர்மூலமாக்கும்படி உம்மை மன்றாடுகிறோம் . - ஆமென்
கடைசி வேண்டுதல்
இடைவிடாமல் துதிக்கப்பட யோக்கியமுமாய்
மிகுந்த மதுரமுள்ள பூசிதமுமாயிருக்கிற
பரம திவ்விய நற்கருணைக்கே எல்லா காலமும்
முடிவில்லாத ஆராதனையும் துதியும் தோத்திரமும் உண்டாகக்கடவது.
ஜென்மப்பாவமில்லாமல் உற்பவித்து எப்போதும்
பரிசுத்த கன்னியுமாயிருக்கிற நமது
ஆண்டவளுமாய்க் கொண்டாடப்பட்டவளுமாயிருக்கிற
புனித தேவமாதாவினுடைய அமலோற்பவத்துக்கும்
புனித சூசையப்பருடைய பாக்கியமான மரணத்துக்குமே தோத்திரமுண்டாகக்கடவது.
தேவ வரப்பிரசாதத்தின் தாயே,
இரக்கத்துக்கு மாதாவே, புனித மரியாயே,
எங்கள் மாற்றானுடைய சோதனையிலேயும்,
மரண நேரத்திலேயும், உமது திருக்குமாரனை
வேண்டி எங்களைக் காக்கவும், ஆளவும்,
கைக்கொண்டு நடத்தவும் வேணுமென்று உமது
திருப்பாதம் முத்திசெய்து உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.
கல்லறை ஆண்டவர் செபம்
திவ்விய இரட்சருடைய கல்லறையில்
கண்டெடுக்கப்பட்ட செபம்
இயேசுவின் நேச இருதயமே!
உம் இருதயத்தின் அருள் சுடர்
ஒளியிலிருந்து என் விசுவாச ஒளியைப்
பெற்று நான் வாழ,
என்னை உமக்கு நிரந்தரமாக அர்பணிக்கிறேன்.
செபம்
ஆ! மிகவும் வந்திக்கத்தக்க கர்தாவும்
இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவே!
எங்கள் பெரும் பாவத்திற்காக,
கொலைக்களத்தில் உண்மையாகவே இறந்தீர்.
ஆ! கிறிஸ்து இரட்சகருடைய பரிசுத்த
சிலுவையே எங்கள் நினைவுகளைக் கவனியும்.
ஆ! ஆண்டவருடைய பரிசுத்த சிலுவையே
எந்த ஆயுத அபாயங்களுக்கும் எங்களைத் தப்புவியும்.
ஆ! கர்த்தருடைய பரிசுத்த சிலுவையே,
சகல துன்பங்களினின்றும் காப்பாற்றும்.
ஆ! இயேசு இரட்சகரின் பரிசுத்த சிலுவையே,
எங்கள் எதிரிகளிடமிருந்து எங்களை பாதுகாத்தருளும்.
ஆ! எங்கள் கர்த்தருடைய பரிசுத்த சிலுவையே!
எங்கள் அபாய மரணத்தினின்று எங்களைக்
காப்பாற்றி நித்திய ஜீவனைத் தந்தருளும்.
ஆ! சிலுவையில் அறையுண்ட நசரேனாகிய இயேசுநாதரே,
எப்பொழுதும் எங்கள்மீது இரக்கம் வையும்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துநாதருடைய மகிமையாலும்
அவருடைய பாடுகளாலும் உயிர்த்தெழுதலினாலும்
தெய்வத்தன்மைக்குரிய மோட்ச ஆரோகணத்தினாலும்,
எங்களைப் பரலோகத்தில் சேர்க்க உண்மையாகவே அந்த நாளில்
மாட்டுத்தொழுவத்தில் பிறந்தீர்.
மெய்யாகவே நீர் பிறந்த பதிமூன்றாம்
நாள் மூன்று இராஜாக்களால் தூபம், பொன்,
வெள்ளைப்போளம் முதலிய காணிக்கை அளிக்கப்பட்டீர்.
பெரிய வெள்ளிக்கிழமையில் கல்வாரி மலையின்
மேல் சிலுவையில் அறையப்பட்டு, உயிர்விட்டு,
நிக்கோதேமு, சூசை எனும் பக்கர்களால்
சிலுவையினின்று இறக்கி அடக்கம் செய்யப்பட்டீர்.
மெய்யாகவே நீர் மோட்சத்திற்கு எழுந்தருளினீர்.
ஆகவே கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நாதருடைய
மகிமையானது எங்களை சத்துருக்களுடைய வஞ்சனைகளினின்றும்
இப்போதும் எப்போதும் காப்பாற்றும்.
ஆ! ஆண்டவராகிய இயேசுவே!
எங்கள்மீது கிருபையாயிரும்.
புனித மரியாயே, புனித சூசையப்பரே, எங்களுக்காக
வேண்டிக்கொள்ளும். ............ (வேண்டியதை உறுதியாகக் கேட்கவும்).
ஆ! கர்தராகிய இயேசுவே, உம்முடைய பாடுகளின் வழியாய்
இந்த பாவ உலகத்தினின்றும் உம்முடைய ஆத்துமம்
பிரிந்தது உண்மையே.
அப்படியே நாங்களும் எங்கள் வாழ்வில்,
நாங்கள் படும் துன்பங்களை உமது
இரக்கத்தின் கண்கொண்டு பாரும்.
எங்கள் பாடுகளை யாதொரு பழியும்
கூறாமல் பொறுமையோடு சகிக்க கிருபை கூர்ந்தருளும்.
உமது பாடுகளின் மூலமாக எங்களுக்கு நேரும்
எல்லா இடைய+றுகளிலும் இப்போதும்
எப்போதும் எங்களைத் தப்புவியும் -ஆமென்.
செபிப்போமாக:
எங்கள் சர்வேசுரா சுவாமி!
தேவரீர் வார்தைப்பாடு கொடுத்தபடியினாலே
இயேசுநாதர் சுவாமி பாடுபட்டுச் சிந்தின
திருஇரத்தப் பலன்ளைப் பார்த்து எங்கள்
பாவங்களையெல்லாம் பொறுத்து,
உங்களுக்கு உம்முடைய வரப்பிரசாதங்களையும்
மோட்ச பாக்கியத்தையும் தந்தருள்வீர்
என்று உறுதியாக நம்பியிருக்கிறோம். -ஆமென்.
இறந்தோருக்காக செபம்
இறந்தோருக்காக வேண்டுதல்
இறந்தோரிடமிருந்து இயேசு கிறிஸ்துவை
உயிர்த்தெழத்ச் செய்த எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவா,
சாவுக்குரிய எங்கள் உடலுக்கும்
நீர் உயிர் அளிப்பவர் என்பதால்,
இறந்த உம் அடியார்....... (பெயர்)க்காக
நாங்கள் விசுவாசத்துடன் வேண்டுதல் புரிகிறோம்.
உம் திருமகனோடு மகிமையில் உயிர்ததெழும்படி
இவர் அவரோடு திருமுழுக்கில் புதைக்கப்பட்டார்.
விசுவாசத்துடனும் விருப்புடனும் இவர்
உண்ணும்படி வானக உயிருள்ள
அப்பத்தை இவருக்கு அளித்தீர்.
நாங்கள் உருகும் உள்ளத்தோடு இவருக்காக
செய்யும் வேண்டுதல்களுக்குச் செவிசாய்த்தருளும்.
சாவுக்குரிய தளைகளிலிருந்து இவரை விடுவித்து,
உயிர்த்தெழும் நாளில் இவர்
உம் திருமுன் வந்து சேரவும்,
உம் புனிதரோடு பேரின்ப மகிமையில்
பங்குபெறவும் அருள்வீராக.
உயிருள்ள இறைவனின் திருமகனாகிய கிறிஸ்துவே.
உம் நண்பர் இலாசரைச் சாவினின்று
உயிர்த்தெழச் செய்தீரே, உமது திருஇரத்தத்தால்
நீர் மீட்டருளிய இந்த அடியாருக்குப்
புதுவாழவும் மகிமையும் அளித்தருளும்.
உம்முடைய ஐந்து காயங்களை முன்னிட்டு வேண்டுகிறோம்.
உத்தரிக்கிற நிலையில் உள்ளவர்கள்,
யாரும் நினையாத நிலையில்
செப உதவி பெற இயலாதாவர்கள்,
குறிப்பாக ......... (பெயர்)
ஆகியோரின் வேதனையைக் குறைத்து இவர்களை விண்ணரசில்
சேர்த்துக் கொள்ளும்படி மன்றாடுகிறோம்.
நயீன் ஊர்க் கைபெண்ணின் ஒரே மகனுக்கு உயிர் கொடுத்து,
உம் பரிவிரக்கத்தால் அவருடைய கண்ணீரைத் துடைத்தீரே,
நாங்கள் அன்பு செய்தவரை இழந்து
அழுது புலம்பும் இந்நேரம் எமக்கு ஆறுதல் அளித்தருளும்.
"இவருக்கு முடிவில்லா வாழ்வு ஒன்று உண்டு.
இவரது வாழ்வு மாறுபட்டுள்ளதேயன்றி, அழிக்கப்படவில்லை.
இவருக்காக விண்ணகத்தில் நிலையான
வீடு ஆயத்தமாயிருக்கிறது" என்ற திண்ணமான உண்மையை எண்ணி,
நாங்கள் அமைதிபெற அருள்வீராக.
உமது பேரிரக்கத்தால் ஆண்டவரே,
இவருக்கு முடிவில்லா இளைப்பாற்றியை அளித்தருளும்.
உம் அடியார் ........(பெயர்)
தம்மைப் படைத்தவரும் மீட்பவருமாகிய உம்மை
விரைவில் கண்டு என்றென்றும் மகிழச்செய்தருளும்.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து
வழியாக உம்மை மன்றாடுகிறோம். -ஆமென்
உத்தரிக்கிற ஆத்துமாக்களின் ஜெபம்
திவ்விய இயேசுவே, உத்தரிக்கிற ஸ்தலத்து
ஆத்துமாக்களின் பேரில் இரக்கமாயிரும்.
தாவீது அரசனின் புத்திரனாகிய இயேசுவே
சிலுவை பாரத்தால் அதிகரித்த
காயங்களின் கொடிய வேதனைகளைப் பார்த்து
இறந்துபோன உம் அடியார்.................. அவர்களை
உமது பிரத்தியட்சணமான தரிதனத்தில் பார்த்து உமது மகிமையில்
ஏற்றுக்கொள்ளும் பொருட்டு அவர்களை
இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.
சர்வ வல்லப பரிசுத்தரே எங்கள் பேரிலும்,
உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமாக்கள்
அனைவர் பேரிலும் இரக்கமாயிரும். -ஆமென்.
பாலோகத்தில்.....
அருள் நிறைந்த மரியே...
பிதாவுக்கும்...
வேளாங்கன்னி மாதாவுக்கு நவநாள் செபம்
மகா பரிசுத்த கன்னிகையே,
இயேசுவின் தாயாராயிருக்குமாறு நித்தியமாக
பரிசுத்த மூவொரு கடவுளால் தெரிந்து
கொள்ளப்பட்ட தூய மணியே!
குடவுளுடைய திருப்புதல்வன் உமது
திரு உதரத்தில் அவதாரமான போதும்,
ஒன்பது மாதமளவாக அவரை உமது
மாசணுகாத கருவில் தாங்கிய போதும்,
நீர் அடைந்த பேரின்பத்தை உமது ஏழை
ஊழியனாகிய அடியேன் உமக்கு நினைவூட்டுகிறேன்.
எனது அன்பினாலும், செபங்களாலும் நீர்
அப்போது அனுபவித்த இன்பத்தை மீண்டும்
புதுப்பிக்கவும் கூடுமானால் அதிகரிக்கவும் விரும்புகிறேன்.
துன்பப்படுகிறவர்களுக்கு இரக்கம் மிகுந்த அன்னையே!
நீர் அப்போது அனுபவித்த இப்பெருமகிழ்ச்சியைக்
கொண்டாடுபவர்களுக்கு நீர் வாக்களித்துள்ள விசே:
உதவியையும், பாதுகாப்பையும் எனக்கு
இத்துன்ப நேரத்தில் தந்தருளும்.
உமது தெய்வப் புதல்வனுடைய அளவற்ற
வல்லமையில் நம்பிக்கை கொண்டுள்ளேன்.
கேட்பவருக்கு அளிப்பதாக அவர்
தந்த வாக்குறுதியை நினைத்து,
உமது பெரும் வல்லமை நிறைந்த மன்றாட்டுக்களில்
உறுதி கொண்டுள்ளேன்.
இந்த நவநாளின் போது நான் செய்யும்
விண்ணப்பங்களை கடவுளுடைய திருச்சித்தத்திற்கு
ஏற்றவையானால் அவரிடம் பரிந்து பேசி அடைந்து தந்தருளும்.
நான் கேட்கும் மன்றாட்டுகள் கடவுளுடைய
திரு விருப்பத்திற்கு மாறானதாயிருந்தால்
எனக்கு எவ்வரம் மிகவும் தேவையோ
அதையே அடைந்து தந்தருளும்.
(இங்கு உம்மன்றாட்டு இன்னதெனச் சொல்லவும்)
தேவனின் தாயே! இப்போது உமக்கு வணக்கமாக
நான்செய்யும் இந்நவநாளை உம்மில் நான்
கொண்டிருக்கும் பெரும் நம்பிக்கையை
காட்டுவதற்காகவே செய்கிறேன்.
இயேசு மனிதனான போது உமது திரு உள்ளம்
அடைந்த தெய்வீக மகிழ்ச்சியை நினைத்து
அதற்கு வணக்கமாக நான் செய்யும் இந்நவநாளையும்
இப்போது நான் சொல்லப் போகும் அருள்
நிறை செபத்தையும் அன்புடன் ஏற்றுக் கொள்ளும்.
(இங்கு அருள் நிறை செபத்தை ஒன்பது முறை சொல்லவும்)
கடவுளின் மாட்சி பெற்ற அன்னையே!
அருள் நிறைந்தவள் என முதன் முதல்
அதிதூதர் கபிரியேல் சொன்னபோது கொண்டிருந்த
பணிவு வணக்கத்துடன் நானும்
இவ்வாழ்த்துல்களைக் கூறுகிறேன்.
ஏற்றுக் கொள்ளும்.
நீர் அணிந்திருக்கும் முடியில் என்
செபங்கள் அத்தனையும் விண்மீன்களெனத்
துலங்குமாறு விரும்புகிறேன்.
வருந்துவோருக்கு ஆறுதலே, நான் உம்மிடம்
இப்போது மன்றாடும் விண்ணப்பங்கள்
நிறைவேறுமாறு உமக்கு வணக்கமாக இதுவரை
பரிசுத்தவான்களால் செய்யப்பட்ட எல்லாப்
புனித செயல்களையும் ஒப்புக் கொடுக்கிறேன்.
உமது திரு மகனும் எங்கள் ஆண்டவருமான இயேசு
நாதருடைய திரு இருதயத்தில் பொங்கி வழியும்
பேரன்பையும் அது போன்ற உமது அன்பையும் பார்த்து,
ஏழையான எனது செபத்தை ஏற்று என்மன்றாட்டை
்து அடைந்து தந்தருளும் தாயே! - ஆமென்.
தூய ஆரோக்கிய அன்னைக்கு நவநாள் செபம்
மிகவும் இரக்கமுள்ள தாயே,
உமது அடைக்கலமாக ஓடிவந்து உமது
உபகாரங்களை இரந்து உம்முடைய
மன்றாட்டுக்களின் உதவியை கேட்ட
ஒருவராகிலும் உம்மால் கைவிடப்பட்டதாக
ஒருபொழுதும் உலகில் சொல்லக்
கேள்விப்பட்டதில்லையென்று நினைத்தருளும்.
கன்னியருடைய இராக்கினியான கன்னிகையே
தயையுள்ள தாயே இப்படிப்பட்ட நம்பிக்கையால்
ஏவப்பட்டு உம்முடைய திருப்பாதத்தை அண்டி வருகிறோம்.
பெருமூச்செறிந்து அழும் பாவியாகிய
நாங்கள் உமது சமூகத்திலே நிற்கிறோம்.
அவதரித்த வார்த்தையின் தாயே எங்கள்
மன்றாட்டைப் புறக்கணியாமல்
தாயாபரியாய்க் கேட்டுத் தந்தருளும். ஆமென்.
புனித ஆரோக்கிய அன்னைக்கு நவநாள் ஜெபம்
புனித மரியே ! ,
மாசில்லாக் கன்னிகையே !
இயேசுவின் தாயாக மூவொரு
கடவுளாக தெரிந்து கொள்ளப்பட்டவளே !
துன்பப்படுபவர்களுக்கு ஆறுதலளிக்கும் அன்னையே !
உமது திருமகனின் அளவற்றவல்லமையை நம்பி
உமது வல்லமை நிறைந்த மன்றாட்டுகளில் உருதுகொண்டு
இந்த நவநாளின் பொது நான் கேட்க்கும் மன்றாட்டுகள்
தெய்வ திருஉள்ளத்திற்கு ஏற்றவையானால்
அவரிடம் பரிந்துபேசி அவற்றை
என்னக்கு அடைந்தருளும் .
எனது மன்றாட்டுகள் கடவளின் விருப்பத்திற்கு
மாறாக இருந்தால் எனக்கு
எவ்வரம் தேவையே அதையே அடைந்துதருளும் .
(அவரவர் தேவைகளை நினைவு கூறவும் )
இறைவனின் மாட்சிபெற்ற அன்னையே
அருள் நிறைந்தவள் என்று
அன்று அதிதூதர் கவரியேல்
சொல்லும் பொது அவர் கொண்டிருந்த
அதே பணிவு வணக்கத்துடன்
நானும் இவ்வாழ்த்துக்களை கூறுகிறேன் .
அன்புடன் ஏற்றுக்கொள்ளும் .
(ஒன்பது முறை அருள் நிறைந்தமரி ஜெபம் சொல்லவும் (
இறைவனின் மாட்சிபெற்ற அன்னையே
அருள் நிறைந்தவள் என்று அன்று அதிதூதர் கவரியேல்
சொல்லும் பொது அவர் கொண்டிருந்த அதே பணிவு வணக்கத்துடன்
நானும் இவ்வாழ்த்துக்களை கூறுகிறேன் .
அன்புடன் ஏற்றுக்கொள்ளும் .
(ஒன்பது முறை அருள் நிறைந்தமரி ஜெபம் சொல்லவும்)
அர்ச் . பெரியநாயகி மாதாவுக்கு ஒப்புகொடுக்கும் ஜெபம்
பரிசுத்த கன்னிகையே !
இதோ உமது திருவடிகளை பணிந்து !
உமது திருக்குமாரனுக்கும், உமக்கும் !
நன்றியறிந்த தோத்திரம் செலுத்துகிறோம் .
சரீர ஆத்தும நன்மைக்காகவும் நாங்கள் அறிந்தும்,
அறியாமலும் ! உமது வழியாய் அடைந்த உபகாரங்களுக்காகவும் !
உமக்கு புகழ்ச்சியும் நன்றியும் செலுத்துகின்றோம் .
ஓ பரிசுத்த கன்னிகையே பச்சிளங் குழந்தைகளைக் காப்பாற்றும் !
கல்வி கற்கும் சிறுவர், சிறுமிகளையும் காப்பாற்றும் .
ஆமென் .
புனித பனிமாதா நவநாள் செபம்
எல்லாம் வல்ல இறைவா /
மூவொரு கடவுளே / உமது தேவ பராமரிப்பில்
/ உமது திருவுளப்படியே
/எம்மை நாள்தோறும் வழிநடத்திச் சென்றிடுவீர் !
/ தூய ஆவியே ! எழுந்தருள்வீர்
/ உம் அருள்கொடைகளை எம்மில் பொளிந்தருள்வீர்
இயேசுவே / எங்கள் இறைவனாகிய ஆண்டவரே
/ எங்கள் அன்னை பனிமாதாவின் /
வல்லமையுள்ள மன்றாடினால் /
எங்களைத் தொட்டு சுகப்படுத்தியருளும்
/ எங்களை ஆசிர்வதித்தருளும்
/ எங்களைக் குணப்படுத்தியருளும்
/ உம் தாயை இங்கு மகிமைப்படுத்தியருளும்
/ இயேசுவே உமக்குப் புகழ் !
இயேசுவே உமக்கு நன்றி !! ஆமென், அல்லேலுயா !!!
எங்கள் அன்புநிறை அன்னையே /
புனித கன்னி மரியே / நீர் எஸ்களின் மலையில்
/ புதுமையான உறைபனி பொழிந்து உம்மையே வெளிப்படுத்தினீர்
/ அன்றுமுதல் இன்றுவரை / ஏராளமான அருளையும்
/ எண்ணற்ற வரங்களையும்
/ உமது உதவியைத் தேடிவரும் யாவருக்கும்
/ பொழிந்து வந்துள்ளீர் / புனித பனிமாதாவே
/ இன்று எங்கள் வாழ்வை
/ உமக்கு அற்பணிக்கின்றோம் / நம்பிக்கையோடு
/ உம்மிடம் வந்திருக்கும் எங்களுக்கும்
/ உமது இரக்கத்தை மன்றாடும் அனைவருக்கும்
/ மிகவும் தேவையான வரங்களைப் / பொழிந்தருள்வீராக .
/ ( இங்கே உங்கள் கருத்துக்களைக் குறிப்பிடவும் )
இடைவிடாமல் சகாயம் புரிந்துவரும்
/ மலைபோல் துன்பத்தைப் பனிப்போல் நீக்கிவிடும்
/ எங்கள் பாதுகாவலியான பெரம்பலூர் புனித பனிமாதாவே
/ உம் திருமகனும் எங்கள் ஆண்டவருமான இயேசுவிடம் பரிந்து பேசி
/ எங்கள்ச் சூழ்ந்துள்ள துன்பங்களை அகற்றிடுவீர்
/ நாங்கள் நாடி நிற்கும் நன்மைகளைத் தந்தருள்வீர்
/ எங்கள் குடும்பம் விளங்கச் செய்திடுவீர்
/ மகிமைமிக்க புனித சூசையப்பரே
/ எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ! ஆமென் .
புனித அல்போன்சா செய்த செபம்:
"ஓ என் ஆண்டவராகிய இயேசுவே உம் திருஇதயத்தின்
காயத்தினுள் என்னை நீர் மறைப்பீராக.
அன்பும் மதிப்பும் பெறுவதற்கான ஆசையினின்று
என்னை நீர் விடுவித்தருளும்.
பேரும் பெருமையும் தேடுவதற்கான
முயற்சியினின்று என்னை காப்பாற்றும்.
நான் சிறு அணுவளவேனும் உம் திரு
இதயத்தினது அன்புத்தீயின் ஒரு
பொறியும் ஆகும் வரையில் என்னை
நீர் தாழ்த்துவீராக. எல்லாப்
படைப்புக்களையும் என்னையுமே மறந்துவிடுவதற்கான
அருளை எனக்கு தந்தருளும். சொல்ல
முடியாத இன்பமாகிய இயேசுவே உலக
ஆறுதல்கள் அனைத்தையும் எனக்கு
கசப்பாக மாற்றியருளும். நீதியின்
கதிரோனாகிய என் இயேசுவே உம்
திருகதிர்களால் என் உள்ளத்துக்கு
தெளிவையும் புத்திக்கு ஒளியையும்
அளித்து என் இதயத்தை தூய்மைபடுத்துவீராக.
உம்மீது கொண்ட அன்பினால் என்னை
எரிய செய்து உம்முடன்
என்னை சேர்த்துக்கொள்ளும். ஆமென்.
புனித அல்போன்சாவிடம் செபம் :
புனித அல்போன்சாவே ! நம் மீட்பர்
இயேசு கிறிஸ்துவின் பாடுகளிலும்,
மரணத்திலும், உயிர்ப்பிலும் பங்குகொண்ட நீர்,
எங்கள் மத்தியில் இருந்து
தேர்ந்துகொள்ளப்பட்டீர் .
புண்ணியத்தில் வளர்ந்த நீர் இறைவனால்
புனித நிலைக்கும் மோட்ச
பாக்கியத்திற்கும் அழைத்துக்கொள்ளப்பட்டீர் .
எங்களின் துன்பங்களிலும் துயரங்களிலும்
இறைவனிடம் எமக்காய் பரிந்து பேசும் .
ஓ துன்பங்களால் தூய்மை அடைந்த தூயகமே !
உம்மை போல் நாங்களும் இறைவனை
முற்றிலும் சரணடைந்து தூய
வாழ்வு வாழ வழிநடத்தும் .
கிறிஸ்துவின் பாடுகளுக்காகவும்,
எம் பாவங்களின் மன்னிப்பிற்காகவும்,
அனைத்து மக்களின் முன்னேற்றத்திற்காகவும்,
மீட்பிற்காகவும் எங்கள் துன்பங்களை
பொறுமையோடு ஏற்று இறை மகிமைக்காக
வாழும் வரம் தாரும் . ஆமென் .
காவல் தூதரை நோக்கி செபம்:
எனக்குக் காவலாய் இருக்கிற
சர்வேசுரனுடைய சம்மனசானவரே !
தெய்வீக கிருபையால் உம்மிடத்தில்
ஒப்புவிக்கப்பட்ட எனக்கு ஞான
வெளிச்சம் கொடுத்து என்னைக்
காத்து வழிநடத்தி ஆண்டருளும். -ஆமென்.
புனித மிக்கேல் தேவதூதருக்குஜெபம்
அதிதூதரான புனித மிக்கேலே,
யுத்த நாளில் எங்களைக் காப்பாற்றும்
பசாசின் பட்டனத்திலும் கண்ணிகளிலும்
நின்று எங்களை காத்தருளும்.
இறைவன் அதைக் கடிந்து கொள்ளும்படி
தாழ்மையுடன் மன்றாடுகின்றோம்.
வானுலகசேனைக்கு அதிபதியாயிருக்கின்ற நீர்;
ஆன்மாக்களை நாசஞ் செய்யும்படி
உலகெங்கும் சுத்தித்திரியும்
சாத்தானையும் மற்றும் பசாசுகளையும்
தெய்வ வல்லமையைக் கொண்டு
நரகபாதாளத்திN;ல தள்ளிவிடும்.
- ஆமென்.
தூய அந்தோணியாரை நோக்கிபொது மன்றாட்டு
எங்கள் பாதுகாவலரான தூய அந்தோணியாரே,
இறைவனின் அன்புள்ள அடியாரே கிறிஸ்து
பாலகனை கையில் ஏந்தும்
பேறுபெற்ற தூயவரே, திருமறையை
ஆர்வமுடன் போதித்த சிறந்த
போதகரே தப்பறைகளை தகர்த்தெறிந்த வித்தகரே,
இறைவனின் தனி அருளால் அலகையை ஓட்டுபவரே,
துன்புறுவோரின் துயர் துடைப்பவரே,
பாவியராகிய நாங்கள் உமது
உதவியை நாடி உம்மிடம் ஓடி வந்தோம்.
புதுமை வரம் பெற்றிருக்கும்
எம் ஞானத்தந்தையே! நம்பிக்கையுடன்
உம்மிடம் ஓடி வந்துள்ள உம்
பிள்ளைகளின் மனறாட்டுக்களை கேட்டருளும்.
உமது ஆதரவை நாடி வந்துள்ள
உம் அடியார் எம்மீது உம்
கருணைக் கண்களைத் திருப்பியருளும்.
துன்பம், பிணி, வறுமை, சிறுமை
ஆகியற்றால் வாடி வந்திருக்கும்
எங்களுக்கு உதவியருளும்.
அழுவோரின் கண்;ணீரைத் துடைத்தருளும்.
நோயாளிகளுக்கு உடல் நலம் கொடுத்தருளும்.
எங்கள் அன்புக்குரிய தூய அந்தோணியாரே!
இறைவனின் திருவுளப்படி எப்பொழுதும்
நீர் நடந்தது போல நாங்களும்
இன்பத்திலும் துன்பத்திலும்
எப்பொழுதும் அவரது திருவுளத்துக்கு
இசைந்து நடக்கவும், நீர் தூய
வாழ்வு வாழ்ந்தது போல,நாங்களும்
ஒருவருக்கும் வஞ்சகம் நினையாமலும்,
செய்யாமலும் தீமையை அகற்றி புனிதராய் வாழவும்,
திருச்சபை தளைக்கவும், நாடு செழிக்கவும்,
நாங்கள் நேர்மையுடன் உழைக்கவும்,
மக்கள் யாவரும் மெய்யங்கடவுளைக்
கண்டறிந்து,தக்க முறையில் அவரை
வழிபடவும் எங்களுக்காக இயேசுவை வேண்டியருளும்.
எங்களையும் எங்கள் குடும்பங்களையும்,
எங்கள் தொழில் முயற்சிகளையும்,
உழைப்பினையும் ஆசீர்வதித்தருளும்.
எங்கள் விண்ணப்பங்கள் நிறைவேற
எங்களுக்காக இறைவனை மன்றாட வேண்டுகிறோம். - ஆமென்.
தூய அந்தோனியார் நவநாள் செபம்
புதுமைகள் புரிய அருள்பெற்ற
புனித அந்தோனியாரே எங்கள்
விண்ணப்பங்களை ஏற்று,
எங்களுக்கு இறைவனின் அருளைப் பெற்றுத்தாரும்.
குழந்தை இயேசுவைக் கையில் ஏந்தும்
பேறுபெற்ற புனித அந்தோணியாரே,
துன்பப்படுவோருக்கு துணைபுரியும் வள்ளலே,
ஏழைகளையும் ஆதரவற்றவர்களையும் அன்புடன்
அரவணைக்கும் நேசத் தந்தையே, இதோ உமது
மன்றாட்டின் பயனை உணர்ந்து,
அசைக்க முடியாத முழு நம்பிக்கையுடன்
உமது திருத்தலத்திற்கு வந்து கூடியுள்ளோம். நீர்
ஏந்தியுள்ள குழந்தை இயேசுவிடம்
எங்களுக்காக பரிந்து பேசி,
எம் ஆன்மாவுக்கும் உடலுக்கும் வேண்டிய
வரங்களைப் பெற்றுத்தாரும்.
இறையருளை நிரம்பப் பெற்ற புனித அந்தோனியாரே,
நாங்கள் உம் வாழ்வைப் பின்பற்றி,
எல்லாவற்றிற்கும் மேலாக
இறைவனையே அன்பு செய்யவும்,
அவருக்காகவே வாழவும் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
நாங்கள் அனைவரும் ஒருவரை ஒருவர்
அன்பு செய்து விண்ணுலகம்
வந்தடைய எங்களுக்கு இறையருளைப் பெற்றுத்தாரும்.
எங்கள் பாதுகாவலரான புனித அந்தோனியாரே,
மகிமையில் விளங்கிடும் புனித லீலியே,
துன்பப்படுவோரின் துயர் துடைப்பவரே,
அழுவோரின் ஆறுதலே, உம்மை நாடிநிற்கும்
எங்களை உம் அன்பால் அரவணைத்து
ஏற்றுக்கொள்ளும். துன்ப
துயரங்களிலிருந்து எங்களைக் காப்பாற்றும்.
வறுமையில் வாடும் எங்கள்
வாழ்வை வளமாக்கும். சோதனைகளை
வெல்ல வலிமையைப் பெற்றுத் தாரும்.
அமைதியின்றி அலையும் எங்களுக்கு
ஆறுதல் தாரும். வாழ வழிஅறியாதோர்க்கு வழிகாட்டும்.
எங்கள் குடும்பங்களையும், வேலைகளையும்,
நிலங்களையும் பாதுகாத்தருளும்.
நீங்காத நோய்நொடிகளை உமது வேண்டுதலால்
எங்களிடமிருந்து நீக்கியருளும். ஆமென்.
புனித தோமையாருக்கு நவநாள் செபம்
எங்கள் செல்வ நாட்டில் திருமறையைப்
போதிக்கப் பேறுபெற்ற புனித தோமையாரே,
உம்மைப் போற்றிப் புகழ்கின்றோம்.
ஆண்டவராம் இயேசுகிறிஸ்துவின் மீது
கொண்டிருந்த உன்னத பற்றுதலால் அவரோடு
சாகவும் துணிந்து உடன் அப்போஸ்தலர்களுக்கும்
ஊக்கமூட்டி வாழவும், வழியும், வாய்மையுமான அவரை
உலகெங்கும் அறிவித்தீரே. உம்முடைய
தூதுரைக்கு நன்றி கூறுகின்றோம்.
ஆணிகளின் ஈட்டியின் காயத்
தழும்புகளைத் தரிசித்து, உயிர்த்த
ஆண்டவரைக் கண்டு கொண்டு எங்கள்
விசுவாசத்தை உறுதிப்படுத்தியவரே
நாங்கள் எங்கள் விசுவாசத்தில்
தளராமல் வாழ்ந்திட அருள்புரியும்.
நீர் எங்கள் நாட்டில் திருமறையைப்
போதித்து, அற்புதங்களால் எங்கள்
முன்னோர்களின் பலரை சத்திய
மறைக்கு கொணர்ந்தீர். இன்னும்
எங்கள் நாட்டில் கிறிஸ்துவை
அறியாதோர் அவரை அறியவும்,
அறிந்து அன்பு செய்யவும்,
இந்தியக் கிறிஸ்துவர் அனைவரும்
விசுவாசத்திலும் பக்தி ஒழுக்கத்திலும்
சிறந்து உலகின் உப்பாகவும்,
உலகின் ஒளியாகவும் வாழ்ந்திட
வரம் பெற்றுத் தருவீராக.
புனித சூசையப்பருக்கு செபம்(1900 ஆண்டுகள் பழமையானது)
புனித சூசையப்பரே! உம்
அடைக்கலம் மிகவும் மகத்தானது.
வல்லமை மிக்கது. இறைவனின்
சந்நிதியில் உடனடி பலன் அளிக்க வல்லது.
ஏனவே என் ஆசைகளையும்,
எண்ணங்களையும் உம்
அடைக்கலத்தில் வைக்கிறேன்.
உம் வல்லமை மிக்க பரிந்துரையால்
உம் திருமகனும் எங்கள்
ஆண்டவருமாகிய சேசுவிடம் எங்களுக்குத் தேவையான
எல்லா ஆன்ம நலன்களையும் பெற்றுத்தாரும். இதன்
வழியாக மறு உலகில் உமக்குள்ள
ஆற்றலைப் போற்றி எல்லாம் வல்ல
தந்தையாகிய இறைவனுக்கு நன்றியும்,
ஆராதனையும் செலுத்தக் கடவேன்.
புனித சூசையப்பரே! உம்மையும்
உம் திருக்கரங்களில் உறங்கும்
சேசுவையும் சதா காலமும் எண்ணி
பூரிப்படைய தயங்கியதில்லை.
இறைவன் உம்மார்பில் சாய்ந்து
தூங்கும் வேளையில் அவரைத் தொந்தரவு செய்ய
விரும்பவில்லை. உம் மார்போடு அவரை என் பொருட்டு
இணைத்து அணைத்துக் கொள்ளும்.
என் பெயரால் அவருக்கு
நெற்றியில் முத்தமிடும்.
நான் இறக்கும் தருணத்தில்
அந்த முத்தத்தை எனக்குத் தரும்படி கூறும். மரித்த
விசுவாசிகளின் ஆன்ம காவலனே எங்களுக்காக மன்றாடும். - ஆமென்.
கண் நோய் தீர்க்கும்புனித பிரகாசியம்மாளுக்கு ஜெபம்
கன்னிகையும் வேத சாட்சியுமான
பக்தி மிகுந்த புனித பிரகாசியம்மாளே! நீர்
இறைவனிடம் பெற்றுக்கொண்ட அருட்பலத்தால் இளமையிலே
புண்ணிய வழியில் நடந்து தெய்வீக
அழகு பெற்றுத் திகழ்ந்தீரே,
உமது கன்னிமையை ஆண்டவராகிய
இயேசுவுக்கு அர்ப்பணித்து,
பெருந்துன்ப துயரங்கள் உம்மைத்
தாக்கிய போதும் அசையாத தூணாக
நின்று கன்னிமையை களங்கமில்லாமல்
காத்து உமது ஆத்துமத்தை
அவருக்குக் கையளித்தீரே,
சீர்கூசா நகரத்தின் மகிமையும்,
அடைக்கலமுமான கன்னிகையே, பக்தியுடன்
உம்மை நாடிவரும் அனைவருக்கும் பல
நன்மைகளையும் அற்புதங்களையும்
ஆற்றி வரும் அற்புத வரத்தியே
நீர் எங்களுக்காக இறைவனை மன்றாடி
நாங்கள் ஞான ஒளி பெற்று பாவ
வழிகளை விலக்கி, இயேசுவின்
அன்புப் பாதையில் நடந்து இறுதியாய்
மோட்ச பேரின்பம் அடைய வரம் பெற்றுத் தருவீராக! (1 பர, 1அருள், 1திரி,)
புனித யூதாததேயுசை நோக்கி ஜெபம்
அப்போஸ்தலரும் வேத சாட்சியுமான
புனித யூதாததேயுசே! நீர் நமது
ஆண்டவரும் இரட்சகருமான இயேசு
கிறிஸ்துவின் நெருங்கிய உறவினருள்
ஒருவராயிருக்கிறீர்! புண்ணியத்திலும்
புதுமை வரங்களிலும் மகா
கீர்த்திப் பெற்றவர்! உம்மை
மன்றாடுகிறவர்களுக்காகத் தவறாமல்
மனுப் பேசுகிறீர்!
திக்கற்றுத் தயங்குவோருக்கு விசே:ப்
பாதுகாவலர் நீர்;! நம்பிக்கை
இழந்தவர்களின் நம்பிக்கை நீர்!
இந்த உமது வல்லபத்தில் நம்பிக்கை
வைத்து இதோ நான் உம்மை நாடி வருகிறேன்.
எனக்கு மிகவும் அவசரமான இந்த
வேளையில் உதவிப் புரியும்படி
உம்மை கெஞ்சி மன்றாடுகிறேன். (வேண்டியதை விசுவாசத்துடன் கேட்கவும்)
ஓ! தயாள இருதய ததேயுசே!
இனிமேல் உள்ள என் வாழ்நாட்களில்
உம்மை எமது பாதுகாவலாக
வணங்குவேன் என்றும், எங்கள்
அவசரங்களில் உதவில் செய்ய,
நீர் வல்லமை மிகுந்தவரும்,
தீவிரமாய் பரிந்து பேசுகிறவருமாய் இருக்கிறீர்;
என்ற உமது பக்தியை மக்களிடையில்
பரவச் செய்வேன் என்றும்
உறுதியாய் வாக்களிக்கிறேன்.
புனித யூதாததேயுசே, எங்களுக்காகவும்
உமது உதவியை மன்றாடும் அனைவருக்காகவும்
வேண்டிக்கொள்ளும் - ஆமென்.
(ஒரு. பர, அருள், திரி)
குழந்தை சேசுவின் புதுமை நிறைந்த செபம்:
அற்புத குழந்தை சேசுவே!
அமைதி அற்ற எங்கள் உள்ளங்களின்
மேல் உம் கருணைக் கண்களைத்
திருப்பியருளுமாறு தாழ்ந்து,
பணிந்து, வணங்கி வேண்டுகிறோம்.
இரக்கமே உருவான உம் இனிய இதயம்
கனிவோடு எங்கள் செபத்தை ஏற்று
உருக்கமாக நாங்கள் வேண்டும்
இந்த வரத்தை அளித்தருளுமாறு
உம்மை இறைஞ்சுகிறோம்.
(வேண்டிய வரத்தை இங்கு குறிப்பிடுக)
எங்களை வாட்டி வதைக்கும்
துன்ப துயரங்களையும்,
வேதனை, சோதனைகளையும்,
நீக்கி உம் குழந்தை திருப்பருவத்தின் பெயரால் எங்கள்
மன்றாட்டை ஏற்றருளும்.
அதனால் உம் ஆறுதலையும்
ஆதரவையும் பெற்று தந்தையோடும் தூய ஆவியோடும்
உம்மை என்றென்றும் நாங்கள்
வாழ்த்திப் போற்றுவோமாக!
குழந்தை சேசுவே! என்
செபத்தை ஏற்றருளும் என்
மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும். - ஆமென்.
தேர்வு எழுதுவோருக்காக ஜெபம்
ஞானத்தின் ஊற்றே இறiவா!
எங்களின் இந்த இளம் வயதில்
பல நன்மைகளை எங்களுக்குப்
பொழிந்து வழிநடத்தி வந்த
நேரங்களை நன்றியோடு நினைக்கிறோம்..
எங்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்
தேர்வுகளை எழுதவிருக்கும் நாங்கள்,
இந்த இறுதி நாட்களில் எங்கள் பாடங்களைக்
கடின முயற்சியுடன் படித்து,
தேர்வுகளைச் சிறப்பாக எழுதி
முடிக்கவும்,அனைத்து
தேர்வுகளிலும் நல்ல மதிப்பெண்களுடன் வெற்றி
பெறவும், தேவையான ஞானத்தையும்,
நினைவாற்றலையும்,தெளிந்த மனதையும்
உடல் உள்ள வலிமைகளையும் எங்களுக்கு
கொடுத்தருளுமாறு உம்மைத்
தாழ்மையோடு வேண்டுகிறோம்.
ஞானத்தின் இருப்பிடமே
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
- ஆமென்.
புனித தந்தை பியோவுக்கு நவநாள் ஜெபம்
ஐந்து காய வரம் பெற்ற
முதற்குருவே, புனித தந்தை பியோவே,
அனைத்து ஆன்மாக்களும் விண்ணகம் சேர, தொடர்ந்து பரிந்து பேசி,
பாவிகளை மனம் திருப்பி,
பரமனிடம் சேர்க்க உறுதியளித்தவரே,
நற்கருணை நாதரோடு ஒன்றித்த ஒப்பற்றவரே,
செபமாலை பக்தியை
சாத்தனை எதிர்க்கும் ஆயுதமாகக் கொண்டவரே,
தவத்தை ஏற்று ஏழ்மை, தாழ்ச்சி,
பிறரன்புப் புண்ணியங்களில் சிறந்து,
இடைவிடா மன்றாட்டால் தீராத
நோய்களைக் குணமாக்கும் வரம்பெற்ற வள்ளலே,
எதிர்காலத்தை முன்னறிவிக்கும் இறைவாக்கினரே,
ஐந்து காயங்களிலிருந்து நறுமணம்
பரப்பும் நாயகரே, ஒரே நேரத்தில்
இரு இடங்களில் தோன்றும் நல்லவரே,
இறைவனால் இவ்வுலகுக்கு அருளப்பட்ட
மாபெரும் புனிதரான தூய பியோவே,
இதோ வேதனைகளோடும், பிரச்சனைகளோடும்,
தீராத நோய்களோடும், வாழ்க்கை
சுமைகளோடும் உம்மை நாடி
தேடி வரும் எங்களைக் கண்ணோக்கி பாரும்.
நாங்கள் விரும்பிக் கேட்கும் மன்றாட்டுக்களை (. . . . )
இறைவனிடம் பரிந்து பேசி
தயவாய் எமக்கு பெற்றுத் தாரும்.
அகிலம் போற்றும் அற்புதத்
தந்தை புனித பியோவே, இயேசுவின்
ஐந்து காயங்களை தனது உடலில்
சுமந்து,வேதனைகளை அனுபவித்து
துன்பத்தில் இறைவனை உணர்ந்தவரே,
நாங்களும் எங்கள் வாழ்க்கையில்
வரும் துன்பங்களை ஏற்று புனித
வாழ்வு வாழவும், உலகிற்கு
அமைதியைக் கொணரவும் தேவையான
வரங்களை இறைமகன் இயேசுவிடமிருந்து
பெற்றுத் தாரும். - ஆமென்.
புனித சவேரியாரின் 500வது பிறந்த ஆண்டு நினைவு வல்லமையுள்ள சிலுவை ஜெபம்
ஓ! பரிசுத்த சிலுவையே எங்கள்
ஏக நம்பிக்கையை உமது பேரில்
வைக்கிறோம். ஓ! பரிசுத்த
சிலுவையே இரக்கத்தின் தேவனே
உமது அடியார்களாகிய எங்களையும்
எங்கள் குடும்பங்களையும் காப்பாற்றியருளும்.
பரிசுத்த சிலுவைக்கு
நம்பிக்கை நவநாள்
பரிசுத்த சிலுவையே இந்த
எனது வேண்டுதலை உமது மகா
பரிசுத்த ஐந்து திருக்காயங்களில்
நம்பிக்கையுடன் வைக்கிறேன்.
(இங்கே வேண்டுதலை குறிப்பிடவும்)
பரிசுத்த சிலுவையே எங்களையும்
எங்கள் குடும்பத்திலுள்ள
அனைவரையும் கண்ணோக்கி பார்த்தருளும்.
பின் உமது திருவுளப்படி
ஆகட்டும், ஆண்டவரே உமது
சித்தத்தை ஏற்றுக் கொள்கிறேன்.
உமது இரக்கத்துக்கு என்னையே கையளிக்கிறேன். திருச்சிலுவையே
நீர் என்னை ஒருபோதும் கைவிடமாட்டீர்.
ஓ! பரிசுத்த சிலுவையே என்ஏக நம்பிக்;
கையை உமது பேரில் வைக்கிறேன்.
பரிசுத்த சிலுவையே என்
பேரில் உமக்குள்ள அன்பை விசுவசிக்கிறேன்.
பரிசுத்த சிலுவையே உமது
இராச்சியம் வருக. ஓ! பரிசுத்த
சிலுவையே நான் அநேக உதவி
உபகாரங்களை உம்மிடம் கேட்டிருக்கிறேன்.
ஆனால் அனைத்து உதவிகளையும்
உமதிடமிருந்து பெற்றிருக்கிறேன்.
அதற்காக இறைவனுக்கு முழு
மனதுடன் நன்றி செலுத்துகிறேன்.
ஆனால் இப்பொழுது எனக்கு மகா
அவசியமான இந்த விண்ணப்பத்திற்காக
உருக்கமாக மன்றாடுகிறேன். அதை
ஏற்று உமது ஐந்து திருக்காயங்களுக்குள் வைத்தருளும்.
நித்திய பிதா திரு இரத்தத்தால்
மூடப்பட்டிருக்கும் இவ்விண்ணப்பத்தை
பார்க்கும்போது அவர் அதை மறுக்கமாட்டார்.
பரிசுத்த சிலுவையே இனிமேல்
அது என்னுடைய விருப்பமல்ல, உம்முடையதே.
ஓ! பரிசுத்த சிலுவையே எனது
நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன்.
என்னை ஒரு போதும் கலங்க விடாதேயும். ஆமென்.
(தினமும் ஜெபிக்கவும்)
அப்போஸ்தலரான புனித தோமையாரை நோக்கி செபம்
எங்கள் இந்திய நாட்டில்
திருமறையைப் போதிக்க வரம்
பெற்ற் புனித தோமையாரே,
நீர் ஆண்டவர் மீது கொண்டிருந்த
பற்றுதலால் அவரோடு இறக்கவும் துணிந்திருந்தீரே!
காணாமல் நம்புவோரின் வீர விசுவாசத்தையும்,
சாவுக்கும் அஞ்சாத தீர அன்பையும்,
எங்களுக்குப் பெற்றுத் தந்தருளும்.
நீர் எங்கள் நாட்டில் திருமறையைப் போதித்து,
அரும் அடையாளங்களால் எங்கள் முன்னோர்களில்
கணக்கற்ற பேரை மெய் மறையின் ஒளிக்குக்
கொண்டு வந்தீர்! இன்னும் இந்த நாட்டில்
எங்கள் சகோதரர்களில் எத்தனை
கோடிப்பேர் இயேசுவை அறிந்து கொள்ளாமல்
இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும்
மனந்திரும்பி, இந்தியா முழுவதும் ஒரே
மந்தையாய், கிறிஸ்துவின் அன்பரசின்கீழ்
வருவது எப்போது?விசுவாசத்தில்
உறுதியடைந்த அப்போஸ்தலரே, எங்கள்
அனைவரையும் விசுவாசத்திலும் பக்தி
ஒழுக்கத்திலும் உறுதிப்படுத்தி,
எங்களில் துலங்கும் விசுவாசத்தின்
ஞானஒளி எங்கும் பரவி, இந்தியா
முழுவதும் கிறிஸ்து கொண்டு வந்த
விடுதலையையும் அமைதியையும் பெற்று
அவருடைய அரசின்கீழ் அணிவகுத்து
நிற்கும்படியாக இறைவனை மன்றாட
உம்மை வேண்டுகிறோம்.
ஆமென்.
தூய ஆரோக்கிய இயேசு பாலனிடம் மன்றாட்டு
(உன் பாவங்களுக்காக துக்கிப்பதாக இயேசுவிடம் சொல் )
வல்லமையுள்ள செபம்
இனிய இயேசுபாலனே, உம்மை நேசித்து
ஆராதித்து உம்முடனே எனது துயரங்களைப்
பகிர்ந்து கொள்ள தாழ்ச்சியுடன் வருகிறேன் .
எனக்குத் தேவையான உதவியை அன்புடன் தருவீர்
என்னும் நம்பிக்கையுடன் வருகிறேன் .
ஏனெனில் உம்மால் இயலாதது ஒன்றும் இல்லை .
பாவத்தினுடையவும், சாத்தானுடையவும் அடிமைத்
தனத்திலிருந்து எங்களை மீட்கும்படி எங்கள்
மனித சுபாவத்தை எடுத்து எங்கள்மேல் உள்ள
அன்பால் நீர் பலவீனர் போல் ஆனீர் .
உமது நன்மைத்தனத்தில் நாங்கள் நம்பிக்கை
வைத்து, "தந்தாய், இந்த கிண்ணத்தை
என்னிடமிருந்து அகற்றியருளும் .
ஆயினும் என் மனதின்படி அல்ல,
உம்முடைய சித்தத்தின்படியே ஆகட்டும்
" என்று நீர் மரண அவஸ்தைப்படும் போது சொன்னதையே நானும் சொல்கிறேன் .
சிறுவர்களுக்கு உமது அரசைத்தருவதாக வாககளித்தீரே .
சிறுமை நிறைந்த என்னை கண்ணோக்கும் .
எனது துயரத்தை மகிழ்ச்சியாக மாற்றுவீராக .
இவ்விதம் நான் நட்பில் உமது நண்பனாக வளர்வேன் .
உமது நட்பை பரகதியில் என்றென்றும் அனுபவிப்பேனாக . - ஆமென் .
இயேசுவின் திருஇதயத்திற்கு குடும்பங்களை அர்ப்பணிக்கும் செபம்
இயேசுவின் திருஇதயமே எங்கள்
குடும்பங்களை உமக்கு அர்ப்பணிக்கின்றோம் .
நன்றி கூறுகின்றோம் .
எங்களை ஆசீர்வதியும் .
எப்பொழுதும் இறைப்பிரசன்னத்தை உணர்ந்து
வாழ வரம் தாரும் . பலவீனர்களுக்கு
பலத்தையும் செல்வம் உடையவர்கள் பிறருக்கு
உதவிசெய்யும் நல்ல மனத்தையும் தந்தருளும் .
விதவைகளுக்கும், அநாதைபிள்ளைகளுக்கும்
நாங்கள் உதவியாய் இருக்கச் செய்தருளும் .
சிறையில், தனிமையில், நோயில், துன்பத்தில்
இருக்கின்றவர்களை ஆசீர்வதியும் . உலகிலுள்ள
ஒவ்வொரு குழந்தைகளுக்கும் விசுவாசத்தையும்,
தெய்வ பயத்தையும்,நல்ல ஒழுக்கத்தையும், பணிவையும்,
அறிவையும், தந்தருளும் . மரண தருவாயில்
இருக்கிறவர்களை நாள்தோறும் சந்தித்தருளும் .
ஆன்மாக்களை விண்ணகத்தில் சேர்த்தருளும் .
எங்கள் அனைவருக்கும் அடைக்கலமாகவும்,
தஞ்சமாகவும் சாகும் தருவாயில் உதவியாகவும் இருந்தருளும் .
ஆமென் .
நற்கருணை வாங்கிய பின் சுவாமி பியோ சொல்லி வந்த செபம்
என்னோடு தங்கும் ஆண்டவரே ! உம்மை மறவாதிருக்க,
நீர் என்னோடு பிரசன்னமாய் இருப்பது அவசியம் .
எவ்வளவு எளிதாக உம்மைக் கைவிட்டு
விடுகிறேன் என்பதை நீர் அறிவீர் .
என்னோடு தங்கும் ஆண்டவரே . ஏனெனில் நான் பலவீனன் .
அடிக்கடி நான் தவறி விழாமல் இருக்க
உமது பலம் எனக்குத் தேவை .
என்னோடு தங்கும் ஆண்டவரே .
எனக்கு வாழ்வே நீர்தான் . நீர் இல்லை
என்றால் என் வாழ்வில் எழுச்சி இல்லை .
என்னோடு தங்கும் ஆண்டவரே . நீரே என் ஒளி .
ஏன்னோடு நீர் இல்லை என்றால் நான் இருளில் ழ்கின்றேன் .
உமது சித்தம் எதுவென எனக்குத் காட்ட என்னோடு தங்கும் ஆண்டவரே .
உமது குரல் கேட்டு உம்மைப் பின்செல்ல என்னோடு தங்கும் ஆண்டவரே .
என்னோடு தங்கும் ஆண்டவரே . இறுதி
வேளையில் திருவிருந்து வழியாக
இல்லையென்றாலும் உமது அன்பு அருள்
மூலமாக என்னோடு தங்கும் .
என்னோடு தங்கும் யேசு சுவாமி .
தெய்வீக ஆறுதலை நான் கேட்கவில்லை .
ஏனெனில் அதற்கு நான் தகுதி அற்றவன் .
ஆனால் உமது பிரசன்னம் என்ற
பெருங்கொடையை எனக்கு தாரும் சுவாமி .
என்னோடு தங்கும் ஆண்டவரே . ஏனெனில்
உம்மையே நான் தேடுகிறேன் . உமது அன்பு,
உமது அருள், உமது சித்தம்,உமது இதயம்,
உமது உள்ளம் இவைகளையே நான் நாடுகின்றேன் .
மேலும் மேலும் உம்மை நேசிப்பதைத் தவிர
வேறு எதையும் நான் கேட்கவில்லை .
ஏனெனில் உம்மையே நான் நேசிக்கிறேன் .
இவ்வுலகில் என் முழு உள்ளத்தோடு
உறுதியான அன்பால் உம்மை நேசிப்பேன் .
நித்திய காலமும் தொடர்ந்து உம்மை
முழுமையாக நேசிப்பேன் . ஆமென்.
இயேசு கிறிஸ்து நாதருடைய திருமுகத்தை நோக்கி செபம்
கொடிய உபாதைகளினாலும் பாடுகளினாலும் மனிதர்களின்
இழிந்தவாராகவும் வியாகுலம் நிறைந்த மனிதனாகவும்
ஆன ஓ யேசுவே ! ஒருக்கால் தெய்வீகத்தின் அழகு
சௌந்தயமும் இனிமையும் ஒளி வீசியதும்,
இப்போது ஓர் குடரோகியினதைப் போல
ஆகியிருக்கிறதுமான உமது திருமுகத்தை ஆராதித்து
வந்திருக்கின்றேன் . நைந்து நொறுங்கி
உருகுலைந்த உமது திருமுகத் தோற்றத்தில்
உமது அளவற்ற அன்பைக் காண்கிறேன் .
அதனால் நான் உம்மை நேசிக்கவும் மற்றவர்கள்
உம்மை நேசிக்கச் செய்யவும் என் உள்ளம் ஆவலால்
நிரம்பியிருக்கிறது . ஒளிவீசும் வரை கற்கள்
போன்று உமது திருக்கண்களில் ததும்பும்
கண்ணீரை வாச் சேர்த்து அவைகளினால் பாவிகளின்
ஆத்துமங்களை இரட்சிக்க விரும்புகிறேன் .
உமது ஆராதனைக்குய திருமுகத்தால் என்
இதயத்தை இன்பக் கடலில் ஆழ்த்தும் ஓ இயேசுவே !
உமது தெய்வீகப் பிரதிமையை என் உள்ளத்தில்
ஆழமாய் பதித்தருளும் . எனது இருதயம் உமது
நேச அக்கினியால் பற்றியெயவும், அதனால் உமது
ஜெகஜோதி முகத்தை மோட்சத்தில் கண்டு
ஆனந்திக்க அருகதை உள்ளவனாக ஆகவும்
கிருபை புந்தருள வேண்டும் என்று
உம்மை கெஞ்சி மன்றாடுகின்றேன் .
அன்றியும் எனது தற்போதைய தேவையில்
எனது இருதயப் பேராவலைக் கையேற்றுக்
கொண்டு உம்மிடமாய் நான் தாழ்மையோடு
கேட்கும் மன்றாட்டை அடியேனுக்கு தந்தருளும் . சுவாமி . ஆமென் யேசு .
குழந்தை இயேசுவின் நவநாள் செபம்
அற்புதக் குழந்தை இயேசுவே, அமைதியற்ற
எங்கள் உள்ளங்களின்மேல் உமது கருணைக்
கண்களைத் திருப்பியருளும்படி
தாழ்ந்து பணிந்து வணங்கி உம் இனிய
இதயம் கனிவோடு எங்கள் செபத்தை ஏற்று
உருக்கமாக நாங்கள் வேண்டும் இந்த
வரத்தை அளித்தருளும்படி உம்மை இறைஞ்சுகிறோம் .
(வரத்தைக் குறிப்பிடுக…)
எங்களை வாட்டி வதைக்கும் துன்ப
துயரங்களையும் வேதனை சோதனைகளையும்
நீக்கி உமது குழந்தைப் பருவத்தின்
பெயரால் எங்கள் மன்றாட்டை ஏற்றருளும் .
அதனால் உமது ஆறுதலையும் ஆதரவையும் பெற்று
தந்தையோடும் தூய ஆவியோடும் உம்மை என்றென்றும்
நாங்கள் வாழ்த்திப் போற்றுவோமாக . ஆமென்
தூய சூசையப்பருக்கு நவநாள் செபம்
எல்லாம் வல்ல எங்கள் அன்புத் தந்தாய்,
உம் ஒரே மகனின் வளர்ப்புத் தந்தையாக நீதிமானாக
புனித சூசையப்பரைத் தேர்ந்தெடுத்தீரே.
எங்களைக் காக்கவும் நல்வழியில் வளர்க்கவும்
எங்களுக்கும் அவரைப்போன்றே காவலர்களைத் தந்தருளும்.
அதனால் உம் அன்பு மகன் இயேசுவைப் போன்று உருவாகும்
இறைமக்கள் உமக்கு ஏராளமாகத் தோன்றுவார்களாக.
இறைவனாயிருந்தும் உம்மையே சூசையப்பர் கையில் ஒப்படைத்து
அவரது ஆதரவில் வளர்ந்த இயேசுவே,
நாங்களும் எங்களை உருவாக்கும் பெற்றோர்களுக்கும்,
எங்கள் தலைவர்களுக்கும், திருச்சபைக்கும்
எப்பொழுதும் எல்லாவற்றிலும் கீழ்ப்படிந்து நடக்க அருள்புரியும்.
திருக்குடும்பத்தை உமது திருவருளால் திறம்படக் காத்த
நித்திய புனித ஆவியே, எங்கள் குடும்பத்தையும்
இறைவனின் திருவுளத்திற்கேற்ப அமைத்து பாதுகாத்தருள்வீராக.
இயேசுவை வளர்க்கும் பணியில் புனித சூசையப்பரை
உமது வாழ்க்கையின் துணைவராகவும்
உமது இல்லத்தின் தலைவராகவும் ஏற்றுக்கொண்டு
அவருக்குக் கீழ்ப்படிந்து பணியாற்றிய புனித கன்னிமரியே,
அவருடைய மேலான பாதுகாவலை எங்களுக்குப் பெற்றுத்தாரும்.
அதனால் நாங்கள் இவ்வுலக வாழ்வை
இறைவனின் திருவுளத்திற்கேற்ப எளிமையில் அமைத்து நடப்போமாக.
திருக்குடும்பத்தின் தலைவரான புனித சூசையப்பரே,
எங்கள் குடும்பத்தைப் பாதுகாத்து வழிநடத்துவீராக.
திருக்குடும்பத்தை உம் உழைப்பாலும்
்டிக் காத்த புனித சூசையப்பரே,
எங்கள் அறிவாலும், உழைப்பாலும்,
எங்கள் வீட்டையும் நாட்டையும் பாதுகாத்து
செழிப்புறச் செய்து துணைபுரிவீராக.
குழந்தை இயேசுவை ஆபத்திலிருந்து காப்பாற்றிய புனித சூசையப்பரே,
எங்கள் வாழ்க்கையின் ஆபத்துக்களிலிருந்து எங்களைப் பாதுகாத்தருளும்.
இயேசுமரியின் கைகளில் உம் ஆன்மாவை ஒப்படைத்து
நன்மரணமடைந்த புனித சூசையப்பரே,
்களும் நல்மரணமடைய எங்களுக்காக மன்றாடுவீராக.
ஆமென்.
குருக்களுக்கான செபம்
(இரவுச் செபங்களிலும் திருப்பலி நிறைவுக்குப் பின்னும் சொல்ல வேண்டிய செப
அன்பான ஆண்டவரே! குருக்களைக் காப்பாற்றும்படியாக
உம்மை மன்றாடுகிறேன். அவர்கள் உம்முடையவர்கள்.
அவர்களுடைய வாழ்க்கை திருப்பலிப் பீடத்தில்
பணிபுரிவது என்பதனால், அவர்களைச் சிறப்பாக
காப்பாற்ற வேண்டுகிறேன். அவர்கள் உலகைவிட்டுப்
பிரிந்தாலும், உலகின் நடுவில் வாழ்கிறார்கள்.
பல்வேறு உலக இன்பங்களும் நாட்டங்களும்
அவர்களைச் சோதிக்கின்றன. எனவே அவர்களை
உமது இதயத்தில் வைத்துப் பேணிட மன்றாடுகிறேன்.
அவர்கள் தனிமையில் தவிக்கும்போது,
துன்பங்களினால் வாடும்போது, அவர்களுடைய
தியாக வாழவே வீண்எனத் தோன்றும்போது
அவர்களை அருகிருந்து காப்பாற்றும்.
அவர்களின் அருட்பணிகள் பலன் தருமாறு அவர்களை ஆசீர்வதியும்.
சிறப்பாக நீர் எங்களுக்கு வழங்கியுள்ள குருக்களுக்காக
மன்றாடுகிறோம் அவர்களை நீர் உமது அன்பில்
என்றும் நிலைத்திருக்கச் செய்து,
உமக்கும் மக்களுக்கும் அவர்கள்
பணிவுடனும் பயனுடனும் தொண்டாற்றச் செய்தருளும்.
என்றென்றும் வாழும் குருவாம் கிறிஸ்து
வழியாக மன்றாடுகிறோம். -ஆமென்.
இறை அழைத்தல் பெருக வேண்டுதல்
இயேசுவே ! ஆன்மாக்களின் தெய்வீக ஆயரே !
அன்று மீன் பிடிப்போரை, மனிதரைப்
பிடிப்போராக்கிய ஆண்டவரே !
இன்று ஆர்வமும் தாராள மனமும் கொண்டுள்ள
இளைஞரை உம்மைப் பின்பற்றுபவர்களாகவும்,
உம் திருப்பணியாளர்களாகவும் ஆக்கியருளும் .
அனைத்துலக மக்களின் மீட்புக்காக
உமக்கிருக்கும் தாகத்தில் அவர்களும் பங்குபெறச்
செய்தருளும் . இந்த மீட்புக்காகவே ஒவ்வொரு
நாளும் பலி மேடையில் திருப்பலியை
நீர் புதுப்பித்து வருகின்றீர் .
இயேசுவே ! எங்கள் ஆண்டவரே !
எங்களுக்காகப் பரிந்துரைக்க,
எங்களிடம் எப்பொழுதும் வாழ்கின்றீர் .
உண்மையின் ஒளிக்காக, அன்பின் அனலுக்காக
ஏங்கும் அனைத்து மக்களின் மீதும் உமது
மாட்சியின் எல்லையை விரிவடையச் செய்யும் .
இளைஞர் பலர் உமது அழைப்பை ஏற்று உமது
திருப்பணியைத் தொடர்ந்து புரியவும் உமது
மறையுடலாகிய திருச்சபைக்கு அணிகலனாகத்
திகழவும், உலகின் உப்பாகவும், ஒளியாகவும்
விளங்கவும் அருள் செய்யும் .
ஆண்டவரே ! உமது அன்பின் அழைப்பைத்
தூய உள்ளமும், தாராளமனதுள்ள பெண்கள்
பலருக்குத் தந்தருளும் .நன்னெறியில் வளர
அவர்கள் கற்றுக் கொள்வார்களாக . அயலாரின்
சேவைக்காகவும், அவர்கள் தங்களை அர்ப்பணம்
செய்ய அருள்புரியும் , ஆண்டவரே . -ஆமென் .
இறை ஆசிருக்கு செபம்
ஓ தூய ஆவியே - இந்நாளில் எங்களையெல்லாம்
ஆசிர்வதித்து, எங்கள் சுமைகளை சுலபமாக்கிவிடும்.
நன்றியுள்ள் இதயத்தோடு எங்கள் வாழ்வின் உதயத்தை
எட்டிப்பிடிக்க உதவிடும். ஆமென்..
பிதாவுக்கும், சுதனுக்கும் பரிசுத்த
ஆவிக்கும் மகிமை உண்டாவதாக. ஆதியிலே
இருந்தது போல, இப்பொழுதும் எப்பொழுதும்
என்றேன்றும் இருப்பதாக. ஆமென்.
நித்திய வாழ்வு என்னில் வேலை செய்கிறது.
தேய்வீக சக்தியோடு என்னில் வேலை செய்கிறது.
நான் எப்படிப்பட்டவனா(ளா)ய் இருக்க வேண்டும்
என்பது இறைவனின் சித்தமோ அப்படியே நான் என்
மனம் திரும்புதலின் மூலம் வாழ முடியும்.
கிறிஸ்துவே என் வாழ்வு. ஒவ்வொரு
நான் என் வாழ்வாக கடவுளால் கொடுக்கப்பட்ட
அவரை ஏற்றுக் கொள்வேன். முழுமையான
இறைசக்தியோடு என் வாழ்வாக அவர்
இருப்பதால் இனி எதற்கும் எனக்கு பயமில்லை.
புனிதத்தில் வாழ
தந்தையாகிய இறைவா !
என் வாழ்வின் தலைவரே
என் வாய் கூறுவதையெல்லாம்
்படுத்தாதேயும் .
அவற்றின் பொருட்டு நான் விழ்ச்சியுறாதவாறு செய்தருளும் .
என் எண்ணங்களைக் கட்டுப்படுத்தியருளும் .
இறுமாப்புள்ள பார்வைக்கு
நான் இடம் கொடாதிருக்கச் செய்தருளும் .
தீய நாட்டங்களை என்னிடமிருந்து அகற்றியருளும் .
தகாத விருப்பங்கள் எண்ணங்கள் ஆசைகள் என்னை மேற்க்கொள்ள விடாதேயும் .
உலக மதிப்பீடுகளுக்கு நான் அடிமையாகாமலும்
மனிதனின் பசப்பு வார்த்தைகளை நம்பாமலும்
தீய சூழ்நிலைகளுக்குள் வீழ்ந்து விடாமலும்
என்னைக் காத்தருளும் .
என்னை புனிதனாக்கவல்ல உமது தூய ஆவியானவர்
எப்பொழுதும் என்மீது அசைவாடி
என்னை வழி நடத்துவதை உணரச் செய்தருளும்
உமது மீட்பின் கரம்
எப்பொழுதும் என்னைத் தாங்கச் செய்தருளும்
உம்மையை அறியச் செய்தருளும் .
தந்தையே உமக்கே நான் சொந்தம் .
உம்மையே நான் நம்பி வாழ்கிறேன் .
எந்நாளும் எத்தகைய தீமைக்கும் அடிமையாகாதபடி
்னைக் காத்தருளும் .
ஆமென் .
இயேசுவை நோக்கி இரக்கத்திற்கான ஜெபம்
இயேசுவே, எங்கள் மேல் இரக்கம் வையும்.
எங்கள் மேல் இரக்கமாயிரும்.
எங்களைத் தீர்ப்பிடாதேயும்.
எங்கள் மூதாதையர், எங்கள் சகோதர,
சகோதரிகள் வழி வந்த எல்லாக் குற்றங் குறைகளையும்,
பாவங்களையும்,மன்னித்தருளும்.
எங்களுக்கு வரப்போகும் தண்டனையை விலக்கி விடும்.
எங்களை உமது சொந்தப் பிள்ளைகளாக ஏற்றுக் கொண்டு
உமது ஆவியால் எங்களை வழி நடத்தியருளும்
திவ்விய சந்தமரிய தஸ்நேவிஸ் ஆண்டவளுக்கு குடும்பங்களை ஒப்புக்கொடுக்கும் ஜெபம்
எங்கள் இருதய கமலாயங்களில் மேலான கிருபாசனங்கொண்டு
எழுந்தருளியிருக்கிற திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே!
பரலோக பூலோக அரசியே! கஸ்திப்படுகிறவர்களுக்கு ஆறுதலே!
பாவிகளின் தஞ்சமே! உமது இன்பமான சந்திதானம் தேடி வந்தோம்.
உம்முடைய கருணையை வேண்டிவந்தோம்.
உம்முடைய திருமுக மண்டலத்தை அண்ணாந்து பார்த்து உம்மை
கெஞ்சி மன்றாடுகிறோம் தாயே! உலகில் எங்கள் ஆண்டவள் நீரல்லவோ!
எங்கள் அன்பான அன்னை நீரல்லவோ! எங்கள் ஆதரவும்,
சந்தோஷமும் எங்கள் நம்பிக்கையும் நீரல்லவோ!
நீர் எங்களுடைய தாயார் என்பதை எங்களுக்கு காண்பியும்.
பிள்ளைகள் செய்த குற்றங்களை மாதா பாராட்டுவாளோ?
உம்மைத்தேடி வந்த நிர்ப்பாக்கியருக்கு உதவியாயிரும்.
அழுகிறபேர்களை அரவணையும். அல்லல் படுகிறவர்களுக்கு
ஆறுதலாயிரும். நீர் இரங்காவிட்டால் எங்களுக்கு வேறு
யார் இரங்குவார்? நீர் உதவாவிட்டால் எங்களுக்கு வேறு
யார் உதவுவார்? நீர்; ஆதரிக்காவிட்டால் எங்களை வேறு
யார் ஆதரிப்பார்? நீர் நினையாவிட்டால் எங்களை வேறு
யார் நினைப்பார்? தஞ்சமென ஓடி வரும் அடியோர் மேலே
தயவாயிரும். தயை கடலே தவித்தவருக்குத் தடாகமே!
தனித்தவருக்கு தஞ்சமே. உம்முடைய சந்நிதானம் தேடிவந்தோம்.
ஆறு, காடுகளைக் கடந்து ஓடி வந்தோம்.
துன்பம், பிணி, வறுமை முதலிய கேடுகளாலே வாடி நொந்தோம்.
எங்கள் நம்பிக்கை வீண்போகுமோ? எங்கள் மன்றாட்டு மறுக்கப்படுமோ?
எங்கள் வேண்டுதல் பலனற்றதாய் போகுமோ? எங்கள் அழுகைக் கண்ணீர்
உம்முடைய இருதயத்தை உருக்காது போகுமோ? அப்படி ஆகுமோ அம்மா?அன்பான
அம்மா! அருமையான அம்மா! அடியோருக்கு அன்பான அம்மா!
தஸ்நேவிஸ் மரியே அம்மா! எங்கள் குடும்பங்களை முழுதும்
இன்று உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம்.
எங்களை ஏற்று ஆசீர்;வதித்தருளும் தாயே - ஆமென்.
ஞாயிறு
திரிகால செபம்
கர்த்தர் கற்பித்த செபம்
இரக்கமுள்ள புனித இறைவா !
புதிய நாள் துவங்கி உள்ளது .
எனக்கொரு புதிய நாளை கொடுத்துள்ளீர் .
புதிய வாழ்வைக்கொடையாக கொடுத்தமைக்கு நன்றி .
நான் உம்மை அறிந்தமைக்கு ,வாழ்வின்
அனைத்துக் கொடைகளுக்கும் நன்றி .
மிகவும் சிறப்பாக எப்போதும், எல்லா நேரங்களிலும் என்னை
நினைத்தமைக்கு அன்பு செய்தமைக்கும் நன்றி . என் மனதை
இன்ப படுத்தியமைக்கு நன்றி .எனவே என்னுடைய இந்த நாளையும் ,
சொல் , சிந்தனை அனைத்தையும் உமக்கு அர்ப்பணிக்கிறான் .
என் அமைதி ,இன்ப துன்பங்கள் அனைத்தையும் உமக்கு
அர்ப்பணிக்கிறான் . எது நல்லது?எது கெட்டது?என்பதை
எனக்கு தெளிவுப்படுத்தும் .இதனால் நான் உன் சித்தத்தை
நிறைவேற்றுவனாக .நான் உம்மை எப்போதும் நினைத்து வாழ
அருள் தாரும் .இதனால் நான் என் மனச்சன்றிர்க்கும் ,
அதன் உறுத்துதளுக்கும் முழு ஒத்துழைப்புடன் என் பிழைகளை
குறைத்து வாழ்வேனாக .
சோதனைகளை எதிர்த்துப் பாவத்தை குறைத்து வாழ பலம் தாரும்.
என் குறைகள் ,சோம்பலை ஒழிக்க எனக்கு உதவி செய்யும்
உள்ளத்தைத் தாரும ,இந்நாளை உம் மகிமைக்காக செலவழிப்பேனாக .
அன்பு தாயே !அரசியே ! மரியே !என்றும் என்னுடன் இரும்
உம்முடைய கனிவுடைய அரவணைப்பு என்னை காப்பதாக .புனித
மைக்கேல் காவல் தூதர் .என் பெயர் கொண்ட புனிதர்
அனைவரும் எனக்காக செபிப்பார்களாக .ஆமென் .
திங்கட்கிழமை
திரிகால செபம்
கர்த்தர் கற்பித்த செபம்
இறைவா !நான் உம்மிடமிருந்தே வந்தேன் .
நீரே என்னைப் படைத்தீர் .முழு மரியாதையுடன்
உம்மை இப்புதிய நாளில் வாழ்த்துகிறான் .
இந்நாள் உமக்கேற்றதாய் அமைய ஆசீர்பொழியும் .
சென்ற இரவில் என்னைக் காப்பற்றியதர்க்காகவும் ,
நான் வாழ புதியதொரு நாளைக் கொடுத்தட்மைக்கும் நன்றி .
உம் சித்தம் என்னவென்று வெளிப்படுத்தும் .உம் சித்தத்தை மன
உறுதியுடன் நிறைவேற்றி உம்மை மகிமைப்படுத்த செய்யும் .
இறைவா !விண் மண்ணின் அரசே ,என் உடலையும்,இதயத்தையும்
வழிநடத்தும் .அதனால் நான் என்றும் மகிழ்ந்து முழு
சுதந்திரத்துடன் இன்றும் என்றும் வாழ்வேனாக .
உலகின் மீட்பரே ! நீரே என்றும், ஆட்சி செய்வீராக .
என் தாயும் அரசியுமான மரியே,!என்னையே முழுமையாய்
அர்ப்பணிக்கின்றேன் . உம்மில் பக்தி கொண்டு
என்னையும் என் முழுமையும் உமக்கே அர்ப்பணிக்கின்றேன் .
என்னை உம்முடைய குழந்தையைப்போல் காப்பாற்றி பாதுகாத்தருளும் .ஆமென் .
செவ்வாய்க்கிழமை
திரிகால செபம்
கர்த்தர் கற்பித்த செபம்
எல்லாம் வல்ல இறை தந்தாய் !
உம்முடைய நன்மை தனத்தின் மூலம் நீர் எனக்களித்த
இன்னுமொருநாளுக்காக நன்றி கூறி உமக்கு அர்ப்பனிக்கின்றேன்
என்னை ஆசிர்வதியும் .இதனால் என் ஒவ்வொருசெயலும் உம்
பெருமையை எடுத்துரைப்பதாக . என் விமரிசையை ஒளிர செய்யும் .
என்ஆளுமையை பலப்படுத்தும் .என் இதயத்தை வழிநடத்தும் .
வாரும் இறைவா ! உம்முடைய ஏவுதலால் உம் முன் நடப்பேனாக .
என் செயல் ஒவ்வொன்றுக்கும் துணைநிற்பீராக .என் செபமும்,
வேலையும் உம்மில் துவங்கி முடிவு பெறுவதாக .விண்ணக
புனிதர்கள் அனைவரும் நான் உம்முடன் இணைந்து உம் ஆசிரால்
உம் சித்தத்தை நிறைவேற்ற வேண்டுமென்று செபிக்க வேண்டுகிறேன் .
என் நண்பர்களையும்,அனைத்தையும் படைத்த இறைவா !
இன்று நான் சந்திக்கும் ஒவ்வொருவரிடமும் அன்புடன்
பழக உதவும்,அனைவரையும் அன்புடன் அரவணைத்து,
நல்வார்த்தைகளை நல்கி அனைவருக்கும் நான்
உதவிக் கரம் நீட்டி வாழ வரமருளும் .ஆமென் .
மங்கள வார்த்தை செபம்
காவல் தூதர் செபம்
தலைவர் :-எல்லாம் வல்ல இறைவன் தந்தை,மகன்,தூய ஆவி நன்மை ஆசிர்வதிப்பாராக .ஆமென் .
புதன்கிழமை
திரிகால செபம்
கர்த்தர் கற்பித்த செபம்
இறைவா ! விண்ணுலுக தந்தை ! என்னோருநாளை துவங்கியுள்ளேன் .
இதை எனக்கு என் வாழ்வின் மற்றுமொரு பகுதியாக அளித்துள்ளீர் .
இதனால் நன்றியும்,பெருமகிழ்வும் அடைகிறேன் .இந்த நாளை இறை
இயேசுவின் வழியாக உமக்கு அர்ப்பணிக்கின்றேன் .
கிருஸ்துவே ! என் மிட்பரும்,அரசரும் ஆனவரே !
இன்று உம்மை மிகவும் பிரமானிக்கமாய் பின்தொடர்வேன் .
என் துன்பங்களை வெல்லும் முயற்சிக்கு உம் ஆசீரையும்,
அருளையும் தந்தருளும் என் மனதை உறுதிப்படுத்தும் .
எங்களின் அடைக்கலமாயிரும்,அணைத்து நன்மைகளின் உறைவிடமே !
எல்லா நேரங்களிலும் என்னைப் பாதுகாத்தருளும் .
இறைவா ! என் பெற்றோரையும் நெருங்கிய உறவினர்களையும்
ஆசீர்வதியும் .இறைவனின் இரக்கத்தால் இறந்தவர்களின்
ஆண்மாக்கள் இறைவனின் சமாதானத்தைப் பெறுவதாக ! ஆமென்
மங்கள வார்த்தை செபம்
காவல் தூதர் செபம்
தலைவர் :-எல்லாம் வல்ல இறைவன் தந்தை,மகன்,தூய ஆவி நன்மை ஆசிர்வதிப்பாராக .ஆமென் .
வியாழக்கிழமை
திரிகால செபம்
கர்த்தர் கற்பித்த செபம்
என் இறைவா ! சிலுவை அடையாளத்தால் என்னை
விடுவித்தருளும் .இறை யேசுவின் நாமத்தினால்
நான் உயர்வேனாக .நித்திய வாழ்வை அடைவேனாக
இக்காலைப்பொழுதை உம் திருமுன் எழும்புகிறேன் .
நீரே என் அன்பு தந்தை .நீர் இருக்கிறீர் என்பதே
என் மகிழ்வும் என் முதல் வார்த்தையுமாய் இருப்பதாக .
உம்மிடமிருந்து அனைத்தும் நன்மையும் பிறக்கின்றது நானும்,
என்னிடம் இருப்பதும் உம்முடையதே .என் நம்பிக்கையை உம்
பேரில் வைக்கிறேன் .என் காலடிகள் உம்மைப்பின்பற்றுவதாக .
இதனால் என் வாழ்வு உறுதியானதும்,சரியானதாகவும் அமைவதாக
நான் ஒருநாளும் உம்மை விட்டுப் பிரியாமல் இருக்கும் வரம்
தாரும் .உம்மை அறிய புரிந்து கொள்ளும் தன்மையையும்
உம்மைக்கன்டறிய ஞானத்தையும்,தந்தருளும் .இறை யேசுவின்
வழியாக உம் அன்பின் திடமனதுடன் வாழ வெகுமதியை அடையக் செய்வீராக .ஆமென் .
மங்கள வார்த்தை செபம்
காவல் தூதர் செபம்
தலைவர் :-எல்லாம் வல்ல இறைவன் தந்தை,மகன்,தூய ஆவி நம்மை ஆசிர்வதிப்பாராக .ஆமென் .
வெள்ளிக்கிழமை
திரிகால செபம்
கர்த்தர் கற்பித்த செபம்
என் ஆண்டவராகிய இறைவா ! இந்த நன்நாளைத்
துவங்கும் இவ்வேளையில் அனைத்து தூதர்கள்
புனிதர்கள்,உம்மிடம் தம் இதயத்தை எழுப்புவார்கள்,
அனைவரோடும் உம்மை வாழ்த்துகிறேன் .
உம்மை ஆராதிக்கிறேன் .நீரே என் வாழ்வின் முடிவு .
உமக்காக ஏங்கி நிற்கிறேன் .நீரே என் உபகாரி
உம்மை கூவி அழைக்கிறேன் .என்னுடைய அறிவுக்கு
ஒளியூட்டும் என் மனச்சான்றை ஓளிரச் செய்யும் .
இதனால் என் உடலையும் ஆன்மாவையும் புனிதப் படுத்துவேனாக .
புனித மரியாளின் பரிந்துரையால் நான் உறுதி பெறுவேனாக .
புனிதர்களின் முன்மாதிரியை பின்பற்றி நீரே என்றும்
வாழ்பவர் என்பதை பறைசாற்றுவேனாக .
மங்கள வார்த்தை செபம்
காவல் தூதர் செபம்
தலைவர் :-எல்லாம் வல்ல இறைவன் தந்தை,மகன்,தூய ஆவி நம்மை ஆசிர்வதிப்பாராக .ஆமென் .
சனிக்கிழமை
திரிகால செபம்
கர்த்தர் கற்பித்த செபம்
விண்ணகத் தந்தாய்,எல்லாம் வல்ல படைப்புகளில் இறைவா !
உம் படைப்பின் பகுதியாகிய நான் உம்மை புகழ்ந்து
போற்றுகின்றேன் .உம் தந்தைக்குரிய பேரன்பால் இன்று
உம்முடைய அருள் ஓளியால் உடல் உள்ள சக்தியைபெற்றுள்ளேன்
நீர் செய்த நன்மைகள் அனைத்திற்கும் நன்றி இன்று என்னை
வந்து சேருபவை எவை? என்ன வேலைகள்?என்ன குழுக்கள்?என்னென்ன
நம்மை செய்யும் சந்தர்ப்பங்கள்? என்னென்ன உடல் உள்ள
ஆபத்துக்கள் என்பவை பற்றி எனக்கு அறிவுறுத்தும் நன்மையைக்
செய்து தீமையை விலக்க எனக்கு உதவும் இறைவா !என் பலவீன
தன்மையை உறுதிப்படுத்தி உம்
வேலையை செய்ய உதவும் என்னுடைய
இளைய தனமானஅறிந்த்சேயல்களால்
பெருமை அடையாமல் இருப்பேனாக,
நான் உம்முடைய சித்தத்தை நிறைவேற்ற அதிக அக்கறை கொள்வேனாக .
என் குறைகளுடன் கூடிய கடமைகளை பற்றியும் பாவக் செயல்களை பற்றியும்
திருத்தம் செய்வதில் ஆவலாய் இருப்பேனாக
கிருத்துவர்களின் சகாயமாக புனித மரியாள் எங்களின்
அணைத்து நிலைகளிலும் உதவுவார்களாக புனித மரியே உம்
அருளால் எங்களோடு தங்கும் உடலையும் ஆன்மாவையும்
பாதுகாத்தருளும் இறைவனின் தூதரே !இறைவனின்
சித்தத்தை நிறைவேற்றி வாழத் துணை புரிவீராக .ஆமென் .
மங்கள வார்த்தை செபம்
காவல் தூதர் செபம்
தலைவர் :-எல்லாம் வல்ல இறைவன் தந்தை,மகன்,தூய ஆவி நம்மை ஆசிர்வதிப்பாராக .ஆமென் .
இரக்கத்திற்கான ஜெபம்
ஆண்டவரே இரக்கமாயிரும்
இயேசுவே இரக்கமாயிரும்
பரிசுத்த ஆவியே இரக்கமாயிரும்
இயேசுவே தாவீதின் மகனே இரக்கமாயிரும்
பாவி என்மீதும் இரக்கமாயிரும் :அல்லேலூயா !
நான் குடியிருக்கும் வீட்டின் மீது இரக்கமாயிரும்
என் குடும்பத்தின் மீது இரக்கமாயிரும்
என் பெற்றோர் மீது இரக்கமாயிரும்
என் சகோதர சகோதரிகள் மீது இரக்கமாயிரும்
என் பிள்ளைகள் மீது இரக்கமாயிரும்
என் கணவன் மீது இரக்கமாயிரும்
என் மனைவி மீது இரக்கமாயிரும்
என் உறவினர்கள் மீது இரக்கமாயிரும்
என் நண்பர்கள் மீது இரக்கமாயிரும்
என் அருகில் வசிக்கும் குடும்பங்கள் மீது இரக்கமாயிரும்
ஆண்டவரே இரக்கமாயிரும்இயேசுவே இரக்கமாயிரும்
பரிசுத்த ஆவியே இரக்கமாயிரும்
இயேசுவே தாவீதின் மகனே இரக்கமாயிரும்
பாவி என்மீது இரக்கமாயிரும் : அல்லேலூயா !
ஆண்டவரே என் முன்னோர் மீது இரக்கமாயிரும்
அவர்களது பாவங்களில் மீது இரக்கமாயிரும்
என் முன்னோரால் ஏற்பட்டக் கட்டுக்களின் மீது இரக்கமாயிரும்
அவர்களின் வழியாக வந்த சாபங்களின் மீது இரக்கமாயிரும்
என் முன்னோரின் எல்லா சந்ததிகள் மீது இரக்கமாயிரும்ஆண்டவரே
இரக்கமாயிரும் இயேசுவே இரக்கமாயிரும்
பரிசுத்த ஆவியே இரக்கமாயிரும்
இயேசுவே தாவிதீன் மகனே இரக்கமாயிரும்
பாவி என்மீதும் இரக்கமாயிரும் :அல்லேலூயா !
என் தேவைகளின் மீது இரக்கமாயிரும்
என் விருப்பங்களின் மீது இரக்கமாயிரும்
நான் செய்யும் வேலைகளின் மீது இரக்கமாயிரும்
நான் வேலை செய்யும் இடத்தின் மீது இரக்கமாயிரும்
என்னோடு வேலை செய்வோர் மீது இரக்கமாயிரும்
நான் வேலை செய்யும் நிறுவனங்கள் மீது இரக்கமாயிரும்
அவற்றின் உடமைகள் மீது இரக்கமாயிரும்
வியாபாரங்கள் மீது இரக்கமாயிரும்
வருமானங்கள் மீது இரக்கமாயிரும்
ஆண்டவரே இரக்கமாயிரும்
இயேசுவே இரக்கமாயிரும்
பரிசுத்த ஆவியே இரக்கமாயிரும்
இயேசுவே தாவீதின் மகனே இரக்கமாயிரும்
பாவி என்மீது இரக்கமாயிரும் : அல்லேலூயா !
எங்களுடைய நிலத்தின் மீது இரக்கமாயிரும்,
அதில் கிடைக்கும் விளைச்சல்களின் மீது இரக்கமாயிரும்
மரம்,செடி, கொடிகள்,தானியங்கள்,பயிர்கள்,மீதும் இரக்கமாயிரும்
எனக்கு நீர் தந்துள்ள அனைத்து உயிரினங்கள், விலங்குகள், பறவைகள் மீதும் இரக்கமாயிரும்
என் வீட்டில் உள்ள அனைத்தின் மீதும் இரக்கமாயிரும்
ஆண்டவரே இரக்கமாயிரும்
இயேசுவே இரக்கமாயிரும்
பரிசுத்த ஆவியே இரக்கமாயிரும்
இயேசுவே தாவீதின் மகனே இரக்கமாயிரும்
பாவி என்மீது இரக்கமாயிரும் : அல்லேலூயா !
எல்லா குருமடங்கள் மீது இரக்கமாயிரும்
எல்லா உதவி நிறுவனங்களின்மிதும் இரக்கமாயிரும்
எல்லாப் பள்ளிக்கூடங்களின் மீதும் அதன்
ஆசிரிய,ஆசிரியைகள் மீதும் இரக்கமாயிரும்
எங்கள் நாட்டின் மீது இரக்கமாயிரும்
எங்களின் பெருகிவரும் தீமைகளின் மீது இரக்கமாயிரும்
வன்முறையாளர்கள் மீது இரக்கமாயிரும்
பலாத்காரங்களின் மீது இரக்கமாயிரும்
தீவிரவாதிகளின் மீது இரக்கமாயிரும்
பிளவு பிரிவினை உருவாக்குவோர் மீது இரக்கமாயிரும்
குடிகாரர்கள் மீது இரக்கமாயிரும்
் பொருட்களுக்கு அடிமையானோர் மீது இரக்கமாயிரும்
்போர் மீது இரக்கமாயிரும்
திருடர்கள் மீது இரக்கமாயிரும்
கலகக்காரர்கள் மீது இரக்கமாயிரும்
கொலை,கொள்ளைகாரர்கள் மீது இரக்கமாயிரும்
ஆண்டவரே இரக்கமாயிரும்
இரக்கமாயிரும்
பரிசுத்த ஆவியே இரக்கமாயிரும்
இயேசுவே தாவீதின் மகனே இரக்கமாயிரும்
பாவி என்மீது இரக்கமாயிரும் : அல்லேலூயா !
திருமணம் ஆகாதவர் மீது இரக்கமாயிரும்
்த குடும்பங்களின் மீது இரக்கமாயிரும்
குழந்தை இல்லாதோர் மீது இரக்கமாயிரும்
கைம்பெண்கள் மீது இரக்கமாயிரும்
கைவிடப்பட்டோர் மீது இரக்கமாயிரும்
வேலையில்லாதோர் மீது இரக்கமாயிரும்
அனாதைகள் மீது இரக்கமாயிரும்
ஊனமுற்றோர் மீது இரக்கமாயிரும்
பார்வையற்றோர் மீது இரக்கமாயிரும்
வாலிப ஆண்கள் பெண்கள் மீது இரக்கமாயிரும்
மந்திரவாதிகள் மீது இரக்கமாயிரும்
பேய்பிடித்தோர் மீது இரக்கமாயிரும்
விசுவாசமுள்ளோர் மீது இரக்கமாயிரும்
்டவரே இரக்கமாயிரும்
இயேசுவே இரக்கமாயிரும்
பரிசுத்த ஆவியே இரக்கமாயிரும்
இயேசுவே தாவீதின் மகனே இரக்கமாயிரும்
பாவி என்மீது இரக்கமாயிரும் : அல்லேலூயா !
என் நாட்டின் தலைவர்கள் மீது இரக்கமாயிரும்
நாட்டின் ஆளுநர்கள் மீது இரக்கமாயிரும்
காவல்துறையினர் மீது இரக்கமாயிரும்
அதன் அதிகாரிகள் மீது இரக்கமாயிரும்
நாட்டின் அடிப்படைத்தேவைகளின் மீது இரக்கமாயிரும்
தற்கொலை செய்யும் எண்ணமுடையோர் மீது இரக்கமாயிரும்
புத்தி சுவாதீனமற்றவர்கள் மீது இரக்கமாயிரும்
வளர்ச்சி குன்றியவர்கள் மீது இரக்கமாயிரும்
உடல் தளந்தோர் மீது இரக்கமாயிரும்
்லா விதமான நோயாளிகள் மீது இரக்கமாயிரும்
நீதிமான்கள் மீது இரக்கமாயிரும்
வழங்குவோர் மீது இரக்கமாயிரும்
வேற்று நாட்டில் வேலை செய்யும் இந்நாட்டினர் மீது இரக்கமாயிரும்
ஆண்டவரே இரக்கமாயிரும்
இயேசுவே இரக்கமாயிரும்
பரிசுத்த ஆவியே இரக்கமாயிரும்
இயேசுவே தாவீதின் மகனே இரக்கமாயிரும்
என்மீது இரக்கமாயிரும் : அல்லேலூயா !
உலக நாடுகள் அனைத்து மீதும் இரக்கமாயிரும்
் அடிமைத்தளைகளிலும் வாழும் நாடுகளின் மீது இரக்கமாயிரும்
யுத்தம் செய்யத் தூண்டும் தலைவர்கள் மீது இரக்கமாயிரும்
உலகின் அணு ஆயுதங்களைத் தயாரிப்போர் மீது இரக்கமாயிரும்
விபத்தில் சிக்குண்டோர் மீது இரக்கமாயிரும்
விபத்துக் குறித்தும் இரவு நேரங்களிலும் பயணம் செய்வோர் மீது இரக்கமாயிரும்
ஆண்டவரே இரக்கமாயிரும்
இயேசுவே இரக்கமாயிரும்
பரிசுத்த ஆவியே இரக்கமாயிரும்
இயேசுவே தாவீதின் மகனே இரக்கமாயிரும்
பாவி என்மீது இரக்கமாயிரும் : அல்லேலூயா !
மிகவும் இரக்கம் உள்ள தாயே
மிகவும் இரக்கம் உள்ள தாயே ! தஊய கன்னிமரியே !
உம்மிடம் அடைக்கலம் நாடி வந்து ஆதரவைத்
தேடி பரிவோடு மன்றாடினோர் எவரையும் நீர்
கைவிட்டதாக ஒருபோதும் உலகில் சொல்லக்
கேட்டதில்லை என்பதை நினைத்தருளும்.
கன்னியர்களுக்கு அரசியான கன்னிகையே!
அடைக்கலம் தரும் நம்பிக்கை என்னை
தூண்டுவதால் நான் உமது திருவடியைத் தேடி வருகிறேன்.
பாவியாகிய நான் உம் திருமுன் துயரத்தோடு
உமது இறக்கத்திர்க்காக காத்து நிற்கின்றேன்.
மனு உருவான திருமகனின் தாயே என் மன்றாடிப்
புறக்கணியாமல் கேட்டருள்வீராக. ஆமென்.
சென்ம மாசில்லாமல் உற்பவித்த புனித மரியே!
்கு அடைக்கலமே ! இதோ உம்முடைய அடைக்கலமாக ஓடி வந்தோம்.
எங்கள் பேரில் இறக்கமாயிருந்து எங்களுக்காக
உம்முடைய திருக்குமாரனை வேண்டிக்கொள்ளும்.
சர்வேசுனுடைய பரிசுத்த மாதாவே ! இதோ
உம்முடைய அடைக்கலமாக ஓடிவந்தோம். எங்கள் தேவைகளில்
்கள் வேண்டிக்கொள்ளும்பொழுது நீர் பாரா முகமாயிராதேயும்.
ஆசி பெற்றவளும் மோட்சம் உடையவளுமயிருக்கிற நித்திய
கன்னிகையே அனைத்து ஆபத்துகளிலுமிருந்து எங்களைக் காத்தருளும்.
பேர் கொண்ட புனிதரை நோக்கி செபம் :
என் பேர் கொண்டிருக்கிற புனிதரே ! ....உமது அடைக்கலத்தில்
என்னை ஒப்படைத்து விடுகிறேன் . எனக்கு இடப்பட்டிருக்கும்
பெயருக்கு ஏற்ப சுகிர்த நடத்தை உள்ளவனாய் வாழவும்
உம்மிடத்தில் சிறப்புற விளங்கிய புண்ணியங்களை நான்
அனுசரிக்கவும், எனக்குத் தேவ கிருபை கிடைக்கத்தக்கதாகப் பலமாய்
மனுபேசியருளும் . என் வாழ்நாளில் எனக்கு நேரிடும் ஆபத்துகளில்
நின்று என்னைத் தற்காத்துப் பயங்கரமான மரணவேளையில்
என்னைக் கைவிடாமல் பாதுகாத்தருளும் காவலனே ! - ஆமென் .
பரிசுத்த ஆவியின் செபம் புதிய மொழிபெயர்ப்பு:
தூய ஆவியே எழுந்தருள்வீர்,
வானின்று உமது பேரொளியின்
அருட்சுடர் எம்மீது அனுப்பிடுவீர்.
எளியவர் தந்தாய் வந்தருள்வீர்,
நன்கொடை வல்லலே வந்தருள்வீர்,
இதய ஒளியே வந்தருள்வீர்.
உன்னத ஆறுத லானவரே,
ஆன்ம இனிய விருந்தினரே,
இனிய தன்மையும் தருபவரே.
உழைப்பில் களைப்பைத் தீர்ப்பவரே,
வேம்மைத் தணிக்கும் குளிர்நிழலே,
அழுகையில் ஆறுத லானவரே.
உன்னத பேரின்ப ஒளியே,
உம்மை விசுவசிப் போருடைய
நெஞ்சின் ஆழம் நிரப்பிடுவீர்.
உமதருள் ஆற்றல் இல்லாமல்,
உள்ளது மனிதனில் ஒன்றுமில்லை
நல்லது அவனில் ஏதுமில்லை.
மாசுொண்டதைக் கழுவிடுவீர்.
வரட்சி யுற்றதை நனைத்திடுவீர்.
காயப் பட்டதை ஆற்றிடுவீர்.
வணங்கா திருப்பதை வளைத்திடுவீர்,
குளிரானதை குளிர் போக்கிடுவீர்,
தவறிப் போனதை ஆண்டருள்வீர்.
இறைiவா உம்மை விசுவசித்து ,
உம்மை நம்பும் அடியார்க்கு,
கொடைகள் ஏழும் ஈந்திடுவீர்.
புண்ணிய பலன்களை வழங்கிடுவீர்,
இறுதியில் மீட்பும் ஈந்திடுவீர்,
அழிவிலா இன்பம் அருள்வீரே. ஆமென்.
தொழிளாளர்களின் செபம்
அனுதின வேலைகளை ஒப்புக் கொடுக்கும் செபம்:
தெய்வீகத் தொழிலாளியாகிய இயேசுவே,
அடியேன் இன்று செய்யும் ஜெபங்களையும்,
தொழில்களையும், எனக்கு ஏற்படும் களைப்பு,
ஆயாசம், துன்ப வருத்தங்கள் அனைத்தையும்,
தொழிலாளிகளின் மனந்திரும்புதலுக்காகவும்,
அர்ச்சிப்புக்காகவும் தேவரீருக்கு ஒப்புக்கொடுக்கிறேன். -ஆமென்.
இயேசுவின் திரு இருதயமே, உமது அரசு வருக !
நாசரேத்து அன்னையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
தொழிலாளரின் மாதிரியாகிய புனித சூசையப்பரே,
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
தொழிலாளிகளின் செபம்:
அனைத்தையும் படைத்துப் பராமரிக்கும் இறைவா,
நெற்றி வியர்வை தரையில் விழ உழைக்க எமக்குப்
பணித்தீரே ! நான் என் வேலைகளை விரும்பவும்,
அன்பு செய்யவும் அருள்வீராக. நேரத்தோடு
வேலைக்குச் சென்று காலத்தையும் பொருளையும்,
பணத்தையும் வீணாக்காமல், நுணுக்கமான கவனத்துடன்
உழைப்பேனாக. எப்பொழுதும் வேலையில் உற்சாகத்தோடும்,
உடன் ஊழியருடன் மரியாதையோடும், நிறுவனத்தார்க்குப்
பிரமாணிக்கத்தோடும் நடந்து கொள்வேனாக. என் வேலையின்
பயனால் என் வீடும், எமது தொழிலும்,
பொது மக்களும் பயனடையச் செய்தருளும்.
தொழிலாளியின் பாதுகாவலரான புனித சூசையப்பரே !
உமது தொழிலை இறைமகனே வாழ்த்தி, உமக்கு உதவியாக
வந்து தச்சுத் தொழிலைச் செய்தாரே! உமது தொழிலை
நீர் அன்பு செய்து திருக்குடும்பத்தைக்
காப்பாற்றியதுபோல், நானும் என் தொழிலைப் பெரிதெனக்
கருதி, அதனை அன்பு செய்து, என் குடும்பத்தையும்
காப்பாறுவேனாக. இறைவனின் திருவுளத்தை உமது தொழிலால்
நிறைவு செய்ததுபோல், என் தொழிலால் இறைவனின்
திருவுளத்தை நானும் நிறைவு செய்ய எனக்காக அதே
இயேசுவிடனம் மன்றாடுவீராக. -ஆமென்
-----------------
நல்ல இயேசுவே, என் இரட்சகரே! தேவரீர் ஒரு
தொழிலாளியாய் இருக்க திருவுளம் கொண்டமையால்,
என் ஆண்டவரும் மாதிரியுமாகிய உம்மை நான் அணுகி வருகிறேன்.
நாசரேத்தூரில் அந்த எளிய தொழிற்சாலையில், சாந்தமும்
தாழ்ச்சியும் உள்ளவராய், தூய்மை, வாய்மை, நேர்மை,
மேரை மரியாதை நிறைந்தவராய் வாழ்ந்தீர், உமது தொழில்
முயற்சிகளில் பரிகார உணர்ச்சி ததும்பி நின்றது.
கடின பிரயாசையான உம் வேலைகளை செபத்தினாலும்,
கீழ்படிதலினாலும் நீர் அர்ச்சித்தீர்.
ஓ இயேசுவே ! தெய்வீகத் தொழிலாளியே, நானும்
இப்படி இருக்க எனக்கு வரமருளும்.
உம்முடைய திருவருளின் உதவியினாலும், வேலையாட்கள்,
தொழில் பயிலுவோர்களின் பாதுகாவலர்களாகிய தேவ தாயார்,
சூசையப்பர் இவர்களுடைய ஆசீர்வாதத்தின் பலனாலும்
இன்னும் அதிகமதிகமாய் நானும் தேவரீரைப் போல் வாழ்ந்து,
உழைப்பேனாக. என் திவ்விய இரட்சகரே, கடும் பிரயாசைகள்
நிறைந்த இவ்வுலக வாழ்க்கையை நான் முடித்தபின், உமது நித்திய
இளைப்பாற்றியை எனக்குக்குக் கட்டளையிட்டருளும். -ஆமென்.
தூய கன்னிமரியாவின் மன்றாட்டு மாலை
ஆண்டவரே இரக்கமாயிரும் - ஆண்டவரே இரக்கமாயிரும்
கிறிஸ்துவே இரக்கமாயிரும் - கிறிஸ்துவே இரக்கமாயிரும்
ஆண்டவரே இரக்கமாயிரும் - ஆண்டவரே இரக்கமாயிரும்
கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் -
கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்
விண்ணகத்தில் இருக்கிற எங்கள் தந்தையாகிய இறைவா - எங்கள்
மேல் இரக்கமாயிரும் சுவாமி
உலகத்தை மீட்ட சுதனாகிய இறைவா - எங்கள் மேல்
இரக்கமாயிரும் சுவாமி
தூய ஆவியாகிய இறைவா - எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி
மூன்று ஆட்களாயிருக்கும் ஒரே இறைவா - எங்கள் மேல்
இரக்கமாயிரும் சுவாமி
புனித மரியாவே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
இறைவனின் புனித அன்னையே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
கன்னியரில் சிறந்த கன்னியே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
்துவின் அன்னையே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
்சபையின் அன்னையே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
இறையருளின் அன்னையே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
தூய்மைமிகு அன்னையே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
்னிமை குன்றா அன்னையே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
்புக்குரிய அன்னையே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
்சரியத்துக்குரிய அன்னையே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
்லாலோசனை அன்னையே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
படைத்தவரின் அன்னையே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
மீட்பரின் அன்னையே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
பேரறிவுள்ள கன்னியே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
்கத்துக்குரிய கன்னியே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
போற்றுதற்குரிய கன்னியே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
வல்லமையுள்ள் கன்னியே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
்ள கன்னியே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
்கம் உள்ள கன்னியே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
் கண்ணாடியே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
்துக்கு உறைவிடமே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
எங்கள் மகிழ்ச்சியின் காரணமே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
ஞானம் நிறைந்த பாத்திரமே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
மகிமை நிறைந்த பாத்திரமே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
பக்தி நிறைந்த பாத்திரமே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
மறைபொருளின் ரோசாமலரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
தாவீது அரசரின் கோபுரமே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
்த மயமான கோபுரமே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
பொன்மயமான ஆலயமே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
உடன்படிக்கையின் பேழையே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
விண்ணகத்தின் வாயிலே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
்கால விண்மீனே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
நோயுற்றோரின் உடல் நலமே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
பாவிகளுக்கு அடைக்கலமே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
்றோருக்கு ஆறுதலே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
கிறிஸ்தவர்களின் சகாயமே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
வானதூதரின் அரசியே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
் அரசியே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
இறைவாக்கினரின் அரசியே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
அப்போஸ்தலரின் அரசியே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
மறைச்சாட்சியின் அரசியே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
்களின் அரசியே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
கன்னியரின் அரசியே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
அனைத்துப் புனிதரின் அரசியே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
உற்பவியான அரசியே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
விண்ணேற்படைந்த அரசியே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
திருச்செபமாலையின் அரசியே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
அமைதியின் அரசியே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
உலகின் பாவங்களை போக்கும் இறைவனின் செம்மறியே -
எங்கள் பாவங்களை பொறுத்தருளும், சுவாமி
உலகின் பாவங்களை போக்கும் இறைவனின் செம்மறியே -
எங்கள் மன்றாட்டுகளை கேட்டருளும், சுவாமி
உலகின் பாவங்களை போக்கும் இறைவனின் செம்மறியே
- எங்கள் மேல் இரக்கமாயிரும், சுவாமி
இறைவனின் புனித அன்னையே! இதோ உம்மைக் சரணடைந்தோம்.
எங்கள் தேவைகளில் எங்களைப் புறக்கணியாதேயும்.
மகிமை மிகுந்த கன்னியே, விண்ணுலகப் பேறுபெற்ற
அரசியே, அனைத்துத் துன்பங்களிலிருந்தும் எங்களை
என்றும் காத்தருளும்.கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு
நாங்கள் தகுதிபெறும்படி, இறைவனின் புனித அன்னையே,
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
செபிப்போமாக
இறைவா! முழு மனதுடன் உம் திருத்தாள்
பணிந்திருக்கும் இக்குடும்பத்தைக்
கண்ணோக்கியருளும். எப்பொழுதும் கன்னியான
புனித மரியாவின் பரிந்துரையால் பகைவர்
அனைவரின் தாக்குதலிலிருந்தும் எங்களை
மீட்டருளும். எங்கள் ஆண்டவர் கிறிஸ்து
வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.
இறுதி வேண்டுதல்
இடைவிடாத துதிக்கும் புகழுக்கும் உரிய
பரம திவ்விய நற்கருணை நாதரே, உமக்கு
எந்நாளும் முடிவில்லாத ஆராதனையும்,
துதியும் புகழும் பெருகுவதாக!
அமல உற்பவியும், என்றும் கன்னியும்,
எங்கள் அரசியுமான புனித இறையன்னையின்
அமல உற்பவத்துக்கும், புனித சூசையப்பரின்
பாக்கியமான மரணத்துக்கும் புகழ் உண்டாவதாக!
இறையருளின் அன்னையே இரக்கத்தின் தாயே!
புனித மரியாவே!
எங்கள் எதிரி எங்களைச் சோதிக்கும் போதும்,
எங்கள் மரண நேரத்திலும் உமது திரு மைந்தனை வேண்டி,
எங்களைக் காத்து ஆண்டு நடத்த வேண்டும் என்று உம்
திருத்தால் முத்தி செய்து உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.