Category: இன்றைய சிந்தனை

பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்

திருப்பாடல் 1: 1 – 2, 3, 4, 6 நற்பேறு பெற்றவர் யார்? என்கிற கேள்வி திருப்பாடல் ஆசிரியரால் முன்வைக்கப்படுகிறது. அதாவது, இந்த உலகத்திற்கு வாழ்வதற்குத் தேவையான எல்லா ஆசீர்வாதங்களையும், கடவுளின் அருளையும் பெற்றவர் யார்? என்பது தான், இந்த கேள்விக்கான விளக்கமாக இருக்கிறது. இதற்கு பல வகையான வாழ்க்கைநெறிகளைப் பதிலாக வழங்கினாலும், ஆசிரியர் கொடுக்கிற முதல் பதில், பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர். யார் பொல்லாதவர்? இந்த உலகத்தில் சுயநலத்தோடு சிந்திக்கிறவர்கள் அனைவருமே பொல்லாதவர்கள் தான். அவர்களின் பார்வை குறுகியதாக இருக்கிறது. அவர்கள் மற்றவர்களைப் பற்றி கவலைப்படாதவர்கள். தங்களது தேவைகள் எப்படியாவது, எந்த வழியிலாவது பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்று விரும்புகிறவர். அவர்களது சொல்லை நாம் எப்போதும் கேட்கக்கூடாது என்று நாம் அறிவுறுத்தப்படுகிறோம். ஏன் பொல்லாதவரின் சொல்லைக் கேட்கக்கூடாது? ஏனென்றால், அவர்கள் எப்போதும், பொதுநலனுக்காகச் சிந்திப்பவர்கள் கிடையாது. அவர்களது வழிகள் தீயதாகவே இருக்கிறது. அவர்களது எண்ணங்கள் வறண்டு போன எண்ணங்களாகத்தான்...

உமது பேரன்பால் என்னை விடுவித்தருளும்

தாங்க முடியாத துன்பத்தில் இருக்கிற ஒரு நம்பிக்கையாளரின் செபம் தான் இந்த திருப்பாடல்(திருப்பாடல் 31: 4 – 5, 13, 14 – 15, 16). துன்பங்களுக்கான காரணத்தை அவரே ஏற்றுக்கொள்கிறார். அவர் செய்த தவறுகள் தான், இப்போது துன்பங்களாக அவர் முன்னிலையில் வந்திருக்கிறது. கடவுளை விட்டு விலகிய அவரது தவறு தான், இன்றைக்கு மிகச்சிக்கலான கண்ணியில் அவரை சிக்க வைத்திருக்கிறது. இந்த சிக்கலிலிருந்து தன்னை விடுவிக்கக்கூடியவர் கடவுள் மட்டும் தான், என்று அவர் தீவிரமாக நம்புகிறார். அந்த நம்பிக்கையை செபமாக எழுப்புகிறார். கடவுளிடத்தில் அவருடைய அருளை வேண்டுவதற்கு தகுதியில்லாத நிலையில் இருப்பதாக, ஆசிரியர் நினைக்கிறார். ஏனென்றால், கடவுளின் அன்பையும், இரக்கத்தையும் மறந்து அவர் வாழ்ந்திருக்கிறார். இப்போது கடவுளிடத்தில் தேவைக்காக திரும்பி வந்திருக்கிறார். அவர் கடவுளின் அருளைப் பெற தகுதியற்ற நிலையில் இருக்கிறார். தகுதியற்ற நிலையில் இருக்கிற அவருக்கு, கடவுள் தன்னுடைய அன்பை வழங்கினால் மட்டும் தான், இந்த துன்பத்திலிருந்து அவர்...

தம் வழியைச் செம்மைப்படுத்துவோர் கடவுளின் மீட்பைக் கண்டடைவர்

திருப்பாடல் 50: 8 – 9, 16 – 17, 21, 23 சரியான பாதையில் நடக்கிறவர், தமது வழியைச் செம்மைப்படுத்துகிறவர் யார்? என்பது தான், இந்த பல்லவியைக் கேட்டவுடன் நமது சிந்தனையில் உதிப்பதாக இருக்கிறது. ஏனென்றால், அந்த கேள்விக்கான பதில் நமக்கு கிடைக்கிறபோது, நம்மால், கடவுள் அருளும் மீட்பைக் கண்டடைய முடியும். எசாயா 40: 3 ல், ”ஆண்டவருக்காக பாதையைச் செம்மையாக்குங்கள்” என்ற வேண்டுகோள் விடுக்கப்படுகிறது. இது மனமாற்றத்தைக் குறிக்கக்கூடிய சொல்லாகப் பார்க்கப்படுகிறது. இந்த இறைவார்த்தையை, திருமுழுக்கு யோவானுடைய பணியை மையப்படுத்திய நிகழ்விலும் நாம் பார்க்கலாம். ஆக, செம்மைப்படுத்துதல் என்பது, மனமாற்றத்தைக் குறிக்கிறது. கடவுள் நமக்கு மீட்பை தர தயாராக இருக்கிறார். அந்த மீட்பை நாம் பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால், நமது வாழ்வை நாம் மாற்ற வேண்டும். மாற்றம் என்பது நமது வாழ்க்கையில் மற்றவர்கள் பார்க்கக்கூடிய வகையில் அமைந்திருக்க வேண்டும். அது வெளிவேடத்தனமாக இருக்கக்கூடாது. மாறாக, மற்றவர்கள் நடுவில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக...

ஆண்டவரே, எம் பாவங்களுக்கு ஏற்றபடி எம்மை நடத்தாதேயும்

பாபிலோனை ஆண்ட நெபுகத்நேசர் யெருசலேமையும், ஆலயத்தையும் தரைமட்டமாக்கினார். யூதர்களின் அடையாளம் அழிந்துபோனதாக, யூதர்கள் உணர்ந்தனர். எரேமியாவின் புலம்பல் ஆகமத்தை ஒட்டிய வசனங்கள், இதிலும் காணப்படுகிறது. மொத்தத்தில், இந்த திருப்பாடல் அழுகை, புலம்பல், வருத்தம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்துகின்ற பாடலாக அமைந்திருக்கிறது. இதுபோன்ற தண்டனைகளுக்கு என்ன காரணம்? என்பதை சிந்தித்ததின் வெளிப்பாடு தான், இந்த திருப்பாடல். தங்களுக்கு நேர்ந்திருக்கிற இவ்வளவு கொடுமையான சூழ்நிலைகளுக்கு யார் காரணம்? என்பதை ஒவ்வொருவருமே, துன்ப காலத்தில் சிந்தித்து பார்ப்பது இயல்பு. அதுபோலத்தான், வளமையாக, செழிப்பாக, மகிழ்வாக வாழ்ந்த நமக்கு, திடீரென்று ஏன் இந்த துன்பம்? என்கிற கேள்விக்கான காரணத்தை, திருப்பாடல் ஆசிரியர் காண முயல்கிறார். தாங்கள் கடவுள் முன்னிலையில் நீதிமான்களாக வாழவில்லை என்றாலும், இவ்வளவு துன்பத்தை அனுபவிக்கின்ற அளவுக்கு, தவறு செய்யவில்லை என்பது, ஆசிரியரின் திடமான நம்பிக்கை. ஒருவேளை, தங்களுடைய இந்த துன்பத்திற்கு முன்னோர் செய்த பாவம் தான் காரணமோ? என்றும், அவர் எண்ணுகிறார். அப்படி இருந்தால்,...

ஆலயம் – ஆறுதல் தரும் இறைப்பிரசன்னம்

இயேசு பேதுருவையும், யாக்கோபையும், யோவானையும் அழைத்துக்கொண்டு ஓர் உயர்ந்த மலைக்குச்சென்றார். இயேசு எதற்காக உயர்ந்த மலைக்குச்செல்ல வேண்டும்? மலையின் மகத்துவம் என்ன? மலையில் இஸ்ரயேல் மக்களின் சிறந்த இறைவாக்கினர்களான மோசேயும், எலியாவும் தோன்றுவதன் பொருள் என்ன? இவற்றுக்கான பதிலை இப்போது பார்ப்போம். இயேசு தன் பாடுகளை முதன்முதலாக முன்னறிவித்தவுடன் மலைக்குச்செல்கிறார். அதாவது, தான் பாடுகள் படப்போவதையும், கொலை செய்யப்படப்போவதையும் அறிவித்த இயேசு மலைக்குச்செல்கிறார். இயேசு தான் பாடுகள் படப்போவதைத் துணிவோடு அறிவித்தாலும் கூட, அவருடைய உள்ளம் கலக்கமுற்றிருக்கிறது. இயேசு கவலையினால் தன் மனித உணர்வுகளிலே சோர்ந்து போயிருக்கிறார். இத்தகைய தருணத்திலே அவருக்கு ஆறுதல் தேவையாயிருக்கிறது. அந்த ஆறுதலைத்தேடி அவர் மலைக்குச்செல்கிறார். மலை என்பது கடவுளை சந்திக்கிற இடமாக இஸ்ரயேல் மக்கள் நம்பினர். மலை என்பது கடவுள் அனுபவம் பெறக்கூடிய இடம். விடுதலைப்பயணம் 31: 18 ல், மோசே ஆண்டவரோடு சீனாய் மலையில் பேசுவதைப்பார்க்கிறோம். ஆண்டவர் சீனாய்மலைமேல் மோசேயோடு பேசிமுடித்தபின், கடவுளின் விரலால்...