Category: இன்றைய சிந்தனை

தாழ்ச்சி நிறைந்த உள்ளம்

அரச அலுவலர் ஒருவர் தனது மகனுக்காக இயேசுவைத்தேடி வந்த நிகழ்ச்சி இன்றைய நற்செய்தியாக நமக்கு தரப்பட்டிருக்கிறது. யார் இந்த அரச அலுவலர்? அரசரின் அவையில் பணிபுரியக்கூடியவருக்கு தச்சுத்தொழிலாளியின் மகனிடம் என்ன வேலை? அரச அலுவலர் ஏரோது அரசரின் அவையின் பணிபுரியக்கூடியவராக இருக்கலாம். இயேசு கானாவூரில் இருக்கிறார். அலுவலரின் சொந்த ஊரோ கப்பர்நாகும். கிட்டத்தட்ட இரண்டிற்கும் இடையேயான தொலைவு 20 மைல். இங்கே, அரச அலுவலரின் தாழ்ச்சி நிறைந்த நம்பிக்கை நமக்கு உதாரணமாக தரப்படுகிறது. அரசருடைய அவையில் பணியில் இருக்கிற அதிகாரிக்கு பல சலுகைகள் நிச்சயம் இருக்கும். அரண்மணையில் பணிபுரியும் மிகச்சிறந்த மருத்துவர்கள் நிச்சயம் அவருடைய மகனுக்கு சிகிச்சை அளித்திருப்பார்கள். அரசரின் அலுவலகத்தில் பணிபுரிகிறவர் இயேசுவைத் தேடி வந்தால், அது மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தும் என்பது அவருக்குத் தெரியும். தான் மிகப்பெரிய அதிகாரத்தில் இருக்கிறேன். எனவே, ஆளனுப்பி இயேசுவை அதிகாரத்தோடு, அழைத்து வர ஆணையிட்டிருக்கலாம். அதையெல்லாம் விட்டுவிட்டு, இயேசுவை அவர் தேடி...

கடவுளின் பராமரிப்பு

பார்வையற்ற மனிதரை இயேசு குணப்படுத்துகிற நிகழ்ச்சி இன்றைக்கு தரப்பட்டுள்ளது. பிறவியிலே பார்வையற்ற மனிதருக்கு குணப்படுத்துகின்ற புதுமை இந்த ஒன்றுதான். பார்வையற்ற அந்த மனிதர் சீடர்களுக்கு நன்கு தெரிந்தவராக இருக்க வேண்டும். எனவேதான் அவர் பிறவியிலேயே பார்வையற்றவராக இருப்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். யூதர்கள் எப்போதுமே பாவத்திற்கும், துன்பத்திற்கும் தொடர்பு உண்டு என்று நம்பினார்கள். எனவேதான் சீடர்கள் அந்த மனிதன் குருடனாய் பிறந்ததற்கு அவனுடைய பாவமா? பெற்றோர் செய்த பாவமா? என்ற கேள்வியைக் கேட்கிறார்கள். இங்கே நமக்கு ஒரு சந்தேகம் வரலாம். அவன் பிறவியிலேயே குருடன். பின் எப்படி அவன் செய்த பாவம் காரணமாக இருக்கமுடியுமென்று. கிரேக்க அறிஞர்; பிளேட்டோவின் ‘ஆன்மா’ பற்றிய கருத்தை யூதர்கள் நம்பினர். ஆன்மா என்பது ஓர் உயிர் உருவாவதற்கு முன்னதாகவே இருக்கிறது என்ற கோட்பாட்டை நம்பினர். எனவே, பார்வையற்றவன் பிறப்பதற்கு முன்னதாகவே, அவனுடைய ஆன்மா தவறு செய்திருக்கும், எனவேதான் அவன் குருடனாய் பிறந்திருக்கிறான் என்பது சீடர்களின் வாதம். இயேசு...

கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பு விழா

இந்த விழா ஐந்தாம் நூற்றாண்டில் கொண்டாடப்பட்டதற்கான சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தொடக்கத்தில் இந்த விழா மார்ச் மாதம் 25 ம் தேதி கொண்டாடப்பட்டது. கிறிஸ்து பிறப்பு விழாவிற்கு 9 மாதங்களுக்கு முன் கொண்டாடப்பட்டது. இது தவக்காலம் அல்லது உயிர்ப்பு பெருவிழாவின் காலங்களில் வந்ததால், இவ்விழா குறித்துக்காட்டும் மகிழ்ச்சி பண்புகளை வெளிப்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. எனவே, பிற்காலங்களில் டிசம்பர் 18 ம் தேதிக்கு, இந்த விழா மாற்றியமைக்கப்பட்டது. இந்த விழாவானது, மரியாளின் முன்னறிவிப்பு, இயேசு கருவில் உருவான விழா, இறைமகன் மனிதரான விழா என, பல பெயர்களால் அழைக்கப்பட்டது. 1969 ம் ஆண்டிற்கு பிறகு நடந்த வழிபாட்டு மறுசீரமைப்பிற்கு பின், இந்த விழாவானது கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பு பெருவிழா என்று அழைக்கப்பட்டது. புதிய திருவழிபாட்டு ஒழுங்கின்படி, இந்த விழா மார்ச் மாதம் 25 ம் நாள் கொண்டாடப்பட வேண்டும். புனித வாரத்திலோ அல்லது உயிர்ப்பு விழாவின் வாரத்திலோ வந்தால், உயிர்ப்பு வாரத்திற்கு அடுத்து...

முதன்மையானது அன்பு

யூதப்பாரம்பரியத்தில் எப்போதுமே இரட்டை மனநிலை காணப்பட்டது. திருச்சட்டத்தை இன்னும் பல சட்டங்களாக விளக்கமளிக்கும் மனநிலை, இரண்டாவது திருச்சட்டம் முழுவதையும் ஒரே வாக்கியத்தில் கூறும் மனநிலை. இந்த இரட்டை மனநிலை தான், இறைவாக்கினர்களின் போதனையிலும் வேற்றுமையைக் காட்டியது. ஒரு சில இறைவாக்கினர்கள் ஏராளமான எண்ணிக்கையில் கடவுளின் திருச்சட்டங்களைக் கொடுத்தனர். ஆனால், மற்றவர்கள், விரல் விட்டு எண்ணக்கூடிய வகையில் கடவுளின் சட்டங்களைக் கொடுத்தனர். உதாரணமாக, மோசே 613 சட்டங்களைப் பெற்றதாக சொல்லப்படுகிறது. இந்த 613 சட்டங்களை, தாவீது தன்னுடைய திருப்பாடல் 15ல், 11 ஆக குறைக்கிறார். இறைவாக்கினர் எசாயா(33: 15), இதனை மிகச்சுருக்கமாக ஆறாக, குறைக்கிறார். மீக்கா இறைவாக்கினர்(6:8) அதனை மூன்றாக குறைக்கிறார். மீண்டும் எசாயா இறைவாக்கினர், இதனை அடிப்படையில் இரண்டு திருச்சட்டங்களாக (56: 1) பிரிக்கிறார். இறுதியில் அபகூக்கு இறைவாக்கினர்(2: 4) ஒரே வரியில், “நேர்மையுடையவரோ தன் நம்பிக்கையினால் வாழ்வடைவர்” என்று, நிறைவு செய்கிறார். இவ்வாறு பழைய ஏற்பாட்டில், இறைவாக்கினர்களின் பல்வேறு விளக்கங்களுக்கும்...

உங்கள் மூதாதையர் என்னைச் சோதித்தனர்

விடுதலைப்பயணம் 17 வது அதிகாரத்தில் இஸ்ரயேல் மக்கள் எகிப்திலிருந்து திரும்பி வந்த பயணத்தைப் பார்க்கிறோம். இஸ்ரயேல் மக்கள் இரபிதீம் என்கிற இடத்தில் பாளையம் இறங்கினர். அங்கே அவர்களுக்கு குடிக்க தண்ணீர் இல்லை. எங்கும் வறண்ட பாலைநிலம். மக்கள் மோசேக்கு எதிராகவும், கடவுளுக்கு எதிராகவும் முணுமுணுக்கத் தொடங்கினர். ஆண்டவர் அந்த பாலைநிலத்திலும் அற்புதமாக அவர்கள் தண்ணீர் பருகச்செய்தார். இந்த நிகழ்ச்சியில், இஸ்ரயேல் மக்களைச் சோதனைக்குள்ளாக்கியதாக நாம் பார்க்கிறோம். அது என்ன சோதனை? கடவுள் இவ்வளவுக்கு இஸ்ரயேல் மக்களுக்கு நன்மைகளைச் செய்திருக்கிறார். ஆனால், இஸ்ரயேல் மக்கள் அதனை கருத்தில் கொள்ளாமல், அற்ப காரணங்களுக்காக கடவுளையே சோதித்தனர். கடலை அற்புதமாக இரண்டாகப் பிளக்கச்செய்த கடவுளுக்கு, எகிப்திய நாட்டையே கதிகலங்க வைத்த இறைவனுக்கு, அவர்களின் தாகத்தைத் தணிப்பது பெரிய காரியமா என்ன? அவர்கள் பொறுமையாக, கடவுளின் வல்லமையை உணர்ந்து தண்ணீர் கேட்டிருந்தாலே, அவர்கள் நிறைவாகப் பெற்றிருப்பார்கள். ஆனால், அவர்கள் கடவுளைச் சோதித்தனர். முணுமுணுத்தனர். கடவுளிடமிருந்து ஏராளமான வல்ல...