Category: இன்றைய சிந்தனை

இவர்களில் நாம் யார்?

இன்றைய நற்செய்தியில் (யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 40-53) மூன்று வகையான கதைமாந்தர்களையும், அவர்களின் எண்ண ஓட்டங்களையும் பார்க்கிறோம். இவர்கள் ஒவ்வொருவருமே, பலதரப்பட்ட மனிதர்களைப்பிரதிபலிக்கிற பிம்பங்களாக இருக்கின்றனர். இவர்களில் நாம் யாராக இருக்கிறோம்? யாராக இருக்க வேண்டும்? என்னும் கேள்வியோடு இவர்களைப்பார்ப்போம். 1. காவலர்கள்: தலைமைக்குருக்களாலும், காவலர்களாலும் இயேசுவைக் கைதுசெய்வதற்காக அனுப்பப்பட்டவர்கள் காவலர்கள். அவர்களுக்கு தலைமைக்குருக்களின் அதிகாரம் நன்றாகத்தெரியும். அவர்கள் சொல்வதைத் தாங்கள் செய்யவில்லை என்றால், அதனால் வரும் விளைவுகளும் நன்றாகத்தெரியும். ஆனாலும், அவர்களின் துணிவு நம்மை வியக்கவைக்கிறது. நிச்சயம் அவர்களை அனுப்பிய தலைமைக்குருக்களுக்கு இது ஒரு அதிர்ச்சியான செய்திதான். ஆனாலும் அந்த அதிர்ச்சியை வெளிக்காட்டிக்கொள்ளாமல், ‘நீங்களும் ஏமாந்துபோனீர்களா?’ என்று தங்களது ஏமாற்றத்தை வெளியே காட்டாமல், அவர்களைப்பார்;த்து முணுமுணுக்கிறார்கள். காவலர்களின் உடல் மட்டுமல்ல, உள்ளமும் வீரம் என்பதற்கு அவர்களின் சாட்சியம் சிறந்த எடுத்துக்காட்டு. சமுதாயத்தில் உயர்ந்த இடத்தில் அவர்களுக்கு இடம் இல்லையென்றாலும், அவர்களின் நேர்மை நமக்கெல்லாம் மிகப்பெரிய படிப்பினை. 2....

கடவுளை நாம் எப்படிப் புரிந்துகொள்கிறோம்?

”என்னை அனுப்பியவர் உண்மையானவர். அவரை உங்களுக்குத்தெரியாது”. இந்த வார்த்தைகள் தான் இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முக்கியமான வார்த்தைகள். இந்த வார்த்தைகள் தான் இயேசுவைக் குற்றவாளியாக்கிய வார்த்தைகள். இந்த வார்த்தைகள் தான், இயேசுவிடமிருந்து பல நாட்களாக, அவரிடத்தில் குற்றம் காணுகிறவர்கள் எதிர்பார்த்த வார்த்தைகள். அவர்கள் இயேசுவைக் குற்றம் சுமத்த தேடிக்கொண்டிருந்தது கிடைத்துவிட்டது. இந்த வார்த்தைகளில் அப்படி என்ன தான் குற்றம் சுமத்த முடியும்? யூதர்கள் தாங்கள் இறைவனால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களாக நினைத்தனர். தாங்கள் கடவுளுக்கு மிக அருகாமையில் உள்ளவர்களாக எண்ணினர். கடவுளை தங்களைத்தவிர அறிந்தவர்கள் யாரும் இல்லை என்ற மமதை கொண்டிருந்தனர். ஆனால், இயேசு அவர்களுக்கு கடவுளைத்தெரியாது என்று சொல்கிறார். சாதாரண மனிதர்கள் யாரும் பேசக்கூடாத இஸ்ரயேலைப்பற்றியும், இஸ்ரயேலின் கடவுளைப்பற்றியும் அவர் பேசியது, கடவுளைப்பழித்துரைத்ததற்கான செயல் என்று அதிகாரவர்க்கத்தினர் அவரை குற்றம் சுமத்தினர். கடவுளைப்பற்றி பலரும், பலவிதமாகப் புரிந்துகொண்டுள்ளனர். தங்களது அனுபவத்தை பலவிதமாக வெளிப்படுத்தியுள்ளனர். எழுதியும் வைத்துள்ளனர். ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக வெளிப்படுத்தியுள்ளனர். நாமும் கடவுள்...

இயேசுவின் சாட்சிகளாய் வாழ்வோம்

‘நீர்தான் கடவுளின் மகன் என்பதற்கு என்ன சான்று தருகிறீர்?’ என்று தன்னை மற்றவர்கள் கேட்டதற்கு, இயேசு இன்றைய நற்செய்தியில் பதில் தருகிறார். யூதர்களைப்பொறுத்தவரையில் உண்மை என்று நம்புவதற்கு இரண்டு சாட்சிகள் கட்டாயம் வேண்டும். ஒருவர் தனக்குத்தானே சான்று கூறுவதை, அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இணைச்சட்டம் 17: 6 “இரண்டு அல்லது மூன்று சாட்சிகளின் வாக்குமூலத்தை முன்னிட்டே, குற்றவாளி கொலை செய்யப்பட வேண்டும்”. இணைச்சட்டம் 19: 15 “ஒருவனது எந்தக்குற்றத்தையும் எந்தப்பழிபாவச்செயலையும் உறுதிசெய்ய, ஒரே சாட்சியின் வாக்குமூலம் போதாது. இரண்டு அல்லது மூன்று சாட்சிகளின் வாக்குமூலத்தாலே அது உறுதி செய்யப்பட வேண்டும்.” இயேசு இந்த ஒழுங்குமுறையின்படி சான்றுகளைத்தருகிறார். இயேசுவின் முதல் சான்று திருமுழுக்கு யோவான்(33) இயேசுவின் இரண்டாவது சான்று தந்தையாகிய கடவுள்(37)மூன்றாவது சான்று மறைநூல். ஆனால், இந்த சான்றுகளையெல்லாம் விட இயேசு அதிக அழுத்தம் கொடுத்து கூறுவது, அவரின் செயல்கள்(36). தனது செயல்களை விட வேறு என்ன பெரிய சான்றை தான் கொடுத்தவிட...

இறையனுபவம்

யோவான் நற்செய்தியிலே இறையியல் சற்று ஆழமானதாக இருக்கிறது. காரணம், யோவான் இயேசுவின் வார்த்தைகளை மட்டும் எழுதவில்லை. அந்த வார்த்தைகளை தான் புரிந்துகொண்ட விதத்தில் எழுதியிருக்கிறார். அந்த புரிதல் மேலோட்டமான அறிவின் மூலமாக வந்ததில்லை. மாறாக, ஆழ்ந்த சிந்தனையின் மூலமாக, இயேசுவின் வார்த்தைகளை மீண்டும், மீண்டுமாக தியானித்தது மூலமாக வந்தது. இயேசுவோடு வாழ்ந்த யோவானுக்கு, அவரோடு இருந்தபோது, இயேசுவின் போதனைகள் அவ்வளவாக அவருக்கு விளங்கியிருக்கவில்லை. ஆனால், இயேசுவின் விண்ணேற்றத்திற்குப் பிறகு அவருடைய வார்த்தைகளை தனது வாழ்வின் அனுபவத்தோடு பொருத்திப்பார்த்தபோது, அதில் இருந்த உண்மையை அவர் கண்டுகொண்டார். இன்றைய நற்செய்தியில், இயேசு தன்னை இறைத்தந்தையோடு இணைத்துப்பேசுகிறார். கடவுள் எப்படி இருக்கிறார் என்பதை இயேசுவிடமிருந்து அறிந்துகொள்ளலாம். ஏனென்றால், இயேசுவின் வார்த்தைகள் கடவுளின் வார்த்தைகள். இயேசுவின் உணர்வுகள் கடவுளின் உணர்வுகள். இயேசுவின் செயல்பாடுகள் கடவுளின் செயல்பாடுகள். பாவத்திற்கு எதிராக, கடவுள் எப்படி எழுகிறார் என்பதை இயேசுவின் வாழ்விலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம். மனிதர்களைக் கடவுள் எப்படி பார்க்கிறார்...

குணம் பெற விரும்புகிறீரா?

இயேசு உடல் நலமற்ற மனிதரிடம் ”குணம் பெற விரும்புகிறீரா?” என்ற கேள்வியைக் கேட்கிறார். பல ஆண்டுகளாக, எப்படியாவது குணம் பெற்று விட வேண்டும் என்று அந்த மனிதர் நிச்சயமாக முயற்சி எடுத்திருப்பார். எப்படியாவது குணம் பெற்றுவிட வேண்டும் என்ற அவரின் எண்ணத்தின் வெளிப்பாடுதான், அந்த குளத்தின் அருகில் அவர் நீண்ட நாட்களாக காத்திருப்பது. அந்த மனிதர் தனது உடல் நலக்குறைபாட்டிற்கேற்ப தனது வாழ்வை மாற்றிக்கொண்டாலும், இதுதான் வாழ்க்கை, இதை வாழ்ந்துதான் ஆக வேண்டும் என்ற முடிவிற்கு வந்துவிட்டாலும், கிடைக்கிற வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள, சந்தர்ப்பத்தை அவர் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறார். இயேசுவிடமிருந்து நிறைவான அருளைப்பெற்றுக்கொள்வதற்கு நமக்கு அடிப்படையிலே இருக்க வேண்டியது, ஆர்வம். எந்த ஒரு சூழலிலும் நம்பிக்கை இழக்காத தன்மை. கடைசி நிமிடத்திலும் இருக்கும் அந்த ஒரு துளி நம்பிக்கை. எதை இழந்தாலும் ஒரு மனிதன் நம்பிக்கை இழக்கக்கூடாது என்பதற்கு இந்த உடல் நலமற்றவர் சிறந்த எடுத்துக்காட்டு. எப்படியாவது குணம் பெற்றுவிட வேண்டும் என்கிற...