Category: இன்றைய சிந்தனை

நிலைவாழ்வு

இந்த உலகத்தில் வாழக்கூடிய நம் அனைவரின் எண்ணம், ஏக்கம், சிந்தனை அனைத்துமே மறுஉலகத்தைச் சார்ந்ததாக இருக்கிறது. ஏனென்றால், இந்த உலகம் நமது நிலையான உலகம் அல்ல. மாறாக, அடுத்த வரக்கூடிய உலகம் தான், நிலையான உலகம். அந்த வகையில் நாம் எப்போதுமே, வரக்கூடிய உலகத்திற்காக நம்மையே தயாரிக்க வேண்டும். இதனுடைய பொருள், இந்த உலகத்தை பொருட்படுத்த தேவையில்லை என்பது அல்ல. மாறாக, இந்த உலகத்தை நிறைவோடு வாழ வேண்டும் என்பதுதான். இயேசுவின் போதனையும் இதனை அடிப்படையாகக் கொண்டுதான் அமைந்திருக்கிறது. இயேசு எப்போதுமே நமக்கு இரண்டுவிதமான வாய்ப்புக்களைத்தருகிறார். விண்ணகத்திற்குள்ளாக நாம் நுழைவதற்கு என்ன செய்ய வேண்டும்? என்ன செய்தால் நாம் விண்ணகத்திற்குள் நுழைவதற்கு மறுக்கப்படுவோம் என்று அடிக்கடி தனது போதனையின் வழியாகக் கற்றுக்கொடுக்கிறார். அதனுடைய ஒரு பகுதிதான் இன்றைய நற்செய்தி வாசகம். விண்ணகத்திற்குள் செல்வதற்கு நாம் எப்படி நம்மையே தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என, ஆலோசனையுடன் கூடிய எச்சரிக்கை உணர்வை இயேசு தருகிறார். இயேசுவின்...

புனித சூசையப்பர் திருவிழா

திருக்குடும்பத்தின் தலைவராக இருந்து, குடும்பத்தை சவாலான காலக்கட்டத்தில், கடவுளின் திருவுளத்தை அறிந்து, அதனை சிறப்பாக வழிநடத்தியவர் புனித சூசையப்பர். தனக்குள்ளாக இருந்த குழப்பங்களுக்கு கனவு வழியே, தெளிவு பிறந்தபிறகு, கடவுளின் திருவுளம் இதுதான் என்றால், அதை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன், என்று தனது வாழ்வு முழுவதும் பிரமாணிக்கத்தோடு வாழ்ந்தவர் இந்த புனிதர். நற்செய்தி நூல்களில் சொற்ப இடங்களில் மட்டுமே காணப்பட்டாலும், சிறப்பான எடுத்துக்காட்டான வாழ்க்கை வாழ்ந்தவர் புனித சூசையப்பர். இயேசுவின் வளர்ப்பு தந்தை சூசையப்பரின் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 19 ம் தேதி கொண்டாடப்படுகிறது. தொடக்கத்தில் இந்த விழா வழிபாட்டு அட்டவணையில் இருந்ததை, எட்டாம் மற்றும் ஒன்பதாம் நூற்றாண்டுகளில் கிடைத்த சான்றுகள் தெரிவிக்கின்றன. ”காப்டிக்” என்று அழைக்கப்படும் எகிப்து நாட்டு திருவழிபாட்டு மரபில், புனித சூசையப்பர் விழா ஜீலை 20 அன்று கொண்டாடப்பட்டதற்கான சான்றுகளும் உள்ளன. சிலுவைப்போர்களில் கிறிஸ்தவர்கள் வெற்றிபெற்றனர். அந்த வெற்றிக்கு நன்றியாக, சூசையப்பருக்கு ஆலயத்தைக்கட்டி, மார்ச் 19...

உங்கள் இதயங்களைக் கடினப்படுத்தாதீர்

உள்ளத்தைக் கடினப்படுத்துவது என்றால் என்ன? செய்வது தவறு என்பது தெரிந்தாலும், அதனையே மீண்டும், மீண்டுமாகச் செய்வது தான் கடினப்படுத்திக்கொள்வது ஆகும். பழைய ஏற்பாட்டில், இஸ்ரயேலின் மீட்பின் வரலாற்றில் எகிப்தை ஆண்ட, பார்வோன் மன்னன் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. பார்வோன் மன்னன் கடவுள் செய்த வல்ல செயல்களைக் கண்டு, அதனால் அவன் சந்தித்த இழப்புக்களை நினைத்து, இஸ்ரயேல் மக்களை திரும்பிப்போக பணித்தான். ஆனால், நிலைமை சரியான உடனே, அவர்கள் செல்வதற்கு தடைவிதித்தான். அவனுடைய இதயத்தைக் கடினப்படுத்திக் கொண்டான். தான் செய்வது தவறு என்பது அவனுக்குத் தெரியும். ஆனாலும், அதனைச் செய்யாமலிருக்க அவனால் முடியவில்லை. அதனால் வரக்கூடிய விளைவுகளுக்கும் அவன் தான் பொறுப்பேற்க வேண்டும். இஸ்ரயேல் மக்களும் இதே தவறைச் செய்தார்கள். தங்களை இந்த உலகத்தில் ஒரு நாடாக அடையாளப்படுத்தியவர் கடவுள் என்பது அவர்களுக்குத்தெரியும். இஸ்ரயேல் மக்களின் எழுச்சிக்கும், மாட்சிமைக்கும் உற்ற துணைவராக இருந்தது கடவுள் தான் என்பது அவர்கள் அனுபவித்த ஒன்று. அந்த...

ஆண்டவர் அருளும் இரக்கமும் கொண்டவர்

திருப்பாடல் 103 ஒரு புகழ்ச்சிப்பாடல். ஆண்டவருடைய இரக்கத்தைப் புகழ்ந்து பாடக்கூடிய ஒரு பாடல். ஆண்டவர் அருளும், இரக்கமும் உள்ளவராக இருக்கிறார் என்பதைத் தெளிவாக விளக்கிக்கூறும் பாடல். உடல், உள்ளம், ஆன்மாவோடு இணைந்து கடவுளைப் போற்றுவதற்கு நமக்கு அழைப்புவிடுக்கும் பாடல். கடவுள் நம்மீது எந்த அளவுக்கு அன்பு வைத்திருந்தால், நமது குற்றங்களை ஒரு பொருட்டாக எண்ணாமல், நம்மை தேடி வருவார் என்று, கடவுளின் இரக்கத்தை மையப்படுத்திச் சொல்லும் பாடல். இங்கே இரக்கம் என்பது நாம் செய்யக்கூடிய இரக்கச்செயல்களை மையப்படுத்தியது அல்ல, மாறாக, மன்னிப்பு என்கிற பரிமாணத்தை வலியுறுத்திச் சொல்வது. கடவுளின் மன்னிப்பிற்கு ஒரு அருமையான உதாரணம் ஒன்று தரப்படுகிறது. மேற்கும், கிழக்கும் என்றைக்குமே ஒன்று சேராது. இரண்டு திசைகளும் வெவ்வேறு துருவங்கள். இரண்டும் ஒருபோதும் நெருங்கி வர முடியாது. அத்தனை தொலைவிற்கு, கடவுள் நம் பாவங்களை அகற்றுகிறார் என்றால், அவர் நம்முடைய பாவங்களை நினைவுகூர்வதே கிடையாது என்று சொல்கிறார். நாம் செய்த பாவங்களுக்கு...

ஆண்டவர் செய்த வியத்தகு செயல்களை நினைவுகூறுங்கள்

ஓபேதுஏதோம் இல்லத்திலிருந்து கடவுளின் பேழையை அனைவரும் தூக்கிக்கொண்டு வந்து, தாவீது அதற்கென்று அமைத்த கூடாரத்தில் வைத்தனர். அங்கே அனைவரும் இணைந்து ஆடிப்பாடி மகிழ்வதுதான், இந்த திருப்பாடலின் பிண்ணனி (1குறிப்பேடு 16: 1..). இது கடவுளுக்கு செலுத்தும் நன்றிப்பா. அங்கேயிருந்த மக்கள் அனைவரும் கடவுளை ஆடிப்பாடி மகிழ்விக்கின்றனர். கடவுள் அவர்களுக்குச் செய்திருக்கிற நன்மைகளை அறிக்கையிட்டு, எந்நாளும் கடவுளின் பிள்ளைகளாக வாழ உறுதி எடுக்கின்றனர். “நினைவுகூறுதல்” என்பது ஒருவர் செய்த செயல்களை எண்ணிப்பார்ப்பது. நல்லவற்றை திரும்பிப்பார்ப்பதும், கெட்டவற்றை மறப்பதும் இங்கு நமக்கு விடுக்கப்படுகிற அழைப்பு. ஆனால், மனிதர்களாகிய நாம் அதை அப்படியே மாற்றி கடைப்பிடிக்கிறோம். நல்லவற்றை மறந்துவிடுகிறோம். கெட்டவற்றை வாழ்வில் எண்ணிக்கொண்டிருக்கிறோம். இது நமது வாழ்விற்கு எப்போதுமே ஆபத்து விளைவிக்கக்கூடியதாகத்தான் இருக்கும். இதே சிந்தனையை நமது ஆன்மீக வாழ்விலும் தொடர்கிறோம். கடவுள் நமக்கு செய்து வந்திருக்கிற பல நன்மையான காரியங்களை நாம் வெகு எளிதாக மறந்துவிடுகிறோம். அதனை பொருட்படுத்துவது கிடையாது. அதனை கடவுள் நமக்கு...