Category: இன்றைய சிந்தனை

விசுவாசத்தை அதிகரிக்க…

இயேசு தான் உண்மையில் கடவுளிடமிருந்து தான் வந்திருக்கிறேன் என்பதை, யூதர்களுக்கு பல வழிகளில் வெளிப்படுத்த முயன்றிருக்கிறார். எப்படியாவது அவர்கள் உண்மையை அறிந்துவிட வேண்டும் என்று, தன்னால் இயன்றதைச் செய்திருக்கிறார். ஆனால், யூதர்களின் மனம் கல்லாகத்தான் இருந்தது. இன்றைய நற்செய்தியிலும் இயேசு, தனது வாதத்திறமையினால், அவர்களுக்கு தான் யாரிடமிருந்து வருகிறேன்? என்பதை உணர்த்த விரும்புகிறார். அதற்கான முயற்சியை எடுக்கிறார். ”தந்தையின் சொற்படி பல நற்செயல்களை உங்கள் மீது செய்து காட்டியிருக்கிறேன்” என்று சொல்கிறார். பொதுவாக, வார்த்தைகளில் போதிக்கிறபோது, அது வாதத்திற்கு உட்பட்டது. நாம் சொல்லக்கூடிய வார்த்தைகளை ஒவ்வொருவரும் அவரவர் பிண்ணனியிலிருந்து புரிந்து கொள்வார்கள். அது நாம் சொல்கிற அர்த்தத்தில் புரிந்து கொள்ளப்படுமா? என்றால், அது நிச்சயம் இல்லை. ஆனால், செயல்பாடுகளைப் பொறுத்தவரையில், வாதத்திற்கு அப்பாற்பட்டது. இயேசு ஒரு சிறந்த போதகர். காரணம், வார்த்தையினால் மட்டுமல்ல, நற்செயல்களால், தான் யார் என்பதை, மற்றவர்களுக்கு உணர்த்த முயற்சி எடுத்தவர். இதுவரை யாரும் அப்படிப்பட்ட நற்செயல்களை, மக்கள்...

கீழ்ப்படிதல்

யூதர்கள் இயேசுவிடம், ”நாங்கள் பரத்தைமையால் பிறந்தவர்கள் அல்ல. எங்களுக்கு ஒரே தந்தை உண்டு. கடவுளே அவர்” என்று சொல்கிறார்கள். இயேசு தனது சொல்லாற்றலின் மூலமாக, அவர்களுடைய வாழ்க்கை முறையினாலும், நடத்தையினாலும், ஆபிரகாமின் பிள்ளைகள் அல்ல என்பதை, தெளிவாக அவர்களுக்கு உரைத்துவிட்டார். உடனே யூதர்கள், அடுத்ததாக, தாங்கள் கடவுளின் பிள்ளைகள் என்று விவாதம் செய்ய ஆரம்பிக்கிறார்கள். இயேசு அதனையும் உடைத்தெறிகிறார். அதனைத்தான். இந்த நற்செய்தியின் கடைசிப்பகுதி நமக்கு தெளிவுபடுத்துகிறது. விடுதலைப்பயணம் 4: 22 ”இஸ்ரயேல் என் மகன்: என் தலைப்பிள்ளை”. இவ்வாறு கடவுள் இஸ்ரயேலை தனது முதல் பிள்ளையாக தேர்ந்தெடுக்கிறார். இஸ்ரயேல் மக்கள் கீழ்ப்படியாமையோடு பாலைவனத்தில் மோசேயோடு சண்டையிடுகிறார்கள். அப்போது மோசே அவர்களிடம் சொல்கிறார்: ”ஞானமற்ற மதிகெட்ட மக்களே! ஆண்டவருக்கு நீங்கள் அளிக்கும் கைம்மாறும் இதுதானா? உங்களைப் படைத்து உருவாக்கி நிலைநிறுத்திய உங்கள் தந்தை அவரல்லவா? இவ்வாறு இஸ்ரயேலை தனது பிள்ளையாக கருதிய இறைவனை, இஸ்ரயேல் மக்கள் வேற்று நாட்டினரோடு தொடர்பு வைத்து,...

வாய்ப்புக்களைப் பயன்படுத்துவோம்

இன்றைய நற்செய்தியை (+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 21-30) நாம் வாசிக்கிறபோது, இயல்பாகவே ஏழை இலாசர் உவமையில் வரும் செல்வந்தனின் நிலை நமக்கு நினைவுக்கு வருகிறது. இயேசு சொல்கிறார், ”நான் போன பின் நீங்கள் என்னைத் தேடுவீர்கள். நான் போகுமிடத்திற்கு உங்களால் வர இயலாது. நீங்கள் பாவிகளாகவே சாவீர்கள்”. இழந்த வாய்ப்புகளை நாம் திரும்பப்பெற முடியாது, என்று பொதுவாகச் சொல்வார்கள். கிடைக்கிற வாய்ப்பைப்பயன்படுத்தி, நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்ள முயற்சி எடுக்க வேண்டும். இல்லையென்றால் நமக்கு வருகிற அழிவை யாராலும், தடுக்க முடியாது. ஏழை இலாசர் உவமையில், அந்த செல்வந்தன் தனது சகோதரர்களுக்காக இலாசரை திரும்ப அனுப்புவதற்கு, ஆபிரகாமிடம் மன்றாடுகிறார். ஆனால், ஆபிரகாமோ அவர்களை வழிநடத்துவதற்கு இறைவாக்கினர்கள் இருப்பதாகக்கூறுகிறார். அப்படி செவிசாய்க்காதவர்கள் யாருக்கும் செவிசாய்க்க மாட்டார்கள் என்றும், அவர்களை யாராலும் காப்பாற்ற முடியாது என்பதாகவும் நாம் புரிந்து கொள்ளலாம். கடவுள் நமக்கு நாம் திருந்தி வாழ்வதற்கு பல வாய்ப்புகளைத் தருகிறார். அந்த வாய்ப்புக்களை...

நான் எதற்கும் அஞ்சிடேன்

அச்சம் என்பது மனிதர்களுக்கு இருக்கக்கூடிய இயல்பான ஒன்று. வாழ்க்கையில் எது நடக்குமோ? என்கிற பயம் எல்லாருக்குமே இருக்கும். அடுத்த வேளை என்ன நடக்குமோ என்கிற பதட்டம் மனிதர்களுக்குள்ளாக நிச்சயம் இருக்கும். ஆனால், இந்த உலகத்தில் பயப்படாமல் இருக்கிற மனிதர்கள் இருக்கிறார்களா? அவர்கள் யார்? கடவுள் மீது முழுமையான நம்பிக்கை உள்ளவர்களே, அடுத்த வேளையைப் பற்றியோ, அடுத்த நாளைப்பற்றியோ கவலை கொள்ளாத மனிதர்கள். ஆகவே, நாம் அனைவருமே கடவுள் மீது நமது முழுமையான நம்பிக்கையை வைத்து, நமது வாழ்வை வாழ்வதற்கு இந்த திருப்பாடல் (திருப்பாடல் 23: 1) நமக்கு அழைப்புவிடுக்கிறது. இன்றைய நற்செய்தியில் (யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 1-11)விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணை, இயேசுவின் முன்னால் நிறுத்துகிறார்கள். எது சரி? எது தவறு? என்பதை அறிய வேண்டும் என்பதற்காக அல்ல. மாறாக, இயேசுவை எப்படி சிக்க வைக்கலாம்? என்பதற்காக. இது அங்கிருக்கும் அனைவருக்கும் தெரியும். இந்த பிரச்சனை சற்று சிக்கலான பிரச்சனையும்...

கடவுளின் வல்லமை வெளிப்பட பொறுத்திருப்போம்

இறந்தவர்களுக்கு உயிர் கொடுத்தல் என்பது இயேசுவுக்குப் புதிதல்ல. ஏற்கெனவே தொழுகைக்கூடத்தலைவரின் மகளுக்கும், நயீன் நகர் கைம்பெண்ணின் மகனுக்கும் உயிர் கொடுத்திருக்கிறார். ஆனால், அந்த நிகழ்வுகளுக்கும், இலாசரை உயிர்ப்பிக்கும் நிகழ்வுகளுக்கும் பல வேறுபாடுகள் இருக்கிறது. இலாசர் நோயுற்றிருக்கிறார் என்பது இயேசுவுக்குத் தெரியவந்தாலும், அவர் அங்கு செல்வதற்கு தாமதிக்கிறார். இலாசர் இறந்து நான்கு நாட்கள் கழித்துதான் கல்லறைக்குச்செல்கிறார். ஏனென்றால், இயேசு கல்லறையைத்திறக்கச்சொன்னபோது, மார்த்தா அவரிடம், ‘ ஆண்டவரே, நான்கு நாள் ஆயிற்று. நாற்றம் அடிக்குமே’ என்கிறார். யூதர்களின் நம்பிக்கைப்படி, ஒரு மனிதனுடைய ஆவி தன்னுடைய உடலில் மீண்டும் நுழைவதற்காக, கல்லறையைச்சுற்றி, சுற்றி வருமாம். கல்லறை வாயில் அகற்றப்பட்டால் மீண்டும் அந்த உடலில் நுழைந்துவிட வாய்ப்பு தேடிக்கொண்டிருக்குமாம். நான்கு நாள்கள் ஆனபின், உடல் அழுகிவிடுவதால், தன்னுடைய உடலை அதற்கு அடையாளம் காணமுடியாமல், அங்கிருந்து சென்றுவிடுமாம். இதன் அடிப்படையில் தான் மார்த்தா இப்படிச்சொல்கிறார். இந்தப்புதுமையை நன்றாக ஆராய்ந்து பார்த்தால், நமது வாழ்வில் நடக்கக்கூடிய நிகழ்வுகள் கடவுளின் மகிமையை...