ஆண்டவரது உடன்படிக்கையைக் கடைப்பிடிப்போருக்கு பேரன்பு நிலைத்திருக்கும்
திருப்பாடல் 103: 13 – 14, 15 – 16, 17 – 18 பழைய ஏற்பாட்டிலே கடவுள் இஸ்ரயேல் மக்களோடு ஏழு உடன்படிக்கைகளைச் செய்துகொண்டார் என்று விவிலிய அறிஞர்கள் கருதுகிறார்கள். கடவுள் நமது முதல் பெற்றோரோடு செய்து கொண்டது முதல் உடன்படிக்கை. தொடக்கநூல் முதல் அதிகாரத்தில் கடவுள் மனிதர்களைப் படைத்து, இந்த உலகத்தை அவர்களது பராமரிப்பில் விட்டுவிடுகிறார். இரண்டாவதாக, நோவாவோடு கடவுள் உடன்படிக்கைச் செய்துகொள்கிறார். இனிமேல் இந்த மண்ணகத்தை நீரால் அழிக்க மாட்டேன் என்று உடன்படிக்கைச் செய்து கொள்கிறார். மூன்றாவதாக, ஆபிரகாமோடு கடவுள் உடன்படிக்கைச் செய்து கொள்கிறார். ஆபிரகாமுக்கு பல வாக்குறுதிகளைக் கடவுள் கொடுக்கிறார். ஆபிரகாம் வழியாக இஸ்ரயேல் மக்களுக்கும் அவா் வாக்குறுதிகளைக் கொடுக்கிறார். நான்காவதாக, அவர் இஸ்ரயேல் மக்களோடு செய்துகொண்ட உடன்படிக்கை ”பாலஸ்தீன அல்லது நில உடன்படிக்கை” என்று அழைக்கப்படுகிறது. இது இணைச்சட்டம் 30: 3 – 4 ல், தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. கடவுள் உலகின் அனைத்து மூலைகளிலும்...