Category: தேவ செய்தி

இயேசுவின் பணித் திட்ட அறிக்கை !

லூக்கா நற்செய்தியின் தொடக்கத்திலேயே நற்செய்தியாளர் தம் நூலின் இலக்கைத் தெளிவுபடுத்துகிறார். இயேசுவின் வாழ்விலும், பணியிலும் தாம் கேட்டறிந்த அனைத்தையும் கருத்தாய் ஆய்ந்து, ஒழுங்குபடுத்தி எழுதுவதாகக் கூறுகிறார் லுhக்கா. அவ்வாறு ஒழுங்குபடுத்தி எழுதிய இயேசுவின் பணிவாழ்வின் தொடக்கத்தைத்தான் இன்றைய செய்தியாக நாம் வாசிக்கிறோம். எசாயா இறைவாக்கினரின் இறைவாக்கை வாசிக்கும் இயேசு, அந்த இறைவாக்கு தம்மில் அன்று நிறைவேறிற்று என்று அறிவிக்கிறார். லுhக்காவைப் பொறுத்தவரை, இந்த நிகழ்ச்சி மிக முக்கியமானது. எனவேதான், இயேசுவின் பணித்தொடக்கமாக இதை முன்வைத்திருக்கிறார். தான் செய்யவிருக்கும் பணி எத்தகையது என்னும் இலக்குத் தெளிவு இயேசுவிடம் இருந்தது, அதை இயேசு அனைவருக்கும் அறிவித்தபின்னரே, செயல்படத் தொடங்கினார் என்று இந்நிகழ்ச்சியின் மூலம் அறியவருகிறோம். இயேசுவின் தலைசிறந்த தலைமைப் பண்புகளுள் ஒன்றாக இதை எடுத்துக்கொள்ளலாம். தான் செய்யவிருக்கும் பணி என்ன?, யாருக்கு? என்னும் தெளிவு அவரிடம் இருந்தது. நம்மிடம் இருக்கிறதா? மன்றாடுவோம்: நிறைவாழ்வு தரும் ஊற்றான இயேசுவே, உம்மைப் போற்றுகிறேன். உமது பணித்திட்ட அறிக்கை...

எக்காளம் முழங்கிடவே, உயரே ஏறுகின்றார் ஆண்டவர்

தியானப் பாடல் சிந்தனை : திருப்பாடல் 47: 1 – 3, 5 – 6, 7 – 8 இந்த திருப்பாடல் வெற்றி பெற்று மாட்சியுடன் அரியணையில் ஏறும் அரசரைப்பற்றிப் பாடக்கூடிய பாடலாக இருக்கிறது. நிச்சயம் இது மெசியாவின் வருகையில் நடக்கக்கூடிய நிகழ்வாகவே நாம் பார்க்கலாம். திருப்பாடல் ஆசிரியர் பின்னால் நடைபெற இருக்கிற நிகழ்வுகளை, முன்னரே கண்டுணர்ந்து எதிர்காலத்தில் நடைபெற இருக்கிறவற்றை ஆய்ந்து அறிந்து எழுதுகிறார். மெசியா இந்த உலகத்தை ஆள்வதுதான் தகுதியானதாக இருக்கும் என்பது ஆசிரியரின் கருத்து. அதற்காகத்தான் மக்கள் இத்தனை ஆண்டுகளாகக் காத்துக்கொண்டிருக்கிறார்கள். எனவே, அவர்கள் மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். மெசியா இஸ்ரயேல் மக்களுக்கு மட்டுமல்ல, இந்த உலகத்திற்கே அரசராக இருப்பார். இந்த உலகத்திற்கே அதிபதியாக இருப்பார். அந்த நாட்களில் நீதியும், நேர்மையும் அரசில் துலங்கும். மக்கள் அனைவரும் நிறைவுடன் வாழ்வர். அந்த நாளை நாம் நம்பிக்கையோடு எதிர்பார்த்திருப்போம் என்பதுதான், இங்கே வெளிப்படுத்தப்படக்கூடிய செய்தி....

உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்திப் பறைசாற்றுங்கள்

திருப்பாடல் 117: 1, 2 நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தன்னுடைய பணிவாழ்வைத் தொடங்கியபோது, அவரது தொடக்க முழக்கமாக அமைந்தது: ”மனம்மாறி நற்செய்தியை நம்புங்கள்” என்பதுதான். இன்றைய தியான வாக்கியமும், உலகமெல்லாம் சென்று, படைப்பிற்கு நற்செய்தியைப் பறைசாற்ற அழைப்புவிடுக்கிறது. நற்செய்தி என்றால் என்ன? இயேசு அறிவிக்க வந்த நற்செய்தி என்ன? லூக்கா 4: 18 ம் இறைவார்த்தையில் அந்த நற்செய்தியை இயேசு அறிவிக்கிறார். அதாவது, ஏழைகள், ஒடுக்கப்பட்டோர், தாழ்நிலையில் இருப்போர் அனைவரையும் கடவுள் அன்புசெய்கிறார். அவர்களும் கடவுளின் சாயலில் படைக்கப்பட்டவர்கள். அவர்களும் முழுமையாக அன்பு செய்யப்பட வேண்டும் என்பதுதான், இயேசுவின் நற்செய்தி. ஏன் இந்த நற்செய்தி உலகம் முழுவதிலும் அறிவிக்கப்பட வேண்டும்? இந்த உலக கண்ணோட்டத்தின்படி பார்க்கிறபோது, பல மக்கள் தாங்கள் தவறு செய்துவிட்டோம் என்பதனால், அவர்கள் வாழ்க்கை முழுவதுமாக ஒதுக்கிவைக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு இனி வேறு வாழ்வே இல்லை என்பது போன்ற தவறான பார்வைகள் கொடுக்கப்பட்டு, அவர்கள் மீண்டும், மீ்ண்டும் செய்த...

என் கடவுளே! உமது திருவுளம் நிறைவேற்ற வருகின்றேன்!

தியானப்பாடல் சிந்தனை : திருப்பாடல் 40: 6 – 7, 7 – 8, 9, 16 கடவுளுடைய திருவுளத்தை நிறைவேற்ற வருகிறேன் என்று திருப்பாடல் ஆசிரியர் எழுதுகிறார். கடவுளுடைய திருவுளம் என்ன? நாம் அவருக்கு பலி செலுத்த வேண்டும் என்பதா? அவருக்கு மகிமையையும், புகழ்ச்சியையும் செலுத்த வேண்டும் என்பதா? எது கடவுளுடைய திருவுளம்? கடவுள் ஒருநாளும் பலியை விரும்பியது கிடையாது. இரக்கத்தையே அவர் விரும்புகிறார். தனக்கு ஆபரணங்கள் வேண்டும். தங்க வைடூரியங்கள் வேண்டும், அதிகமான இறைச்சி வேண்டும் என்று கடவுள் விரும்புவது கிடையாது. தங்க நகைகள் கடவுளின் வெறும் படைப்பு. அதற்கு மனிதர்களாகிய நாம் தான், மதிப்பு கொடுக்கிறோம். விலைமதிப்பில்லாததைப் போல அவற்றை, நாம் வைத்திருக்கிறோம். ஆனால், கடவுளுக்கு அவை மதிப்பில்லாதது. ஆக, கடவுள் எதிர்பார்ப்பது இதுபோன்ற மதிப்பில்லாத பொருட்களை அல்ல. கடவுள் நம்மிடமிருந்து எதிர்பார்ப்பது ஏழைகளுக்கு இரங்க வேண்டும் என்பதைத்தான். அவர்களுக்கு நாம் இரக்க காட்ட வேண்டும் என்பதைத்தான்....

உம் எதிரிகளிடையே ஆட்சி செலுத்தும்

தியானப்பாடல் சிந்தனை : திருப்பாடல் 110: 1 – 2, 3, 4 இந்த திருப்பாடலில் ”ஆண்டவர், என் தலைவரிடம்..” என்ற வரிகள் யாரைச் சுட்டிக்காட்டுகிறது? என்ற கேள்வி இயல்பாகவே நமக்குள்ளாக எழுகிறது. இதற்கு பலதரப்பட்ட விளக்கங்கள தரப்பட்டாலும், மெசியா தான் இங்கே குறிப்பிடப்படுகிறார் என்று சொல்வது, சற்று பொருத்தமானதாக இருக்கிறது. ஏனென்றால், வலது பக்கம் என்று சொல்லப்படுவது, அரியணையின் முக்கியத்துவத்தை, வாரிசைக் குறிப்பிடுகிற சொல்லாக நாம் பார்க்கலாம். ஆக, மெசியா வருகிறபோது, இந்த உலகத்தில் ஏற்படும் மாற்றங்களை இந்த நிகழ்ச்சி வெளிப்படுத்துகிறது. ஆண்டவருடைய துணைகொண்டு, மெசியா இந்த உலகத்தை வழிநடத்துவார். அவர் வழியாக இந்த உலகத்தில் நிகழக்கூடிய தீமைகளை அழித்து ஒழிப்பார். எதிரிகளிடையே அவர் ஆட்சிசெய்வார். அந்த நாட்களில் மக்கள் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். இந்த முன்னறிவிப்பு இன்றைய நற்செய்தியிலும், கடந்த வாரத்தில் நாம் வாசிக்கக்கேட்ட நற்செய்தியிலும் நடப்பதை நாம் பார்க்கலாம். இயேசு தான் வரவிருந்த மெசியா என்பதற்கான பல்வேறு நிகழ்வுகள்...