Category: தேவ செய்தி

நிறைவை நிறைவானவரிடம் கேட்க, தேட, தட்ட

மத் 7 : 7- 12 இத்தவக்காலத்தில் செபத்தின் முக்கியத்துவத்தையும், செபிப்பதின் விளைவுகளையும், நாம் எப்படி செபிக்க வேண்டும் என்பதையும் பல கோணங்களில் பார்க்கிறோம். இன்றைய நற்செய்தியும் செபத்தின் உள்ளார்ந்த அர்த்தத்தையும், ஆன்மீகத்தையும் நமக்கு எடுத்துரைக்கிறது. ‘கேளுங்கள் உங்களுக்குக் கொடுக்கப்படும்’ என்றவுடன் நாம் நமது தேவைகளை மளிகைக்கடை பட்டியல் போல எடுத்துவிட ஆரம்பித்து விடுகிறோம். அது பல நேரங்களில் எங்கு? எப்படி? தொடங்குகிறது என்றே தெரியாது. குறிப்பாக இன்று பலபேர் அருட்கொடை இயக்கத்தில் செபிப்பது போலவே செபிப்பது செபம் என்று நினைத்துக் கொள்கின்றனர். ஆனால் ஆண்டவர் நாம் கேட்கின்ற பொருளாதாரக் காரியங்களை விரும்பிக் கேட்பாரோ என்றால் அது கேள்விக் குறியே! காரணம் அவர் செல்வந்தர்களின் மனநிலையை அடியோடு வெறுக்கிறார். மிகுதியான உடைமைகளை வைத்திருப்பவர்களை அடித்து விரட்டுகிறார். இன்னுமொரு இடத்தில் “நீங்கள் இறைவனிடம் வேண்டும் பொழுது, நீங்கள் உள்ளறைக்குச் சென்று கதவை அடைத்துக் கொண்டு, மறைவாய் உள்ள உங்கள் தந்தையை நோக்கி வேண்டுங்கள்....

அவர் ஒரு ‘மாதிரி’

மத் 6 : 7 -15 அவர் ஒரு ‘மாதிரி’ தவக்கால ஆன்மீக முயற்சிகளில் (ஈதல், செபித்தல், நோன்பிருத்தல்) ஒன்றான செபித்தல் பற்றி இன்றைய நற்செய்தி விளக்குகிறது. ஆண்டவர் இயேசுவே நம் அனைவருக்கும் அனைத்திருக்குமான மாதிரியாக இருக்கின்றார் என்பதை அவர் கற்றுக் கொடுத்த செபத்தில் இருந்தும் நம்மால் கற்றுக் கொள்ள முடிகிறது. சில பிற சபையினர் இச்செபத்தைத் தினமும் எவ்வேளையும் சொல்லும் நம் தாய் திருஅவையினரைப் பார்த்து கேளி செய்வதுண்டு, ஏன் இவர்கள் திரும்ப திரும்ப சொல்கிறார்களென்று? இவர்கள் கேளியையும் கிண்டலையும் பார்த்து நாம் பின் வாங்கிட முடியாது. இவர்கள் இயேசுவையும் இறைவார்த்தையையும் கிண்டல் செய்கிறார்கள் என்பதே உண்மை. இயேசு கற்பித்த இச்செபமே தலை சிறந்த செபமாக இன்று உலகின் அதிக மொழிகளில் சொல்லப்படுகின்ற ஓர் முதன்மைச் செபமாகும். இதன் முதல்பகுதி, இறைவனின் இறையாட்சியை அதாவது இயேசு கண்ட கனவினை நோக்கி, இந்த உலகு உருண்டு நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதை எடுத்துரைக்கின்றது....

தூக்கியெறியப்பட்ட இடத்தில் தூக்கி நிறுத்துவார்

இ.ச.26:4-10, உரோ. 10:8-13, லூக். 4:1-13 தவக்காலத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமை வழிபாட்டு வாசகங்கள், சோதனைகளை எப்படி சாதனையாக்குவது என்பது பற்றி நமக்கு விளக்குகிறது. ஆண்டவர் இயேசு சோதிக்கப்பட அலகையினால் பாலைவனத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்பதை இன்றைய நற்செய்தி விளக்குகிறது. நம்மை மீட்பதற்காக மனிதனாகப் பிறந்த மனுமகன் மனித இயல்பினால் சோதனைகளை எதிர்கொள்கிறார். அவருடைய திருமுழுக்கு நேர் மறையாகத் தன் பணியை நிறைவேற்ற தயாரிக்கிறது. ஆனால் இந்தப் பாலைவன அனுபவமோ அவரை மிகவும் கடினமான முறையில் அவரைத் தயாரிக்கின்றது. வரலாற்றுப் பக்கங்களைத் தூசித்தட்டிப் பார்த்தோமென்றால், போராட்டத்திற்குப் பிறகுதான் சுதந்திரம் அல்லது விடுதலை என்பதை அறிய முடிகிறது. அவருடைய இந்தப் பாலைவனப் போராட்டம் தொடர்ந்து கல்வாரி சிலுவைப் பாதையின் வழியாக விடுதலை வாழ்விற்கு களம் அமைத்துக் கொடுத்தது. சோதனை என்பது அனைவருக்குமானது. சோதனை வருவதை நம்மால் தவிர்க்க இயலாது. தினமும் இந்தச் சோதனைகளைக் கடந்தால் தான் நம்மால் சாதிக்க முடியும். இதில் நன்றாகக்...

நெருக்கமாகப் பின்பற்ற

(லூக்கா 5 : 27-32) இயேசு லேவியைத் தன்னைப் பின்செல்லுமாறு அழைத்தது இன்றைய நற்செய்தியில் இடம்பெறுகின்றது. இயேசு பாவிகளுக்கு முன்னுரிமை கொடுக்கிறார், காணாமல் போன ஆட்டினைத் தேடி வருகிறார் என்பதை மட்டுமன்று, பாவியெனக் கருதப்பட்ட லேவி எவ்வாறு இயேசுவைப் பின்பற்றினார் என்பதே இத்தவக்காலத் தொடக்கத்திலிருக்கும் நமக்கான பாடம். முதல் சீடர்களை அழைத்த போதும் லேவியைப் போன்று, “அனைத்தையும் விட்டுவிட்டு அவரைப் பின்தொடர்ந்தார்கள்” என்பதை அறிந்து கொள்ள முடியும். லேவி இஸ்ரயேல் மக்களிடமிருந்து அநியாயமாக வரிவசூலித்து உரோமை அரசுக்கு அளித்ததால் பாவியெனக் கருதப்பட்டார். மொத்தத்தில் அனைவரும் அவரை ஒதுக்கி வைத்தனர். அவரை எதிரியாகக் கூட கருதக் கூடாது என்பதில் தெளிவாயிருந்து அவரைப் பாவி என்று முத்திரை குத்தினர். இன்றும் நம்மில் சிலரை ஆன்டி-இந்தியன்;, சமூக விரோதிகள் என்று முத்திரை குத்துவது யூதர்களின் மனநிலையே. இப்படி அனைவராலும் வெறுத்து ஒதுக்கப்படுபவரையே ஆண்டவர் அழைக்கின்றார். அவர்களுடைய வீட்டிற்குச் சென்று விருந்து உண்ணுகின்றார். இதன் காரணம் லேவி...

நோன்புடன் காத்திருப்போம்

மத்தேயு – 9 : 14-15 இத்தவக்காலம் நமக்குத் தரப்பட்டதன் நோக்கமே நாம் நம் பாவங்களிலிருந்து மனந்திரும்ப வேண்டும் என்பதற்காகவே. இயேசுவின் பாடுகளையும் அவரது இறப்பையும் நாம் நினைவிற்குக் கொண்டு வரவேண்டிய காலம். அவரின் பாடுகளோடு நம்மை ஐக்கியப்படுத்துகின்ற காலம். அவரோடு ஐக்கியமாக இன்னும் கூடுதல் ஆற்றல் தேவைப்படுகின்றது. இவ்வாற்றல் நோன்பிருத்தலில் கிடைக்கிறது. ஒருசந்தியும், நோன்பும் சமயச்சடங்குகளின் ஓர் அங்கமாகவே யூதர்களிடம் இருந்தது. அவர்களின் நோன்புகள் வெறும் வெளிச்சடங்குகளாயின. சிலர் பிறரிடம் புகழையும் பெயரையும் பெற வேண்டும் என்பதற்காகவே நோன்பிருந்தனர். இதனைச் சாடும் விதமாக இன்றைய நற்செய்தியில் ஆண்டவரின் வார்த்தைகள் அமைந்திருக்கின்றது. நோன்பிருக்க அடிப்படையில் ஒரு காரணமும், ஒரு காலமும் தேவைப்படுகிறது. இதனை இன்றைய வாசகத்தில் இயேசு இன்னும் தெளிவாகக் குறிப்பிடுகின்றார். இன்றைய நற்செய்தியில் அவர் இவ்வாறு கூறுவதன் மூலம் அவர் பழைய உடன்படிக்கைக்கு எதிராகச் செல்லவில்லை. மாறாக அதனை இன்னும் அர்த்தமுள்ளதாக்கி நிறைவு செய்கிறார். அவரே புதிய ஏற்பாடாகவும், புதிய...