Category: Daily Manna

நன்மை செய்ய சூளுரைப்போம்

தீயது செய்வது மட்டும் தவறல்ல, நல்லதைச் செய்யாமலிருப்பதும் தவறு தான். இன்றைய நற்செய்தியில் இயேசு, திருந்த மறுத்த நகரங்களைப்பார்த்து, மனமுடைந்து அவர்களின் அழிவை நினைத்து வேதனை கொள்கிறார். கடவுள் நம் அழிவில் மகிழ்ச்சி கொள்பவரல்ல. வேதனையுறுகிறவர். இஸ்ரயேல் மக்கள் செய்த தவறுக்குத்தான், அவர்கள் பலவேளைகளில் தண்டிக்கப்பட்டார்கள். ஆனாலும், அவர்கள் தண்டிக்கப்பட்டபோது, அவர்களை விட, அவர்களுக்காக வருந்தியவர், கடவுளைத்தவிர வேறு யாராகவும் இருக்க முடியாது. அவர்கள் பல தவறுகளைச் செய்தார்கள். அதிலே ஒன்று, நன்மை செய்யாமலிந்தது. அதுவும் தவறுதான். நாம் தீயது செய்தால் தான், தவறு என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம். நான் ஒன்றும் செய்யவில்லை. என்று, நன்மை செய்யாமலிருக்கும் ஒருவர் தப்பித்துக்கொள்ள முடியாது. அதுவும் தவறுதான். கடவுளின் தண்டனையைப் பெற்றுத்தரக்கூடிய அளவுக்கு, அந்த தவறு மிகப்பெரியது. எனவேதான், இயேசுவின் வாழ்வில் நாம் பார்க்கிறபோது, இயேசு சென்ற இடங்களில் எல்லாம், நன்மைகளைச் செய்தார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அந்த அளவுக்கு, இயேசு நன்மை செய்வதை, ஒரு அளவுகோலாக...

உடனிருப்பும், ஒத்துழைப்பும்

இயேசுவின் போதனைகளை நாம் கேட்கிறபோது, நம்மால் அவரைப் பின்தொடர முடியுமா? அவருடைய போதனையில் நிலைத்து நிற்க முடியுமா? என்கிற சிந்தனைகள் நமது உள்ளத்தில் ஓட ஆரம்பிக்கிறது. நிச்சயம் இயேசுவின் போதனைகளை நமது வாழ்வில் ஏற்று, வாழ முயற்சிப்பது சவாலான ஒன்றுதான். ஆனாலும், நாம் அனைவரும் அப்படிப்பட்ட வாழ்வை வாழ வேண்டும், கடவுளுக்கு ஏற்புடையதாக நமது வாழ்வு அமைய வேண்டும் என்று நற்செய்தி நமக்கு கற்றுக்கொடுக்கிறது. நாம் போதனைகளை வாழ முயற்சி எடுத்து, அதில் நம்மால் வாழ முடியாவிட்டாலும், குறைந்தபட்சம், கிறிஸ்துவின் போதனைகளை வாழ முயற்சி எடுக்கும் அனைவருக்கும் நமது உடனிருப்பையும், ஒத்துழைப்பையும் முழுமையாகக் கொடுக்க வேண்டும் என்பது நமது விருப்பமாக இருக்கிறது. ஒரு ஓட்டப்பந்தயத்தில் பல வீரர்கள் ஓடுகிறார்கள். ஓடக்கூடிய அனைத்து வீரர்களையும் மக்கள் கைதட்டி உற்சாகப்படுத்துகிறார்கள். அவர்கள் வெற்றி பெறுவதோ, தோல்வியடைவதோ, அவர்களுக்கு கிடைக்கும் பாராட்டிற்கு தடையாக இருப்பது இல்லை. அதேபோலத்தான், கடவுளின் வார்த்தையை வாழ முயற்சி எடுக்கும் அனைவருக்கும்...

விலகிச்சென்றார்…

இன்றைய நற்செய்தியில் (லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 25-37′) இயேசு அருமையான ஓர் உவமை வாயிலாக, வாழ்வின் முக்கியமான செய்தியைத்தருகிறார். நல்ல சமாரியன் உவமையில் வரக்கூடிய குருவும், லேவியரும் “விலகிச்சென்றார்கள்” என்று சொல்லப்பட்டிருக்கிறது. இரண்டுபேருமே மறுபக்கமாய் விலகிச்செல்கிறார்கள். எதற்காக விலகிச்சென்றார்கள்? ஒன்று தீட்டுப்பட்டுவிடும் என்பதற்காக. இரண்டாவது, தங்களுக்கு இருக்கக்கூடிய பணியைச் செய்ய வேண்டும் என்பதற்காக. இரண்டுமே தவறுதான். இரண்டு பேருமே, கடவுளின் இறையருளை நிறைவாக, உடனடியாகப் பெற்றுத்தரும் வாய்ப்பை இழந்து சென்று விட்டார்கள் என்பதுதான் உண்மை. விலகிச்செல்வது தவறல்ல. தீய நண்பர்களிடமிருந்து விலகியிருக்க வேண்டும். தவறான பழக்கங்களிலிருந்து விலகியிருக்க வேண்டும். கெட்ட எண்ணங்களிலிருந்து, கெட்ட வார்த்தைகளிலிருந்து விலகியிருக்க வேண்டும். ஆனால், இவற்றிலிருந்து நாம் விலகியிருப்பதில்லை. எவற்றிலிருந்து நாம் விலகியிருக்க வேண்டுமோ, அவற்றிலிருந்து நாம் விலகியிருப்பதில்லை. நல்ல செயல்களைச் செய்வதிலிருந்து, நல்லவற்றைப் பார்ப்பதிலிருந்து, நல்லவற்றைக் கேட்பதிலிருந்து நாம் விலகியிருக்கக்கூடாது. அவற்றோடு இருக்க வேண்டும். ஆனால், அவற்றிலிருந்துதான் நாம் விலகியிருக்கிறோம். அவற்றிலிருந்து நாம் விலகியிருக்கிறபோது,...

சீடத்துவ வாழ்வு

கி.பி. 70 ம் ஆண்டில் யெருசலேம் தரைமட்டமாக்கப்பட்டது. கடவுளின் நகர் தரைமட்டமாக்கப்பட்டபோது, யூதர்கள் தங்கள் உயிரைக்காப்பாற்றிக் கொள்வதற்காக, உலகின் பல மூலைகளுக்கும் தப்பி ஓடினர். அவர்களில் பெரும்பாலானோர், தங்களின் இத்தகைய நிலையை எண்ணி, எண்ணி அழுது புலம்பினர். இத்தகைய சமயத்தில், யூதப்போதகர்களின் போதனை ‘ஆண்டவரின் இல்லமே அழிக்கப்பட்டபிறகு, நாம் எதை இழந்தால் என்ன?’ என்பதுதான். இந்தப்பிண்ணனியில் இயேசுவின் வார்த்தைகள் இரண்டு சிந்தனைகளைத்தருகிறது. 1. இயேசுவின் எச்சரிக்கை. இயேசுவைப்பின்பற்ற விரும்புகிறவர்கள், இயேசுவோடு இணைந்து சிலுவையைத்தூக்குவதற்கு தயாராக இருக்க வேண்டும். வெற்றியின் சுவையை சுவைக்க விரும்புகிறவர்கள் துன்பத்தைக்கண்டு தளரக்கூடாது, பயப்படக்கூடாது, உதறித்தள்ளக்கூடாது. துணிந்து தாங்க வேண்டும். 2. இயேசுவோடு சிலுவையைத் தூக்குவது துன்பம் அல்ல, மாறாக, இயேசுவின் பணியை நாம் பகிர்ந்து கொள்வது. கடவுளின் மகனாகிய இயேசுவின் பணியைப் பகிர்ந்து கொள்வது நமக்கு எத்தகைய மாட்சியை நமக்குத்தர வேண்டும். அதற்கு நாம் கொடுத்து வைத்திருக்கிறவர்களாக இருக்க வேண்டும். இயேசுவின் சிலுவையிலே பங்கெடுப்பது சாபம் அல்ல,...

தெளிவான இலக்கு

இயேசு தனது சீடர்களை கடவுளின் பணிக்காக அனுப்பும்போது, பிற இனத்தவரின் பகுதிக்குச் செல்ல வேண்டாம் என்று சொல்கிறார். இயேசு கடவுளின் மகன். இந்த உலகத்தையே படைத்து பராமரிக்கிறவர். இந்த உலகத்தில் உள்ள அனைவருமே அவரின் பிள்ளைகள். அப்படியிருக்க, இயேசு இப்படிப்பட்ட ஒரு குறுகிய எண்ணத்தை பறைசாற்றும் அறிவுரையைக்கூற வேண்டுமா? இயேசு குறுகிய மனம் கொண்டவரா? இயேசு சிதறிப்போன மக்களுக்காக மட்டும்தான் வந்தாரா? புறவினத்து மக்கள் கடவுளின் பிள்ளைகள் இல்லையா? என்ற கேள்விகள் நம் மனதில் நிச்சயமாக எழும். தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள்: ”ஆழக்கால் வைத்தாலும், அகலக்கால் வைக்காதே”. இயேசுவின் இலக்கு இந்த உலகமெங்கிலும் நற்செய்தி அறிவிக்கப்பட வேண்டுமென்பது. அந்த திட்டத்தை செயல்படுத்த பல முயற்சிகளையும், முன்னெடுப்புகளையும் மேற்கொள்கிறார். அதனுடைய ஒரு செயல்முறை திட்ட அடிப்படையில்தான், தனது எல்லையை சிறிது, சிறிதாக, படிப்படியாக விரிவுபடுத்துகிறார். யூத மனநிலையில் இருக்கிற தன்னுடைய சீடர்களையும் மெதுவாக பக்குவப்படுத்தும் பணியை இயேசு செய்தாக வேண்டும். ஒரேநாளில்...