Category: Daily Manna

கடவுளின் கொடை

திருச்சபை என்றால் என்ன? திருச்சபையில் பேதுருவின் பணி என்ன? பேதுருவின் முக்கியத்துவம் என்ன? என்ற கேள்விகளுக்கெல்லாம் பதிலாக வருவதுதான் இன்றைய நற்செய்தி. எபேசியர் 2: 20 ல் பார்க்கிறோம்: ”திருத்தூதர்கள், இறைவாக்கினர்கள் ஆகியோர்களை அடித்தளமாகவும், கிறிஸ்து இயேசுவையே மூலைக்கல்லாகவும் கொண்டு அமைக்கப்பட்ட கட்டடமாய் இருக்கிறீர்கள்”. இங்கே திருச்சபையின் மூலைக்கல்லாக இயேசு சுட்டிக்காட்டப்படுகிறார். அவரில்லையென்றால், திருச்சபை உறுதியாக நிற்க முடியாது, என்று நாம் பொருள்படுத்தலாம். 1பேதுரு 2: 5 ”நீங்கள் உயிருள்ள கற்களாயிருந்து, ஆவிக்குரிய இல்லமாகக் கட்டி எழுப்பப்படுவீர்களாக!” இங்கே ஒவ்வொரு கிறிஸ்தவர்களும், திருச்சபையின் கற்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். கிறிஸ்தவர்கள் இல்லையென்றால், திருச்சபை இல்லை. எனவே தான், சவுல் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தியபோது, தானே துன்புறுத்தப்படுவதாக இயேசு அவரிடம் சொல்கிறார். 1கொரிந்தியர் 3: 11 ல் பார்க்கிறோம், ”ஏற்கெனவே அடித்தளம் இட்டாயிற்று. இவ்வடித்தளம் இயேசு கிறிஸ்துவே. வேறோர் அடித்தளத்தை இட எவராலும் முடியாது”. மேற்சொன்ன அனைத்துமே, இயேசுதான் திருச்சபையின் ஆணி வேர் என்பதை வலியுறுத்திக்கூறுகிறது. அதாவது,...

ஏழைகளுக்குச் செய்யும் உதவி

கடவுள் நமக்கு தந்தையாக இருக்கிறார். நாம் அவரது பிள்ளைகளாக இருக்கிறோம். எந்த ஒரு தந்தையும், தனது பிள்ளை தனக்கு மதிப்பையும், மரியாதையையும் மற்றவர்கள் மத்தியில் கிடைக்கக்கூடிய அளவுக்கு, தனது பிள்ளை நடக்க வேண்டும், என்றுதான் நினைப்பார். தன்னுடைய பிள்ளையினால், தனக்கு மதிப்பும், புகழும் வரும்போது, அதனுடைய பூரிப்பில், அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைவார். நமது தந்தையாக இருக்கிற கடவுள் மகிழ்ச்சியடைய நாம் என்ன செய்ய வேண்டும்? என்பதைத்தான், இன்றைய நற்செய்தி நமக்குக் கற்றுத்தருகிறது. இறைத்தந்தையின் பிள்ளைகளாக, அவரைப் பெருமைப்படுத்த நாம் செய்ய வேண்டிய காரியங்கள் கடினமானது அல்ல, மாறாக, மிக எளிதான காரியங்கள் தான். சின்னஞ்சிறிய சகோதர, சகோதரிகள் என்று இயேசுவால் அழைக்கப்படுகிற, ஏழைகள், எளியவர்கள், தேவையில் இருக்கிறவர்களுக்கு நம்மால் இயன்ற உதவியை, கைம்மாறு கருதாமல் செய்வதுதான், இறைத்தந்தைக்கு மகிழ்ச்சி தரக்கூடிய செயல்கள். அதைச்செய்வதை, இந்த நற்செய்தி வாசகம் வலியுறுத்திக் கூறுகிறது. வானகத்தந்தையை மகிழ்ச்சிப்படுத்த, நம்மால் முடியாத, மிகப்பெரிய சாதனைகளைச் செய்ய...

சோதனைகள் வெல்வோம் சாதனைகள் படைப்போம்

மத்தேயு நற்செய்தியாளர் தன்னுடைய நற்செய்தியை யூத மக்களுக்கு எழுதுகிறார். யூதர்களுக்கு மோசே மிகப்பெரிய இறைவாக்கினர். மத்தேயு நற்செய்தியாளர் இயேசுவை ‘புதிய மோசேயாக’ அறிமுகப்படுத்துகிறார். அதாவது திருச்சட்டத்தை நிறைவுசெய்ய வந்த புதிய மோசே தான் இயேசுகிறிஸ்து என்கிற கருத்தியலுக்கு மத்தேயு முக்கியத்துவம் தருகிறார். எனவே தான் மோசேயின் வாழ்வோடு நடந்த நிகழ்வுகளை இயேசுவோடு ஒப்பீடு செய்கிறார். மோசே பிறந்தபொழுது குழந்தையைக்கொல்வதற்கு பல்வேறு சூழ்ச்சிகள் செய்யப்பட்டது போல, இயேசுவின் பிறப்பின்போது நடந்த நிகழ்ச்சிகளையும் சூழ்ச்சிகளையும் விவரிக்கிறார். மோசே இஸ்ரயேல் மக்களை பாலும், தேனும் பொழியும் நாட்டிற்கு வழிநடத்தியதுபோல, புதிய மோசே இயேசுகிறிஸ்துவும் பாவ இருளில் இருக்கிற மக்களை, ஒளிவாழ்வுக்கு அழைத்துச்செல்வதை படிப்படியாக விவரிக்கிறார். அதனுடைய முக்கியமான பகுதிதான் இயேசு அலகையினால் சோதிக்கப்படுகிற நிகழ்ச்சி. சோதனை என்பது எல்லோருடைய வாழ்விலும் நடக்கின்ற ஒன்று. அதிலும் குறிப்பாக, நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு, கடவுளின் இறையாட்சி இந்த மண்ணில் வர உழைக்கிற ஒவ்வொவருடைய வாழ்விலும் சோதனைகள்...

பெற்ற மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்வோம்

பாலஸ்தீனப்பகுதியில் வாழ்ந்த மக்களால் பெரிதும் வெறுக்கப்பட்டவர்கள் வரிதண்டுபவர்கள். காரணம் ஏழை, எளிய மக்களை சுரண்டி அதிகச்சுமைகளை அவர்கள் மீது இந்த வரிதண்டுபவர்கள் திணித்ததால் தான். பாலஸ்தீனம் இயேசு வாழ்ந்த காலத்தில் உரோமையர்களுக்கு அடிமைகளாக இருந்தது. இப்போது நம்முடைய பழக்கத்தில் உள்ள குத்தகை முறை தான், உரோமையர்களின் காலத்திலும் இருந்தது. அதாவது, குறிப்பிட்ட ஒரு மகாணத்திற்கு அங்குள்ள மக்கள்தொகை அடிப்படையில், இவ்வளவு குத்தகைப்பணம் என்ற அளவில் ஏலம் விடப்பட்டது. யார் அதிக ஏலத்திற்கு எடுக்கிறார்களோ, அவர்கள் அந்தத்தொகையை செலுத்திவிட்டு, அந்த மகாணத்தில் வரிவசூலிக்கிற உரிமையைப்பெற்றுக்கொள்வார்கள். இந்த வரிவசூலிக்கிற உரிமையைப்பெற்ற ஒப்பந்தக்காரர்கள் சில வேலையாட்களை பணியமர்த்தி, மக்களிடத்தில் வரிவசூலித்து பணத்தைப்பெற்று வந்தனர். இதில் தான் நிறைய முறைகேடுகள் நடந்து வந்தன. அவர்கள் மனம்போல் வரிகளை மக்கள் மீது திணித்தனர். முறையான, நியாயமான, ஒழுங்கான வரிவசூலிக்காமல் தங்கள் சுயஇலாபத்திற்காக மக்களை சுரண்டிப்பிழைக்கிறப் பணியை வரிதண்டுபவர்கள் செய்து வந்தனர். எனவேதான், மக்கள் மத்தியில் அவர்களைப்பற்றி வெறுப்பு மேலோங்கியிருந்தது....

இன்பமும், துன்பமும்

துன்பமும் இன்பமும் கலந்தது தான் வாழ்க்கை. இந்த உண்மையை அறிந்து, ஏற்று வாழ்ந்தால் வாழ்க்கை எப்போதும் மகிழ்ச்சியே. இன்பம் வரும்போது மகிழ்வதும், துன்பம் வரும்போது வாழ்வை வெறுப்பதும், வாழ்வைப்பற்றிய சரியான பார்வை அல்ல. இன்பமோ, துன்பமோ வாழ்வில் எப்போதும் நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். இந்த சிந்தனை தான், இன்றைய நற்செய்தி வாயிலாக நமக்குத்தரப்படுகிறது. வாழ்க்கை என்பது சுழலும் சக்கரம். எப்போதும் ஒரே போல இருக்காது. யோவான் சிறையில் இருக்கிறார். அவரின் சீடர்களுக்கு இப்போது துன்பமான நேரம். ஆனால், இந்த துன்பமும் நிரந்தரமல்ல. காலம் மாறும். இந்த துன்பமும் நீங்கும். அதேபோல இயேசுவின் சீடர்களுக்கு இது மகிழ்ச்சியான காலம். காரணம், இயேசு அவர்களோடு இருக்கிறார். அவர்கள் துன்பத்தை சந்திக்கும் காலம் வரும். துன்பம் வரும் என்பதற்காக, இப்போதுள்ள இன்பமான நேரத்தை கவலையில் மூழ்கடிக்கக்கூடாது. மகிழ்ச்சியான நேரத்தில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். துன்பம் என்பது நமக்கு வாழ்வில் பல பாடங்களைக் கற்றுத்தரக்கூடியது. துன்பத்தை...