Category: Daily Manna

“நான் ஆண்டவரைக் கண்டேன்”

இது பலருக்கு இயற்கை. ஒன்றை ஒருவரிடம் சொல்லச் சொன்னால், சொன்ன செய்தியை மறந்துவிடுவர்.தன்னுடைய அனுபவத்தை விலாவாரியாக விவரித்த பின், புறப்படுவதற்கு முன், ஐயோ ஒன்றை மறந்துவிட்டேனே, இதைச் சொல்லச் சொன்னார் என்று விஷயத்தைச் சொல்லுவார்கள். அவர் சொன்னதை விட தான் அனுபவித்தது, பார்த்தது, கேட்டது, ருசித்தது, ரசித்தது அவ்வளவு ஆழமான அழுத்தத்தையும் தாக்கத்தையும் அது ஏற்படுத்தியிருக்கும். உயிர்த்த இயேசு மரியாவிடம் சீடர்களுக்குச் சொல்லச் சொன்ன செய்தி, “என் தந்தையும் உங்கள் தந்தையும் என் கடவுளுமானவரிடம் செல்லவிருக்கிறேன்” (யோவா20:17)என்பது. ஆனால் மரியா சொன்னதோ முதன் முதலில் “நான் ஆண்டவரைக் கண்டேன்” என்பது. அதன் பின்னரே உயிர்த்த இயேசு சொன்ன செய்தியைச் சொல்கிறார். மகதலா மரியா இவ்வாறு செய்ததன்மூலம் தானும் இயேசுவின் சீடன் என்பதை உறுதிசெய்கிறார். பவுலடியார், தான் ஒரு சீடர், திருத்தூதர் என்பதற்கு ஆணித்தரமான சான்றாக, ‘நானும் உயிர்த்த இயேசுவைக் கண்டேன்’ என்பதையே சான்றாக்குகிறார்.(வாசிக்க 1 கொரி 15:8) ஆகவே தான் ஆண்டவரைக்...

உண்மையான தேடல்

மறைபொருள்(Mystery) என்கிற வார்த்தையின் பொருள் இங்கே கவனிக்கப்படத்தக்க ஒன்று. மறைபொருள் என்கிற வார்த்தையின் பொதுவான பொருள்: புரிந்து கொள்ள முடியாதது, புரிந்து கொள்வதற்கு வெகு கடினமானது. ஆனால், புதிய ஏற்பாட்டில் “மறைபொருள்“ என்கிற வார்த்தை பயன்படுத்தப்படுகின்ற அர்த்தம் சற்று வேறுபாடானது. மறைபொருள் என்பது குறிப்பிட்ட சிலருக்கு புரிந்து கொள்ளக்கூடியதும், சிலருக்கு புரிந்து கொள்ள இயலாததுமானதாகும். இந்த அர்த்தத்தில்தான் இங்கே பயன்படுத்தப்படுகிறது. யாருக்கு புரிந்து கொள்ள முடியும்? யாருக்கு புரிந்து கொள்ள முடியாது? தேடல் உள்ளவர்களுக்கு புரிந்து கொள்ள முடியும். தேடல் இல்லாதவர்களுக்கு புரிந்து கொள்ள முடியாது. வாழ்வு என்பது ஒரு தேடல். ஒவ்வொரு நிமிடமும் நாம் தேடிக்கொண்டே இருக்கிறோம். தேடிக்கொண்டே இருக்க வேண்டும். ஆனால், எல்லாரும் இந்த தேடலில் ஈடுபடுகிறார்களா? என்றால் அது மிகப்பெரிய கேள்விக்குறியே. இறையாட்சியைப்பற்றிய தேடல் உள்ளவர்களுக்கு இயேசு சொல்வதை நிச்சயம் புரிந்து கொள்ள முடியும். இறையாட்சியைப்பற்றிய கவலை இல்லாதவர்களுக்கு அதைப்பற்றிய புரிதல் நிச்சயம் இருக்க முடியாது. இயேசுவின்...

பலன் தரும் வாழ்வு

வாழ்வின் வெற்றிக்கு எது சரியான வழி? என்பதற்கான உதாரணம் தான் இன்றைய நற்செய்தி வாசகம். விதைப்பவர் நிலத்தில் அறுபது மடங்கு மற்றும் நூறு மடங்கு பலன் கொடுக்கும் நிலத்தைப் பார்ப்போம். அங்கே விழுந்த விதைகளை, அந்த நிலமானது தனக்குள்ளாக ஏற்றுக்கொள்கிறது. தனது முழு ஆற்றலையும், சக்தியையும், அந்த விதை வளர்வதற்கு கொடுக்கிறது. எப்படியும் அந்த விதை, அதற்கான பலனைக் கொடுக்க வேண்டும் என்று தன்னையே அந்த நிலம் தியாகமாகக் கொடுக்கிறது. விதை விதைத்து பலன் தருகிறபோது, அந்த நிலத்தை யாரும் கண்டுகொள்வதில்லை. அறுவடையிலும், அதன் மகிழ்ச்சியிலும் தான், முழுமையான கவனம் கொண்டிருப்பார்கள். ஆனால், அதனைப்பற்றி அந்த விதை கவலைப்படாமல், தாழ்ச்சியோடு இருக்கிறது. நமது உள்ளம் அப்படிப்பட்ட அந்த நிலமாக இருக்க வேண்டும். பல நல்ல சிந்தனைகள் நமக்குள்ளாக விதைக்கப்படுகிறது. அது எங்கிருந்து வந்தாலும், திறந்த உள்ளத்தோடு நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்படி திறந்த உள்ளத்தோடு ஏற்றுக்கொள்கிறபோது, அது நமக்குள்ளாக ஆழமாக வேரூன்ற...

எளிய உள்ளம்

இந்த உலகத்திலே பலர் தங்களை ஞானிகளாகக் காட்டிக்கொள்கிறார்கள். தங்களுக்கு அறிவிருப்பதால், தங்களது அறிவாற்றலைக்கொண்டு பலவற்றை அறிந்திருப்பதால், எல்லாம் தஙக்ளுக்குத் தெரியும் என்கிற எண்ணம் அவர்களுக்குள்ளாக மேலோங்கியிருக்கிறது. ஆனால், இவர்களை நாம் ஞானிகளாக ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படியென்றால், உண்மையான ஞானி யார்? என்ற கேள்வி நமக்குள்ளாக எழும். இந்த உலகத்தில், யாரெல்லாம் கடவுளைப்பற்றிக் கொண்டு, தங்களது வாழ்வை நகர்த்திக்கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் தான் ஞானிகள். தங்களது அறிவுச்செருக்கினால், தங்களின் எண்ணத்தை, சிந்தனையை முன்னிறுத்தி வாழ்கிறவர்கள், ஞானிகளாக இருக்க முடியாது. இயேசு வாழ்ந்த காலத்தில், பரிசேயர், மறைநூல் அறிஞர், சதுசேயர் தங்களின் அறிவாற்றலைக்கொண்டு எல்லாம் சாதித்து விட முடியும் என்று நினைத்தார்கள். தாங்கள் சொல்வதுதான் சரி என்றும் அவர்கள் எண்ணினார்கள். கடவுளை அவர்கள் உயர்த்திப்பிடித்தாலும், தாங்கள் கடவுளையும் மிஞ்சியர்வர்கள் என்னும் எண்ணம், அவர்களது சிந்தனையில் ஊறிப்போயிருந்தது. இத்தகைய எண்ணத்தோடு வாழ்ந்தவர்களைத்தான், இயேசு கண்டிக்கிறார். கடவுள் இல்லாமல், தங்களது அறிவினால் அனைத்தையும் சாதித்து விடலாம் என்று எண்ணுகிறவர்களின்...

கடவுளின் பிரசன்னம்

யோனா இறைவாக்கினர் நினிவே நகருக்கு ஆண்டவருடைய வார்த்தையை அறிவிக்கச் சென்றார். அவருடைய வார்த்தையை அறிவிக்கவும் செய்தார். இன்னும் நாற்பது நாளில் நினிவே அறிவிக்கப்படும் என்றார். மக்கள் மனம்மாறினர். கடவுளும் தனது எண்ணத்தை மாற்றிக்கொண்டார். அவர்களை அழிக்காது விட்டார். இது யோனாவுக்கு பெருத்த வருத்தத்தை ஏற்படுத்தியது. எனவே, கடவுளிடம் கோபித்துக்கொண்டு, அவர் தன் வழியே செல்கிறார். யோனாவின் வருத்தத்திற்கான காரணம் என்ன? அவர் ஓர் அருங்குறி, அதாவது அழிவு வரும் என்று எச்சரிக்கிறார். ஆனால், அது நடக்கவில்லை. எனவே, கடவுள் மீது கோபம் கொள்கிறார். ஆனால், யோனா ஒன்றை மறந்துவிடுகிறார். அவர் தான் நினிவே மக்களுக்கு கொடுக்கப்பட்ட அடையாளமேயன்றி, அவர் சொன்ன வார்த்தைகள் அல்ல. மக்கள் யோனாவை நம்பியதால் தான், அவருடைய வார்த்தைகளை நம்புகிறார்கள். எனவே, யோனாவே ஓர் அடையாளம். இந்த உன்னதமான கடவுளின் கொடையை, யோனா இறைவாக்கினர் புரிந்துகொள்ள தவறி விடுகிறார். இந்த உதாரணத்தைப் போலத்தான், இயேசுவின் காலத்தில் வாழ்ந்த பரிசேயர்கள்,...