Category: Daily Manna

யார் விருப்பம் !

இயேசுவிடம் இருந்த கொள்கைத் தெளிவு நம்மிடம் இருப்பதாக. இயேசு தன்னுடைய வாழ்வும், பணியும் எத்தகையது என்பதை நன்றாகப் புரிந்துவைத்திருந்தார். “என் சொந்த விருப்பத்தை நிறைவேற்ற அல்ல, என்னை அனுப்பியவரின் விருப்பத்தை நிறைவேற்றவே நான் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்தேன்” என்று தெளிவாகச் சொன்னார். நாம் யார் விருப்பத்தை நிறைவேற்ற உழைக்கிறோம்? நமது சொந்த விருப்பத்தையா, அல்லது இறைவனின் விருப்பத்தையா? நமது விருப்பத்தை நிறைவேற்ற உழைத்தால், நமக்கு ஏமாற்றமும், தோல்வியுமே கிட்டும். ஆனால், இறைவனின் விருப்பத்தை நிறைவேற்ற விரும்பி உழைத்தால், இறுதி வெற்றி, இறுதி மன நிறைவும் நிச்சயமாக நமக்குக் கிடைக்கும். இதை மறக்க வேண்டாம். மன்றாடுவோம்: அன்புத் தந்தையே இறைவா, உமது அன்புத் திருமகன் இயேசுவுக்காக நன்றி கூறுகிறோம். அவர் தமது சொந்த விருப்பத்தின்படி வாழாமல், உமது விருப்பத்தின்படி வாழ்ந்து எங்களுக்கு எடுத்துக்காட்டாய்த் திகழ்கிறார். அவரைப் பின்பற்றி நாங்களும் உமது விருப்பத்தின்படி வாழ அருள்தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்....

விசுவாசக்கண் கொண்டு கடவுளைப் பார்க்க…

“கண்டு நம்புவது“ என்பது அனைவரும் எதிர்பார்க்கக்கூடிய ஒன்று. கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய், என்று பொதுவாகச் சொல்வார்கள். ஆனால், பொதுவாக, பார்த்தால் நம்புகிறவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. கேட்பதை வைத்து நம்புகிறவர்களை விட, பார்ப்பதை வைத்து நம்புகிறவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். உண்மை என்று தெரிய வேண்டுமென்றால், நானே நேரிடையாக சென்று பார்க்க வேண்டும் என்று நினைக்கிறவர்கள் தான் அதிகம். இயேசுவின் சீடருள் ஒருவரான தோமாவும், நான் கண்டால் தான், இயேசு உயிர்த்திருக்கிறார் என்று நம்புவேன் என்று சொல்கிறார். இந்த வரிசையில் இன்றைய நற்செய்தியில் வரும் யூதர்களும், அடையாளங்களையும், அருங்குறிகளையும் கண்டு நம்புகிறோம், என்று சொல்கிறார்கள். நமது வாழ்க்கை வெறும் கண்களால் பார்ப்பதை அடிப்படையாக வைத்து மட்டும் வாழ்ந்தால், நாம் தாம் ஏமாளிகளாக இருப்போம். ஆனால், வாழ்வை, நடக்கும் நிகழ்வுகளை பார்க்க வேண்டிய விதத்தில் பார்த்தால் தான், சரியான வழியில் செல்ல முடியும். இதை இயேசு...

இயேசு காட்டுகின்ற கடவுள்

”எங்கள் செயல்கள் கடவுளுக்கு ஏற்றவையாக இருப்பதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று யூதர்கள் இயேசுவிடத்திலே கேட்டார்கள். யூதர்கள் இப்படி கேட்டதற்கு பிண்ணனி இல்லாமல் இல்லை. யூதர்களைப்பொறுத்தவரையில் இந்த உலகத்திலே மூன்று வகையான மக்கள் இருக்கிறார்கள். நல்லவர்கள், கெட்டவர்கள், இந்த இரண்டிற்கும் இடைப்பட்டவர்கள். அதாவது நல்லதும், கெட்டதும் செய்கிறவர்கள். இவர்கள் நன்மை அதிகமாகச்செய்தால், நல்லவர்கள் குழுவில் சேர்ந்துவிடுவார்கள். இயேசுவிடத்திலே மேற்சொன்ன கேள்வியைக்கேட்டபோது, அவர்கள் நல்லது செய்வதற்கான வழிமுறைகளை இயேசு சொல்வார் என்றுதான் எதிர்பார்த்தனர். ஆனால் இயேசு அவர்கள் எதிர்பாராத பதிலைச்சொல்கிறார். ”கடவுள் அனுப்பியவரை நம்புவதே கடவுளுக்கேற்ற செயல்” என்பதுதான் அந்தப்பதில். அதாவது நம்பிக்கை. நம்பிக்கை என்றால் என்ன? நம்பிக்கை என்பது கடவுள் உடனான ஓர் உறவுநிலை. நாம் கடவுளோடு கொள்ளக்கூடிய நட்புறவு. கடவுளைப்பார்த்து நாம் பயப்படத்தேவையில்லை. கடவுளைப்பார்த்து நாம் ஓடி ஒளியத்தேவையில்லை. கடவுளை நமது தந்தையாக, நல்ல நண்பராக எண்ணுவதுதான் நம்பிக்கை. இயேசுதான் கடவுளை நமக்குக்காட்டுகிறவராக, காட்டியவராக இருக்கிறார். எனவே, இயேசுவில்...

உணவருந்த வாருங்கள் !

உயிர்த்த இயேசு தம் சீடரிடம் காட்டும் பாசமும், பரிவும் நம் உள்ளத்தைத் தொடுகின்றன. அவர்கள் தம்மைக் கைவிட்டு ஓடிவிட்டதையோ, தமது உயிர்ப்பை நம்ப மறுத்ததையோ, தங்களின் பழைய வாழ்க்கைக்கே மீண்டும் திரும்ப முடிவு செய்ததையோ அவர் பொருட்படுத்தவில்லை. மாறாக, தந்தை தம் பிள்ளைகள்மேல் பரிவு காட்டுவதுபோல (திபா 103), இயேசு தம் சீடர்களுக்குப் பரிவு காட்டுகிறார். அவர்களுக்கு மீன்பாடு கிடைக்கவில்லை என்பதை அவர்களிடம் விசாரித்து அறியும்போதும், படகின் வலைப்பக்கத்தில் வலை வீசச்சொல்லி, பெரும் மீன்பாடு கிடைக்கச் செய்யும்போதும், களைப்போடும், பசியோடும் அவர்கள் கரைக்கு வரும்போது, அவர்களுக்கு உணவு தயாரித்து வைத்திருந்து, #8220;உணவருந்த வாருங்கள்” என்று அழைக்கும்போதும், உயிர்த்த இயேசுவின் பரிவை நாம் கண்கூடாகக் காண முடிகிறது. இந்தப் பாஸ்காக் காலத்தில் உயிர்த்த இயேசுவின் பாசத்தை நாமும் அனுபவிப்போம். நமது கடந்த கால வாழ்வை, குறைகளை, பாவங்களை அவர் நினைவுகூராமல், நம்மைப் பரிவுடன் பராமரிக்கும் அவரது பேரன்பைப் போற்றி மகிழ்வோம். மன்றாடுவோம்: கடந்த...

தந்தையைப் போல மகன் !

1. “என் தந்தை இன்றும் செயலாற்றுகிறார், நானும் செயலாற்றுகிறேன்” என்னும் வாக்கிலிருந்து ஓய்வுநாளிலும் இறைவன் செயல்படுவதைச் சுட்டிக்காட்டி, அவ்வாறே ஓய்வுநாளிலும் தாம் மீட்பின் பணியைச் செய்வதாக இயேசு வாக்குமூலம் தருகிறார். நாமும் நற்பணியாற்றுவதிலும், நேர்மையானவற்றைச் செய்வதிலும், ஓய்வின்றி உழைக்க வேண்டும். 2. “தந்தை செய்பவற்றையே மகனும் செய்கிறார்”. தந்தை இறைவன் தமது பேரன்பை, பேரிரக்கத்தை மீட்புச் செயல்களாக வெளிப்படுத்துகிறார். அவ்வாறே, இயேசுவும் பாவங்களை மன்னிப்பது, நோயிலிருந்து நலமளிப்பது போன்ற செயல்களை அல்லும் பகலும் ஆற்றிவந்தார். நாமும் இத்தகைய பணிகளை, மாந்தரை இறைவனுடனும், மனிதருடனும் ஒப்புரவாக்கும் பணியை எப்போதும் ஆற்றவேண்டும். 3. “தந்தை தாம் வாழ்வின் ஊற்றாய் இருப்பதுபோல, மகனும் வாழ்வின் ஊற்றாய் இருக்குமாறு செய்துள்ளார்”. இயேசுவிடம் வந்தவர்கள் சாவிலிருந்து விடுதலைபெற்று, புதுவாழ்வைப் பெற்றுக்கொண்டனர். நாமும் வாழ்வின் வழிகாட்டிகளாகத் திகழவேண்டும். 4. “தந்தை சொற்படியே நான் தீர்ப்பிடுகிறேன். நான் அளிக்கும் தீர்ப்பு நீதியானது, ஏனெனில் என் விருப்பத்தை நாடாமல் என்னை அனுப்பியவரின் விருப்பத்தையே...