வாழு! வாழ வை!
மாற்கு 10:17-27 செல்வர்களுக்கு எதிரான சங்கினை இன்றைய நற்செய்தியில் கேட்க முடிகின்றது. செல்வர்களின் மனநிலையை மிக அழகாக இன்றைய நற்செய்தியில் படம் பிடித்துக்காட்டியுள்ளார். நற்செய்தியாளர் மாற்கு. தன்னிடம் வந்த செல்வந்தரை நிலைவாழ்வினை நோக்கி படிப்படியாகக் கூட்டிச் செல்கின்றார் இயேசு. உண்மையாக நமக்குத்தான் இந்தப் படிகள் ஒரு பாடம். நிலை வாழ்வினைப் பெருவதற்கு முதல் படிநிலை கட்டுப்பாடற்ற, ஏனோதானோமாக, தன் விருப்பபடியெல்லாம் வாழாமல் கட்டளைகளைக் கடைபிடித்து நிலை வாழ்விற்குக் கடந்து செல்ல வேண்டும். இது ஒரு குமுகக் கடமை என்பதோடு நிறைவு பெறுகின்றது. இந்த முதல்படியில் தன்னால் பிறருக்கு எந்தப்பிரச்சனையும் இல்லை என்பதோடு முடிகின்றது.ஆனால் இது நிறைவன்று. நிறைவு என்பது தன்னால் பிறருக்கு என்ன நன்மை என்பதில்தான் அடங்கியிருக்கிறது. இதைத்தான் இயேசு அந்த செல்வரிடம் கேட்கிறார். “உன்னால் யாருக்கும் பிரச்சனை இல்லை, நன்று. ஆனால் உன்னால் யாருக்கு என்ன நன்மை?” என்கிறார். இந்தக் கேள்வியை நாம் இன்று பலதளத்தில் கேட்க முடியும். நாம்...