ஆண்டவருக்கு நான் புகழ் பாடுவேன்
விடுதலைப்பயணம் 15: 1 – 2, 3 – 4, 5 – 6, 17 – 18 எகிப்தில் இஸ்ரயேல் மக்கள் அடிமைகளாக, பார்வோன் மன்னருக்கு ஊழியம் செய்து வருகின்றனர். கடவுள் அவர்களை அடிமைத்தளையிலிருந்து விடுவிப்பதற்காக, மோசேயையும், ஆரோனையும் அனுப்புகிறார். அவர்கள் பார்வோன் மன்னரிடத்தில் கடவுளின் வார்த்தையை அறிவிக்கின்றனர். கடவுளின் வல்ல செயல்களுக்கு முன்னால், தான் ஒன்றுமே இல்லை என்பதை உணர்ந்த பார்வோன் மன்னன், இஸ்ரயேல் மக்களை போக அனுமதிக்கிறான். ஆனால், அவர்களைப் போகவிட்டதற்காக மனம் வருந்துகிறான். அவர்களைப் பிரிந்ததற்காக அல்ல, மாறாக, அவர்கள் செய்து வந்த அடிமை வேலையை இனி தனக்கு யார் செய்வார்கள்? என்கிற எண்ணத்தினால், மனம் வருந்துகிறான். அவர்களை திருப்பி இழுத்து வர, ஆணையிடுகிறான். அப்போது, தண்ணீர் இரண்டாகப் பிளந்து, இஸ்ரயேல் மக்கள் கரைசேர்ந்து விடுகின்றனர். ஆனால், எகிப்தியர் தண்ணீரில் மூழ்கி இறந்துவிடுகின்றனர். இவ்வாறு கடவுள் தந்திருக்கிற மீட்பிற்கு நன்றியாக, மோசேயும், இஸ்ரயேல் மக்களும் பாடி...