Category: Daily Manna

சாதாரணமானது ஆனால் வரலாறானது

புனிதர் அனைவர் பெருவிழா மத்தேயு 5:1-12 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் புனிதர் அனைவரின் பெருவிழா திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். அனைத்து புனிதர்களின் பரிந்துரை உங்களுக்கு இந்த நாளில் கிடைப்பதாக! மனிதர்கள் என நாம் மரியாதை செலுத்துவோர் தங்களுடைய வாழ்வையும் பணியையும் முழுமையாக இறைசித்தத்திற்கு அர்ப்பணித்து துன்பங்களை, இன்பங்களாக ஏற்று, உலக மக்களின் நலனுக்காகவும், அவர்கள் நெறிபிறழாமல் வாழ வழிகாட்டிகளாக இவ்வுலகில் வாழ்ந்தவர்கள். இவர்களையே கத்தோலிக்கத் திருச்சபை புனிதர்கள் என அடையாளப்படுத்துகிறது. கடவுளை வழிபடுகிற நாம், அவரோடு நெருங்கிய உறவு கொண்டு நமக்காகப் பரிந்து பேசுகிற புனிதர்களுக்கு மரியாதை செலுத்துவது நமது மேலான கடமையாகும். அவர்களின் எடுத்துக்காட்டான வாழ்விற்கு நன்றி கூறுவது தகுதியும் நீதியுமாகும். இவ்விழா நாம் புனித வாழ்விற்குள் நுழைய...

இயேசுவின் துணிவு

கடவுளின் பணியாளர்களிடம் பகைமை பாராட்டுவதும், அவர்களை எதிரிகளாக பாவிப்பதும் இன்றைக்கு நேற்றல்ல, நூற்றாண்டுகளுக்கு முன்னரே இது தொடர்ந்து வருகிறது. கடவுளின் பணியாளர்களை மிரட்டுவதும், அவர்களை அவமானப்படுத்துவதும் தொடக்க காலத்திலிருந்தே, வரலாற்றில் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கிறது. அப்படி எதிர்ப்புக்கள் வருகிறபோது, அதனை எப்படி எதிர்கொள்ள வேண்டும்? என்பதற்கு இயேசு சிறந்த எடுத்துக்காட்டு. பரிசேயர்கள் சிலர், இயேசுவின் மீது நல்லெண்ணமும், அன்பும் கொண்டவர்கள் தங்களுக்குக் கிடைத்த தகவலைக்கொண்டு, இயேவிடம் பகிர்ந்து கொள்கிறார்கள். அவருக்கு எதிராக தீட்டப்பட்டிருக்கிற சதித்திட்டங்களை, அவரிடத்தில் சொல்கிறார்கள். அவர்கள் சொல்வதைக் கேட்டதும், இயேசு பயந்துவிடவில்லை. ஓடிவிடவும் இல்லை. துணிவோடு எதிர்க்கிறார். தவறை, தவறு என்று சுட்டிக்காட்டும் வலிமை, வல்லமை இயேசுவிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். எதிர்கொள்கிற பிரச்சனையில் வெற்றி, தோல்வி பற்றி கவலையில்லை. இறுதிவரை நிலைத்து நிற்க வேண்டும். நியாயத்திற்காக, நீதிக்காக நிற்க வேண்டும். அதுதான், இயேசுவின் வாழ்வு நமக்குக் கற்றுத்தரும் பாடம். வாழ்க்கையில் சவால்களை துணிவோடு சந்திக்க, இயேசுவின் வாழ்க்கை...

இன, மொழித் தடைகள் தகர்க !

மார்டின் லூத்தர் கிங் அவர்களின் “எனக்கொரு கனவு உண்டு. ஒருநாள் வெள்ளை நிறக் குழந்தைகளும், கறுப்பினக் குழந்தைகளும் ஒருவர் கையை ஒருவர் பிடித்துக்கொண்டு நடப்பர்” என்னும் பிரபலமான கனவை இன்றைய முதல் வாசகம் நமக்கு நினைவுபடுத்துகிறது. ஆம், இன்றைய முதல் வாசகத்தில் எசாயா இறைவாக்கினர் வழியாக இறைவனின் மாபெரும் கனவொன்று வெளிப்படுகிறது. “பிற இனத்தார், பிற மொழியினர் அனைவரையும் நான் கூட்டிச் சேர்க்க வருவேன். அவர்களும் கூடி வந்து என் மாட்சியைக் காண்பார்கள்” என்று உரைக்கிறார் ஆண்டவர். இதுதான் இறைவனின் கனவு. மண்ணுலகில் வாழும் அனைவரும் ஒரே தந்தையின் பிள்ளைகள். எந்தவிதமான பிளவுகளோ, தடைகளோ இன்றி அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும். இறைவனின் இந்தக் கனவு நிறைவேறுவதற்காக நாம் அனைவரும் உழைக்க வேண்டும். இன்றைய நற்செய்தி வாசகத்தில் “ஆண்டவரே, மீட்பு பெறுவோர் சிலர் மட்டும்தானா?” என்;னும் கேள்விக்கான விடையை இன்றைய முதல் வாசகத்தில் நாம் காண்கிறோம். அனைவருக்கும் மீட்பு உண்டு. ஆனால்,...

கண்ணீரோடு விதைப்பவர்கள் அக்களிப்போடு அறுவடை செய்வார்கள்

திருப்பாடல் 126: 1ஆ – ஆ, 2இ – 3, 4 – 5, 6 இஸ்ரயேலின் ஆண்டவர் கண்ணீரைத் தரக்கூடிய இறைவன் அல்ல, மாறாக, கண்ணீரைத்துடைத்தெடுக்கிற இறைவன். எங்கெல்லாம் மானிட சமுதாயம் கண்ணீர் வடிக்கிறதோ, இறைவனிடம் முறையிடுகிறதோ, அப்போதெல்லாம் இறைவன் கண்ணீர் வடிக்கிறவரின் தகுதியைப் பார்க்காமல் அவர்களுக்கு உதவி செய்து வந்திருக்கிறார். மீட்பின் வரலாற்றைப் புரட்டிப்பார்க்கிறபோது, இந்த உண்மையை நாம் கண்கூடாக பார்க்கலாம். தொடக்கநூலில் காயினும் ஆபேலும் பலி செலுத்துகிறபோது, கடவுள் ஆபேலுடைய பலியை ஏற்றுக்கொள்கிறார். காயீன் பொறாமையினால் தன் சகோதரனை கொன்றுவிடுகிறான். கடவுள் காயீனை தண்டிக்கிறார். ஆனால், காயீன் கடவுளிடத்தில் “என்னைப் பார்க்கிறவர் யாரும் கொன்றுவிட முடியுமே” என்று முறையிடுகிறான். தீங்கு செய்தவன் தண்டிக்கப்பட வேண்டும் என்று எண்ணுகிற கடவுள், அவன் முறையிடுகிறபோது, அவனுக்கு ஓர் அடையாளமிட்டு அவனுக்கு பாதுகாப்பு கொடுக்கிறார். கடவுளின் அருளைப்பெற தகுதி இல்லையென்றாலும், அவன் பாதுகாப்பு பெறுகிறான். இஸ்ரயேல் மக்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்து,...

செபிக்கும் மனநிலை

பரிசேயர் மற்றும் வரி தண்டுபவரின் செபத்தைப்பற்றிய ஓர் ஆய்வை இயேசு மேற்கொள்கிறார். இந்த நிகழ்ச்சி வாயிலாக, நமது செபம் எப்படி இருக்கக்கூடாது? மற்றும் எப்படி இருக்க வேண்டும்? என்கிற செய்தியையும் அவர் நமக்குத்தருகிறார். பரிசேயன் ஆலயத்திற்குச் சென்றது செபிப்பதற்காக அல்ல, மாறாக தன்னைப்பற்றிப் புகழ்வதற்காகத்தான் என்பது அவனுடைய வார்த்தைகளில் வெளிப்படுகிறது. ஒருவன் எப்படி? என்பது அவன் சொல்லித்தான் கடவுளுக்குத் தெரியவேண்டும் என்பதில்லை. பரிசேயன் சொன்னது அனைத்தும் உண்மைதான். அவன் சொல்லாவிட்டாலும் கடவுளுக்குத் தெரியும். எனவே, நம்மைப்பற்றிப் பெருமைபாராட்டுவதில் நாம் நேரத்தைச் செலவழிக்கத் தேவையில்லை. வரிவசூலிக்கிறவர் தனது நிலையை எண்ணிப்பார்க்கிறார். தனது வாழ்வைச் சிந்தித்துப்பார்க்கிறார். தான் இதுநாள் வரை நடந்துவந்த அந்தப் பாதையை பின்னோக்கிப்பார்க்கிறார். தான் பாவி என்பதை உணர்கிறார். கடவுளுக்கேற்ற வாழ்வு தான் வாழவில்லை என்பதை அறிகிறார். தனது தவறுக்காக மனம்வருந்துகிறார். நேர்மையான முறையில் வாழ, அவர் இறைவனின் மன்னிப்பிற்காக, அருளுக்காகக் காத்திருக்கிறார். செபம் என்பது நமது வாழ்வை கடவுள் முன்னிலையில்...