Category: Daily Manna

மனமிரங்கி கடன் கொடுக்கும் மனிதர் நன்மை அடைவர்

திருப்பாடல் 112: 1ஆ – 2, 4 – 5, 9 கடந்த மாதத்தில் திருநேல்வேலியில் கந்துவட்டி கொடுமையால் இறந்த குடும்பத்தினரின் இறப்பு தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஏழை, எளியவர்களின் வறுமையைப் பயன்படுத்தி ஒரு கும்பல் அநியாய வட்டி வாங்கி, அவர்களின் வாழ்வாதாரத்தைச் சிதைப்பது இன்றைக்கும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் இதற்கு துணைபோவது கலியுகத்தின் உச்சகட்டம். இப்படியிருக்கிற சூழ்நிலையில் இன்றைய திருப்பாடல், ”மனமிரங்கி கடன் கொடுக்கும் மனிதர் நன்மை அடைவர்” என்று சொல்கிறது. கடன் என்பது ஒருவரது இக்கட்டான சூழ்நிலையில் நாம் பணமாகவோ, பொருளாகவோ கொடுத்துச் செய்கிற உதவி. இந்த கடன் கொடுப்பது எப்படிப்பட்ட மனநிலையோடு கொடுக்கிறோம் என்பது முக்கியம். இன்றைக்கு கடன் கொடுப்பது வியாபார நோக்கத்திற்கானதாக இருக்கிறது. அது ஒரு வியாபாரம். உனக்கு நான் பணம் தருகிறேன், எனக்கு நீ அதற்கான கூலியைக் கொடுத்து விட வேண்டும் என்பது தான் வியாபார கடன்....

உம் திருமுன் வைத்துக் காத்தருளும்

திருப்பாடல் 131: 1, 2, 3 வாழ்க்கையில் குறிப்பிட்ட வயதை அடைந்தபிறகு தனிமையில் இருக்கிறபோது பெரும்பாலானோர் நினைக்கிற சிந்தனை, “என்ன வாழ்க்கை இது! இன்று மலர்ந்து நாளை கருகிவிடும் புல்லைப் போன்ற நம்முடைய வாழ்க்கையில் எவ்வளவு வன்மங்கள், பொறாமை, பிடிவாதம் கொண்டிருந்தோம். இது நமக்கு தேவையா?”. இது சாதாரண வார்த்தைகள் அல்ல. ஒருவருடைய உள்ளக்கிடக்கையை படம்பிடித்துக் காட்டக்கூடிய வார்த்தைகள். இறப்பு நிகழ்கிறபோது, வாழ்க்கை நாம் எண்ணியதைப் போல நடக்காதபோது, இப்படித்தான் நினைக்கத் தோன்றுகிறது. “காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பையடா” போன்ற வார்த்தைகள் எவ்வளவு உண்மையானவை!. இப்படி வாழ்க்கையில் எல்லாவற்றையும் அனுபவித்த பிறகு, பெற்றுக்கொண்ட பாடங்களை இன்றைய திருப்பாடல் நமக்கு தெளிவாக படம்பிடித்துக் காட்டுகிறது. அசோகர் எவ்வளவோ போர்களில் எதிரிகளை வெற்றி கொண்டிருக்கிறார். ஆனால், கலிங்கப்போரில் அவர் சந்தித்த உயிரிழப்புகள் அவர் பெற்ற வெற்றியை, கசப்பான உணர்வாக மாற்றிவிட்டது. இந்த போர் யாருக்காக? எதை அடைவதற்காக? அந்த வெற்றி அவருக்குள்ளாக...

உமது பேரன்பின் பெருக்கினால் எனக்கு பதில் தாரும்

திருப்பாடல் 69: 29 – 30, 32 – 33, 35 – 36 ஒரு சிலர் நன்றியை மறந்தவர்கள், வாழ்க்கையில் துன்பப்படுகிறபோது, மீண்டுமாக தங்களுக்கு உதவி செய்தவர்களிடம் செல்ல வேண்டும் என்கிறபோது, அது எளிதானதல்ல என்பதை நாம் அறிந்தவர்களாக இருக்கிறோம். ஏனென்றால், அவருடைய நன்றியை மறந்திருக்கிற நாம், நல்ல நிலையில் இருக்கிறபோது, அவர்கள் செய்த உதவியைப் பொருட்டாத எண்ணாத நாம், மீண்டும் அவர்களிடம் கையேந்துகிற நிலை வருகிறபோது, நிச்சயம் அது கடினமான ஒன்று. அவமானப்பட வேண்டிய ஒன்று. இன்றைய திருப்பாடலின் களம் இதுதான். இறைவனிடம் எல்லா நன்மைகளையும் பெற்று, அவருடைய நன்றியை மறந்துவிட்டு, இப்போது மீண்டும் கடவுளிடத்தில் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறபோது பாடப்பட்ட பாடலாக இது அமைந்திருக்கிறது. கடவுளிடம் தான் உதவியை எதிர்பார்க்க தகுதியற்ற நிலையில் இருந்தாலும், கடவுளின் அன்பில் நம்பிக்கை வைத்து ஆசிரியர் தன்னுடைய உணர்வுகளை பதிவு செய்கிறார். இறைவனிடத்தில் கேட்கிறபோது, நிச்சயம் தனக்கு பதில் சொல்வார்...

சக்கேயுவின் தாழ்வு மனப்பான்மை

தாழ்வு மனப்பான்மை என்பது இன்றைய இளைய சமுதாயத்தினரிடம் காணப்படக்கூடிய மிக்பெரிய பலவீனமாக நாம் சொல்லலாம். அந்த மனநிலை தான், விளையாட்டு வீரர்கள், சினிமாக நடிகர்களை தங்கள் தலைவர்களாக ஏற்றுக்கொள்ளவும், சில சமயங்களில் உயிரைக் கொடுக்கவும் தூண்டுகிறது. இந்த தாழ்வு மனப்பான்மை சில சமயங்களில் ஒருவிதமான போதையாகவும் மாறிவிடுகிறது. இந்த தாழ்வு மனப்பான்மையை அகற்றுவதற்கு, நமக்கு இரண்டு விதமான ஆற்றல்கள் தேவைப்படுகிறது. ஒன்று, நமது முயற்சி. இரண்டாவது கடவுளின் அருள். இந்த இரண்டையும் பெற்று, முழுமையான மனிதனாக, தனது பலவீனங்களை கடந்த மனிதனாக, சக்கேயு உயிர்பெற்று எழுகிறான். சக்கேயுவிற்கு ஒருவிதமான தாழ்வு மனப்பான்மை. அவனுடைய உயரம் அவனுக்குள்ளாக தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துகிறது. அவனது வரிவசூலிக்கும் தொழில் காரணமாக, சமுதாயத்தில் இருந்து புறந்தள்ளப்பட்ட மனிதனாக காணப்படுகிறான். அதிலிருந்து விடுபட முயற்சி எடுக்கிறான். அந்த முயற்சி அவனுக்கு வெற்றியாக மாறுகிறது. தனது பலவீனத்திலிருந்து மீண்டு வருகிறான். கடவுளின் அருளையும் ஆசீரையும் நிறைவாகப் பெற்றுக்கொள்கிறான். சக்கேயு தனது...

சகல ஆத்துமாக்கள் திருவிழா

அனைத்து ஆன்மாக்கள் திருவிழா கல்லறைகளை கண்முன்னே வை யோவான் 6:37-40 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் அனைத்து ஆன்மாக்கள் திருவிழா திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். அனைத்து ஆன்மாக்களின் பரிந்துரை உங்களுக்கு இந்த நாளில் கிடைப்பதாக! இறந்தவர்களை நினைத்துப் பார்க்கும்விதமாக `அனைத்து ஆன்மாக்கள் தினம்’ அல்லது `கல்லறைத் திருநாளை” நாம் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுகிறாம். இறந்தவர்கள் அனைவரையும் இன்று நாம் நினைத்து அவர்களுக்காக ஜெபிக்கிறோம். நம் அன்னையாகிய திருச்சபை, மோட்சத்திலிருக்கும் தன் மக்களை நினைத்தபின் வேதனைப்படும் தன் மக்களை நினைக்கிறது. அவர்களுக்காக பரிந்து பேசுகிறது. அவர்களுக்கு தன்னாலான உதவி செய்ய முயற்சிக்கிறது. மோட்சத்தில் வாழும் தன் மக்களுடன் அவர்களை சீக்கிரம் ஒன்றிக்கும்படி மன்றாடுகிறது. இன்று ஒவ்வொரு குருவும் மூன்று திருப்பலிகள் வைக்கிறார்கள். முதல்...