Category: Daily Manna

ஆண்டவரின் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர்

திருப்பாடல் 119: 1 – 2, 4 – 5, 17 – 18, 33 – 34 இன்றைய திருப்பாடல் திருச்சட்டத்தைப்படி நமக்கு அறிவுரை கூறக்கூடிய பாடலாக அமைகிறது. திருச்சட்டம் என்பது என்ன? அது கடவுளின் சட்டம். அது கடவுள் கொடுத்திருக்கிற, அமைதியாக, நிறைவோடு வாழ கடவுள் கொடுத்திருக்கிற ஒழுங்குமுறை. நம்மை பக்குவப்படுத்தக்கூடிய வழிமுறைகள் அடங்கிய தொகுப்பு. நாம் கடவுளின் அரியணை நோக்கிச்செல்ல உதவும் வழித்தடம். வாழ்வைக் காட்டக்கூடிய வழி. கடைப்பிடிப்பதற்கு கடினமாக இருந்தாலும், வாழ்வின் முழுமையான நிறைவை நாம் பெற்றுக்கொள்வதற்கு இதுதான் ஒரே வழி. கடவுளின் ஒழுங்குமுறைகளைக் கடைப்பிடிப்பது எளிதானது அல்ல. ஆனால், அதனை கடைப்பிடிக்க வேண்டும் என்கிற எண்ணம் இருந்தாலே போதும், கடவுள் நம்மை வழிநடத்துவார் என்கிற நம்பிக்கையை இது நமக்கு முழுமையாக உணர்த்துகிறது. அதனைக் கடைப்பிடிப்பதற்கு நாம் கடவுளிடம் பலத்தைக் கேட்க வேண்டும். எந்தவொரு நன்மையான செயலையும் செய்கிறபோது, நமக்கு நிச்சயம் பலவிதமான சங்கடங்கள் வரும்....

உதவிக்கரம் நீட்டுவோம்

இயேசு காதுகேளாதவருக்கு குணம் கொடுத்துவிட்டு கடவுளின் வார்த்தையைப் தெக்கப்போலி பகுதியில் போதித்துக்கொண்டிருக்கிறார். மக்கள் மூன்று நாட்களாக இயேசுவோடு தங்கியிருக்கிறார்கள். யார் இந்த மக்கள்? விவிலிய அறிஞர் ஒருவர் அழகான விளக்கம் ஒன்று தருகிறார். மாற்கு நற்செய்தி 5வது அதிகாரத்தில், இயேசு கெரசேனர் பகுதியில் பேய் பிடித்த மனிதர் ஒருவரை நலமாக்குகிறார். அந்த மனிதன் இயேசுவோடு கூட இருக்க வேண்டும் என்று விரும்பினான். இயேசுவோ அவரைப்பார்த்து, “உமது வீட்டிற்குப்போய் ஆண்டவர் உமக்குச்செய்ததையெல்லாம் உம் உறவினருக்கு அறிவியும்” என்றார். அவர் சென்று, இயேசு தமக்குச் செய்ததையெல்லாம் தெக்கப்போலி நாட்டில் அறிவித்து வந்தார், என்று பார்;க்கிறோம். இயேசுவோடு இப்போது இருக்கும் மக்கள், பேய்பிடித்திருந்த மனிதர் வழியாக இயேசுவைப்பற்றி அறிந்த மக்கள். அந்த மனிதர் சொன்னதை இப்போது நேரில் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள். இயேசு சீடர்களிடம் ஒரு ஆலோசனைக்கேட்கிறார். இது சீடர்களுக்கு ஒருவிதமான பயிற்சி. என்னதான் சீடர்கள் சொல்கிறார்கள் பார்ப்போம் என்று சொல்லி, அவர்களிடம் அப்போது இருக்கிற சூழ்நிலையை விவரிக்கிறார்....

நன்றாக யாவற்றையும் செய்கிறார்

காது கேளாதவரின் நிலைமை உண்மையிலேயே, மிக மிக கடினமானது. அவர்களின் நிலையும் தர்மசங்கடமானது. யாராவது அவர்களைப்பற்றிப் பேசினாலும், சிரித்தாலும், அவர்களைப்பற்றிப் பேசுவது போலவும், அவர்களைப்பரிகசிப்பது போலவும் தான் இருக்கும். அப்படிப்பட்டச் சூழ்நிலையில்தான் இந்த மனிதனும் இருந்திருக்க வேண்டும். கண் இல்லையென்றால் கூட, தங்களை யார் என்ன சொல்கிறார்கள் என்பது தெரியாமல் இருக்கும். ஆனால், தங்களைப்பற்றிப்பேசுவதை உணர்ந்தாலும், பதில் சொல்ல முடியாத நிலைமை உண்மையிலேயே பரிதாபமானது. இயேசு அந்த மனிதனின் உணர்வுகளை அறிந்து கொள்கிறார். அவன் வாழ்வில்பட்ட வலிகளை இயேசு நிச்சயமாக உணர்ந்திருக்க வேண்டும். எனவேதான், அவனைத் தனியே அவர் அழைத்துச்செல்கிறார். அவனை ஒரு நோயாளியாக மட்டும் இயேசு பார்க்கவில்லை. அவனை ஒரு மனிதனாக, உணர்வுள்ளவனாகப் பார்க்கிறார். இயேசுவின் குணப்படுத்துகின்ற நிகழ்ச்சி, அவரை மக்கள் மத்தியில் ”நன்றாக யாவற்றையும் செய்கிறவராகக்” காட்டுகிறது. இயேசு நல்லது செய்ய வந்தார் என்பதைவிடு, நல்லதை மீட்க வந்தார் என்பது பொருத்தமாக இருக்கும். ஏனென்றால், தொடக்கத்தில் கடவுள் இந்த...

வார்த்தைகள் – ஆன்மீக முதிர்ச்சியின் வெளிப்பாடு

யூதர்களுக்கு தங்களின் இனம் தான் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட இனம் என்ற நம்பிக்கை இருந்தது. எனவே, அவர்கள் யூதர் அல்லாத புற இனத்து மக்களோடு திருமணஉறவு கொள்வதைத்தவிர்த்து வந்தனர். புற இன நாடுகளுக்குச்சென்று வந்தால், தங்கள் நாட்டிற்குள் நுழைகின்றபோது, காலில் படிந்திருக்கும் தூசியைத்தட்டிவிட்டுத்தான் தங்கள் நாட்டிற்குள் காலடி எடுத்து வைப்பர். புறவினத்தாரோடு உறவு ஏற்படுத்தினால் தாங்களும் தூய்மையற்றவர்களாகி விடுவோம் என்கிற எண்ணம் யூத மக்களிடையே இருந்தது. அவர்களுக்கு இறைரசில் இடமில்லை என்ற நினைப்பும் அவர்களிடையே மேலோங்கியிருந்தது. தூய்மைச்சடங்கு பற்றி விமர்சனம் செய்து, மறைநூல் அறிஞர்களின் வெறுப்பைச்சம்பாதித்த இயேசு, மற்றுமொரு விமர்சனத்தை இந்த நற்செய்தியிலே முன்வைக்கிறார். ஏறக்குறைய இப்போதைய தீண்டாமை ஒழிப்புதான், இயேசுவின் விமர்சனம். கிரேக்கப்பெண் இயேசுவிடம் வந்து, மகளிடமிருந்து பேயை ஓட்டிவிடுமாறு வேண்டியபோது, இயேசு சொல்கிற வார்த்தை நமக்கு அதிர்ச்சியானதாக இருக்கிறது. காரணம் அவர் கிரேக்கப்பெண்ணை நாயோடு ஒப்பிடுகிறார். நாய் என்பது யூதர்களால் மட்டுமல்ல, கிரேக்கர்களாலும் வெறுத்து ஒதுக்கப்பட்ட விலங்கு. அப்படிப்பட்ட விலங்கோடு,...

தூய எண்ணங்களை மனதில் விதைப்போம்

லேவியர் 11 ம் அதிகாரத்தில் தீட்டாகக்கருதப்படக்கூடிய விலங்குகளின் பட்டியல் கொடுக்கப்பட்டிருக்கிறது. யூதர்களுக்கு தூய்மை என்பது கண்ணும், கருத்துமாக கடைப்பிடிக்க வேண்டிய ஒன்று. எனவே, எவற்றை சாப்பிட வேண்டும்? எவற்றை சாப்பிடக்கூடாது? என்ற வரைமுறைகளை வகுத்திருந்தனர். எந்த அளவுக்கு இதில் கவனமாக இருந்தார்கள் என்றால், தீட்டான உணவைச் சாப்பிடுவதை விட சாவதே மேல் என்று பலர் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்ட நிகழ்வை நாம் மக்கபேயர் நூலில் பார்க்கலாம். இரண்டாம் மக்கபேயர் புத்தகத்தில் பன்றி இறைச்சியைச்சாப்பிடக் கட்டாயப்படுத்தப்பட்ட சகோதரர்கள் ஏழுபேர், பன்றி இறைச்சியைச்சாப்பிட்டு தங்களை தீட்டுப்படுத்துவதை விட சாவதே மேல் என்று தங்கள் உடலைப்பல்வேறு சித்திரவதைகளுக்குக் கையளித்ததையும், அவர்களை அவர்களின் தாய் ஊக்கப்படுத்தியதையும் நாம் வாசிப்பது இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. ஆனால், இயேசு வெளியிலிருந்து சாப்பிடக்கூடிய உணவு அல்ல, மாறாக, மனித எண்ணத்திலிருந்து தோன்றும் தீய சிந்தனைகள் தான் மனிதனைத்தீட்டுப்படுத்துகின்றன என்று சொல்கிறார். எண்ணங்கள் தான் செயல்பாடுகளுக்கு அடிப்படை என்று சொல்வார்கள். நம் எண்ணங்கள்...