Category: Daily Manna

ஆண்டவரே இரக்கமாயிரும்

திருப்பாடல் 51: 3 – 4, 5 – 6, 12 – 13, 14 & 17 கடவுளுடைய இரக்கத்திற்காக திருப்பாடல் ஆசிரியர் இறைவனிடம் கெஞ்சி மன்றாடுகிறார். இந்த திருப்பாடலின் பிண்ணனி அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். பத்சேபாவுடனான தன்னுடைய தவறான செயல், இறைவாக்கினர் வழியாக உணர்த்தப்பட்டபோது, தாவீது உள்ளம் நொந்து வேதனையில், தன்னுடைய பாவக்கறைகளை மன்னிப்பதற்காக உருகிய பாடல் தான் இந்த திருப்பாடல். தன்னுடைய பலவீனத்திற்காக, தான் செய்த தவறுக்காக மன்னிப்பு வேண்டுகிறார். உண்மையான, உள்ளார்ந்த மனமாற்றத்தோடு இறைவனை நாடுகிறபோது, நிச்சயம் இறைவன் மனமிரங்குவார் என்கிற நம்பிக்கையை வெளிப்படுத்தக்கூடிய திருப்பாடல் இந்த திருப்பாடல். இன்றைய நாளில் இந்த திருப்பாடலை நாம் சிந்திப்பது மிகவும் பொருத்தமான ஒன்று. ஏனென்றால், இன்று தவக்காலத்தை தொடங்குகிறோம். நமது வாழ்வை மாற்றுவதற்கான முயற்சியாக இந்த தவக்காலத்தைப் பயன்படுத்திக்கொள்ள அன்னையாம் திருச்சபை நமக்கு அழைப்புவிடுக்கிறது. இன்றைய நற்செய்தி வாசகமும் ஒட்டுமொத்த நமது வாழ்க்கை எப்படி அமைய...

எண்ணங்கள் தூய்மையானதாக இருக்கட்டும்

யாக்கோபு 4:1-10 இந்த உலகத்தில் நடக்கிற அநீதி, அக்கிரமங்களுக்கு ஒருவருடைய தீய எண்ணமே காரணமாய் இருக்கிறது என்று யாக்கோபு சொல்கிறார். உலக நாடுகளிடையே அமைதி இல்லை. குடும்பங்களில் சமாதானம் இல்லை. மனிதர்களுக்கு நிறைவு இல்லை. அடுத்தவரின் வளர்ச்சி கண்டு பொறாமை எண்ணம் குடிகொள்கிறது. இவற்றிற்கெல்லாம் காரணம், ஒருவருடைய உள்ளத்தில் இருக்கிற தீய எண்ணமே. இந்த தீய எண்ணம் ஒருவருக்குள்ளாக எப்படி வருகிறது? ஒரு மனிதர் எப்போது சிற்றின்ப ஆசைக்கு அடிமையாகுகிறாரோ, இந்த உலகத்தோடு இணைந்து வாழ வேண்டும் என்று நினைக்கிறாரோ, அப்போது அவருக்குள்ளாக தீய எண்ணம் வருகிறது. ஆக, ஆசைகளை விடுப்பதே நல்ல எண்ணத்தோடு வாழ்வதற்கான அடித்தளமாகும். ஆசையை எப்படி விடுப்பது? போதுமென்ற மனம் தான், ஆசையை துறப்பதற்கான திறவுகோல். நாம் நிறைவுள்ளவர்களாக இருக்க வேண்டும். இருப்பதில் நிறைவு காண வேண்டும். இன்றைய நவநாகரீக உலகத்தில், மனிதர்களுக்கு நிறைவு இல்லை. ஒரு கோடி சேர்த்து வைத்தவனுக்கும் நிறைவு இல்லை. மேலும், மேலும்...

தூய்மையான உள்ளம்

யாக்கோபு தன்னுடைய திருமுகத்தை உலகம் முழுவதிலும் சிதறுண்டு கிடக்கிற, யூதக்கிறிஸ்தவர்களுக்கு எழுதுகிறார். ஆயினும், இது எல்லாருக்கும் பொதுவானதாகவே இருக்கிறது. கிறிஸ்தவ வாழ்வு என்பது எளிதானது அல்ல. கிறிஸ்தவனாக வாழ்வது என்றால் என்ன? அதற்கான விழுமியங்கள் என்னென்ன? என்பதை, இந்த திருமுகம் முழுவதிலும் எழுதியிருக்கிறார். அதில் முக்கியமான விழுமியமாக பார்க்கப்படுவது, ஒருவரது தூய்மையான வாழ்க்கை. ஒருவருடைய பணிவு தான், தூய்மையான உள்ளத்தோடு அவரை இறைவனிடம் அழைத்துச்செல்லும் என்பது, அவருடைய அறிவுரையாக இருக்கிறது. யார் பெரியவர்? என்று தங்களுக்குள் சண்டை போட்டுக்கொண்ட அந்த நிகழ்வு, நிச்சயம் யாக்கோபிற்கு தங்களைப் பற்றி, சிரிப்பை வரவழைத்திருக்கும். இப்படியெல்லாம் இருந்திருக்கிறோமே என்ற நினைவை அவருக்கு தந்திருக்க கூடும். மனிதர்கள் கூடிவாழ்கிறபோது, தங்களுக்குள் யார் பெரியவர்? என்கிற போட்டி எழுவது இயல்பு. அறிவுள்ளவர்கள் தங்கள் அறிவைக்கொண்டு மற்றவர்களை அடக்கி ஆள நினைக்கிறார்கள். தங்களின் அறிவுத்திறமையைக் கொண்டு, தங்களை பெரியவர்களாக காட்டிக்கொள்ள முனைகிறார்கள். வலிமையுள்ளவர்கள் தங்கள் உடல் பலத்தைக்காட்டி வறியவர்களை அடக்குமுறைப்படுத்துகிறார்கள்....

ஆண்டவர் இரக்கமும், அருளும் கொண்டவர்

திருப்பாடல் 103: 1 – 2, 3 – 4, 8, 10, 12 – 13 விவிலியம் முழுவதும் நாம் பார்த்தோமென்றால், இந்த இரண்டு பண்புகளையும் நாம் கடவுளின் பண்புகளாகச் சுட்டிக்காட்ட முடியும். இரக்கம் என்பது மனம் இளகுதல், மனம் இரங்குதல் என்று பொருள்படுத்தலாம். கடவுள் மனம் இரங்குகிறவராக, இளகுகிறவராக இருக்கிறார். இஸ்ரயேல் மக்கள் பல தவறுகளைச் செய்தார்கள். அந்த தவறுகளை அவர்கள் அறியாமல் செய்யவில்லை. தெரிந்தே செய்தார்கள். தாங்கள் செய்வது தவறு என்பது தெரிந்தும், அது கடவுளுடைய கோபத்தைக்கிளறும் என்பதை அறிந்தும் தவறு செய்கிறார்கள். ஆனாலும், இறைவன் அவர்களுக்கு இரக்கம் காட்டுகிறார். இறைவன் இரக்கம் காட்டி, மன்னிப்பு மட்டும் வழங்கவில்லை. அவர்களுக்கு தன்னுடைய அருளையும் அதிகமாகத்தருகிறார். பொதுவாக, நமக்கு எதிராக தவறு செய்கிறவர்களை மன்னிப்பதற்குக் கூட நமக்கு மனமிருக்காது. ஒருவேளை மற்றவர்களின் தொந்தரவின் பொருட்டு, அவர்களை நாம் மன்னிக்கலாம். ஆனால், அவர்களுக்கு உதவி செய்வதோ, அவர்கள் நன்றாக இருக்க...

வேர்களைத்தேடி…

மத்தேயு 16 : 13- 20 அதிகாரம் என்பது ஆட்டுவித்து ஒடுக்குவதற்கல்ல! அன்போடு வழிநடத்துவதற்கு! அதிகாரம் என்பது வாட்டி வதைப்பதற்கல்ல! வாஞ்சையோடு இருப்பதற்கு! அதிகாரம் என்பது திட்டித் தீர்ப்பதற்கல்ல! தீர்க்கமான திட்டமிடுவதற்கு! இன்றைய நாள் நம் தாய்த் திருஅவையின் முதல் திருத்தந்தை பேதுருவின் தலைமைப்பீடத்தினை நினைவு கூர்ந்து பெருமையோடு கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இந் நாளினை நாம் உண்மையிலேயே கொண்டாட வேண்டுமா என்ற கேள்வி பலரின் எண்ணத்தில் உதிப்பது இயற்கையே. ஆனால் இன்று, இக்கட்டான காலகட்டத்தில் இன்னும் சிறப்பாக கொண்டாடக் கடமைப்பட்டிருக்கிறோம். காரணம், வெளியிலிருந்து வரும் பிரச்சனையைக் காட்டிலும் கிறிஸ்தவர்களுக்குள் இருக்கின்ற சவால்கள் மிக அதிகம். இன்று நம் வேர்களை மறந்து வாழும் கிறிஸ்தவர்களுக்கு மத்தியில் சிலர் நம் வேர்களை திட்டமிட்டு மூடி மறைக்கிறார்கள். வெட்டி அழிக்கிறார்கள். நம் வேர்களைத் தேடி இன்றைய கிறிஸ்தவர்களை அழைத்துச் சென்றாலே பல பிரிவினை சபையைச் சார்ந்தவர்களுக்கு உண்மை எது? என புலப்பட்டுவிடும். அவர்களின் சாயம் வெளுத்து...