Tagged: இன்றைய சிந்தனை

இயேசுவின் வல்லமை

“நான் செய்யும் செயல்களை என்னிடம் நம்பிக்கை கொள்பவரும் செய்வார்: ஏன் அவற்றைவிடப் பெரியவற்றையும் செய்வார்” என்று இயேசு சொல்கிறார். இயேசு சொல்வதன் பொருள் என்ன? இயேசுவை விட வல்ல செயல்களை ஒருவர் செய்து விட முடியுமா? இயேசுவை விட வல்ல செயல்கள் செய்தால், அவர் இயேசுவை விட மேலானவர் ஆகிவிடமாட்டாரா? உண்மையிலே இயேசு இங்கே என்ன சொல்ல விரும்புகிறார்? இந்த கேள்விகள் அனைத்துமே, இந்தப்பகுதியை வாசிக்கின்றபோது நமக்கு ஏற்படும் எண்ணங்கள். தொடக்க காலத்திருச்சபை உண்மையிலே குணப்படுத்துகின்ற வல்லமையைப்பெற்ற ஒன்றாகத்திகழ்ந்தது. 1 கொரிந்தியர் 12 வது அதிகாரத்தில் தூய ஆவியார் அருளும் கொடைகளைப்பற்றிப் பார்க்கிறோம். 9 வது இறைவார்த்தைச்சொல்கிறது: “அந்த ஒரே ஆவியார் மற்றொருவருக்குப் பிணிதீர்க்கும் அருள் கொடையை அளிக்கிறார்”. அதேபோல் யாக்கோபு தனது திருமுகத்தில் 5: 14 ல் சொல்கிறார்: “உங்களுள் யாரேனும் நோயுற்றிருந்தால் திருச்சபையின் மூப்பர்களை அழைத்து வாருங்கள். அவர்கள் ஆண்டவரது பெயரால் அவர்மீது எண்ணெய் பூசி இறைவனிடம் வேண்டுவார்கள்”....

நிம்மதி தருபவர் இயேசு கிறிஸ்து

தங்கள் வயிற்றுக்காக உணவைத் தேடி அலைகிற மக்கள்கூட்டத்தைப் பார்த்து, இயேசு பரிதாபப்படுகிறார். அவர்கள் பசியால் இருக்கிறார்கள் என்பதற்காக அல்ல, மாறாக, தன்னுடைய புதுமையின் பொருளை அறிந்து கொள்ளாமல், வெறுமனே பசியாற்றுவதற்காக தன்னைத் தேடி வருகிறார்களே? என்கிற வேதனைதான். இயேசுவின் நோக்கம் உடற்பசியை ஆற்றுவது மட்டுமல்ல, மக்களின் ஆன்மீகப்பசியை போக்க வேண்டும் என்பதுதான். அந்த ஆன்மீகப்பசியை அவர்கள் இயேசுவை நம்புவதன் மூலமாக மட்டும் தான், தணிக்க முடியும். அதனை அறிந்துகொள்ளாம் மக்கள் இருக்கிறார்களே? என்பதுதான் இயேசுவின் வேதனைக்கான காரணம். ஆன்மீகப்பசியைப் போக்கும் அருமருந்து இயேசு. ஏன்? கடவுள், இயேசுவில் தான், தன்னுடைய முத்திரையைப் பதித்துள்ளார். முற்காலத்தில் முத்திரை என்பது அதிக சக்தி வாய்ந்தது. அது கையொப்பம் போன்றது அல்ல. அதனைவிட வலிமை வாய்ந்தது. அரசியல் உலகிலும், வியாபார உடன்பாட்டிலும் முத்திரை தான், ஒரு ஆவணத்தை சட்டப்பூர்வமாக்கியது. இந்த முத்திரை தான், உயிலை அதிகாரப்பூர்வமாக்கியது. அதுபோல இயேசு கடவுளின் அன்பை வெளிப்படுத்தக்கூடிய அதிகாரப்பூர்வமான முத்திரையாக...

கடவுள் அனுபவம்

கடவுள் அனுபவம் என்பது நம்ப முடியாத வகையில், அதிசயிக்கத்தக்க வகையில் நடைபெறும் ஆச்சரியமான ஒரு அனுபவம் அல்ல, அது ஓர் எளிமையான அனுபவம். உள்ளத்தைத் தொடுகின்ற அனுபவம். நம் வாழ்வோடு கலந்த அனுபவம். வெறும் கவர்ச்சி, மாயை சார்ந்தது அல்ல. வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்த அனுபவம். அத்தகைய அனுபவம் நமக்கு கிடைக்கின்றபோது, பல வேளைகளில் அதை உணரவோ, நம்பவோ, அனுபவிக்கவோ மறந்து விடுகிறோம். அப்படி ஒரு அனுபவத்தைப்பெற்ற இரண்டு சீடர்களின் கதைதான் இன்றைய நற்செய்தி வாசகம். எம்மாவுக்கு இரண்டு சீடர்கள் சென்று கொண்டிருக்கிறார்கள். இயேசு நெருங்கி வந்து அவர்களோடு நடந்து செல்கிறார். அவர்களில் ஒருவராக இருக்கிறார். அவர்களிடம் கேள்விகள் கேட்கிறார். பதில் சொல்கிறார். ஆனால், சீடர்களால் அவரை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. அதற்கு, இயேசு உருமாறியிருந்தார் என்பது அர்த்தமல்ல. மாறாக, சீடர்களின் கடவுள் அனுபவத்தைப்பற்றிய தவறான பார்வைதான் காரணம். பொதுவாக, மக்கள் மத்தியில் கடவுள் அனுபவம் என்பது, ஆச்சரியமூட்டுகிற வகையில் ஏற்படுகின்ற ஒன்றாக...

தந்தையைப் போல மகன் !

இன்றைய நற்செய்தி வாசகத்தில்(+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 16-21) தந்தைக்கும், மகனுக்கும் இடையே நிலவும் உறவை ஆண்டவர் இயேசு தெளிவாக எடுத்துரைக்கின்றார். அந்த உறவின் கூறுகளாகப் பின்வருவனவற்றைக் காண்கிறோம்: 1. “என் தந்தை இன்றும் செயலாற்றுகிறார், நானும் செயலாற்றுகிறேன்” என்னும் வாக்கிலிருந்து ஓய்வுநாளிலும் இறைவன் செயல்படுவதைச் சுட்டிக்காட்டி, அவ்வாறே ஓய்வுநாளிலும் தாம் மீட்பின் பணியைச் செய்வதாக இயேசு வாக்குமூலம் தருகிறார். நாமும் நற்பணியாற்றுவதிலும், நேர்மையானவற்றைச் செய்வதிலும், ஓய்வின்றி உழைக்க வேண்டும். 2. “தந்தை செய்பவற்றையே மகனும் செய்கிறார்”. தந்தை இறைவன் தமது பேரன்பை, பேரிரக்கத்தை மீட்புச் செயல்களாக வெளிப்படுத்துகிறார். அவ்வாறே, இயேசுவும் பாவங்களை மன்னிப்பது, நோயிலிருந்து நலமளிப்பது போன்ற செயல்களை அல்லும் பகலும் ஆற்றிவந்தார். நாமும் இத்தகைய பணிகளை, மாந்தரை இறைவனுடனும், மனிதருடனும் ஒப்புரவாக்கும் பணியை எப்போதும் ஆற்றவேண்டும். 3. “தந்தை தாம் வாழ்வின் ஊற்றாய் இருப்பதுபோல, மகனும் வாழ்வின் ஊற்றாய் இருக்குமாறு செய்துள்ளார்”. இயேசுவிடம் வந்தவர்கள் சாவிலிருந்து விடுதலைபெற்று,...

பரந்துபட்ட உள்ளம்

இயேசு அப்பங்களைப் பலுகச்செய்கிற புதுமையில் ஒரு சிறுவனின் செயல் பாராட்டுதற்குரியதாக இருக்கிறது. ஒட்டுமொத்த மக்கள்கூட்டத்திற்கும் அவனிடத்தில் இருந்த குறைந்த அப்பங்கள் போதாதுதான். ஆனால், அவன் கொண்டு வந்த உணவுதான், அனைவருக்கும் பகிர்ந்து வழங்கப்பட்டது. ஒருவேளை அந்த சிறுவன் அங்கே இல்லாமல் இருந்திருந்தால், வரலாற்றில் ஒரு புதுமை நடைபெறாமல் போயிருக்கலாம். இந்த புதுமை நமக்கு அருமையான செய்தியையும் தருகிறது. நம்மிடம் இருப்பதை கடவுளிடம் நாம் கொண்டு வர வேண்டும். ஒருவேளை அது குறைவானதாக இருக்கலாம். ஆனால், நல்ல மனதோடு நாம் கடவுளிடத்தில் கொண்டு வருகிறபோது, கடவுள் அவற்றை பலுகச்செய்து, ஆசீர்வதிப்பார். இன்றைக்கு புதுமைகள் நடக்காமல் இருப்பதற்கு இது கூட ஒரு காரணமாக இருக்கலாம். நம்மிடம் இருப்பதை நாம் மட்டும் வைத்துக்கொள்ள வேண்டும் என்கிற எண்ணங்கள், மக்கள் நடுவில் பெருகிவிட்டது. அந்த சிறுவனும் இதேபோல் நினைத்திருந்தால், அங்கிருக்கிற மக்கள் கூட்டம் தங்களது பசியைப் போக்கியிருக்க முடியாது. அந்த சிறுவனின் பரந்துபட்ட உள்ளம், இருப்பதை கடவுளிடம்...