Tagged: இன்றைய சிந்தனை

கடவுள் நம்மோடு இருக்கிறவர்

இயேசு வாழ்ந்த காலத்தில், கடவுள் எங்கோ தொலைவில் இருக்கிறார் என்கிற ரீதியில்தான் கடவுளைப்பற்றிய பார்வை இருந்தது. கடவுள் காணமுடியாதவராக இருந்தார். கடவுள் தொடமுடியாதவராக இருந்தார். விடுதலைப்பயண நூல் 33: 12 – 23 வரை உள்ள இறைவசனங்களில், மோசே கடவுளைப்பார்த்த நிகழ்வு நமக்கு தரப்பட்டுள்ளது. ஆனால், அந்த நிகழ்வில் கூட, கடவுள் மோசேயிடம், “என் முகத்தையோ உன்னால் பார்க்க இயலாது. ஏனெனில், என்னைப்பார்த்த எவரும் உயிரோடிருக்க முடியாது…… நான் என் கையை அகற்றுவேன். நீ என் பின்புறத்தைக்காண்பாய். என் முகத்தையோ காணமாட்டாய்” என்றார். அப்படியிருக்கிற சூழ்நிலையில், இயேசு வெகுஎளிதாக “என்னைக்காண்பது தந்தையைக் காண்பது ஆகும்” என்கிறார். இது எப்படி? இயேசு கடவுளைப்பற்றியப் புதிய பார்வையை நமக்குத்தருகிறார். கடவுள் எங்கோ இருக்கிறவர் அல்ல. எங்கோ இருந்துகொண்டு நம்மை அறியாதவர் அல்ல. நம்முடைய துன்பங்கள், துயரங்கள், வாழ்வின் கஷ்ட, நஷ்டங்கள் தெரியாதவர் அல்ல. படைத்ததோடு அவரது பணி முடிந்துவிடவில்லை. தொடர்ந்து நம்மோடு அவர் இருக்கிறார்....

விண்ணக உறைவிடம்

”என் தந்தை வாழும் இடத்தில் உறைவிடங்கள் பல உள்ளன” என்று இயேசு சொல்வதற்கு பல வகையான விளக்கங்கள் தரப்படுகிறது. ஆரிஜன் என்பவரின் விளக்கத்தின்படி, மனிதன் இறக்கிறபோது, முதலில் அவர்களுடைய ஆன்மா, இந்த பூமியில் இருக்கிற ஓர் இடத்திற்குச் செல்கிறது அங்கு ஆன்மாக்களுக்கு பயிற்சியும், போதனையும் தரப்படுகிறது. அங்கு அவர்கள் தேர்ச்சிபெற்றவுடன், அந்த ஆன்மா விண்ணகத்திற்குச் செல்வதற்கு தகுதிபெறுகிறது. இப்படி ஒவ்வொருவரும் அவர்களின் அறிவுக்கு ஏற்றாற்போல, விண்ணகத்தைப்பற்றிய செய்திகளைத் தருகிறார்கள். ஆனால், சற்று இறையியல்பூர்வமாக இந்த இறைவார்த்தையைச் சிந்தித்தால், ”என் தந்தை வாழும் இடத்தில் பல உறைவிடங்கள் உள்ளன” என்பதற்கு, விண்ணகம் அனைவரையும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கிறது என்றும் நாம் பொருள் கொள்ளலாம். இந்த பூமியில் இருக்கக்கூடிய, மனிதன் தங்கக்கூடிய இடங்களில், சில சமயங்களில் அனைவருக்கும் போதுமான இடங்கள் இல்லாமல் இருக்கலாம். சத்திரங்களில் கூட்ட நெருக்கடியால், மக்கள் வெளியே நிறுத்தப்படும் நிலை ஏற்படலாம். ஆனால், விண்ணகத்தில் அப்படி ஒரு நிலை ஏற்படாது. காரணம், அனைவரும்...

என் கை எப்போதும் அவனோடு இருக்கும்

”கை” என்பது ஒருவரின் துணையைக் குறிக்கக்கூடிய வார்த்தையாக இருக்கிறது. நம்முடைய நண்பர்கள், நம்மை முழுமையாக அன்பு செய்யக்கூடியவர்கள், நமது துணையாளர்களாக இருக்கிறார்கள். இங்கே கடவுள் தன்னுடைய ஊழியருக்கு எப்போதும் துணையாக இருப்பதாக வாக்குறுதி கொடுக்கிறார். கடவுள் தன்னுடைய பணிக்காக பல மனிதர்களைத் தேர்ந்தெடுக்கிறார். அவர்களில் சிலர் அதனை ஏற்றுக்கொள்கிறார்கள். பலர், நமக்கு ஏன் இந்த வீண் தொல்லை? என்று ஒதுங்கிச் செல்கிறார்கள். அவர்கள் ஒதுங்கிச் செல்வதற்கு காரணமும் இல்லாமல் இல்லை. கடவுளின் பணியைச் செய்வது என்பது எளிதான காரியம் அல்ல.அந்த பணியைச் செய்கிறபோது, பலவிதமான சோதனைகள், இன்னல்கள், இடையூறுகளை நாம் சந்திக்க நேரிடும். எனவே தான், பலர் அதனை விரும்புவதில்லை. கடவுளின் பணி என்று சொல்கிறபோது, குருக்களும், துறவறத்தாரும் மட்டுமல்ல, பொதுநிலையினரும் இந்த பணியைச் செய்ய கடவுளின் அழைப்பைப் பெற்றிருக்கிறார்கள். அவர்களின் பணிவாழ்வில், கடவுளின் கரம், அதாவது அவரது துணை எப்போதும் இருக்கும் என்பதுதான், இந்த திருப்பாடல்(திருப்பாடல் 89: 1 –...

தீர்ப்பளிக்கும் வார்த்தை!

இயேசு உலகைத் தீர்ப்பிட வரவில்லை. அதை மீட்கவே வந்தார். ஆனால், அவரது வார்த்தைகள் தீர்ப்பளிக்கின்றன என்கிறார் இயேசு. ஆம், சற்று சிந்தித்துப் பார்த்தால் வியப்பு தரும் செய்தி இது. இயேசுவின் வார்த்தைகள் ஆறுதல் தருகின்றன. வாழ்வு தருகின்றன. நலம் தருகின்றன. வழிகாட்டுகின்றன. அத்துடன், தீர்ப்பிடவும் செய்கின்றன. இயேசுவின் வார்த்தைகளைக் கேட்கிற எவரும் ஒன்றில் அவ்வார்த்தைகளின்படி நடக்க வேண்டும். அல்லது அந்த வார்த்தைகளைப் புறக்கணித்து, அவற்றிற்கு மாறாக வாழ வேண்டும். இவை இரண்டில் ஒன்றைத்தான் செய்ய முடியும். இரண்டுமே ஒரு வகையான தீர்ப்புதான். வார்த்தையின்படி வாழ்கிறவர்கள் நல்ல தீர்ப்பைப் பெறுகிறார்கள். பாராட்டப்படுகிறார்கள். வார்த்தைக்கு மாறாக, எதிர் சான்றாக வாழ்பவர்கள் கெட்ட தீர்ப்பைப் பெறுகிறார்கள். வாழ்வை இழக்கிறார்கள். தீர்ப்பளிக்கும் இறை வார்த்தை பற்றி எச்சரிக்கையாய் இருப்போம். மன்றாடுவோம்: முடிவில்லா வாழ்வு தரும் வார்த்தைகளின் ஊற்றான இயேசு ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறோம். உமது வார்த்தையின்மீது நாங்கள் ஆர்வம் கொண்டு, அவற்றின்படி நடந்து உமக்குப் புகழ் சேர்ப்போமாக....

தந்தை – மகன் ஒற்றுமை

யோவான் 17: 11 ”தூய தந்தையே, நான் ஒன்றாய் இருப்பது போல், அவர்களும் ஒன்றாய் இருக்கும்படி நீர் எனக்கு அளித்த உம் பெயரின் ஆற்றலால் அவர்களைக் காத்தருளும்” என்று, தன்னுடைய சீடர்களுக்காக மன்றாடுகிறார். கிறிஸ்தவர்களுக்கு இடையேயான ஒற்றுமையை, தந்தை-உறவு ஒற்றுமையோடு ஒப்பிடுகிறார். எவ்வாறு கிறிஸ்துவும் இறைத்தந்தையும் ஒரே மனநிலையோடு இருக்கிறார்களோ, அவர்களைப் பிரிக்க முடியாதோ, அதேபோல கிறிஸ்தவர்களுக்கு இடையேயான மனநிலை இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். கிறிஸ்தவ வாழ்வின் முக்கியமான நோக்கமாக இந்த ஒற்றுமையை இயேசு குறிப்பிடுகிறார். நாம் வாழக்கூடிய வாழ்வில் அனைவருக்குமே ஒரு நோக்கம் இருக்கிறது. நாம் செய்யக்கூடிய செயல்பாடுகளிலும் இந்த நோக்கம் காணப்படுகிறது. அதேபோல, கிறிஸ்தவர்கள் அவர்களுக்கு நடுவில் இந்த ஒற்றுமையோடு வாழ வேண்டும் என்ற நோக்கத்தை உடையவர்களாக வாழ வேண்டும். எவ்வாறு தந்தையும், மகனும் ஒற்றுமையாக இருக்கிறார்களோ, அதே ஒற்றுமை கிறிஸ்தவ வாழ்விலும் வெளிப்பட வேண்டும். அந்த ஒற்றுமைக்கு ஆணிவேராக இருப்பது நாம் வெளிப்படுத்தக்கூடிய அன்பு....