Tagged: இன்றைய சிந்தனை

சகோதர அன்பு

 நாம் யாவரும் கடவுளின் மக்கள் என்று அழைக்கப்படுகிறோம். கடவுள் நம்மிடம் எத்துனை அன்பு கொண்டுள்ளார்,என்று பாருங்கள். 1 யோவான் 3:1. ஆண்டவரிடம் எந்தவொரு பாரபட்சமும் இல்லை. அவருடைய  சாயலாக படைக்கப்பட்ட நம் எல்லோரையும் சகோதர,சகோதரிகளாய்  அவருடைய உறுப்பாய் இருக்கும்படி படைத்திருக்கிறார். உடல் ஒன்றே: உறுப்புகள் பல, உடலின் உறுப்புகள் பலவாயினும் உடல் ஒன்றாயிருப்பதுபோல நாமும் கிறிஸ்துவின் உறுப்புகளாய் இருக்கிறோம். 1 கொரிந்தியர் 12 :12- 13. நீங்கள் யூதரா? கிரேக்கரா? செல்வந்தரா? அடிமையா? நாம் எல்லோரும் ஒரே தூய ஆவியால் ஒரே உடலாய் இருக்கும்படி திருமுழுக்கு பெற்று அந்த ஒரே ஆவியையே பானமாகவும் பெற்றோம். இவ்வாறு கடவுள் நம்மை படைத்திருக்கும்பொழுது நமக்குள் ஏன்  கோபம், சண்டை, பொறாமை, பகைமை, பிரிவினை, கட்சிமனப்பான்மை, கலாத்தியர் 5:20. இதையெல்லாம்விட்டு நாம் யாவரும் ஆண்டவர் விரும்பும் பிள்ளைகளாக மாறி வாழுவோம். ஆவியின் கனியாகிய அன்பு மகிழ்ச்சி,அமைதி,பொறுமை,பரிவு,நன்மை,நம்பிக்கை,கனிவு, தன்னடக்கம்,இவைகளைப் பற்றிக்கொண்டால் நம்மிடம் அன்பு நீரூற்றைப்போல் ஊறும். கலா 5: 22 நாமும் அவருடைய உறுப்பாய் மாறுவோம் என்பதில் ஐயமில்லையே! ஒருவர்...

பரிந்து பேசுகிற நம் தந்தை

கடவுளுக்கு மிகவும் பிரியமான அன்பான செல்வங்களே!!!      இன்று நீங்கள் எனக்காக பரிந்து பேச யாருமில்லையே! என்று கவலைப்படுகிறீர்களா? நான் என்ன செய்தாலும் அதில் குறை, குற்றம்,என்று சொல்கிறார்களே என்று கலங்கித் தவிக்கிறீர்களா?      உங்களுக்காக பரிந்து பேசுகிற ஒருவர் உண்டு, என்பதை நீங்கள் யாவரும்  தெரிந்து கொள்ள வேண்டும், என்று விரும்புகிறேன். அவரே நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து. 1 யோவான் 2 :1 மற்றும் 2 என்ற வசனத்தை வாசித்து பார்ப்போமானால் நன்கு விளங்கும்.     அதுமட்டுமல்ல, நாம் அறிந்தோ,அறியாமலோ, செய்யும் பாவங்களை நமக்கு மன்னித்து விண்ணுலகின் தந்தையிடம் பரிந்து பேசி நமக்கு எல்லா கவலைகளிலும் இருந்து விடுதலை வாங்கித் தருகிறார்.அவரை ஏற்றுக்கொண்டு அவரையே நம்புவீர்களா? பிள்ளைகளே, தந்தையரே, தாய்மார்களே, வாலிப சகோதரரே,  சகோதரிகளே, சிறுவர்களே, நீங்கள் யாவரும் கடவுளின் கடவுளின் வார்த்தையில் நிலைத்திருங்கள். 1 யோவான் 2 :12லிருந்து 17 வரை உள்ள வார்த்தைகளை தியானியுங்கள். உலகின் மீதும் அதில் உள்ளவை மீதும் அன்பு...

அன்பே உருவான இறைவன்

அன்பே உருவான இறைவன், இன்று உங்கள் ஒவ்வொருவரிடம் கூறும் வார்த்தை என்ன தெரியுமா? எனக்கு மிகவும் பிரியமான என் இரத்தத்தினால் சம்பாதித்த என் செல்லக் குழந்தைகளே! நீங்கள் என் ஊழியன்.[என் சொந்த பிள்ளைகள்]உங்கள் வழியாய் நான் இன்று மாட்சியுறுவேன். ஏசாயா 49:3. ஆம்,ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து உங்கள் வழியாய் மாட்சியுற இன்று உங்கள் உள்ளத்தில், உங்கள் இல்லத்தில் வருகிறேன், என்று சொல்கிறார். நீங்கள் செய்வதல்லாம் ஒன்றே ஒன்று தான்.அவரை உங்கள் உள்ளத்தில் ஏற்றுக்கொள்வீர்களா? இதோ அவருடைய இரத்தத்தினால் சம்பாதித்த நம்மை பார்த்து என் மகனே,என் மகளே உன் இருதயத்தை எனக்கு கொடுப்பாயா ? என்று கேட்கிறார்.பிரியமானவர்களே! உங்களை ஆண்டவருக்கு கொடுப்பீர்களா? நான் நாள் முழுதும் உழைக்கிறேன்.எனக்கு ஒன்றும் இல்லையே என்று ஏங்கித் தவிக்கும் அன்பானவர்களே!மனம் கலங்காதீர்கள். தாமே சோதனைக்கு உள்ளாகி துன்பபட்டதினால் சோதிக்கப்படுபவர்களுக்கு உதவி செய்ய அவர் வல்லவர்.  எபி 2:18. உங்கள் பணிக்கான பரிசு கடவுளிடம் இருக்கிறது. ஏசாயா 49:4. கேட்டு பெற்றுக்கொள்ளுங்கள்.கேட்கிற யாவருக்கும் கொடுக்க ஆவலாய் உங்கள் அருகில் காத்திருக்கிறார். ஜெபம். ====== விண்ணையும்,மண்ணையும் படைத்த...

இந்நாளின் ஆசீர்வாதம்

இந்த நாளுக்குரிய ஆசீர்வாதத்தை கடவுள் உங்களுக்கு தர ஆவலோடு இதோ உங்கள் அருகில்,உங்கள் பக்கத்தில் நின்றுக்கொண்டு இருக்கிறார் பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் – மத்தேயு 11:28. இதோ என்னையே உங்களுக்காக கொடுத்தேனே. நீங்கள் விரும்பி கேட்கும் ஆசீர்வாதத்தை தரமாட்டேனா என்னை நோக்கி கூப்பிடும் யாவரையும் நான் ஆற்றி தேற்றுவேன். “நீங்கள் என் பெயரால் எதை கேட்டாலும் செய்வேன்” – யோவான் 14 :14. ஜெபம். ————- அன்பே உருவான இயேசப்பா, உம்மிடத்தில் வருகிரயாவரையும் அணைத்து காத்து நடத்தும் தகப்பனே உமக்கு நன்றியை சமர்ப்பிக்கிறேன். என்னை நோக்கி கூப்பிடு,அப்பொழுது நான் உனக்கு மறு உத்தரவு அருளிச் செய்வேன் என்று வாக்கு கொடுத்த இறைவா, உம்மையே நம்பி கூப்பிடுகிறேன். என்னுடைய எல்லா கஷ்டத்தையும் நீக்கி கரம் பிடித்து வழி நடத்தி காத்துக்கொள்ளும். எல்லா துதி,கணம்,மகிமை,உமக்கே  உண்டாகட்டும். கிறிஸ்துவுக்கே புகழ்!  கிறிஸ்துவுக்கு நன்றி ! ஆமென்.