Tagged: இன்றைய சிந்தனை

தூய [பரிசுத்த] ஆவியால் நிரம்புவோம்.

அன்பார்ந்த தெய்வ ஜனங்களே! நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து இந்த உலகத்தில் பிறந்து வளர்ந்து திருமுழுக்கு பெற்று தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டார். என்று லூக்கா 4 :1 ல் வாசிக்கிறோம். கடவுளின் பிள்ளையாய் வந்த அவரே தூய ஆவியை பெற்றுக்கொண்ட பின்தான் ஊழியத்தில் ஈடுபட்டார். ஆண்டவராகிய அவருக்கே தூய ஆவி தேவைபட்டது என்றால் நாம் ஒவ்வொருவரும் அதைக் கேட்டு பெற்றுக்கொள்வது எத்தனை அவசியமானது என்று நாம் ஒவ்வொருவரும் புரிந்து செயல்பட வேண்டும். பரிசுத்த ஆவி நமக்கு கிடைக்குமா? என்று யோசிக்கிறீர்களா? நாம் நமது ஆண்டவரிடம் கேட்டால் நிச்சயம் நமக்கு தருவார். ஏனெனில் கேட்டவர் எல்லாரும் பெற்றுக்கொள்வர். தட்டுவோருக்கு திறக்கப்படும். நீங்கள் யாராவது உங்கள் பிள்ளை மீனை கேட்டால் பாம்பை கொடுப்பீர்களா? அல்லது முட்டையை கேட்டால் தேளைக் கொடுப்பீர்களா? நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகளை கொடுக்க வேண்டும் என்று இருக்கும்பொழுது ஆண்டவர் தூய ஆவியை நமக்கு கொடுக்காமல் இருப்பாரா? தூய ஆவியை கொடுப்பது எத்தனை உறுதி.  லூக்கா 11ம் அதிகாரம் 9 லிருந்து 13 வரை வாசிக்கலாம். தூய...

பக்தி வைராக்கியம் காத்திடுவோம்

கடவுளின் இறைமக்களே! பிரியமானவர்களே!! நம்முடைய பக்தி ஆதாயம் தருவதுதான். அது யாருக்கென்றால் மனநிறைவுள்ளவர்களுக்கே தரும். உலகத்தில் நாம் எதையும் கொண்டுவந்ததில்லை. உலகத்தை விட்டு எதையும் கொண்டு போகவும் முடியாது. இதை யாவரும் அறிந்ததே. உண்ண உணவும், உடுக்க உடையும் இருந்தால் அவற்றில் மனநிறைவு கொள்வோம். அதிகமான செல்வம் சேர்ப்பதற்காய் பலர் பக்தியை விட்டு பின்வாங்கி தகாத  காரியங்களில் ஈடுபடுவதை காண்கிறோம்.கடவுளின்  பிள்ளைகளாகிய நாம் பொருள் ஆசையை விட்டு விடுவோம். ஏனெனில் பொருள் ஆசையே எல்லா தீமைகளுக்கும் காரணமாகவும், ஆணிவேராகவும் இருக்கிறது. இதைத்தான் நாம் 1 திமொத்தேயு 6: 6,7,10 ஆகிய வசனங்களில் வாசிக்கிறோம். அன்பார்ந்தவர்களே நாம் வீணான ஆசையில் இருந்து தப்பி நீதி, இறைப்பற்று, நம்பிக்கை, மனஉறுதி, பணிவு ஆகியவற்றை நாடித்தேடுவோம். விசுவாச வாழ்க்கையில் ஏற்படும் போராட்டங்களை எதிர்க்கொண்டு கடவுளின் பேரில் இன்னும் அதிகமான நம்பிக்கைவைத்து நிலையான வாழ்வை பற்றிக்கொள்வோம். அதற்காகவே கடவுள் நம்மை அழைத்து அறிந்திருக்கிறார். இனி வாழ்வது நாம் அல்ல, கிறிஸ்துவே நம்மில் வாழட்டும். அவர்மீது கொண்டுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் வாழுவோம்....

கண்டித்து திருத்தும் நம் ஆண்டவர்

அன்பானவர்களே!!! நாம் இந்த உலகத்தில் வாழும் வாழ்க்கையில் நமக்கு எது முக்கியம் என்று தெரியாமல் அநேக காரியங்களில் தலையிட்டு சில சமயங்களில் நமக்கு நாமே எதிரி என்று சொல்லும் அளவுக்கு நம் எண்ணங்களும்,செயல்களும்,சில நேரங்களில் பொல்லாதவனவாக மாறிவிடுகிறது. அதனால்தான் நம்முடைய தூய ஆவியார் நமது வலுவற்ற நிலையில் நமக்கு துணை நிற்கிறார். ஏனெனில் எதற்காக, எப்படி நாம் இறைவனிடம் வேண்டுவது என்று நமக்குத் தெரியாது. தூய ஆவியார் தாமே சொல் வடிவம் பெறமுடியாத நம்முடைய பெருமூச்சுகளின் வாயிலாக நமக்காக பரிந்து பேசுகிறார். உள்ளங்களை துருவி ஆயும் கடவுள் தூயஆவியாரின் மனநிலையை அறிவதால் கடவுளுக்கு உகந்த முறையில் நமக்காக வேண்டுதல் செய்கிறார். நாம் செய்ய வேண்டிய காரியத்தை நமக்கு தெளிவாக புரியவைக்கிறார். ரோமையர் 8:26-27 . ஒருசில நேரங்களில் நாம் வேண்டிக்கொள்வது நமக்கு கிடைக்காத பட்சத்தில் நம் மனம் சோர்ந்து போகிறோம். இல்லை பிரியமானவர்களே!! அதைவிட மேலான பெரிய காரியத்தை தரும்படிக்கே கடவுள் சமயத்தில் நாம் கேட்டதை உடனே கொடுப்பதில்லை. அதைப்பெற்றுக்கொள்ள நம்மை தகுதி படுத்துவார்....

பொங்கல் 2015

அன்பார்ந்த இந்த இணையதள வாசகர் ஒவ்வொருவருக்கும் எங்கள்  அன்பின் இனிய பொங்கல் விழா நல்வாழ்த்துக்கள். ஆண்டவர் மோசேயிடம் கூறியது என்னவென்றால் நீ இஸ்ரவேல்  மக்களிடம் சொல்லவேண்டியது; நான் உங்களுக்கு கொடுக்கும்  நாட்டில் நீங்கள் வந்து வெள்ளாண்மை வைத்து அதை அறுவடை செய்யும் பொழுது அறுவடையின் முதல் விளைச்சலான ஒரு கதிர்க்கட்டினைக் குருவிடம் கொண்டுவர வேண்டும். உங்கள் சார்பாக ஏற்கத்தக்கதாக குரு அந்த தானியக் கதிர்க்கட்டினை ஆண்டவரின் திருமுன் ஆரத்திபளியாகவும், மிருதுவான மாவை எண்ணெயில் பிசைந்து ஆண்டவர் விரும்பும் நறுமணமிக்க எரிபலியாகவும்,செலுத்துங்கள், என்று லேவியர் 23ம் அதிகாரத்தில் 9 லிருந்து 14 வரை உள்ள வசனங்களில் வாசிக்கிறோம். இந்த 23ம் அதிகாரம் பாஸ்கா, பெந்தகோஸ்தே, கூடாரப்பெருவிழா, புத்தாண்டுவிழா, பாவக்கழுவாய் நாள், ஆகிய சமயப் பெருவிழாக்கள் பற்றி கூறுகிறது.இந்த விழாக்களுக்கு மக்களைக் கடவுள் அழைத்து அவர்களை திருப்பேரவையாக ஓன்று சேர்க்கிறார். பாஸ்கா, என்றால் இஸ்ரவேலர் ஆடுமாடு மேய்ப்பவர்கள் என்ற முறையில் ஓர் ஆட்டை பலியாக்கும் பெருவிழாவாகவும், வாற்கோதுமை அறுவடையின் தொடக்கவிழாவாகவும், நம் நாட்டில்  நாம் கொண்டாடும்...

மற்றவர்களை உயர்ந்தவர்களாக எண்ணுவோம்

அன்பானவர்களே!!!  இந்த உலகத்தில் யாரும் அறிவாளியும், கிடையாது.  யாரும் முட்டாளும் கிடையாது. அவரவர் தேவைக்கேற்ப கடவுள் ஞானத்தையும்,புத்தியும்,கொடுக்கிறார். யார் அவரிடம் அதிகமாக கேட்கிறார்களோ அவர்கள் யாவரும் பெற்றுக்கொள்வார்கள். இதை யாக்கோபு 1:5,6 ஆகிய வசனங்களில் காணலாம். ஆனால் நாம் கேட்பதை மிகுந்த நம்பிக்கையோடு கேட்கவேண்டும்.  இதைதான் நம் தேவன மிகவும் விரும்புகிறார். சில சமயத்தில் நம்மைவிட சிறிய வயதில் இருப்பவர்களிடம் இருந்து நமக்கு ஒரு நல்ல விஷயம் கிடைக்கும்.வேதத்தில் நாம் 2 அரசர்கள் 5ம் அதிகாரத்தில் 1லிருந்து 13 வரை உள்ள வசனத்தை வாசிப்போமானால் சீரியா மன்னனின் படைத்தளபதி நாமான் போரிட்டு அந்த நாட்டுக்கு பெரும் வெற்றியை வாங்கி கொடுத்தான். ஆனால் அவனோ தொழுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தான்.மன்னனின் நன்மதிப்பை பெற்ற அவன் வலிமை மிக்க வீரனாகவும் இருந்தான். அவன் வீட்டில் இஸ்ரவேல் நாட்டை சேர்ந்த ஒரு சிறு பெண் அவன் மனைவிக்கு பணிவிடை செய்து வந்தாள். சிறுபெண் தன் தலைவியிடம் என் தலைவர் சமாரியாவில் இருக்கும் இறைவாக்கினர் எலிசாவிடம் சென்றால் அவர் இவர் தொழுநோயை...