Tagged: இன்றைய சிந்தனை

வாழ்வு என்னும் கொடையைப் போற்றுவோம்

இழப்பீடு என்பது இழப்பிற்கு சமமான ஒன்றைக் கொடுப்பதாகும். நாம் ஏதாவது பொருளை இழந்து விட்டால், அல்லது மழை, வெள்ளத்தில் நமது பொருட்களை இழந்துவிட்டால், அரசாங்கம் நமக்கு இழப்பீடு தருகிறது. அரசாங்கம் தரக்கூடிய இழப்பீடு நூறில் ஒரு பங்குக்கு கூட சமமாகாது என்பது வேறு கதை. ஆனால், இழப்பீடு வழங்குகிறது. அதேபோலத்தான், விபத்திற்கென்று இழப்பீடு, மருத்துவ இழப்பீடு என்று, இதில் பல வகைகள் அடங்கியிருக்கிறது. ஆக, ஒன்றிற்கு ஈடாக, அல்லது ஈடுபடுத்தும்விதமாகக் கொடுக்கப்படுவதுதான் இழப்பீடு என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். இன்றைய நற்செய்தியில் வாழ்விற்கு ஈடாக எதை நாம் கொடுக்க முடியும்? என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. பொருட்களுக்கு இழப்பீடாக பணத்தைக் கொடுத்துவிடலாம். ஆனால், இழப்பீடு தர முடியாத ஒன்று இருக்கிறது என்றால், அது நிச்சயம் வாழ்வு தான். பொன் கோடி கொடுத்தாலும், பதவி, புகழ், அந்தஸ்து பெற்றாலும், நமது வாழ்வை இழந்துவிட்டால், அவ்வளவுதான். இந்த உலகத்தில் ஒன்றுமே இல்லை. எனவே, வாழ்வை பாதுகாப்போடு,...

இயேசு காட்டு புதிய வாழ்வியல் நெறிமுறை

இயேசு தான் வாழ்ந்த காலத்திலே ஒரு புதிய வாழ்க்கை முறையைக் கொண்டு வருகிறார். இதுவரை உலகம் கருதியவற்றிலிருந்து, அவர் கொண்டு வந்திருந்த வாழ்க்கை முறை முற்றிலும் மாறுபட்டு இருந்ததால், யூதர்களால் அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மாறாக, அது கேலி செய்யப்பட்டது. அந்த புதிய வாழ்க்கை முறைதான் இயேசுவின் சாவுக்கும் காரணமாக அமைந்தது. இயேசு உயிரோடு வாழ்ந்தது வரை, அவருடைய புதிய வாழ்க்கை முறை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இயேசுவிடமிருந்து வல்லமையைப் பெற்றுக்கொண்ட நோயாளிகளும், அவருடைய குணப்படுத்துகின்ற ஆற்றலை வியந்து பார்த்தவர்களும், அவருடைய போதனையை வேறுபாடாகத்தான் பார்த்தனர். இயேசுவின் புதிய வாழ்க்கை முறை தத்துவத்தை அவர்கள் அப்படிப் பார்த்ததற்கும், காரணம் இல்லாமல் இல்லை. அவர்கள் வாழ்ந்த சூழல் அப்படித்தான் அவர்களுக்குக் கற்றுக்கொடுத்திருந்தது. இயேசு மகிமை என்பதை சிலுவையின் வழியாகப் பார்த்தார். மக்களோ அடுத்தவரைப் போரில் வெல்வதாகவும், அதிகாரத்தைக் கைப்பற்றுவதாகவும் பார்த்தனர். உயிர்விடுதலை மக்களுக்கு வாழ்வு தரும் கொடையாக, மிகப்பெரிய தியாகமாக இயேசு பார்த்தார். மக்களோ அதை கோழைத்தனமாகப்...

துன்பங்கள் விசுவாசத்தைப் பலப்படுத்தும் கருவிகள்

யூதர்கள் தங்களை தூய இனத்தவராக கருதினர். அவர்கள் வேறு இனத்தவரிடம் பெண் கொடுப்பதுமில்லை. எடுப்பதுமில்லை. அவர்களோடு எந்த உறவும் வைப்பதில்லை. அப்படி எடுத்தால் அவர்கள் தூய யூத இனத்திலிருந்து விலக்கி வைக்கப்படுவார்கள். எடுத்துக்காட்டு. சமாரியர்கள். கானானியர்களுக்கும், யூதர்களுக்கும் தொடக்கத்தில் இருந்தே பகைமை உணர்வு இருந்து வந்தது. இயேசுவினுடைய பணி பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டுமென்றால், அவர் தன்னுடைய பணிவாழ்வின் எல்லையை குறுகிய வட்டத்தில் உறுதிப்படுத்த வேண்டும். ஆனால், தன்னுடைய பணிவாழ்வின் எல்லையை குறுகிய வட்டத்தில் உறுதிப்படுத்த வேண்டும். ஆனால், இங்கேயோ ஒரு புற இனத்துப்பெண் அவரிடத்திலே உதவி கேட்கிறாள். மறுக்கவும் முடியாது. எனவே, உதவுவதற்கு முன்னதாக அவளுடைய விசுவாசத்தை உறுதிப்படுத்த இயேசு முயற்சி எடுக்கிறார். அதனுடைய வெளிப்பாடு தான் இந்த உரையாடல். நம்முடைய வாழ்விலும் துன்பங்கள் வருகிறபோது, கடவுளைக்கடிந்து கொள்ளாமல், கடவுள் எதையாவது உணர்த்த விரும்புகிறாரா? என்று நம் வாழ்வை சுய ஆய்வு செய்து கொள்ள அழைக்கப்படுகிறோம். நமது வாழ்வில் நடப்பவை...

பயப்பட வேண்டாம்

பயம் என்பது இந்த மானிட வாழ்வின் அன்றாட நிகழ்வுகளுள் ஒன்று. நாம் பலவற்றிற்கு பயப்படுகிறோம். இன்றைய நற்செய்தி வாசகத்தின் சிந்தனையாக இந்த பயத்தை எடுத்துக்கொள்வோம். இதனை நாம் இரண்டு விதங்களில் சிந்திக்கலாம். எவற்றிற்கு பயப்பட வேண்டும்? எவற்றிற்கு பயப்படக்கூடாது? வாழ்வின் சவால்களுக்கு, வாழ்க்கையில் சந்திக்கும் சங்கடங்களுக்கு, வாழ்வின் தொல்லைகளுக்கு நாம் பயப்படக்கூடாது. பயப்படத் தேவையில்லை. மாறாக, நேர்மையற்ற செயல்பாடுகளில் நாம் ஈடுபடும்போது, பொய்மைக்கு துணைபோகிற போது, நாம் பயப்பட வேண்டும். நமது வாழ்க்கை இதற்கு முற்றிலும் முரணானதாக இருக்கிறது என்றால், அது மிகையாகாது. காரணம், நாம் சவால்களை, சங்கடங்களைக் கண்டு பயப்படுகிறோம். நேர்மையற்ற காரியங்களுக்கு துணைபோவதற்கு நாம் பயப்படுவது கிடையாது. இன்றைய நற்செய்தியிலும் இதே தவறுதான் நடக்கிறது. சீடர்கள் இயேசுவோடு இருந்திருக்கிறார்கள். பல பேய்களை இயேசு ஓட்டுவதை, கண்கூடாக கண்டிருக்கிறார்கள். புதுமைகளை அவர்களும் செய்திருக்கிறார்கள். ஆனாலும், அவர்கள் பயப்படுகிறார்கள். இயேசுவைக் கண்டே பயப்படுகிறார்கள். நேர்மையான காரியங்களில் நாம் ஈடுபடுகிறபோது, நிச்சயம் பல...

இயேசுவின் தனிமை

இயேசு படகிலேறி தனிமையான ஓரிடத்திற்குச் செல்கிறார். இப்போதுதான் அவரது உறவினர் திருமுழுக்கு யோவான் கொல்லப்பட்டிருக்கிறார். அவரது இறப்பு இயேசுவுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், அந்த இறப்பு அவருக்குள்ளாக நிச்சயம் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியிருக்கும். ஏனென்றால், திருமுழுக்கு யோவான் எந்த அளவுக்கு நேர்மையானவர் என்பதை, இயேசு அறியாதவரல்ல. அவருக்கு நேர்ந்த கதி, நிச்சயம் தனக்கும் நேரும் என்பதை இயேசு உணர்ந்திருப்பார். அந்த உணர்வு அவருக்குள்ளாக பல கேள்விகளை உண்டுபண்ணியிருக்கும். இயேசு மக்களிடமிருந்து தனிமையான இடத்திற்குச் சென்றதற்கு மூன்று காரணங்கள் கொடுக்கப்படுகிறது. அவரின் பணிவாழ்வில் அவரது உடலுக்கு ஓய்வு தேவையாயிருந்தது. எப்படியும் ஓய்வு எடுக்க வேண்டும் என்பதற்காக அவர் சென்றிருக்கலாம். யோவான் கொலை செய்யப்பட்டிருக்கிற சூழலில் தனது உயிருக்கும் ஆபத்து ஏற்படலாம் என்று இயேசு நினைத்திருக்கலாம். யோவானின் இறப்பு, அவரது சிலுவை மரணத்தை நிச்சயம் நினைவுபடுத்தியிருக்கும். அந்த கலக்கம், கவலை, கண்ணீர், இயேசுவுக்கு தளர்ச்சியை கொடுத்திருக்க வேண்டும். எனவே, அவர் உடல் அளவிலும், உள்ளத்து அளவிலும், ஆன்ம...