Tagged: இன்றைய சிந்தனை

நற்செய்தியாளர் மத்தேயு

மத்தேயுவின் இயற்பெயர் லேவி என்று அழைக்கப்படுகிறது. இதனுடைய அர்த்தம் “சேர்க்கை” என்பதாகும். எபிரேய மொழியில் மத்தேயு என்றால் “கடவுளின் கொடை“ என்று அர்த்தம் சொல்கிறார்கள். திருத்தூதர்களில் ஒருவரான அந்திரேயா வழியாக, இவர் அறிமுகமாகிறார். மற்ற திருத்தூதர்கள் சாதாரணமானவர்கள். ஆனால், அவர்களை விட செல்வத்திலும், அதிகாரத்திலும் உயா்ந்த வரிவசூலிக்கக்கூடியவராக மத்தேயு இருக்கிறார். கப்பாநாகும் அருகில் இருக்கிற கலிலேயா கடற்கரை அருகில் தான், வரிவசூலித்துக்கொண்டிருந்தார். உரோமையர்களுக்காகப் பணிசெய்து கொண்டிருந்ததாலும், வரிவசூலிக்கக்கூடிய தொழிலைச் செய்து வந்ததாலும், மக்களின் கோபத்திற்கும், வெறுப்பிற்கும் ஆளானவர். ஆனாலும், இயேசுவின் அழைப்பை ஏற்று, அந்த மக்களுக்கே பணிபுரிவதற்கு முன்வருகிறார். இவர் எத்தியோப்பியா, பெர்ஷியா, பார்த்தியா, எகிப்து நாடுகளுக்குச் சென்று, வேதம் போதித்ததாக பாரம்பரியம் கூறுகிறது. எகிப்து நாட்டில் அரசாண்ட அரசனின் மகனை உயிருடன் எழுப்பினார். தொழுநோயால் தாக்கப்பட்ட அந்த நாட்டு இளவரசி இபிஜினாவையும் குணப்படுத்தினார். மத்தேயு தனது நற்செய்தியை யூதர்களுக்கு எழுதுகிறார். பழைய ஏற்பாடு நூலை முழுமையாகக் கற்றுக்கொண்டதை, அவர் எழுதுகிற...

ஆண்டவர் எனக்குச் செவிசாய்த்தார்

ஆண்டவர் இரக்கமுள்ளவர். எவ்வளவு பெரிய தவறு செய்தாலும், உண்மையான மனமாற்றத்தோடு திரும்பி வந்தால், நிச்சயம் கடவுள் நம்மை ஏற்றுக்கொள்வார் என்பதை, அனுபவப்பூர்வமாக வெளிப்படுத்தக்கூடிய ஒரு பாடல் தான் இந்த திருப்பாடல் (திருப்பாடல் 116: 1 – 2, 3 – 4, 5 – 6, 8 – 9). இறைவனிடத்தில் நம்பிக்கை உணர்வோடு நாம் மன்றாடுகிறபோது, இறைவனின் அருளும், ஆசீரும் நமக்கு நிறைவாகக் கிடைக்கும் என்பதை, இந்த திருப்பாடல் நமக்கு வெளிக்காட்டுவதாக அமைகிறது. துன்பத்திலும், துயரத்திலும், குற்ற உணர்ச்சியிலும் சாவை எதிர்நோக்கியிருக்கிற மனிதன் என்ன செய்வதென்று தெரியாமல் திணறிக்கொண்டிருக்கிறான். சாவை எதிர்கொள்ளவும் பயந்து குழப்பமான நிலையில் புலம்பிக் கொண்டிருக்கிறான். இப்படிப்பட்ட சூழ்நிலையில், அவன் கடவுளைத் தேடுகிறான். அவனிடத்தில் இப்போது இருப்பது தான் செய்த தவறுகளுக்காக மனம் வருந்திய நிலை. ஆனால், அவன் ஆச்சரியப்படக்கூடிய அளவுக்கு கடவுள் அவனை ஏற்றுக்கொள்கிறார். அவனுக்கு தன்னுடை மன்னிப்பை வழங்கி, அவனுக்கு பிரச்சனைகளிலிருந்து விடுதலை கொடுக்கிறார்....

நம்பிக்கை என்னும் நற்பண்பு

பழங்காலத்தில் மக்கள் தீய ஆவிகள் இருப்பதை முழுமையாக நம்பினர். காற்று முழுவதும், ஊசி நுழையாத அளவுக்கு தீய ஆவிகள் இருந்ததாக அவர்களிடையே ஒரு நம்பிக்கை இருந்தது. இந்த தீய ஆவிகள் சுத்தமில்லாத பகுதிகளில் குறி;ப்பாக கல்லறைகள், பாலைவனம் போன்ற இடங்களில் வாழ்ந்ததாகவும் ஒரு பேச்சு இருந்தது. இந்த தீய ஆவிகள் பயணிகளுக்கும், புதிதாக திருமணம் செய்த தம்பதியர்க்கும், குழந்தை பெற்றெடுத்த பெண்ணுக்கும், குழந்தைகளுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்தது. தீய ஆவிகளைப்பற்றிய அச்சம் இருந்த அந்த காலச்சூழ்நிலையில் இயேசு துணிவோடு தீய ஆவிகளிடம் பேசுவது அவர் கடவுள் மீது வைத்திருந்த முழுமையான நம்பிக்கையைப்பறைசாற்றுவதாக அமைகிறது. இன்றைய காலத்தில், பேய்களையும், தீய ஆவிகளையும் நம்புகிற அளவுக்கு கடவுள் மீது நம்பிக்கை இல்லாதது மிகப்பெரிய வேதனையைத்தருகிறது. எல்லாவற்றிற்கும் காரணம் தீய ஆவிகள் என்று நம்புகிற நமக்கு கடவுள் நம்பிக்கை எங்கே போயிற்று? இயேசு அதனைக் கற்றுத்தருகிறார். கடவுள் நம்பிக்கை இருக்கிறவனுக்குத்தான் துணிவு இருக்கும். கடவுள் மீது...

இயேசுதரும் அமைதி

ஒவ்வொரு புதுமையும், முன்னொரு காலத்தில் இருந்த புதுமையாக மட்டும் இருந்தால், அது நமக்குள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை. அது நடந்து முடிந்து விட்டது. இயேசு வாழ்ந்தார். புதுமைகள் செய்தார். அவ்வளவுதான் என்று யோசிக்கத்தோன்றும். இயேசு வாழ்ந்தபோது மட்டும் தான், கடலை அடக்குவாரா? அப்படியென்றால், சீறி எழுகின்ற அலைகளுக்கும், கடற்காற்றும் இப்போதும் சிக்கிக்கொண்டிருக்கிறவர்களை அவர் காப்பாற்ற மாட்டாரா? என்ற கேள்வியும் நமக்குக் கேட்கத்தோன்றும். இயேசுவின் வல்ல செயல்களும், புதுமை செய்யும் ஆற்றலையும் மட்டும் இந்த பகுதி நமக்குத் தெரிவிப்பதற்காக எழுதப்படவில்லை. அதையும் தாண்டி நாம் சிந்திப்பதற்கு, இது நமக்கு அழைப்பு விடுக்கிறது. இயேசு இருக்கிற இடத்தில் பிரச்சனைகளுக்கு இடமில்லை. மாறாக, அமைதி மட்டும் தான் இருக்கும், என்கிற செய்தியை, இந்த வாசகம் நமக்குத்தருகிறது. வாழ்வின் எத்தகைய சூழ்நிலையில் நாம் வாழ்ந்தாலும், இயேசு நம்மோடு இருந்தால் போதும். நமது வாழ்க்கை அமைதியாகப் பயணிக்கும். அந்த அனுபவத்தை நாம் பெற்றுக்கொண்டால், நமது வாழ்க்கையில் நாம் அமைதியாகப்...

ஒன்றுபட்ட வாழ்வு

தோமா இயேசு மீது அளவுகடந்த நம்பிக்கை வைத்திருந்தார் என்பதில் நாம் சந்தேகம் கொள்ள முடியாது. அவர் மீது மட்டற்ற அன்பும் கொண்டிருந்தார். அதனால் தான், மற்ற சீடர்கள் யூதேயா செல்லத்தயங்கியபோது (யோவான் 11: 16) அவர் துணிவோடு செல்வதற்கு மற்றவர்களையும் அழைக்கிறார். இயேசுவின் இறப்பு சீடர்களுக்கெல்லாம் மிகப்பெரிய அதிர்ச்சி. அந்த இழப்பு ஈடு கட்ட முடியாதது. இயேசுவின் வாழ்க்கை இவ்வளவு குறைந்த நேரத்திற்குள் முடிந்துவிடும் என்று அவர்கள் ஒருபோதும் நினைக்கவில்லை. எனவே சீடர்கள் ஒவ்வொருவருமே கவலைபடிந்த ரேகையோடு இருக்கிறார்கள். சீடர்கள் ஒன்றுபட்டு, கவலையோடு ஒருவர் மற்றவரைத் தேற்றிக்கொண்டு இருக்கிறபோது, தோமா அவர்களோடு இல்லை. ஒன்றுபட்டு இருப்பதை தோமா விரும்பவில்லை. எனவேதான், அவர் வெளியே செல்கிறார். துன்பம் என்பது தனிமையிலே நம்மைச் சோர்வுறச்செய்யக் கூடியது. நமது விசுவாசத்தை தளர்ச்சியுறச்செய்யக் கூடியது. துன்பநேரத்தில், ஒருவர் மற்றவருக்கு உற்ற துணையாளராக இருக்க வேண்டும். அதுதான் உண்மையான கிறிஸ்தவ வாழ்வு. ஒன்றுபட்டு வாழாமல், நம்மையே தனிமைப்படுத்திக்கொண்டு வாழ்கிறபோது,...