Tagged: இன்றைய சிந்தனை

உடனிருப்பும், ஒத்துழைப்பும்

இயேசுவின் போதனைகளை நாம் கேட்கிறபோது, நம்மால் அவரைப் பின்தொடர முடியுமா? அவருடைய போதனையில் நிலைத்து நிற்க முடியுமா? என்கிற சிந்தனைகள் நமது உள்ளத்தில் ஓட ஆரம்பிக்கிறது. நிச்சயம் இயேசுவின் போதனைகளை நமது வாழ்வில் ஏற்று, வாழ முயற்சிப்பது சவாலான ஒன்றுதான். ஆனாலும், நாம் அனைவரும் அப்படிப்பட்ட வாழ்வை வாழ வேண்டும், கடவுளுக்கு ஏற்புடையதாக நமது வாழ்வு அமைய வேண்டும் என்று நற்செய்தி நமக்கு கற்றுக்கொடுக்கிறது. நாம் போதனைகளை வாழ முயற்சி எடுத்து, அதில் நம்மால் வாழ முடியாவிட்டாலும், குறைந்தபட்சம், கிறிஸ்துவின் போதனைகளை வாழ முயற்சி எடுக்கும் அனைவருக்கும் நமது உடனிருப்பையும், ஒத்துழைப்பையும் முழுமையாகக் கொடுக்க வேண்டும் என்பது நமது விருப்பமாக இருக்கிறது. ஒரு ஓட்டப்பந்தயத்தில் பல வீரர்கள் ஓடுகிறார்கள். ஓடக்கூடிய அனைத்து வீரர்களையும் மக்கள் கைதட்டி உற்சாகப்படுத்துகிறார்கள். அவர்கள் வெற்றி பெறுவதோ, தோல்வியடைவதோ, அவர்களுக்கு கிடைக்கும் பாராட்டிற்கு தடையாக இருப்பது இல்லை. அதேபோலத்தான், கடவுளின் வார்த்தையை வாழ முயற்சி எடுக்கும் அனைவருக்கும்...

நல்ல நிலத்தில் விழுந்த விதைகளோ விளைச்சலைக் கொடுத்தன

உருவகம் என்பது ஒரு கருத்தை எளிதாக மக்களுக்கு உணர்த்த பயன்படுத்தப்படும் ஓர் உக்தி. அத்தகைய உருவகத்தை திருப்பாடல் ஆசிரியர் தன்னுடைய பாடல்களில் பயன்படுத்துகிறார். உதாரணமாக, ஆண்டவரை ஆயனாக உருவகப்படுத்துகிறார். இஸ்ரயேல் மக்களுக்கு ஆயன் என்கிறவர் அவர்களுடைய வாழ்வோடு கலந்துவிட்டவர். ஏனெனில் அவர்கள் ஆட்டுமந்தைகளை மேய்த்து வந்தனர். அந்த ஆடுகளை காவல் காப்பதற்கு ஆயர்களை நியமித்திருந்தார்கள். எனவே, ஆயரின் கடமைகளை முழுமையாக அறிந்திருந்ததனால், ஆசிரியர் இதனைப் பயன்படுத்துகிறார். அதேபோல, இன்றைய திருப்பாடலில் (திருப்பாடல் 65: 9, 10, 11 – 12, 13), நிலத்தை உருவகமாகப் பயன்படுத்துவதைப் பார்க்கிறோம். மனிதர்களை நிலத்திற்கு ஒப்பிடுகிறார். இறைவன் மனிதர்களைப் பண்படுத்துகிறார். இறைவாக்கினர் வாயிலாக வழிநடத்துகிறார். இறைவார்த்தையை விதைக்கிறார். விதைக்கிற ஒருவர் பலனை எதிர்பார்ப்பது நியாயம். அதேபோல இறைவார்த்தையை விதைத்து விட்டு, இறைவன் விளைச்சலுக்காக காத்திருக்கிறார். நல்ல விளைச்சலைக் கொடுப்பதும், கெடுப்பதும் நம்முடைய கைகளில் தான் இருக்கிறது. விளைவதற்கு தேவையான எல்லா வசதிகளையும் இறைவன் நமக்குக் கொடுக்கிறார்....

வாழ்வின் சவால்களில் இறைப்பராமரிப்பு

கடவுளின் அன்பும், பராமரிப்பும் எந்த அளவுக்கு நம்மோடு இருக்கிறது என்பதை, எடுத்துரைக்கக்கூடிய அற்புதமான பகுதி. கடவுளுடைய பணியை நாம் செய்கிறபோது, பலவிதமான மனிதர்களைச் சந்திக்கிறோம். நம்மோடு கூட இருந்து, நம்மைக்காட்டிக்கொடுக்கிறவர்கள், நம்மோடு நயவஞ்சகமாகப் பேசிக்கொண்டு, மறுதலிக்கிறவர்கள், நம்மை எப்போது சாய்க்கலாம் என்று தருணம் பார்த்துக்கொண்டிருக்கிறவர்கள், என்று பலவகையான மனிதர்களை நாம் பார்க்கிறோம். இந்த மனிதர்களுக்கு நடுவில் தான், நாம் வாழ வேண்டும். இவர்களோடு தான் நமது வாழ்வும் இணைந்து இருக்கிறது. நாம் விரும்புகிறோமோ, இல்லையோ, இவர்களும் இந்த உலகத்தில் வாழ்கிறார்கள் என்பதை, நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். வாழ்க்கை எப்போதும் நாம் நினைத்தது போல இருக்காது. நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால், பல தடங்கல்களை சந்திக்கிறோம். பல மனிதர்களின் மோசமான முகங்களை பார்க்கிறோம். ஒருகட்டத்தில் நாம் சோர்ந்து போகிறோம். பேசாமல், ஊரோடு ஒருவராக வாழ்ந்து விடலாமே என்று நினைக்கிறோம். நாம் கொண்டிருக்கக்கூடிய மதிப்பீடுகளையும், விழுமியங்களையும் காற்றில் பறக்க விட்டுவிடுகிறோம். இப்படியான...

தெளிவான இலக்கு

இயேசு தனது சீடர்களை கடவுளின் பணிக்காக அனுப்பும்போது, பிற இனத்தவரின் பகுதிக்குச் செல்ல வேண்டாம் என்று சொல்கிறார். இயேசு கடவுளின் மகன். இந்த உலகத்தையே படைத்து பராமரிக்கிறவர். இந்த உலகத்தில் உள்ள அனைவருமே அவரின் பிள்ளைகள். அப்படியிருக்க, இயேசு இப்படிப்பட்ட ஒரு குறுகிய எண்ணத்தை பறைசாற்றும் அறிவுரையைக்கூற வேண்டுமா? இயேசு குறுகிய மனம் கொண்டவரா? இயேசு சிதறிப்போன மக்களுக்காக மட்டும்தான் வந்தாரா? புறவினத்து மக்கள் கடவுளின் பிள்ளைகள் இல்லையா? என்ற கேள்விகள் நம் மனதில் நிச்சயமாக எழும். தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள்: ”ஆழக்கால் வைத்தாலும், அகலக்கால் வைக்காதே”. இயேசுவின் இலக்கு இந்த உலகமெங்கிலும் நற்செய்தி அறிவிக்கப்பட வேண்டுமென்பது. அந்த திட்டத்தை செயல்படுத்த பல முயற்சிகளையும், முன்னெடுப்புகளையும் மேற்கொள்கிறார். அதனுடைய ஒரு செயல்முறை திட்ட அடிப்படையில்தான், தனது எல்லையை சிறிது, சிறிதாக, படிப்படியாக விரிவுபடுத்துகிறார். யூத மனநிலையில் இருக்கிற தன்னுடைய சீடர்களையும் மெதுவாக பக்குவப்படுத்தும் பணியை இயேசு செய்தாக வேண்டும். ஒரேநாளில்...

ஆண்டவர் செய்த வியத்தகு செயல்களை நினைவுகூறுங்கள்

இந்த உலகத்தில் நடக்கும் அனைத்துமே கடவுளின் திட்டத்தின்படி தான் நடக்கிறது என்பதை, இந்த திருப்பாடல் (திருப்பாடல் 105: 16 – 17, 18 – 19, 20 – 21) வலியுறுத்திக் கூறுகிறது. கடவுள் மனிதர்களுக்கு சுதந்திரத்தைக் கொடுத்திருக்கிறார். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அதே வேளையில், அவர் மனிதர்களுக்கென்று திட்டங்களையும் வகுக்கிறார். இஸ்ரயேல் நாட்டில் பஞ்சம் நிலவியது. இந்த உலகமே பஞ்சத்தால் பரிதவிக்கத் தொடங்கியது. அந்த பஞ்சத்திலிருந்து தன்னுடைய மக்களைக் காப்பாற்ற, அதற்கு முன்னரே யோசேப்பை அற்புதமாக எகிப்தில் ஆண்டவர் உயர்த்தியிருந்தார். யோசேப்பின் சகோதரர்கள் அவர் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு தான், அவரை விற்றார்கள். ஆனால், விற்கப்பட்ட சகோதரனிடத்தில் நாம் மண்டியிட வேண்டியிருக்கும் என்று அவர்கள் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். அதுதான் இறைவனின் திட்டம். மனிதர்கள் செய்யும் தீமையையும் கடவுள் நன்மையாக மாற்ற வல்லவர். அதிலிருந்து மிகப்பெரிய ஆசீர்வாதத்தைப் பொழியச் செய்கிறவர். ஒன்றுமில்லாமையிலிருந்து இந்த உலகத்தை படைக்க முடிந்த இறைவனுக்கு,...