கிறிஸ்தவ ஒன்றிப்பு வாழ்க்கை
திருத்தூதர் பணி 15: 1 – 6 மோசேயின் சட்டப்படி, ஒவ்வொரு யூத ஆண்மகனுக்கும் விருத்தசேதனம் செய்ய வேண்டும். யூதர்கள் அனைவருமே விருத்தசேதனம் செய்திருந்தார்கள். அவர்கள் கடவுளுடனான உடன்படிக்கையின் அடையாளமாக விருத்தசேதனத்தை செய்திருந்தார்கள். அது அவர்களுக்கு முக்கியமான அடையாளம். மீட்பு பெறுவதற்கான அடையாளம். எனவே, யூத மறையின் தொடர்ச்சியாக கருதப்படும், கிறிஸ்தவத்தைத் தழுவுகிறவர்கள் கண்டிப்பாக மீட்பைப் பெற விருத்தசேதனம் செய்து கொள்ள வேண்டும் என்று, சில யூதர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். இது தொடக்க கால கிறிஸ்தவர்கள் நடுவில் எழுந்த முக்கியமான பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. நல்ல எண்ணத்தோடு, நன்மைத்தனத்தோடு வாழ வேண்டும் என்று நினைத்து வாழ விரும்புகிறவர்கள் சேர்ந்து வருகிறபோது, பிரச்சனைகளே இருக்காது என்று சொல்ல முடியாது. கருத்து வேறுபாடுகளும், வாக்குவாதங்களும் நாம் உண்மையை உணர்ந்து கொள்ள உதவிகரமாக இருக்கிறது என்பதே உண்மை. தொடக்க கால திருச்சபையில், அனைவரும் ஒரே எண்ணத்தோடு, நல்ல எண்ணத்தோடு, கிறிஸ்தவ மதிப்பீடுகளின்படி வாழ்வதற்கு எல்லாவிதத்திலும் முயற்சி எடுத்துக்...