Tagged: இன்றைய சிந்தனை

என் கடவுளே! உமது திருவுளம் நிறைவேற்ற வருகின்றேன்!

தியானப்பாடல் சிந்தனை : திருப்பாடல் 40: 6 – 7, 7 – 8, 9, 16 கடவுளுடைய திருவுளத்தை நிறைவேற்ற வருகிறேன் என்று திருப்பாடல் ஆசிரியர் எழுதுகிறார். கடவுளுடைய திருவுளம் என்ன? நாம் அவருக்கு பலி செலுத்த வேண்டும் என்பதா? அவருக்கு மகிமையையும், புகழ்ச்சியையும் செலுத்த வேண்டும் என்பதா? எது கடவுளுடைய திருவுளம்? கடவுள் ஒருநாளும் பலியை விரும்பியது கிடையாது. இரக்கத்தையே அவர் விரும்புகிறார். தனக்கு ஆபரணங்கள் வேண்டும். தங்க வைடூரியங்கள் வேண்டும், அதிகமான இறைச்சி வேண்டும் என்று கடவுள் விரும்புவது கிடையாது. தங்க நகைகள் கடவுளின் வெறும் படைப்பு. அதற்கு மனிதர்களாகிய நாம் தான், மதிப்பு கொடுக்கிறோம். விலைமதிப்பில்லாததைப் போல அவற்றை, நாம் வைத்திருக்கிறோம். ஆனால், கடவுளுக்கு அவை மதிப்பில்லாதது. ஆக, கடவுள் எதிர்பார்ப்பது இதுபோன்ற மதிப்பில்லாத பொருட்களை அல்ல. கடவுள் நம்மிடமிருந்து எதிர்பார்ப்பது ஏழைகளுக்கு இரங்க வேண்டும் என்பதைத்தான். அவர்களுக்கு நாம் இரக்க காட்ட வேண்டும் என்பதைத்தான்....

உம் எதிரிகளிடையே ஆட்சி செலுத்தும்

தியானப்பாடல் சிந்தனை : திருப்பாடல் 110: 1 – 2, 3, 4 இந்த திருப்பாடலில் ”ஆண்டவர், என் தலைவரிடம்..” என்ற வரிகள் யாரைச் சுட்டிக்காட்டுகிறது? என்ற கேள்வி இயல்பாகவே நமக்குள்ளாக எழுகிறது. இதற்கு பலதரப்பட்ட விளக்கங்கள தரப்பட்டாலும், மெசியா தான் இங்கே குறிப்பிடப்படுகிறார் என்று சொல்வது, சற்று பொருத்தமானதாக இருக்கிறது. ஏனென்றால், வலது பக்கம் என்று சொல்லப்படுவது, அரியணையின் முக்கியத்துவத்தை, வாரிசைக் குறிப்பிடுகிற சொல்லாக நாம் பார்க்கலாம். ஆக, மெசியா வருகிறபோது, இந்த உலகத்தில் ஏற்படும் மாற்றங்களை இந்த நிகழ்ச்சி வெளிப்படுத்துகிறது. ஆண்டவருடைய துணைகொண்டு, மெசியா இந்த உலகத்தை வழிநடத்துவார். அவர் வழியாக இந்த உலகத்தில் நிகழக்கூடிய தீமைகளை அழித்து ஒழிப்பார். எதிரிகளிடையே அவர் ஆட்சிசெய்வார். அந்த நாட்களில் மக்கள் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். இந்த முன்னறிவிப்பு இன்றைய நற்செய்தியிலும், கடந்த வாரத்தில் நாம் வாசிக்கக்கேட்ட நற்செய்தியிலும் நடப்பதை நாம் பார்க்கலாம். இயேசு தான் வரவிருந்த மெசியா என்பதற்கான பல்வேறு நிகழ்வுகள்...

தமக்கு அஞ்சி நடப்போர்க்கு உணவு அளிக்கின்றார்

தியானப்பாடல் சிந்தனை : திருப்பாடல் 111: 1 – 2, 4 – 5, 9, 10 ”ஆண்டவரிடத்தில் கொள்ளக்கூடிய அச்சமே ஞானத்தின் தொடக்கம்”. ”ஆண்டவருக்கு அஞ்சி நடக்க வேண்டும்”. இது போன்ற வார்த்தைகள் விவிலியத்தில் ஆங்காங்கே காணக்கிடப்பதை நாம் பார்க்கலாம். இன்றைய திருப்பாடலின் வரிகளும் இதையே வலியுறுத்திக் கூறுகின்றன. ஆண்டவருக்கு அஞ்சி நடப்பது என்றால் என்ன? நாம் ஏன் ஆண்டவருக்கு அஞ்சி நடக்க வேண்டும்? கடவுள் நமக்கு தந்தையும், தாயும் என்று விவிலியம் சொல்கிறது. உரிமையோடு அவரிடத்தில் கேட்கலாம் என்றும் நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. அப்படியிருக்கிற சமயத்தில், எதற்காக, நாம் கடவுளுக்கு பயப்பட வேண்டும். அச்சம் என்கிற வார்த்தையை நாம் புரிந்து கொள்வதில் தான், சற்று தடுமாறுகிறோம். அதனுடைய உண்மையான விவிலிய அர்தத்தை நாம் உணர்ந்து கொண்டால், நிச்சயம் அதைப்பற்றிய தெளிவு நமக்குக் கிடைக்கும். இணைச்சட்டம் 8: 6 சொல்கிறது: ”உங்கள் கடவுளாகிற ஆண்டவரின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியுங்கள். அதுவே அவர் தம்...

எண்ணங்கள் நல்ல எண்ணங்களாக இருக்கட்டும்

யூதர்களின் நோன்பு என்பது ஒரு பெரிதான காரியம் அல்ல. காலை 6.00 மணியிலிருந்து மாலை 6.00 மணி வரை நோன்பு நேரம். அதற்கு பிறகு வழக்கமான உணவு உண்ணலாம். பாரம்பரிய யூதர்களுக்கு நோன்பு என்பது வழக்கமான கடைப்பிடிக்கக்கூடிய ஒரு பழக்கம். ஆண்டிற்கு ஒருமுறை பாவக்கழுவாய் நாள் அன்று, அனைத்து யூதர்களும் நோன்பிருப்பார்கள். இன்னும் சில பாரம்பரிய யூதர்கள் வாரத்தில் இருமுறை அதாவது திங்களும், வியாழனும் இருந்தார்கள். இதைத்தான் இந்த நற்செய்தியிலும் பார்க்கிறோம். இயேசு நோன்பிற்கு எதிரானவர் அல்ல. ஏனென்றால் நோன்பு என்பது ஒருவன் தன்னையே அடக்கி ஆள, உதவி செய்கின்ற ஒன்றாகும். வாழ்க்கையை இப்படித்தான் வாழ வேண்டும் என்ற உணர்வோடு, தன்னடக்கத்தோடு வாழத்தூண்டுகின்ற ஒன்றாகும். ஆனால், பரிசேயர்களை பொறுத்தவரையில், அவர்களின் நோன்பு சுய இலாபத்திற்கானதாக இருந்தது. தங்களை வெளிக்காட்டிக்கொள்ளும் வாய்ப்பாக, அவர்கள் நோன்பைக் கடைப்பிடித்தார்கள். தங்களை மற்றவர்களைவிட உயர்வாக எண்ணுவதற்கும் நோன்பு ஒரு காரணமாக அமைந்தது. இதை இயேசு கண்டிக்கிறார். எந்தவொரு...

இறைவனின் அருட்கரம்

விருந்தோம்பல் என்பது மத்திய கிழக்குப் பகுதியில் புனிதமான ஒன்றாகக் கருதப்பட்டது. அறிமுகமில்லாத நபர்கள் வந்தாலும், அவர்களுக்குத் தேவையான அனைத்தையும் கவனிப்பது ஒரு யூதரின் முக்கியக் கடமையாக இருந்தது. அறிமுகமில்லாத நபர்களுக்கே இப்படி என்றால், விருந்தினர்களுக்கு எப்படிப்பட்ட உபசரிப்பு கொடுக்கப்பட வேண்டும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பொதுவாக விருந்தில் திராட்சை இரசம் பரிமாறப்பட்டது. திராட்சை இரசம் மகிழ்ச்சியின், விருந்தின் அடையாளம். அதில் தண்ணீர் கலந்து பரிமாறினார்கள். ஆக, திருமண விருந்து வீடு. விருந்தினர்கள் வந்திருக்கிறார்கள். அது மகிழ்ச்சியின் இடம். இப்படிப்பட்ட இடத்தில் திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது என்றால், நிச்சயம் அதைவிட திருமண வீட்டார்க்கு அவமானம் ஏதுமில்லை. அவர்களின் நிலைமை படுமோசமானதாக இருந்தது. பாலஸ்தீனம் பகுதியில் ஏழைகளும், வறியவர்களும் மிகுந்திருந்தனர். உணவுக்காக கடுமையாக அவர்கள் உழைக்க வேண்டியிருந்தது. அப்படியிருக்கிறவர்களுக்கு, திருமண விருந்து என்பது, அந்த வேதனைகளை எல்லாம் மறந்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய தருணமாக, இருக்க வேண்டும். அந்த கொண்டாட்டத்திற்கு வழியே இல்லையென்றால்,...