Tagged: இன்றைய சிந்தனை

வாழ்க்கை என்னும் திராட்சைத் தோட்டம்

மத் 21 : 33-43, 45-46 கொடிய குத்தகைதாரர் பற்றிய இவ்வுவமை பரிசேயர்களுக்கும், தலைமை குருக்களுக்கும் அவருடைய காலத்தில் சொல்லப்பட்டிருந்தாலும் இது இன்று நமக்கு மிகவும் பொருத்தமாக அமைகிறது. ஆண்டவர் பலவழிகளில் நம்மை மனமாற்றத்திற்கு அழைக்கிறார். ஆனால் நாம் தொடர்ந்து அவரை எதிர்க்கிறோம். அல்லது கண்டும் காணாதது போல் இருந்து அவரைக் கொலை செய்வதற்கு நாமும் காரணமாகி விடுகிறோம். மிக சுருக்கமாக இந்த உவமையின் விளக்கத்தினை அறிந்து கொள்வோம். திராட்சைத் தோட்டம் – நம் ஒவ்வொருவரின் வாழ்க்கை சுற்றிலும் வேலி – திரு அவை (நம்மை பிற தப்பறைகளிலிருந்து பாதுகாக்க) பிழிவுக்குழி – நமக்குள் மிகச் சிறந்தவற்றை இறைவன் வைத்துள்ளார். இதனை வெளியே கொண்டுவர சவால்களையும், தடைகளையும் நமக்குத் தருகிறார். காவல் மாடம் – புனிதர்கள், ஆயர்கள், குருக்கள் இவர்களைக் கொண்டு தொலை தூரத்திலிருந்தும் நம்மைப் பாதுகாக்கிறார். நமது வாழ்க்கை என்னும் திராட்சைத் தோட்டத்தை இவ்வளவு பராமிப்புகளோடு குத்தகைக்கு நம்மிடம் விட்டவர்...

அவனும் மனிதன்

லூக் 16 : 19 – 31 அனைத்து செல்வங்களையும் தன்னகத்தே கொண்டிருந்தவரின் பெயரானது குறிப்பிடப்படவில்லை (காண்க – தி.வெ- 20:15) ஆனால் அடுத்த நேரம் உணவுக்கே வழியில்லாதவனின் பெயரானது இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணக்காரன் நரகத்திற்கும், ஏழை இலாசர் விண்ணகத்திற்கும் சென்றார்கள். இது அவர்களின் பொருளாதார நிலையின் அடிப்படையிலா? அப்படியென்றால் நம்முடன் வாழும் எந்தப் பணக்காரர்களும் விண்ணகத்திற்கு வரமாட்டார்களா? எல்லா ஏழைகளுக்கும் விண்ணகத்தில் இடமுண்டா? இல்லை. மாறாக, இருவரின் செயல்களையும் மனநிலையையும் பொறுத்தே தீர்ப்பிடப்படுகிறார்கள். பணக்காரன் கண்முன்னேயிருக்கும் இலாசரிடம் மிருகத் தன்மையோடு நடக்கிறான். இலாசரோ தன் அருகேயிருந்த மிருகத்திடம் கூட மனிதத் தன்மையோடு நடந்து கொள்கிறான். ஒரு பணக்காரன் – ஓர் ஏழை, இது உவமையிலே! சில பணக்காரர்கள் – பல ஏழைகள் இது நமது வாழ்க்கையிலே! அறுசுவை உண்டி அமர்க்கள கொண்டாட்டங்கள் இது ஒரு பக்கம். ஒருவேளை உண்ண உணவின்றி, ஒண்ட இடமின்றி, உடுத்தி மூட உடையின்றி ஒருவன்...

வேட்கைத் தணிய…

மத் 20 : 17-28; ‘பதவி மோகம்’ என்பது அரசியலில் மட்டுமல்ல, திரு அவையிலும், பங்குப் பேரவையிலும், ஏன்? நம் அன்பியங்களிலும் கூட இன்று தலைவிரித்தாடுகிறது. நாம் இதனை நினைத்து தலைகுனிய வேண்டியதாக மாறியுள்ளது. பற்றறியாத இயேசுவது இறையாட்சியின் அடிக்கல்லினைக் கூட அறியாத பெண்ணொருத்தி தான் பெற்ற பிள்ளைகளின் மீது கொண்ட பாசத்தினால் இங்கே இன்றைய நற்செய்தியில் பேரம் பேசுகிறாள். ஆனால் இயேசுவின் படிப்பினைகளையும் அவரது இறையாட்சியின் திட்டத்தினையும், அவரது வாழ்வினையும் கற்றறிந்த நாம், அப்பெண்ணைவிட ஒரு படி கீழே சென்று பதவிக்காகவும் புகழ்ச்சிக்காகவும் தாறுமாறான இழிவான செயல்களை நமது கையில் எடுக்கத் தயங்குவதில்லை. என்னே ஓர் அவமானம்? ஏன் இந்த 2000 ஆண்டுகளில் இந்த விடயத்தில் மட்டும் வளர்ச்சி பெறாமல் இருக்கின்றோம்? ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒருவிதமான வெறுமை உண்டு என்பர் சில உளவியலாளர்களும் மெய்யியலாளர்களும். ஆனால் அதனை வெறுமை என்று சொல்வதைக் காட்டிலும் ஒருவிதமான வேட்கை என்று சொல்வதே சாலச்...

தன்னைக் கரைக்க

மத் 1:16, 18-21,24 தவக்காலத்தில் நாம் கொண்டாடும் விழாக்களில் மிகவும் முக்கியமானது தூய வளனாரின் பெருவிழா. இத்தவக்காலத்தில் இவரை நாம் நினைவு கூர்வது இன்னும் அதிகமாக இத்தவக்காலத்தை வாழ்வாக்க எளிதாக இருக்கும். காரணம் இவர் மௌனத்தில் பேசியவர், பேசியதைக் காட்டிலும் செயலினால் அதிகம் இறைத் திருவுளத்தை நிறைவேற்றியவர். உப்பாக, ஒளியாக இருங்கள் என்று சொன்ன நம் ஆண்டவரின் வார்த்தைகளை உலகின் உப்பாக இருந்து வாழ்ந்து காட்டியவர். நேற்றைய நற்செய்தியில் ‘தீர்ப்பிடாதீர்கள்’ என்ற இறைவார்த்தையை தன் வாழ்க்கை மந்திரமாகக் கொண்டவர். உன் உள் அறைக்கு சென்று செபி என்ற இறைவார்த்தை தன்வார்த்தையாக்கியவர். இதுவரைக்கும் இத்தவக்காலத்தில் நாம் பார்த்த அனைத்து நற்செய்தியின் மதிப்பீடுகளின் மறுஉருவமே இன்றைய விழா நாயகர் தூய வளனார். தன் விருப்பு வெருப்புகளை இறைவனின் விருப்பத்திற்காக கரைத்துக் கொண்டவர். தன்னால் முடிந்தவரை நல்லவர்களின் நற்பெயருக்கு கலங்கம் வராதபடி தன்னையே கட்டி கோட்டையாகப் பார்த்துக் கொண்டவர். மொத்தத்தில் இத்தவக்காலம் நம் கண்முன் காட்டுகிற...

அவருக்குரிய ‘ஒன்று’

லூக் 6 : 36 -38 இத்தவக்காலத்தில் மட்டுமல்லாது நம் ஒவ்வொரு ஆன்மீக முயற்சியும் பயிற்சியும் நம்மை புனித நிலைக்கு அழைத்துச் செல்வதே குறியாக இருக்கின்றது. கடவுள் நிலையிலிருந்து மனித நிலைக்கு தன்னை தாழ்த்தி இவ்வுலகிற்கு வந்த இறைமகனின் நோக்கமே, மனித நிலையிலிருந்த நம்மை அவருடைய மாண்புமிக்க, மாட்சிமிகுநிலைக்கு உயர்த்துவதே. புனித அத்தனாசியூஸ், “நாம் அனைவரும் அவரின் தெய்வீகத்தில் பங்கு பெறவே அவர் மனிதரானார்.” ;என்கிறார். பாவத்தைத்தவிர அனைத்திலும் அவர் நம்மைப்போலவே சோதிக்கப்பட்டார் (எபி 4:15) என்று இறைவார்த்தையும் கூறுகின்றது. திருப்பலியில் திருத்தொண்டர் சொல்லக்கூடிய முக்கியமான செபங்களில் ஒன்று இயேசு மனிதனாக வந்த நோக்கத்தை எடுத்துக்கூறுவதாக அமைக்கின்றது. காணிக்கைப் பொருட்களை திருப்பலியில் படைக்கும் பொழுது இரசத்தோடு ஒரு சொட்டு நீரினை சேர்க்கும் பொழுது திருத்தொண்டர் பின்வருமாறு கூறுவார், “கிறிஸ்து நமது மனித இயல்பில் பங்கு கொள்ள திருவுளம் ஆனார். இத்தண்ணீர், இரசம் இவற்றின் மறைபொருள் வழியாக நாமும் அவருடைய இறையியல்பில் பங்கு...