படைகளின் ஆண்டவரே! மீண்டும் வாரும்
திருப்பாடல் 80: 8 – 11, 12 – 13, 14 – 15, 18 – 19 ”படைகளின் ஆண்டவரே! மீண்டும் வாரும்” திருப்பாடல்களில் பெரும்பான்மையான பாடல்கள் விண்ணப்பங்களாகவும், தங்களது துன்பத்தை வெளிப்படுத்தும் பாடலாகவும் அமைந்துள்ளன. இந்த பாடலும் இதிலிருந்து விதிவிலக்கான பாடல் அல்ல. ஆண்டவரின் உதவியைக் கேட்கிற ஒரு மனிதரின் கேவல் குரலாக இந்த பாடல் அமைந்துள்ளது. இது மன்னிப்பாகவும் வெளிப்படுகிறது. இஸ்ரயேலின் ஆண்டவர் அவர்களுக்கு பலவிதமான நன்மைகளைச் செய்தார். அந்த நன்மைகளை எல்லாம் மறந்துவிட்டு, இஸ்ரயேல் தவறான பாதைக்குச் சென்றது. அதற்கான பலன்களை மிக விரைவிலேயே பெற்றுக்கொண்டது. உண்மை உரைத்தவுடன், வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கச்செய்கிறது. அதனுடைய விளைவு: மீண்டும் கடவுளிடம் திரும்பி, திருந்தி வர வேண்டும் என்கிற எண்ணம். அந்த எண்ணத்தைத்தான் இங்கு நாம் பார்க்கிறோம். கடவுள் செய்த நன்மைகளையெல்லாம் மறந்தவிட்டதற்கான் தண்டனையாக இப்போதுள்ள நிலையை, ஆசிரியர் பார்க்கிறார். இப்போது இருக்கிற மோசமான நிலைக்கு தாங்கள் முழுக்க...