Category: இன்றைய சிந்தனை

கார்மல் அன்னை திருவிழா

கார்மல் அன்னை திருவிழா உங்கள் கட்டிடத்தை கட்டியது கடவுளா? அனைவருக்கும் கார்மல் அன்னை திருவிழா நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். கார்மல் அன்னையின் பாதுகாப்பும் பரிந்துரையும் உங்களுக்கு என்றென்றும் கிடைப்பதாக! அன்னை மரியாள் என்ற கட்டிடத்தை கட்டியது கடவுள். அவர் ஒரு கட்டிடக் கலைஞர். அன்னை மரியாளின் கனவுகள், எதிர்காலம், தேவைகள், சாதனைகள் என அனைத்தையும் கட்டியது கடவுளே. அதற்கான முழு பொறுப்பையும் அன்னை மரியாள் கடவுளிடத்தில் கொடுத்துவிட்டார்கள். அதைத்தான் லூக் 1:38 ல் “நான் ஆண்டவரின் அடிமை உமது விருப்பப்படி எனக்கு நிகழட்டும்” என்கிறார் அன்னை மரியாள். ஆண்டவரே நான் உம்மிடம் என்னை தந்துவிட்டேன் நீர் என் உடலாகிய கட்டிடத்தை கட்டும் என்கிறார். அவர் கொடுத்ததால் கடவுள் மிகவும் எழில்மிக்கதாய் கட்டினார். எல்லோரும் போற்றும் வண்ணம் கட்டினார். நம்முடைய வாழ்வில் ஏன் முன்னேற்றம் இல்லை? காரணம் நாம் நம் உடலாகிய கட்டிடத்தை, கடவுளின் பொறுப்பில் ஒப்படைக்கவில்லை. நம் வாழ்க்கையின் பொறுப்பை கடவுளிடத்தில்...

நல்ல நிலத்தில் விழுந்த விதைகளோ விளைச்சலைக் கொடுத்தன

திருப்பாடல் 65: 9, 10, 11 – 12, 13 உருவகம் என்பது ஒரு கருத்தை எளிதாக மக்களுக்கு உணர்த்த பயன்படுத்தப்படும் ஓர் உக்தி. அத்தகைய உருவகத்தை திருப்பாடல் ஆசிரியர் தன்னுடைய பாடல்களில் பயன்படுத்துகிறார். உதாரணமாக, ஆண்டவரை ஆயனாக உருவகப்படுத்துகிறார். இஸ்ரயேல் மக்களுக்கு ஆயன் என்கிறவர் அவர்களுடைய வாழ்வோடு கலந்துவிட்டவர். ஏனெனில் அவர்கள் ஆட்டுமந்தைகளை மேய்த்து வந்தனர். அந்த ஆடுகளை காவல் காப்பதற்கு ஆயர்களை நியமித்திருந்தார்கள். எனவே, ஆயரின் கடமைகளை முழுமையாக அறிந்திருந்ததனால், ஆசிரியர் இதனைப் பயன்படுத்துகிறார். அதேபோல, இன்றைய திருப்பாடலில், நிலத்தை உருவகமாகப் பயன்படுத்துவதைப் பார்க்கிறோம். மனிதர்களை நிலத்திற்கு ஒப்பிடுகிறார். இறைவன் மனிதர்களைப் பண்படுத்துகிறார். இறைவாக்கினர் வாயிலாக வழிநடத்துகிறார். இறைவார்த்தையை விதைக்கிறார். விதைக்கிற ஒருவர் பலனை எதிர்பார்ப்பது நியாயம். அதேபோல இறைவார்த்தையை விதைத்து விட்டு, இறைவன் விளைச்சலுக்காக காத்திருக்கிறார். நல்ல விளைச்சலைக் கொடுப்பதும், கெடுப்பதும் நம்முடைய கைகளில் தான் இருக்கிறது. விளைவதற்கு தேவையான எல்லா வசதிகளையும் இறைவன் நமக்குக் கொடுக்கிறார்....

உண்மையான அர்ப்பண வாழ்க்கை

எசாயா 6: 1 – 8 இறைவாக்கினர் எசாயாவின் அழைப்பு இன்றைய வாசகமாக நமக்குத் தரப்படுகிறது. இறைவாக்கினர் எசாயா, விண்ணகத்தில் கடவுளின் அரியணையில் நடக்கும், விவாதத்தைக் காட்சியாகக் காண்கிறார். இங்கு கடவுள் நேரடியாக இறைவாக்கினர் எசாயாவை அழைக்கவில்லை. ஆண்டவர் தன்னுடைய விண்ணகத் தூதர்களோடு பேசிக்கொண்டிருப்பதைக் கேட்ட எசாயா, “இதோ நானிருக்கிறேன்” என வினவுகிறார். எசாயாவின் இந்த ஏற்பு, மற்ற இறைவாக்கினர்களின் அழைப்போடு பொருத்திப் பார்க்கையில் சற்று மாறுபட்டதாக இருக்கிறது. உதாரணமாக, மோசே இறைவனால் அழைக்கப்படுகிறார். ஆனால், அந்த அழைப்பை முதலாவதாக மறுக்கிறார். இறைவாக்கினர் எசேக்கியலின் அழைப்பும் இதேபோல, எசேக்கியலால் முதலில் மறுக்கப்படுகிறது. ஆனால், எசாயா இறைவாக்கினர் உடனடியாக இறைவனின் அழைப்பை ஏற்றுக்கொள்கிறார். மற்றவர்களைக் குறைத்து மதிப்பிட வேண்டும் என்பதற்காக சொல்லவில்லை. மாறாக, இறைவாக்கினர் எசாயாவின் ஏற்பு, அவர் தன்னை இறைவனுடைய பணிக்காக முழுமையாக கையளித்ததை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. அவர் சற்றும் தாமதிக்கவில்லை. இதுதான் கடவுளுக்கு விருப்பம் என்றால், அதற்கு குறுக்கே நிற்பதற்கு...

வார்த்தைகளின் வழியில் இறைவனோடு பேசுவோம்

ஓசேயா 14: 1 – 9 “மொழிகளை ஏந்தி, ஆண்டவரிடம் திரும்பி வந்து இவ்வாறு சொல்லுங்கள்”என்று, இன்றைய இறைவார்த்தை நமக்குக் கற்றுக் கொடுக்கிறது. அதாவது, கடவுளிடத்தில் வருகிறபோது, நம்முடைய வார்த்தைகளை ஏந்தி வந்து சொல்ல வேண்டும் என்பது இதன் பொருள். கடவுளிடத்தில் வருகிறபோது, நாம் வார்த்தைகளை ஏந்தி வருவது அவசியமானது. நம்முடைய உணர்வுகளோடு கடவுளிடத்தில் பேசுவது தவறல்ல. நாம் இறைவன் முன்னிலையில் அமைதியாக அமர்ந்திருக்கிறோம். உள்ளத்தளவில் நாம் ஆண்டவரோடு பேசுகிறோம். இந்த உணர்வுகளோடு பேசுவதோடு நாம் நின்றுவிடக்கூடாது. அதையும் கடந்து நாம் இறைவனிடத்தில் செல்ல வேண்டும். உணர்வுகளைக் கடந்து நாம் கடவுளிடத்தில் எப்படி செல்வது? வார்த்தைகள் வழியாக நாம் கடவுளிடத்தில் செல்ல வேண்டும்? கடவுள் நம்முடைய உள்ளத்து உணர்வுகளை, நாம் அறிவார்ந்து சிந்திக்கிற எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கு அருமையான வார்த்தைகளைத் தந்திருக்கிறார். கடவுள் முன்னால் அமர்ந்து, அவருடைய அன்பை நாம் அனுபவிக்கிறேன் என்று சொல்வது மட்டும் போதாது. நான் கடவுளை அன்பு செய்வது...

இறைவனின் தாயுள்ளம்

ஓசேயா 11: 1 – 4, 8 – 9 இறைவாக்கினர் ஓசேயாவின் நூலில் “திருமணம்” என்கிற உறவைப்பற்றிய உருவகம் இருப்பதை நாம் இதுவரை பார்த்தோம். இஸ்ரயேலுக்கும், இறைவனுக்கும் உள்ள உறவு, இந்த திருமண உறவு போன்றது என்பதைத்தான், இறைவாக்கினர் தன்னுடைய இறைவார்த்தையில் பகிர்ந்துகொள்கிறார். ஆனால், 11 ம் அதிகாரம், சற்று மாறுபட்ட உருவகத்தை நமக்குக் கொடுத்து, இந்த அதிகாரத்திற்கான தனித்துவத்தை சிறப்பாக விளக்கிக் கூறுகிறது. இந்த அதிகாரத்தில், பெற்றோர்-பிள்ளை உருவகம் பயன்படுத்தப்படுகிறது. இந்த அதிகாரம் தான், இறைவனுடைய ஆழ்மனத்தை நாம் அறிவதற்கு உதவியானதாக இருக்கிறது. இறைவன் என்றாலே, அன்பும், இரக்கமும் நிறைந்தவர் என்பதை, இந்த அதிகாரத்தில் நாம் கற்றுக்கொள்ளலாம். ஒரு குழந்தையை, அந்த குழந்தையின் தாய் எப்படியெல்லாம் வளர்க்கிறாள்? என்பது நாம் அறிந்த ஒன்று. அது பேசும் மழலைச்சொல், அதுநடைபயிலும் அழகு, அதன் வளர்ச்சி ஒவ்வொன்றிலும் தாய் அகமகிழ்கிறாள். குழந்தையின் உலகமாக இருக்கிறாள். குழந்தைக்கும் தாய் தான், உலகமாக இருக்கிறது....