Category: இன்றைய சிந்தனை

இருளில் பேசியவை ஒளியில் கேட்கும்…

லூக்கா 12:1-7 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். நாம் அதிகமாக ரகசியங்களை, பேசக்கூடாதவைகளை பேசுவதற்கு நாம் தேடுகின்ற இடம் இருள். அந்த இடம் பாதுகாப்பானது அல்ல, அனைத்தும் வெளியே தெரிந்துவிடும். இருளில் பேசியது அனைத்தும் ஒளியில் கேட்கும். ஆகவே கவனமாய் இருங்கள் என்கிறது இன்றைய நற்செய்தி வாசகம். நாம் வாழும் இந்த நவீன உலகத்தில் ரகசிங்களை பேசுவதற்கு, இச்சைக்குரிய காரியங்களை பேசுவதற்கு, செய்வதற்கு பலவிதமான வாய்ப்புகள் உள்ளது. மறைவாக பேசுவற்கு எவ்வளவு வாய்ப்புகள் உள்ளதோ அதே அளவுக்கு அது தெரிவதற்கும் உள்ளது. இதற்கு என்ன செய்யலாம்? இரண்டு வழிகள் எப்போதும் உண்டு. 1. ஒளியை விரும்பலாம் இந்த உலகில் எதுவும் மறைவு கிடையாது என்ற விழிப்புணர்வு வேண்டும்....

தன்னலமில்லாத தலைவர்கள்

இன்றைக்கு நமது நாட்டில் ஏராளமான தலைவர்களுக்கு நினைவுச்சின்னங்களை எழுப்பியிருக்கிறோம். ஒரு சில தலைவர்களின் பிறந்தநாளில் பொதுவிடுமுறை அறிவித்து, அவர்களைச் சிறப்பாக நினைவுகூர்கிறோம். முகநூல் பதிவுகளில் இன்றைக்கு சமுதாயத்திற்காக உழைத்துக்கொண்டிருக்கக்கூடிய நல்ல மனிதர்களுக்கு பாராட்டு தெரிவிக்கிறோம். ஆனால், இவர்கள் வாழ்ந்தபோது, இப்போது வாழ்ந்தகொண்டிருக்கிற நல்ல மனிதர்களுக்கு, அவர்களுக்கான அடையாளத்தையும், அங்கீகாரத்தையும் கொடுக்கிறோமா? என்றால், அது மிகப்பெரிய கேள்விக்குறி. “லைக்“ போடுவதோடும், “கமெண்ட்” எழுதுவதோடும் நின்றுவிடுகிறோம். அவர்களை வெறும் அடையாளத்திற்குத்தான் வைத்திருக்கிறோமே தவிர, அவர்களை ஆளவோ, அதிகாரத்தைக் கொடுக்கவோ நாம் விடுவதில்லை. இரோம் ஷர்மிளா, மேதாபட்கர், சுப.உதயகுமார், தோழர் நல்லகண்ணு என்று, இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. மக்களுக்காக உண்மையாக உழைக்கிறவர்களை நாம் எப்போதும், ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. இது இப்போது மட்டும் அல்ல. இஸ்ரயேல் மக்களின் தொடக்க கால வரலாற்றிலிருந்தே நாம் பார்க்கலாம் என்பதைத்தான், இயேசுவின் வார்த்தைகள் நமக்கு வெளிப்படுத்துகிறது. இறைவன் இந்த உலகத்தைப் படைத்த தருணத்திலிருந்து எத்தனையோ மனிதர்கள் கடவுளின் ஆவியால் தூண்டப்பட்டு,...

கவனிக்காதே, கடைப்பிடிக்காதே

லூக்கா 11:42-46 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். வழக்கமாக பல்வேறு விதமான போதனைகளை நற்செய்தியில் தந்து நம் வாழ்வை சீராக்க, நேராக்க அழைக்கும் நம் ஆண்டவர் இயேசு இன்றைய நற்செய்தியில் இருவரை சுட்டிக்காட்டி அவர்களைப் போன்று வாழ வேண்டாம், அவர்களை கவனிக்கவும் வேண்டாம், அவர்கள் செய்வதை கடைப்பிடிக்கவும் வேண்டாம் என்கிறார். அந்த இருவர் யார்? ஏன் அவர்கள் செய்வது போன்று செய்யக் கூடாது என்று இன்றைய நற்செய்தி கூறுகிறது. வாருங்கள் பார்ப்போம். 1. பரிசேயர் மிக முக்கியமாக கடைப்பிடிக்க வேண்டிய கடவுளின் நீதியை பரிசேயர்கள் கடைப்பிடிக்கவில்லை. கடவுளின் அன்பை ஒரு பொருட்டாக அவர்கள் கருதவில்லை. அவற்றை எல்லாம் மிக எளிதாக விட்டுவிட்டனர். கடவுளுக்கு விருப்பம் இல்லாததை அவா்கள்...

அடையாளம் அவசியமா வேணுமா?

லூக்கா 11:29-32 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். ஆண்டவரை அடையாளத்திற்காக, அதிசயத்திற்காக மட்டும் நாம் தேடினால் ஏமாற்றம் தான் அதிகமாக வரும். அப்போது தான் நம் நம்பிக்கையில் இருள் படா்ந்து நிற்கும். அற்புதத்திற்காக தேடாமல் மனமாற்றம் பெறுவதற்காக தேடினால் அவரின் கட்டளைகளைக் கண்டிப்பாக நாம் கடைப்பிடிப்போம். ஆண்டவரிடம் அதிசயம், அற்புதம் கிடைக்கும் என எதிர்பார்ப்பவர்களிடம் இரண்டு தவறான பண்புகள் இருப்பதை இன்றைய நற்செய்தி வாசகம் அடிக்கோடிட்டு காட்டுகிறது. 1. அவநம்பிக்கை ஒருசிலர் ஆண்டவா் அதிசயம் செய்தால் தான் அவரை நம்புவேன். அவர் அதிசயம் செய்யவில்லை என்றால் ஆலயம் வரமாட்டேன். அவரை பார்க்கமாட்டேன். அவருக்கும் எனக்கும் தொடர்பில்லை என்ற எண்ணம் கொண்டிருப்பது மிகவும் தவறானது. இப்படிப்பட்டவர்களுக்கு நம்பிக்கையும் இருப்பதில்லை....

என் தலையில் நறுமணத்தைலம் பூசுகின்றீர்

திருப்பாடல் 23: 1 – 3a, 3b – 4, 5, 6 நறுமணத்தைலம் என்பது அபிஷேகத்தைக் குறிக்கிற வார்த்தையாக இருக்கிறது. இறைவன் நம் ஒவ்வொருவரையும் அபிஷேகம் செய்திருக்கிறார். அதாவது நம் ஒவ்வொருவரையும் அவர் நினைவிற்கொண்டிருக்கிறார், அன்பு செய்கிறார், மிகுந்த பாசம் உடையவராய் இருக்கிறார் என்பதனை இதன் விளக்கமாக நாம் பார்க்கலாம். பழைய ஏற்பாட்டில் நறுமணத்தைலம் என்பது ஆண்டவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட நபரைக் குறிப்பதாக இருக்கிறது. இந்த திருப்பாடலை தனிப்பட்ட முறையில் நாம் வாசித்து பார்க்கிறபோது, நம் அனைவருக்குமான திருப்பொழிவு பாடலாக இருக்கிறது. நறுமணத்தைலம் ஒருவர் மீது பூசப்படுகிறபோது, அவர் இறைவனுக்கு பணியாற்றக்கூடியவராக மாற்றம் பெறுகிறார். அதாவது தனது நலனை விடுத்து, இனி கடவுளின் விருப்பமே, தன் விருப்பம் என்ற குறிக்கோளுடன் வாழ ஆரம்பிக்கிறார். இறைவனின் மந்தையை, அவரது ஆடுகளை மேய்க்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார். இது ஒரு மனிதனுக்கான கடமையை, பொறுப்பை சுட்டிக்காட்டுவதாக இருக்கிறது. இந்த சமூகத்தில் பிறந்திருக்கிற ஒவ்வொரு மனிதனும் கடவுளின்...