Category: இன்றைய சிந்தனை

உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள்

திருப்பாடல் 95: 1 – 2, 6 – 7, 8 – 9 கடினப்படுத்துவது என்றால் என்ன? ஒரு மனிதன் முதல்முறை தவறு செய்கிறபோது, அவனையறியாமலேயே குற்ற உணர்வு அவனை ஆட்கொள்கிறது. தவறு செய்து விட்டோமே என்று அவன் வேதனைப்படுகிறான். அந்த தருணத்தில் அவன் தவறிலிருந்து விடுபட வேண்டும். அந்த தருணத்தை அவன் தவறவிட்டு விட்டால், அதன் பிறகு அவனது குற்ற நடவடிக்கைகள் தொடரும். தவறு செய்வது அவனுக்கு பழக்கமாகிவிடும். அதுதான் கடின உள்ளம். தவறு செய்வதைப்பற்றிக் கவலைப்படாத உள்ளம். திருந்த நினைக்காத உள்ளம். இலக்கில்லாத உள்ளம். இஸ்ரயேல் மக்கள் இத்தகைய கடின உள்ளம் கொண்டிராதவாறு, கடவுள் அவ்வப்போது அவர்களை நினைவூட்டிக் கொண்டிருந்தார். கடவுளிடமிருந்து அவர்கள் ஏராளமான அருட்கொடைகளைப் பெற்றிருந்தாலும், அவர்கள் கடவுளை மறந்துவிட்டு, வேற்றுத்தெய்வங்களை நாடிச்சென்றனர். கடவுள் தங்களுக்குத் தேவையில்லை என்று நினைத்தனர். ஆனால், அதற்கான பலனை அவர்கள் அனுபவித்தபோது, மீண்டுமாக கடவுளைத் தேட ஆரம்பித்தனர். இது தொடர்ந்து...

வாழ்வு தரும் இறைவார்த்தை

இறைவார்த்தை நமது வாழ்விற்கு வழிகாட்டியாக இருந்து நம்மை வழிநடத்துவதாக இருக்கிறது என்பதை, இயேசு இன்றைய நற்செய்தி வாசகத்தின் வழியாக நமக்குக் கற்றுக்கொடுக்கிறார். ஓய்வுநாளைப் பற்றிய ஒரு பிரச்சனை, பரிசேயர்களால் எழுப்பப்படுகிறது. அந்த பிரச்சனைக்கு தீர்வு எப்படி காண்பது? எது சரி, எது தவறு என்பதை எப்படிச் சொல்வது. இறைவார்த்தை வழிகாட்டியாக இருக்கிறது. இயேசு தனது சீடர்களைப் பிரச்சனையிலிருந்து காப்பாற்ற, இறைவார்த்தையை மையப்படுத்திச் சொல்கிறார். பிரச்சனைகளுக்கு தீர்வாக, நிச்சயம் இறைவார்த்தை இருக்கிறது என்பதை, இது நமக்குச் சொல்கிறது. இறைவார்த்தையை மையப்படுத்தித்தான் இயேசுவின் வாழ்க்கை அமைந்திருந்தது. தொடக்கத்தில் இயேசுவின் குழந்தைப்பருவ நிகழ்ச்சிகளின் முடிவில், மறைநூல் வாக்கு நிறைவேறவே, இவ்வாறு நிகழ்ந்தது என நற்செய்தியாளர்கள் சொல்வது இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. இயேசு சோதிக்கப்படுகிறபோது, அந்த சோதனையை எதிர்த்து வெற்றிபெறுவதற்கு, இயேசுவிற்கு உதவியாக இருந்தது இறைவார்த்தை தான். தனது பணிவாழ்வை ஆரம்பிக்கிறபோது, கடவுளின் பணிக்காக தனது வாழ்வையே அர்ப்பணிக்கிறவர் எதனை இலக்காகக் கொண்டு வாழ வேண்டும் என்பதை,...

மகிழ்ச்சியாக இருக்க விடுங்கள்…

லூக்கா 5:33-39 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். நாம் மகிழ்ச்சியாக இருப்பதை விரும்பாத ஒருசிலர் எதையாவது, அவசியமில்லாததைச் சொல்லி நம்முடைய மகிழ்ச்சியை தடைசெய்ய அதிக ஆசைப்படுவர். அவர்களைக் காணும் போது எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்பதை இன்றைய நற்செய்தி வாசகம் சொல்லித் தருகிறது. 1. கண்டுக்கவே வேண்டாம் கேட்க வேண்டும். ஆனால் அதற்கு பதில் பேசக் கூடாது. அதை பெரிதாக எண்ணக் கூடாது. பெரிதாக எண்ணினால் அவர்கள் பெரிய ஆளாக மாறிவிடுவார்கள். நம் மகிழ்ச்சி பறிபோகும். இயேசு பரிசேயர்கள், சதுசேயர்கள் பேசும்போது கையாண்ட பாணியை நாம் கையாள வேண்டும். 2. கறைப்படுத்தவே வேண்டாம் நம் மகிழ்ச்சிக்கு தடையாக இருக்கும் மனிதர்களை ஏதாவது செய்ய வேண்டும் என்ற...

ஆச்சரியம் ஆனா அதிசயம்

லூக்கா 5:1-11 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். சிறுவயதிலிருந்தே மறைக்கல்வி வகுப்புகளில் அழுத்தம் திருத்தமாக நமக்கு சொல்லித் தரப்படுகிறது. இயேசுவோடு நாம் இருக்கும் போது நம் வாழ்க்கை மாறும். மகிழ்ச்சி மனங்களி்ல் மத்தளமிடும். மங்களகரமான வருங்காலம் உருவாகும். ஆனால் நாம் இயேசுவோடு இருப்பதில்லை. இவைகளை அனுமதிப்பதில்லை. இயேசுவோடு இல்லாமல் அவதிப்படும் நமக்கு இன்றைய நற்செய்தி வாசகம் இயேசுவோடு இருப்பதற்கான அந்த அழைப்பை திரும்ப நினைவூட்டுவதாக அமைகிறது. இயேசுவோடு நாம் இருக்கும் போது பலவிதமான நன்மைகள் நமக்கு கிடைக்கின்றன. அவற்றில் இரண்டு முக்கியமானவைகளை நாம் அவசியம் பார்த்தே ஆக வேண்டும். 1. ஆச்சரியம் நம்முடைய பண்புகளிலே ஆச்சரியம் ஏற்படும். பூவோடு சேர்ந்த நாறும் மணக்கும் என்பதற்கேற்ப நாம் அவரோடு...

இனி என்றும் இளமையே!

லூக்கா 4:31-37 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். மனிதர்கள் அனைவரும் தாங்கள் வயதாவதை விரும்புவதில்லை. எப்போதும் இளமையுடன் இருக்கத்தான் ஆசைப்படுகின்றனர். என்றும் இளமையோடு இருப்பதற்கு இரண்டு விதமான அருமையான ஆலோசனைகளோடு அகமகிழ்ந்து வருகிறது இன்றைய நற்செய்தி வாசகம். 1. கட்டளையிடும் அதிகாரம் நாம் இருட்டில் எதையாவது பார்த்து பயப்படும் போது நம் வீட்டில் உள்ள பெரியவர்கள் நமக்கு சொல்லித் தருவார்கள், “இனி நீ இருட்டில் நடக்கும் போது நாசரேத்து இயேசுவின் பெயரால் கட்டளையிடுகிறேன். தீய சக்தியே அகன்று போ” என கட்டளையிட்டுச் சொல். அப்படி சொன்னதும் தீயவை அனைத்தும் காணாமல் போகும் என சொல்லித் தருவார்கள். அந்த மந்திரத்தை சொல்லிய பிறகு நாமும் எந்த தீய சக்தியையும்...