Category: இன்றைய சிந்தனை

பேசக் கற்றுக்கொள்பவரே பெரியவர்

லூக்கா 9:46-50 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். மனிதர்களாகிய நாம் வாழ்க்கையில் பலவற்றைக் கற்றுக்கொள்கிறோம். பலவற்றை ஆர்வமாக தெரிந்துக்கொள்ளும் நாம் எப்படி பேச வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்ள தவறிவிடுகிறோம். குழந்தைகள் இனிய குரல் எல்லோரையும் ஈர்க்கிறது. அந்த இனிய குரலில் பேசுபவர் தான் பெரியவர். என்வே தான் ஆண்டவர் இயேசு கிறிஸ்து இன்றைய நற்செய்தி வாசகத்தில் சிறு குழந்தையை உதாரணமாகத் தருகின்றார். அவர்களைப் போல இனிமையாக பேசி நம்மோடிப்பவர்களை இழுக்க, ஈர்க்க அழைக்கின்றார். நாம் சரியாக பேசவில்லை என்றால் அதனால் பல விதமான தீமைகள் விளைகின்றன. கோபமாக பேசினால் குணத்தை இழக்க நேரிடும். வேகமாக பேசினால் அர்த்த்ததை இழக்க நேரிடும். வெட்டியாக பேசினால் நம் வேலை இல்லாமல்...

பிறர் இயேசுவை தேடி வரும்படி செய்வோம்!

லூக்கா 9:7-9 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். இயேசுவின் நற்செயல்களால் மயங்கிப்போன மக்கள் பல இடங்களில் நன்றி மறவாமல் இயேசுவைப் பற்றி துல்லியமாக அறிவித்தனர். எல்லா இடங்களிலும் இயேசுவின் புகழ்மணம் கமழ்ந்தது. எங்கும் இயேசு என்ற பெயர் ஒலித்தது. ஆகவே இயேசு என்ற பெயரின் அதிர்வலைகளில் பாதிக்கப்பட்ட ஏரோது, இயேசுவைக் காண வாய்ப்புத் தேடிக் கொண்டிருந்தான். இயேசு என்ற பெயர் எவ்வளவு வல்லமை மிக்கது என்பதை நாம் பிறருக்கு அறிவிக்கவும், நம்முடைய செயல்பாடுகளால் பலர் இயேசுவை தேடி வரும்படி செய்யவும் இன்றைய நற்செய்தி வாசகம் நம்மை அழைக்கிறது. இரண்டு விதத்தில் இயேசுவை பிறர் தேடி வரும்படி செய்யலாம். 1. பழக்கம் கிறிஸ்தவ சமயத்தைச் சார்ந்த நாம் நம்முடைய...

கூடவே நல்ல குணத்தை கொண்டு போங்கள்

லூக்கா 9:1-6 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். நாம் பயணமாக ஒரு ஊருக்குச் செல்லும் போது பயணத்திற்கு தேவையான பொருட்கள், பணம், உணவு, அலைபேசி மற்றும் அவசியமானவைகள் அனைத்தும் இருக்கிறதா என நன்கு பரிசோதித்துப் பார்ப்போம். அது நல்லது தான். அதைவிட உயர்வாக நாம் போகும் இடத்திற்கு நல்ல குணத்தைக் கொண்டு போகிறோமா என்பதை பெரும்பாலும் பரிசோதித்துப் பார்ப்பதில்லை. இன்று அதை சிந்தியுங்கள். சிந்தித்து செயல்படுங்கள் என சொல்லிக்கொண்டே இன்றைய நற்செய்தி வாசகம் நம்மோடு வருகிறது. போகுமிடமெல்லாம் நல்ல குணத்தை கொண்டுச் செல்ல இரண்டு செயல்பாடுகளில் நாம் இறங்க வேண்டும். 1. சிறந்தவைகளை வாசியுங்கள் நல்ல புத்தங்களை வாசிக்க வேண்டும். நம்மை பண்படுத்தும், பதப்படுத்தும் நல்ல அருமையான...

திருத்தூதர் மத்தேயு திருவிழா

பின்பற்றியவர் பிரபலமானார் மத்தேயு 9:9-13 இறையேசுவில் இனியவா்களே! திருத்தூதர் மத்தேயு திருவிழா திருப்பலிக்கு நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். மத்தேயு என்ற பெயரின் பொருள் “யாவேயின் பரிசு” என்பதாகும். அல்பேயுவின் மகனான மத்தேயு, உரோமை ஆளுகையில் இருந்த யூதேயாவின் கலிலேயா பகுதியில் பிறந்தவர். உரோமையரின் ஆளுகையின் கீழ், யூதேய குறுநில மன்னன் ஏரோது அந்திபாசுக்காக கப்பர்நாகும் சுங்கச்சாவடியில் வரி வசூலிப்பவராக மத்தேயு பணியாற்றினார். கிரேக்க, அரமேய மொழிகளில் மத்தேயு தேர்ச்சி பெற்றிருந்தார். இயேசு கிறிஸ்துவைத் தொடக்கம் முதலே பின்பற்றிய சீடர்களுள் மத்தேயுவும் ஒருவர். புதிய ஏற்பாட்டின்படி, இயேசுவின் உயிப்புக்கும், விண்ணேற்றத்துக்கும் மத்தேயுவும் ஒரு சாட்சியாக இருக்கிறார். ஆண்டவர் இயேசுவை பின்பற்றுகிற ஒவ்வொருவரும் மிகவும் பிரபலமாக மாறுவார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே....

உடன் பணியாளர்களாக…

இன்றைய நற்செய்தியிலே, இயேசுவின் பணிவாழ்வில் அவரோடு உடனுழைத்தவர்களைப் பற்றிய செய்திகள் நமக்கு தரப்பட்டிருக்கிறது. இயேசுவின் திருத்தூதர்கள் மற்றும் பெண் சீடர்களைப்பற்றியும், அவர்கள் யார்? என்பது பற்றியும், நற்செய்தியாளர் குறிப்பிடுகிறார். இயேசு தனிமனிதராக பணி செய்யவில்லை. அவருடைய பணிவாழ்வில் பலருக்கும் பங்கு இருந்ததை இது நமக்கு தெளிவாக்குகிறது. இந்த உலகத்தில் பொதுநலத்தோடு மற்றவர்களுக்கு உதவக்கூடிய மனிதர்களை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். முதல் வகையான மக்களுக்கு, களத்தில் இறங்கி உதவி செய்ய முடியாது. இதற்கு அவர்களது பணி, குடும்பம், சூழ்நிலை தடையாக இருக்கலாம். ஆனால், தங்களால் இயன்றதை பொருளாகவோ, பணமாகவோ கொடுத்துக்கொண்டேயிருப்பார்கள். அதில் அவர்களுக்கு நிறைவு இருப்பதாக உணர்கிறார்கள். இரண்டாவது வகையான மக்களும் நேரடியாக முழுநேரத்தையும், முழுமூச்சியோடு இறங்க வாய்ப்பில்லாதவர்கள். ஆனால், வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தங்களது உடனிருப்பு மூலமாக, சிறு,சிறு உதவிகள் மூலமாக எப்போதும் பொதுநலனோடு உழைத்துக்கொண்டிருக்கிறவர்கள். மூன்றாவது வகையான மக்கள், முழுக்க முழுக்க மக்களுக்காக, பொதுநலனோடு உழைக்கிறவர்கள். அவர்கள் அதற்காக எந்த தியாகத்தையும்...