செல்வத்தின் பயன்பாடு
செல்வத்தை எப்படி சரியான முறையில் கையாள வேண்டும் என்பதை, லூக்கா நற்செய்தியாளர் தன்னுடைய நற்செய்தியில் எழுதுகிறார். செல்வம் என்பது ஆசீர்வாதமாகவும் இருக்கலாம். அதேவேளையில் நமக்கு சாபமாகவும் மாறலாம். செல்வத்தை நாம் எப்படி கையாளுகிறோம் என்பதைப் பொறுத்துதான், நமது செல்வம் நமக்கு ஆசீர்வாதமா? அல்லது சாபமா? என்பதை நாம் முடிவு செய்யலாம். செல்வத்தை நமது சுயநலத்திற்காக, நம்மை பலப்படுத்துவதற்காக பயன்படுத்தினால், அது நமக்கு சாபம். மாறாக, செல்வத்தை மற்றவர்கள் பயன்பெறக்கூடிய வகையில் பயன்படுத்தினால், அது மிகப்பெரிய ஆசீர்வாதம். செல்வத்தை எப்படி பயன்படுத்தக்கூடாது என்பதை, அறிவற்ற செல்வந்தன் உவமை 12 வது அதிகாரத்திலும், ஏழை இலாசர் உவமை 16 வது அதிகாரத்திலும் நாம் பார்க்கலாம். செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை நல்ல சமாரியன் உவமை 10 வது அதிகாரத்திலும், சக்கேயு நிகழ்ச்சி 19 வது அதிகாரத்திலும் நாம் பார்க்கலாம். இந்த இரண்டு வெவ்வேறான தலைப்புகளுக்கு நடுவில் சற்று புரிந்து கொள்ள கடினமான பகுதிதான்,...