Category: இன்றைய சிந்தனை

இன்றைக்கு இயேசுவைப் போற்றினீர்களா?

லூக்கா 17:11-19 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். அன்புமிக்கவர்களே! காலையில் முதலில் கண்விழிக்கும் போது நாம் கடவுள் திருமுன்னிலையில் கண்விழிக்க வேண்டும். அப்படி செய்வது அந்த நாளை சக்திமிக்கதாக மாற்றுகிறது. எழுந்ததும் கடவுளே உமக்கு நன்றி என்று சொல்வது மிகச் சிறந்தது. அதன்பிறகு தொடா்ந்து நம் செயல்களில் அவரைப் போற்ற வேண்டும், புகழ வேண்டும் என இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு சொல்லித் தருகிறது. ஒவ்வொரு நாளும் இரண்டு செயல்பாடுகளை செய்து அவரைப் போற்ற வேண்டும். அந்த இரண்டு செயல்பாடுகளை இன்றிலிருந்து செய்வது மிகவும் நல்லது. 1. திருப்பாடல்கள் இசைத்து காலை, மதியம் மற்றும் இரவு என மூன்று வேளைகளிலும் நாம் திருப்பாடல்களை இசைத்து ஆண்டவரைப் போற்ற...

என் கடன் பணி செய்து கிடப்பதே

லூக்கா 17:7-10 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். இந்த உலகில் படைக்கப்பட்ட நாம் பல்வேறு விதமான பணிகளைச் செய்ய வேண்டும். பலருக்கு நாம் கடன்பட்டிருக்கிறோம். கடவுள் நம்மை படைத்து பாசத்தோடு பராமரித்து வருவதற்கு அவருக்கு பல விதமான பணிகளைச் செய்ய வேண்டும். நம் பெற்றோர், ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் பல நல்ல உள்ளங்கள் நம் வாழ்வில் ஏணிகளாக இருந்திருகிறார்கள். இப்போதும் நமக்கு உறுதுணையாக இருந்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் நாம் கடன்பட்டிருக்கின்றோம். பல விதமான பணிகளைச் அவர்களுக்காக கட்டாயம் செய்ய வேண்டும். அப்போதுதான் நம் பிறப்பு முழுமையடைகிறது. பிறருக்கு நாம் பணிகள் செய்யும்போது இரண்டு சிந்தனைகளை நம் சிந்தைனையில் நிறுத்துவது சிறப்பு. 1. கடன் என்னுடன்...

நோ்ந்தளியுங்கள்… நேராகுங்கள்

யோவான் 2:13-22 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு திருவிழா திருப்பலி நம்மை கடவுளுக்கு நேர்ந்தளிக்க அழைப்பு கொடுக்கிறது. நாம் அனைவரும் கடவுளுக்கே சொந்தம் என்பதை ஆலயத்தில் அறிக்கையிட வேண்டும். உரக்க அதை வெளியிட வேண்டும். அதற்கான வாய்ப்பாக இந்த நாளை பயன்படுத்துவோம். இன்று ஆலயம் வந்திருக்கின்ற நாம் அதை முழு ஆர்வத்தோடும் ஆசையோடும் செய்வோம். அதுதான் இந்த திருவிழாவின் முக்கிய நோக்கமாகும். கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவரும் தங்களை ஆலயத்தில் நேர்ந்தளிக்க வேண்டும். அப்படி ஆலயத்திற்கு நம்மை நேர்ந்தளிக்கும் போது இரண்டு விதங்களில் நாம் பயன் பெறுகிறோம். 1. பாதுகாப்பு பெறும் வளையம் உருவாகிறது நாம் ஆண்டவருக்கு ஆலயத்தில் வைத்து நம்மை நேர்ந்தளிக்கும் போது பாதுகாப்பு...

கடவுளே! நீரே என் இறைவன்

”கடவுளே! நீரே என் இறைவன்” கடவுள் மீது தன்னுடைய நம்பிக்கையை, உறுதிப்பாட்டை ஆழமாக வெளிப்படுத்துகிற ஒரு பாடல் இந்த திருப்பாடல். எத்தனை தெய்வங்கள் இருந்தாலும், யாவே ஆண்டவர் ஒருவர் தான், தன்னுடைய தலைவர் என்கிற நம்பிக்கையை அறிக்கையிடும் பாடலாகவும் இது அமைகிறது. பொதுவாக, கடவுள் மீது நம்பிக்கை வைக்கிற மனிதர்களுக்கு பலவிதமான சோதனைகள் வருவதுண்டு. துன்ப காலத்தில் மற்றவர்கள், கடவுள் நம்பிக்கையுள்ளவர்களைப் பார்த்து கூறுவது, ”இந்த கடவுளை நம்பினாயே! நீ அடைந்த பலன் என்ன? துன்பங்கள் தான் உனக்கு மிஞ்சுகிறது. பேசாமல் அவரை விட்டுவிட்டு விலகிவிடு”. நெருக்கடியான நேரத்தில் இப்படி சொல்கிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கடவுள் மீது நம்பிக்கை இருந்தாலும், மற்றவர்களின் தொடர் விமர்சனங்களுக்கு ஆளாகிற பலர், ”ஏன் நமக்கு வீண் பிடிவாதம்?” என்று, வெகு எளிதாக, கடவுளை விட்டுவிடுகிறார்கள். இந்த நெருக்கடியான நேரத்தில் தன்னுடைய விசுவாசத்தை அறிக்கையிடும் திருப்பாடல் ஆசிரியர், கடவுள் மீது தனக்குள்ள ஆழமான நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார்....

உங்களை நம்ப முடியுமா?

லூக்கா 16:9-15 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். மனிதர்கள் பல விதங்களில் தங்களுடைய உண்மை நிலையை இழந்து வருகின்றனர். பல விதங்களில் பல வேடங்களை அணிகின்றனர். யாரையும் நம்ப முடியவில்லை என்பதுதான் பலரின் கூற்று. இது கிறிஸ்தவர்களுக்கு அழகல்ல. உண்மையை எடுத்துரைப்பதே என் பணி என்ற நமது ஆண்டவரின் பிள்ளைகளாகிய நாம் உண்மையுள்ளவர்களாக வாழ வேண்டும், நம்பிக்கைக்குரியவர்களாக சாட்சியம் பகர வேண்டும் என்பதே இன்றைய வாசகத்தின் அழைப்பு. நம்பிக்கைக்குரியவர்களாக மாற இரண்டு ஆசைகளை தவிர்க்க வேண்டும். 1. பணம் பணத்தின் மீது ஆசை கொண்டவர்கள் பெரும்பாலும் உண்மையுள்ளவர்களாக, நம்பக்கூடியவர்களாக இருப்பதில்லை. பணம் அவர்களை நடிக்க சொல்கிறது. பொய் சொல்ல வைக்கிறது. அவர்களின் பேச்சில் சுத்தம் இருப்பதில்லை. ஆளுக்கு...