Category: இன்றைய சிந்தனை

இறைவனின் செயல்களை மறவாதீர்

இஸ்ரயேல் மக்களின் வாழ்க்கையில் மையமாக இருந்தது யாவே இறைவான் மட்டும் தான். அவர் தான் அவர்களுக்கு எல்லாமுமாக இருக்கிறவர் என்று அவர்கள் உறுதியாக நம்பினார்கள். அந்த இறைவன் செய்த வல்லமையுள்ள செயல்களை அவர்கள் அடிக்கடி நினைவுகூர்ந்து, தங்களின் பிள்ளைகளுக்கும் கற்றுக்கொடுத்தனர். அதனை ஒரு முக்கிய நிகழ்வாகவே, ஒவ்வொரு ஆண்டும் நினைத்துப்பார்த்தனர். அதைத்தான் திருப்பாடல் ஆசிரியர் இங்கே நினைவுகூர்கிறார். இறைவன் செய்த செயல்கள் என்ன? அவற்றில் நினைத்துப் பார்ப்பதற்கு என்ன இருக்கிறது? தொடக்கத்தில் இறைவன் இந்த உலகத்தைப் படைத்தார். படைப்பின் சிகரமாக மனிதர்களைப் படைத்தார். மனிதன் கீழ்ப்படியாமையால் தவறு செய்தாலும், அவர்களை தொடர்ந்து பாதுகாப்பாக வழிநடத்தினார். தன்னுடைய விலைமதிப்பில்லா சொந்தமாக, இஸ்ரயேல் மக்களை தேர்ந்தெடுத்தார். உருத்தெரியாமல் இருந்த அவர்களுக்கு உருக்கொடுத்தார். எகிப்தில் அடிமைகளாக இருந்த அவர்களை, விடுதலை வாழ்வை நோக்கி அற்புதமாக வழிநடத்தினார். பாலைநிலத்தில் நாற்பது ஆண்டுகள், யாரும் நினைத்துப்பார்க்க முடியாத வகையில் உணவளித்தார். தண்ணீர் வழங்கி, மக்களின் தாகம் தணித்தார். இயற்கையின்...

உங்கள் இதயத்தைக் கடினப்படுத்தாதீர்கள்

திருப்பாடல் 95: 6 – 7, 8 – 9, 10 – 11 ஒருவிதமான பிடிவாத நிலையில் இருப்பதுதான், இந்த திருப்பாடல் வரிகளின் பொருளாக இருக்கிறது. கடவுள் இஸ்ரயேல் மக்களை மீட்பின் வரலாற்றில் மிகச்சிறப்பாக வழிநடத்தி வந்திருக்கிறார். அடையாளமே இல்லாத மக்களுக்கு அடையாளத்தைக் கொடுத்து, நாடில்லாமல் நாடோடிகளாக வாழ்ந்தவர்களுக்கு நாட்டைக்கொடுத்து, முதுபெரும் தலைவர்கள் வழியாக, நீதித்தலைவர்கள் வழியாக, அரசர்கள் வழியாக, இறைவாக்கினர்கள் வழியாக, அவர்களை இறைவன் வழிநடத்த வந்திருக்கிறார். இந்தளவுக்கு மக்கள் மீது அன்பு வைத்திருக்கிற இறைவனை, இஸ்ரயேல் மக்கள் விட்டுவிட்டு, பாவ வாழ்க்கையில் வாழ ஆரம்பித்தனர். அநீதி செய்தனர். வேற்றுத் தெய்வங்களை ஆராதித்தனர். தவறான ஒழுக்கச் சீர்கேட்டில் வாழ்ந்து வந்தார்கள். தங்களை வழிநடத்திய கடவுளுக்கு எதிராக இவ்வளவு செய்தாலும், கடவுள் அவர்களை மன்னிப்பதற்காகவே காத்திருந்தார். தொடர்ந்து அவர்களுக்கு நன்மைகளைச் செய்தார். அவர்களை தன்னுடைய பிள்ளைகளாக, திரும்பிவர எதிர்பார்த்து நின்றார். ஆனால், இஸ்ரயேல் மக்களோ, பிடிவாதமாக, தங்களது தீய வாழ்க்கையைத்...

ஆண்டவர் தம் உடன்படிக்கையை என்றும் நினைவிற்கொள்கின்றார்

திருப்பாடல் 105: 1 – 2, 3 – 4, 6 – 7, 8 – 9 ஆண்டவர் இஸ்ரயேல் மக்களோடு உடன்படிக்கை செய்துகொண்டார். தொடக்கநூல் 17: 7 ல் பார்க்கிறோம். ” தலைமுறை, தலைமுறையாக உன்னுடனும், உனக்குப்பின் வரும் உன் வழிமரபினருடனும் என்றுமுள்ள உடன்படிக்கையை நான் நிலைநாட்டுவேன். இதனால், உனக்கும், உனக்குப்பின் வரும், உன் வழிமரபினருக்கும் நான் கடவுளாக இருப்பேன்”. கடவுள் இஸ்ரயேல் மக்களோடு இந்த உடன்படிக்கையைச் செய்கிறார். இஸ்ரயேல் மக்கள் கடவுளின் கட்டளைகளைக் கடைப்பிடித்து வர வேண்டும். கடவுள் அவர்களுக்கு துணையாக இருப்பார் என்பதுதான் இந்த உடன்படிக்கை. இந்த உடன்படிக்கையை இஸ்ரயேல் மக்கள் மீறி பாவம் செய்தார்கள். அவர்கள் வேற்று தெய்வங்களை ஆராததித்தனர். எகிப்தின் அடிமைத்தளையிலிருந்து, பார்வோனின் அடக்குமுறையிலிருந்து விடுவித்த இறைவனை மறந்து, வேற்று தெய்வத்தை நாடினர். இதனால், அவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகினர். வேற்றுநாட்டினர் அவர்களை அடிமைப்படுத்தினர். யாவே இறைவன் அவர்களோடு இருந்தவரை, மற்றவர்களால் இஸ்ரயேல்...

அனைத்து தெய்வங்களே! ஆண்டவரைத் தாழ்ந்து பணியுங்கள்

திருப்பாடல் 97: 1, 2b, 6, 7c, 9 கடவுள் ஒருவர் என்பது நமது நம்பிக்கை. ஆனால், இன்றைய திருப்பாடலில், பல தெய்வங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனை எப்படி புரிந்து கொள்வது? இங்கே சொல்லப்படக்கூடிய தெய்வங்கள் யார்? இஸ்ரயேல் மக்களைப் பொறுத்தவரையில், கடவுளைப்பற்றிய அவர்களது நம்பிக்கை இதுதான். அவர்கள் மற்ற தெய்வங்களை புறக்கணிப்பது கிடையாது. ஆனால், அவர்கள் “யாவே“ இறைவனை மட்டும் நம்பினார்கள். தங்களது யாவே இறைவன் தான், எல்லா தெய்வங்களுக்கும் தலைமையாக இருக்கிறவர் என்று அவர்கள் உறுதியாக நம்பினார்கள். மத்திய கிழக்குப் பகுதிகளில் இருந்த நாடுகள் அனைத்திலும், தங்களுக்கென்று ஒரு காவல் தெய்வங்களை வணங்கி வந்தார்கள். பாபிலோனியர்கள் தங்களுக்கென்று ஒரு தெய்வத்தை வழிபட்டார்கள். அமலேக்கியர்களுக்கென்று ஒரு தெய்வம் இருந்தது. இவர்கள் அனைவருடைய வல்லமையும், அந்த நாட்டின் எல்கைக்குள்ளாக மட்டுமே இருப்பதாக, மக்கள் மத்தியில் ஒருவித நம்பிக்கை இருந்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், இஸ்ரயேல் மக்கள், யாவே இறைவன் ஒருவர் தான் எல்கைகளைக்...

நமது திருமுழுக்கை நினைவுகூர்வோம் !

இன்று ஆண்டவர் இயேசுவின் திருமுழுக்கு விழா. இவ்விழாவில் தந்தை இறைவனாலும், தூய ஆவியாலும் வலிமைப்படுத்தப்பட்டார். அவரது பணிவாழ்வின் தொடக்கமாக அவரது திருமுழுக்கு அமைந்தது. இந்த நாளில் நாம் நமது திருமுழுக்கைக் கொஞ்சம் நினைவுகூர்வோமா? நாம் திருமுழுக்கு பெற்ற அன்று பின்வருவன நடைபெற்றன: 1. தந்தை இறைவன் நம்மை ஆண்டவர் இயேசு வழியாகத் தமது சொந்தப் பிள்ளைகளாக்கிக் கொண்டார். அன்றிலிருந்து நாம் இறைவனின் பிள்ளைகள். இந்த உணர்வோடு நான் வாழ்கிறேனா? இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேனா? 2. நாம் திருச்சபையின் உறுப்பினர்களானோம். தாய்த் திருச்சபையின் அன்புப் பிள்ளையாக நான் வாழ்கிறேனா? திருச்சபைக்குரிய கடமைகளை நான் நிறைவேற்றுகிறேனா? 3. திருமுழுக்கால் நற்செய்தி அறிவிக்கும் கடமையைப் பெற்றோம். அந்தக் கடமையை நான் ஆற்றுகிறேனா? எனது நற்செய்தி அறிவிக்கும் பணி என்ன என்பது பற்றிச் சிந்தித்து, ஏதாவது செய்கிறேனா? ஆண்டவரின் திருமுழுக்கு நாளில் நமது திருமுழுக்கை நினைவுகூர்ந்து, நமது கடமைகளை ஆற்ற முன்வருவோம். மன்றாடுவோம்: அன்புத் தந்தையே இறைவா,...