அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு
அன்பே இவ்வுலகின் அச்சாணி. இதனை மதங்கள் மட்டும் வலியுறுத்தவில்லை. அறிஞர்களும், சான்றோர்களும், புலவர் பெருமக்களும் வலியுறுத்துகின்றனர். குறிப்பாக உலகப் பொதுமறை தந்த செந்நாப்போதரும், ‘அன்பிற்கும் உண்டோ அடைக்குந் தாழ்’ என்கிறார். இப்படி அன்பினைப் பற்றிப் பேசாதவர்களே இவ்வுலகில் இல்லை எனலாம். சாதாரண மாந்தர்களே இவ்வாறு கூறும்போது, அன்பினையே தனது பேச்சாக, மூச்சாக, உணர்வாக, உயிராகக் கொண்டிருக்கும் நம் அன்பின் கடவுள் இயேசு எவ்வளவு பேசியிருப்பார். உலகின் எல்லாச் சமயங்களும் வலியுறுத்துகின்ற ஒருபொன் விதி, பொதுவிதி என்றால் “பிறர் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதையே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்” என்பதாகத்தான் இருக்க முடியும். எடுத்துக்காட்டாக, இந்துமதம், (மகாபாரதம் 5:1517) இசுலாம் (சன்னா) யூதமதம் (தால்முத் சாபத் 3) கன்சிபூசியனிசம் (15:23) தாவோயிசம் (தாய் ஷாங் கான்யாய் பைன்) எனப் பல மதங்களைக் குறிப்பிடலாம். ஆனால் கிறித்தவத்தின் தனித்தன்மை என்னவென்றால், புதிய ஏற்பாட்டு நூல்கள் அனைத்திலும் ‘அன்பு’ பரவிக்கிடக்கின்றது. ‘கடவுள்...