“நான் ஆண்டவரைக் கண்டேன்”
இது பலருக்கு இயற்கை. ஒன்றை ஒருவரிடம் சொல்லச் சொன்னால், சொன்ன செய்தியை மறந்துவிடுவர்.தன்னுடைய அனுபவத்தை விலாவாரியாக விவரித்த பின், புறப்படுவதற்கு முன், ஐயோ ஒன்றை மறந்துவிட்டேனே, இதைச் சொல்லச் சொன்னார் என்று விஷயத்தைச் சொல்லுவார்கள். அவர் சொன்னதை விட தான் அனுபவித்தது, பார்த்தது, கேட்டது, ருசித்தது, ரசித்தது அவ்வளவு ஆழமான அழுத்தத்தையும் தாக்கத்தையும் அது ஏற்படுத்தியிருக்கும். உயிர்த்த இயேசு மரியாவிடம் சீடர்களுக்குச் சொல்லச் சொன்ன செய்தி, “என் தந்தையும் உங்கள் தந்தையும் என் கடவுளுமானவரிடம் செல்லவிருக்கிறேன்” (யோவா20:17)என்பது. ஆனால் மரியா சொன்னதோ முதன் முதலில் “நான் ஆண்டவரைக் கண்டேன்” என்பது. அதன் பின்னரே உயிர்த்த இயேசு சொன்ன செய்தியைச் சொல்கிறார். மகதலா மரியா இவ்வாறு செய்ததன்மூலம் தானும் இயேசுவின் சீடன் என்பதை உறுதிசெய்கிறார். பவுலடியார், தான் ஒரு சீடர், திருத்தூதர் என்பதற்கு ஆணித்தரமான சான்றாக, ‘நானும் உயிர்த்த இயேசுவைக் கண்டேன்’ என்பதையே சான்றாக்குகிறார்.(வாசிக்க 1 கொரி 15:8) ஆகவே தான் ஆண்டவரைக்...