Category: Daily Manna

எச்சரிக்கை உணர்வு

இந்த உலகம் என்பது ஒரு சத்திரம் போன்றது. ஒரு சத்திரத்தில் யார் வேண்டுமானாலும் தங்கலாம். அவர்களுக்கான உணவையும் அங்கே பெற்றுக்கொள்ளலாம். அங்கே தங்கி இளைப்பாறவும் செய்யலாம். ஆனால், யாரும் அதற்கு உரிமை கொண்டாட முடியாது. நமது தேவை முடிந்தவுடன், நமது பயணத்தைத் தொடர வேண்டும். ஏனென்றால், சத்திரம் நமக்கான நிலையான இடம் கிடையாது. நமக்கென்று, நாம் வாழ்வதற்கென்று அருமையான இல்லம் இருக்கிறது. அது போல, இந்த பூமியில் நமது வாழ்வு நிலையான வாழ்வல்ல. இது ஒரு பயணத்தில் நாம் சந்திக்கின்ற சத்திரம் போன்றது. இதற்கு நாம், நிலையாக இருப்பது போல, உரிமை கொண்டாட முடியாது. இந்த மனநிலையை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் இயேசு நமக்குத்தரும் அழைப்பு. இயேசுவின் வார்த்தைகள், செல்வந்தர்களைப்பற்றி கடினமானது என்றாலும், அது அவர்களைத் தீர்ப்பிடுவது அல்ல. ஏனென்றால், செல்வந்தர்களாக இருந்து, இயேசுவின் நன்மதிப்பைப்பெற்றவர்களும் இருக்கிறார்கள். சக்கேயு மிகப்பெரிய செல்வந்தர். ஆனால், இயேசு கொடுக்கும் மீட்பைப்பெற்றுக் கொண்டார். அரிமத்தியா...

மரியாளின் விண்ணேற்பு

நான்காம் மற்றும் ஐந்தாம் நூற்றாண்டில் கிடைக்கப்பெற்ற சான்றுகளின்படி, பைசாண்டின் அரசில், மரியாளின் இறப்பு தினம், மிகப்பெரிய விழாவாக் கொண்டாடப்பட்டது. ஐந்தாம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் எருசலேமிலிருந்து கொண்டு வரப்பட்ட வாசக நூலும், அதன் ஆர்மீனிய மொழிபெயர்ப்பு நூலும், ஆகஸ்டு மாதம் 15 ம் நாளை, மரியாளின் விண்ணேற்பு நாளாக அறிவிக்கின்றன. இதுவே அன்னை மரியாளின் விண்ணேற்பு பெருவிழாவிற்கான தொடக்ககால சான்றாகும். திருத்தந்தை பன்னிரெண்டாம் பயஸ் அவர்கள் மரியாளின் வி்ண்ணேற்றம் என்ற திருமறைக்கோட்பாட்டை, நவம்பர் 1, 1950 ல் பிரகடனப்படுத்தினார். இது விசுவாசத்தின் அடிப்படையில் தொடங்கப்பட்டதாகும். திருவிவிலியத்தில் இறப்பு என்பது பாவத்தின் விளைவாகும். மரியாள் அமல உற்பவி என்பதால், அவள் பாவமின்றி பிறந்தவள். ஆகவே, மரியாள் பாவத்திற்கான விளைவை முறியடித்தவள். ஆதலால், மரியாளின் அமல உற்பவ பெருவிழாவானது, மரியாளின் விண்ணேற்றப் பெருவிழாவோடு நெருங்கிய இறையியல் தொடர்புடையது. மரியாள் பாவத்திலிருந்து விலிகியிருந்ததால், இறைவனின் மாட்சிமையில் பங்குபெற்றார். மரியாளின் மீது அளவுகடந்த பாசம் வைத்திருக்கிற நாமும், அன்னை...

அடையாளம் இடப்பட்டோர் தப்பிப் பிழைப்பர் !

எருசலேம் நகருக்கும், கோவிலுக்கும் நிகழவிருக்கும் அழிவைப் பற்றி எரேமியா இறைவாக்கினர் போலவே, எசேக்கியேல் இறைவாக்கினரும் முன் அறிவித்தார். அந்நகரில் நிகழ்ந்து வந்த சிலை வழிபாடுகள் மற்றும் பாவச் செயல்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும் என்று எச்சரித்தார். ஆனாலும், எந்த மாற்றமும் நிகழாததால், எருசலேமின் அழிவைத் தடுக்க முடியவில்லை. ஆயினும், தங்கள் வழிகளை மாற்றிக்கொண்ட ஒருசிலராவது காப்பாற்றப்பட வேண்டும் என்பது இறைவனின் திருவுளம். எனவே, அவர்களின் நெற்றியில் அடையாளம் இடப்பட்டது. இவர்கள் எருசலேம் நகரில் செய்யப்படும் “எல்லா அருவருக்கத்தக்க செயல்களுக்காகவும் பெருமூச்சு விட்டுப் புலம்பும்” மனிதர்கள் என்று இன்றைய வாசகம் குறிப்பிடுகிறது. நமது நிலை என்ன? நம்மைச் சுற்றி நிகழும் தீய செயல்பாடுகள் குறித்துக் கவலை கொண்டு புலம்புகிறோமா? அவற்றுக்கு எதிராகக் குரல் எழுப்புகிறோமா? இத்தகைய அழைப்பைத் தருகிறது இன்றைய வாசகம். இல்லாவிட்டால், நாமும் இறைமாட்சியின் சாயலை இழந்துவிடுவோம் என்று எச்சரிப்பும் தருகிறது இன்றைய வாசகம். மன்றாடுவோம்: புகழ்ச்சியின் நடுவில் வாழும் மாட்சிமிகு இறைவா,...

இறைவனை நம்புவோம், இறையருள் பெறுவோம்

இயேசுகிறிஸ்துவின் போதனைகள் மக்கள் மத்தியில் பரவலாக பேசப்படுவதற்கு முக்கிய காரணம், அவரது எளிமையான கருத்துக்கள். மிகப்பெரிய தத்துவத்தையும் எளிய நடையில் பாமர மக்களையும் புரிந்துகொள்ள வைக்கக்கூடிய ஞானம் தான் மற்றவர்களை அவரை நோக்கி திரும்பிப்பார்க்க வைத்தது. ஒரு குழந்தையை வைத்து மிகப்பெரிய வாழ்வியல் தத்துவத்தை தன் சீடர்களுக்கு அவர் தருகிறார். இறையரசுக்கு தகுதி பெறுவதற்கு குழந்தையைப் போல் மாற வேண்டும். அதாவது குழந்தைகளுக்குரிய குணநலன்களைப் பெற்றிருக்க வேண்டும் என்பதுதான். குழந்தைகளிடத்திலே நாம் பார்க்கும் முக்கிய பண்பு மறத்தலும், மன்னித்தலும். மனதிலே வைராக்கியத்தோடு வைத்திராமல் மற்றவர் செய்த தவறை சிறிதுநேரத்தில் மறந்து மீண்டும் அன்போடும், பாசத்;தோடும் பழகுவது. மற்றொரு பண்பு: தன்னை கர்வம் கொள்ளாமல், மற்றவர்கள் மீது குறிப்பாக தன்னுடைய பெற்றோரைச்சார்ந்து வாழ்வது. இறைவனுடைய அரசிற்கு தகுதி பெற வேண்டுமென்றால், நமது வைராக்கியத்தை, கர்வத்தை தூக்கி எறிந்துவிட்டு, தாழ்ச்சியுள்ளவர்களாக கடவுளைச் சார்ந்து இருக்கக்கூடியவர்களாக வாழ வேண்டும். இறைவன் முன்னிலையில் பால்மணம் மாறாத பச்சிளங்குழந்தைகளாக...

நேர்மறையான பார்வை

மனித வாழ்க்கையில் நாம் சந்திக்கும் துயரங்களையும், கவலைகளையும் தான், பெரிதாக நினைத்துக்கொண்டிருக்கிறோமே தவிர, அது நமக்கு தரும் பல இலாபங்களை, வாழ்க்கைப் படிப்பினைகளை நாம் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை. இது எதிர்மறையாக சிந்திக்கக்கூடிய சிந்தனையின் விளைவு. நடப்பது கெட்டதாக இருந்தாலும், அதை நோ்மறையாக சிந்தித்தால், நாம் எல்லாச் சூழ்நிலைகளிலும் மகிழ்ச்சியாக வாழலாம். அது கடினமாக இருந்தாலும், அப்படி வாழ நாம் எடுக்கக்கூடிய முயற்சி, நமக்கு சிறந்த பயிற்சியாக அமையும். இன்றைய நற்செய்தி வாசகத்தில் சீடர்கள் இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டு அதிர்ச்சியடைகிறார்கள். இது எதிர்மறையாக சிந்தித்தன் விளைவு. இயேசு தான் பாடுகள் படப்போவதை அறிவிக்கிறார். நிச்சயம் இது சீடர்களுக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்திருக்கும். ஆனால், அவர்கள் மகிழ்ச்சி கொள்வதற்கும் செய்தி இருக்கிறது. இயேசு தான் உயிர்த்தெழப்போவதையும் அறிவிக்கிறார். மொத்தத்தில் இயேசுவின் வார்த்தைகளை நேர்மறையாக எடுத்திருந்தால், அது நமக்கு வாழ்வு தரக்கூடிய, ஆனந்தத்தைக் கொடுக்கக்கூடிய செய்தி. அதை எதிர்மறையாகப் பார்த்தால், கவலை தரக்கூடிய செய்தி. சீடர்கள்...