Category: Daily Manna

அமைதி காப்போம்

இயேசுவின் உருமாற்ற நிகழ்வின் போது, இயேசுவுக்கு நெருங்கிய சீடர்கள் மூன்றுபேர் அவரோடு இருக்கிறார்கள். மோசே, எலியாவோடு, இயேசு நெருங்கியிருப்பதையும், மாட்சிமையோடு நிறைந்திருப்பதையும் பார்த்து, அவர்கள் அதிர்ச்சி கொள்கிறார்கள். அவர்களுக்குள் நிச்சயம் பல கேள்விகள் எழும்பியிருக்கும். இயேசு உண்மையில் யார்? தாங்கள் பார்ப்பது உண்மைதானா? அல்லது கனவா? ஏதோ காட்சி கண்டது போல இருக்கிறதே? இயேசுவோடு தோன்றிய மற்ற இரண்டு மனிதர்கள் யார்? இவைகள் தான், அவர்களது உள்ளத்திற்குள்ளாக எழுந்திருக்கலாம் என்று நாம் ஊகம் செய்யக்கூடிய கேள்விகள். நிகழ்வின் கடைசியில் சொல்லப்படுகிற “அமைதி காத்தார்கள்“ என்கிற வார்த்தைகள் நமது சிந்தனையைத் தூண்டுவதாக இருக்கிறது. எதற்காக அமைதி காத்தார்கள்? ஏன் மற்ற சீடர்களிடம் அவர்கள் சொல்லவில்லை? இந்த அமைதி எது வரை இருந்தது? சீடர்கள் நிச்சயம் பயத்தில் உறைந்திருப்பார்கள். இயேசுவை வெறும் போதகராக, மக்கள் விரும்பும் நல்ல மனிதராகப் பார்த்தவர்களுக்கு குழப்பம் தான் அதிகரித்திருக்குமே ஒழிய, தெளிவு கிடைத்திருக்காது. ஆனாலும், சீடர்கள் அமைதி காக்கிறார்கள்....

இறைவன் கொடுத்த வாழ்வு

கடவுள் கொடுத்த இந்த அழகான வாழ்வை எப்படி வாழப்போகிறோம்? என்பதை நிர்ணயிக்கப் போவது நாம் தான். இந்த வாழ்வை எப்படியும் வாழ்வதற்கு, கடவுள் நமக்கு முழுச்சுதந்திரத்தைத் தந்திருக்கிறார். நம் முன்னால் இரண்டு வழிகள் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இரண்டுமே, நாம் செல்ல வேண்டிய இலக்கை அடையக்கூடிய வழி என்றால், நாம் எதைத் தேர்ந்தெடுப்போம்? எது ஆபத்தில்லாத வழியோ, எது நமக்கு கஷ்டம் தராத வழியோ, அதைத்தான் தேர்ந்தெடுப்போம். ஒருவேளை, மற்றொரு வழி துன்பம் தருகிற வழி என்று நினைத்துக்கொள்வோம். அந்த துன்பம் தருகிற வழியில் நாம் ஒரு புதிய பாதையை உருவாக்கினால், அதனால், பல மக்கள் பயன்பெறுவார்கள் என்றால், நமது துன்பத்தைப் பார்ப்போமா? அல்லது, நமது துன்பத்தால் பயன்பெறக்கூடிய மக்களை நினைத்துப்பார்ப்போமா? இதில் தான், நாம் நமது வாழ்வை எப்படி வாழப்போகிறோம் என்பதன் இரகசியம் அடங்கியிருக்கிறது. இந்த உலகத்திலே எத்தனையோ கோடிக்கணக்கான மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருமே நமது நினைவில் இருக்க...

“நீ பேறுபெற்றவன்” !

“யோவானின் மகனான சீமோனே, நீ பேறுபெற்றவன் ” என்று ஆண்டவர் இயேசு பேதுருவைப் பாராட்டுகின்றார். எதற்காக இந்தப் பாராட்டு? “நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன் ” என்று இயேசுவைப் பற்றிய விசுவாச அறிக்கை இட்டதற்காக. ஆம், இயேசுவைக் கடவுளாக, வாழும் கடவுளின் மகனாக, மெசியாவாக ஏற்று, அதனை அறிக்கை இடுவது என்பது ஒரு பேறு. அந்தப் பேறு எல்லாருக்கும் கிடைப்பதில்லை. உலக மக்கள் தொகையில் இரண்டு பில்லியன் மக்களைத் தவிர, மற்ற அனைவருக்கும் அந்தப் பேறு கிடைக்கவில்லை. அந்தப் பேறு கடவுளின் கொடை. விசுவாசம் என்பது இறைவன் வழங்கும் இலவசப் பரிசுதானே ஒழிய, மனித உழைப்பின் பயன் அல்ல. இத்தவக் காலத்தில் நாம் சிந்திக்க வேண்டியது: இறைவன் எனக்குத் தந்த விசுவாசம் என்னும் கொடைக்கு எனது மறுமொழி என்ன? இயேசுவை “ஆண்டவர்” என்று அறிக்கையிடும் பேற்றினை இறைவன் எனக்குத் தந்துள்ளார். எனது பொறுப்பு என்ன? இத்தவ நாள்களில் இயேசுவை ஆண்டவராக,...

வாழ்வை நம்பிக்கையோடு எதிர்கொள்வோம்

நம்பிக்கையினால் கடவுளின் அருளை வென்றெடுத்த ஒரு பெண்ணின் வாழ்க்கையை, இன்றைய நற்செய்தியில் நாம் வாசிக்கிறோம். அந்த பெண், இயேசுவின் மீது வைத்திருந்த நம்பிக்கை பலவிதங்களில் வெளிப்படுத்தப்படுகிறது. முதலில் அந்த பெண்ணின் பொறுமை, நம்மை திகைப்படையச் செய்கிறது. அவளது வாழ்வில் மிகப்பெரிய துன்பம் நேர்ந்திருக்கிறது. அவளது மகள், தீய ஆவியினால் ஆக்கிரமிக்கப்பட்டு, குடும்பமே ஒவ்வொரு நாளும் சித்ரவதை அனுபவித்துக்கொண்டிருக்கிறது. கவலையும், கண்ணீரும் அவளை வாட்டியெடுத்துக் கொண்டிருக்கிறது. ஆனாலும், அதனை வெளியே காட்டிக்கொள்ளாமல், துன்பங்களுக்கு மத்தியில் நம்பிக்கையோடு வாழக்கூடிய பெண்ணாக அவள் காணப்படுகிறாள். அந்த துன்பங்களோடு இயேசுவை அணுகுகிறபோது, இயேசுவின் பதில் அவளுக்குக் கோபத்தை வரவழைக்கவில்லை. மாறாக, எப்படியாவது, இயேசுவிடமிருந்து, வல்லமையைப் பெற்றுவிட வேண்டும் என்பதில் தான், அவளது எண்ணம் அடங்கியிருக்கிறது. அந்த சோர்வுகளுக்கு மத்தியிலும், பொறுமையோடு இயேசுவுக்கு பதில் சொன்ன பாங்கு, நம்மை மலைக்க வைக்கிறது. வாழ்வை நாம் எப்படி அணுக வேண்டும்? எப்படி அணுகக்கூடாது என்பதற்கு அவளது வாழ்க்கை சிறந்த எடுத்துக்காட்டு....

பயப்பட வேண்டாம்

பயம் என்பது இந்த மானிட வாழ்வின் அன்றாட நிகழ்வுகளுள் ஒன்று. நாம் பலவற்றிற்கு பயப்படுகிறோம். இன்றைய நற்செய்தி வாசகத்தின் (மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 22-36) சிந்தனையாக இந்த பயத்தை எடுத்துக்கொள்வோம். இதனை நாம் இரண்டு விதங்களில் சிந்திக்கலாம். எவற்றிற்கு பயப்பட வேண்டும்? எவற்றிற்கு பயப்படக்கூடாது? வாழ்வின் சவால்களுக்கு, வாழ்க்கையில் சந்திக்கும் சங்கடங்களுக்கு, வாழ்வின் தொல்லைகளுக்கு நாம் பயப்படக்கூடாது. பயப்படத் தேவையில்லை. மாறாக, நேர்மையற்ற செயல்பாடுகளில் நாம் ஈடுபடும்போது, பொய்மைக்கு துணைபோகிற போது, நாம் பயப்பட வேண்டும். நமது வாழ்க்கை இதற்கு முற்றிலும் முரணானதாக இருக்கிறது என்றால், அது மிகையாகாது. காரணம், நாம் சவால்களை, சங்கடங்களைக் கண்டு பயப்படுகிறோம். நேர்மையற்ற காரியங்களுக்கு துணைபோவதற்கு நாம் பயப்படுவது கிடையாது. இன்றைய நற்செய்தியிலும் இதே தவறுதான் நடக்கிறது. சீடர்கள் இயேசுவோடு இருந்திருக்கிறார்கள். பல பேய்களை இயேசு ஓட்டுவதை, கண்கூடாக கண்டிருக்கிறார்கள். புதுமைகளை அவர்களும் செய்திருக்கிறார்கள். ஆனாலும், அவர்கள் பயப்படுகிறார்கள். இயேசுவைக் கண்டே பயப்படுகிறார்கள்....