Category: Daily Manna

நீங்கள் கண்டுபிடித்தது கடவுளையா? அலகையையா?

யோவான் 6:60-69 இறையேசுவில் இனியவா்களே! பொதுக்காலம் 20ம் ஞாயிறு வழிபாட்டைக் கொண்டாட வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். அன்புமிக்கவர்களே! உங்களுக்கு அலெக்சாண்ட்ரோ பற்றி நினைவு இருக்கிறதா? தூய மரிய கொரற்றி பற்றி நினைவு இருக்கிறதா? தூய மரிய கொரற்றியின் வாழ்க்கயைில் வருபவர் தான் அலெக்சான்ட்ரோ. நமக்கு நன்றாகத் தெரியும் தூய மரிய கொரற்றி ஓர் கன்னிகை, மறைசாட்சி. வாழ்ந்த காலம் கி.பி.1890-1902. இவர் 12 வயதில் புது நன்மை வாங்கிய பிறகு ஐந்து வாரங்கள் கூட ஆகவில்லை . அலெக்சாண்ட்ரோ ஸெரனெல்லா என்ற 18 வயது இளைஞன் தவறான வழியில் மரியாவை அடைய முனைந்தான் . மரியா பாவத்திற்கிணங்க மறுத்துவிட்டார் . ஒரு பாவம் செய்வதைவிட சாவதுமேல் என்பதை நன்கு தெரிந்திருந்தாள் . அலெக்சாண்ட்ரோ பாவத்துக்கு இணங்க மறுத்த...

கனி தரும் திராட்சைக் கொடி

திருப்பாடல் 128: 1b – 2, 3, 4, 5 திராட்சைக் கொடி வளமையைக் குறிக்கக்கூடிய சொல்லாக இருக்கிறது. இந்த வளமையை, இல்லத்தின் தலைவிக்கு ஆசிரியர் ஒப்பிடுகிறார். யாரெல்லாம் ஆண்டவர்க்கு அஞ்சி நடக்கிறார்களோ, அவர்கள் அனைவரும் வளமையாக இருப்பர் என்பது இங்கே நமக்குத் தரப்படுகிற செய்தி. இந்த உவமை இஸ்ரயேல் மக்களோடு ஒப்பிட்டுச் சொல்லப்படுகிற உவமையாக இருந்தாலும், ஆண்டவர்க்கு அஞ்சி வாழக்கூடிய பிள்ளைகள் அனைவருக்குமே இது நன்கு பொருந்துவதாக அமைந்துள்ளது. ஒரு குடும்பம் இறைவனால் முழுக்க ஆசீர்வதிக்கப்பட வேண்டுமென்றால், அந்த குடும்பத்தில் இருக்கிற தலைவர், தலைவி, குழந்தைகள் என அனைவரும் இறைவனின் முழுமையான பராமரிப்பைப் பெற வேண்டுமென்றால், அவர்கள் ஆண்டவர்க்கு அஞ்சி வாழக்கூடியவர்களாக இருக்க வேண்டும். அப்போது ஆண்டவர் தம் பார்வையில் அவர்கள் விலைமதிக்க முடியாதவர்களாக இருப்பர். வாழ்நாள் முழுவதும் எந்தவொரு தீங்கும் அவர்களை நெருங்காதிருக்கும். வாழ்வின் நிறைவை அவர்கள் எப்போதும் அனுபவிக்கக்கூடிய வகையில், அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்வர். நம்முடைய குடும்பங்கள்...

என் நெஞ்சே! ஆண்டவரைப் போற்றிடு!

திருப்பாடல் 146: 5 – 6b, 6c – 7, 8 – 9a, 9b – 10 “நெஞ்சம் நிறைந்த நன்றி“ என்று பொதுவாகச் சொல்வார்கள். இதனுடைய பொருள் என்ன? வழக்கமாக நன்றி சொல்கிறபோது, வார்த்தைகளால் அலங்கரித்து நன்றி சொல்வார்கள். மிகப்பெரிய மேடையில், ஒருவர் நன்றி சொல்கிறபோது, அதனை ஒரு கடமையாகத்தான் சொல்வார். அதே நேரத்தில், ஒரு விழாவினை ஏற்பாடு செய்ய எல்லாமுமாக இருந்து, அந்த விழாவினைச் சிறப்பாக நடத்தி முடித்த மனிதரே, நன்றி சொல்ல வருகிறபோது, அது வெறும் வார்த்தைகளாக இருக்காது. நன்றிப்பெருக்கினால், தன்னுடைய ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற ஒத்துழைப்புக் கொடுத்த அனைவருக்கும் உள்ளத்தின் ஆழத்திலிருந்து சொல்லக்கூடிய நன்றியாக இருக்கும். அதுதான் உண்மையான நன்றி, ஆழமான நன்றி. இன்றைய திருப்பாடலில் ஆசிரியர் தன்னுடைய நெஞ்சத்தை “இறைவனைப் போற்றிடு“ என்று சொல்வது இதனைக் குறிக்கக்கூடிய வார்த்தையாகத்தான் இருக்கிறது. உள்ளத்தின் ஆழத்திலிருந்து இறைவனுக்கு எழுப்பக்கூடிய நன்றியாக இருக்கிறது. ஏனென்றால், அவருடைய புகழ்ச்சி...

தகுதியைத் தருகிறவர் கடவுள்

குறைகள் இல்லாத மனிதன் இந்த உலகத்தில் யாருமே இருக்க முடியாது. நம் எல்லோரிடத்திலும் குறைகள் உண்டு. ஆனால், கடவுளிடமிருந்து நமது குறைகளை மறைத்து விடலாம், கடவுளிடமிருந்து தப்பிவிடலாம் என்றால், அது இயலாத காரியம் என்பதற்கு இந்த வாசகம் சிறந்த சாட்சியாக இருக்கிறது. அப்படிப்பட்ட வாழ்வியலோடு, ஒப்புமை செய்து பார்க்கக்கூடிய பகுதியாக இன்றைய பகுதி அமைகிறது. திருமண விருந்திற்கு பல மனிதர்கள் வந்திருக்கிறார்கள். வந்திருக்கிறவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருந்திருக்கும். ஏனென்றால், பாலஸ்தீனப்பகுதியில் திருமண விழா என்பது குடும்ப விழா போன்றது அல்ல. அது ஒட்டுமொத்த சமுதாய விழா. அது தனிநபர் விழா அல்ல. அனைவரின் விழா. மணமக்களின் மகிழ்ச்சியில் ஒட்டுமொத்த ஊரினரும் மகிழ்ச்சி அடைகிறார்கள். அப்படிப்பட்ட விழாவில் ஒட்டுமொத்த விருந்தினர்களும் பங்கேற்றிருக்கிறபோது, ஒரு மனிதர் மட்டும், தனியே பிரிக்கப்படுகிறார். அவ்வளவு எண்ணிக்கையில் இருக்கக்கூடிய மனிதர்களுக்கு நடுவில், அவர் மட்டும் தனியே தென்படுகிறார். வெளியே அனுப்பப்படுகிறார். குறைகளை வைத்துக்கொண்டு நாம் மற்றவர்களை ஏமாற்றிவிடலாம்....

ஆண்டவரே! உமது வல்லமையில் அரசர் பூரிப்படைகிறார்

திருப்பாடல் 21: 1 – 2, 3 – 4, 5 – 6 பூரிப்பு என்பது உடல்,உள்ளம், ஆன்மா அனைத்தின் நிறைவிலிருந்தும் வருவது ஆகும். திருமணமான ஒரு பெண்ணின் ஏக்கம் எப்போது தான் தாயாக மாறக்கூடிய பாக்கியம் கிடைக்கும் என்பதுதான். அந்த நிகழ்வு நடக்கிற நேரத்தில், அவர் பூரிப்படைகிறார். ஆனந்தம் கொள்கிறார். ஏனென்றால், இதற்காகத்தான் அவர் காத்துக்கொண்டிருந்தார். ஆக, குழந்தை அந்த தாயின் பூரிப்பிற்கு காரணமாகிறது. இங்கே திருப்பாடல் ஆசிரியர் இறைவனின் வல்லமையில் பூரிப்படைகிறார். இறைவனின் வல்லமை என்ன? நடக்க முடியாது என்று நினைக்கிறவற்றை நடத்திக்காட்டுவதும், அற்புதமான முறையில் இஸ்ரயேல் மக்களுக்கு வெற்றியைக் கொடுப்பதும் இறைவனின் வல்லமை. இஸ்ரயேலின் அரசர் பூரிப்படைவதற்கு காரணம், எதிர்பார்க்காத வெற்றிகளை ஆண்டவர் கொடுத்திருக்கிறார். வேற்று நாட்டினர் நடுவில் மதிப்பையும், மரியாதையையும் கொடுத்தவர் ஆண்டவர். யாரும் பெற முடியாத அடையாளத்தையும் வழங்கியிருக்கிறார். அடையாளம் இல்லாத மக்களுக்கு, முகவரியில்லாத அனாதைகளுக்கு தன்னுடைய வல்லமையினால் மகிழ்ச்சி தந்திருக்கிறார். இதுதான்...