Category: Daily Manna

இறைவனின் பணிக்காக நம்மையே கொடுப்போம்

திருத்தூதர் பணி 13: 13 – 25 உயிர்த்த கிறிஸ்துவின் அடையாளமாக பவுல் விளங்குவதை இன்றைய வாசகத்தில் பார்க்கிறோம். இயேசு யார்? இயேசுவுக்கும் யூதர்கள் வழிபடக்கூடிய “யாவே“ இறைவனுக்கும் உள்ள தொடர்பு என்ன? இயேசு மீது எதற்காக நாம் நம்பிக்கை வைக்க வேண்டும்? என்று, மீட்பின் வரலாற்றை, தான் பெற்ற அறிவாற்றலைக் கொண்டு விளக்குகிறார். வரலாறு என்பது முக்கியமானது. நம்மைப் பற்றி அறிந்து கொள்வதற்கு, நம்முடைய வரலாற்றைப் படிக்க வேண்டும். அது ஓர் இனமாக இருக்கலாம் அல்லது தனி மனிதனாக இருக்கலாம். இயேசுவைப் பற்றி அறிந்து கொள்வதற்கு, அதிலும் சிறப்பாக அவரை நம்பி ஏற்றுக் கொள்வதற்கு, அவருடைய வரலாற்றை அறிந்து கொள்வது முக்கியமானது. யூதர்கள் அனைவருமே தங்களது மறையை தெளிவாக அறிந்து வைத்திருந்தனர். எனவே தான், பவுல் அவர்களுக்கு மீட்பின் வரலாற்றைப் பற்றி சொன்னபோது, அவர்களால் புரிந்து கொள்ள முடிந்தது. கிறிஸ்துவின் வரலாற்றைத் தெரிந்து கொள்ள முடிந்தது. அவர் மீது நம்பிக்கை...

கடவுளே! எம்மீது இரங்கி, ஆசி வழங்குவீராக!

திருப்பாடல் 67: 1 – 2, 4, 5 & 7 கடவுளின் ஆசீரைப் பெறுவதற்கு, அவரது இரக்கம் நமக்கு நிறைவாகக் கிடைக்க வேண்டுமென்று ஆசிரியர் அழைப்புவிடுக்கின்றார். கடவுளின் ஆசீரைப் பெறுவதற்கு எதற்கு இரக்கம் தேவைப்படுகிறது? இரக்கத்திற்கும், ஆசீர்வாதத்திற்கும் என்ன தொடர்பு? கடவுளின் ஆசீரைப் பெற வேண்டுமென்றால், கடவுளின் இரக்கத்தைக் கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும். ஏனென்றால், கடவுளின் ஆசீரைப் பெறுவதற்கு நாம் தகுதியற்றவர்கள். ஆசீர்வாதம் என்பது புனிதத்தன்மை நிறைந்தது. கடவுளிடமிருந்து வருவது. அப்படிப்பட்ட ஆசீர்வாதத்தைப் பெறுவதற்கு, மனிதர்களாகிய நாம் தகுதியற்றவர்கள். கடவுளின் இரக்கம் நம்மோடு இருக்கிறபோது மட்டும் தான், அவரது அருளை நாம் பெற்றுக்கொள்வதற்கு வசதியாக இருக்கும். கடவுளின் ஆசீரைப் பெறுவதற்கு முன்னதாக, நம்மையே கடவுளிடம் முழுமையாக ஒப்படைக்க வேண்டும். பழங்காலத்தில், முனிவர்கள் காடுகளில் நோன்பிருந்து, தவம் செய்தார்கள். இந்த தவத்தை அவர்கள் செய்வது, கடவுளின் அருளைப் பெற்றுக்கொள்வதற்கான தயாரிப்பிற்காகத்தான். தங்களையே ஒறுத்து, தங்களின் தேவையற்ற ஆசைகளை அடக்கி, உடலை வருத்தி,...

இறைவல்லமை

திருத்தூதர் பணி 11: 19 – 26 ஸ்தேவான் கொலை செய்யப்பட்ட பிறகு, நிச்சயம் இயேசுவைப் பற்றி போதிக்கிறவர்கள் தங்களின் உயிருக்குப் பயப்படுவார்கள் என்று அதிகாரவர்க்கத்தினர் நினைத்தனர். ஆனால், அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. எவ்வளவுக்கு அவர்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட மக்களை துன்புறுத்தினார்களோ, அதற்கு மேலாக கிறிஸ்துவைப் பற்றிய போதனை, மக்களுக்கு கொடுக்கப்பட்டது. அதற்கு காரணமாக, இன்றைய முதல் வாசகம் நமக்கு சொல்வது, ”அவர்கள் ஆண்டவரின் கைவன்மையைப் பெற்றிருந்தனர்”. இயேசுவைப் பற்றி போதித்தவர்கள் மிரட்டலுக்கு அஞ்சாமல், தங்கள் உயிரைப் பற்றிய கவலை கொள்ளாமல், மக்களுக்கு கிறிஸ்துவை அறிவித்தனர் என்றால், அதற்கு காரணம், இறைவனின் வல்லமை தான். இயேசுவின் சீடர்கள் படிக்காத பாமரரர்கள். இயேசு தான் அவர்களை வழிநடத்தினார். இயேசுவைக் கொலை செய்தபோது, அதிகாரவர்க்கத்தினர் சீடர்களை எளிதாக அச்சுறுத்தி சமாளித்து விடலாம் என்று நினைத்திருந்தார்கள். அவர்கள் எதிர்பார்த்தது போலவே, இயேசுவின் இறப்பிற்கு பிறகு, சீடர்கள் அறைகளில் தங்கி ஒளிந்து கொண்டிருந்தனர். ஆனால், இயேசுவின் உயிர்ப்பு...

இயேசு அருளும் நிறைவாழ்வு

“நான் ஆடுகள் வாழ்வைப் பெறும்பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும்பொருட்டு வந்துள்ளேன்” என்னும் இயேசுவின் மிகப் பிரபலமான இந்த சொற்களை இன்று நாம் சிந்திப்போம். நாம் அனைவரும் வாழவேண்டும் என்பதுதான் இறைவனின், இறைமகன் இயேசுவின் விருப்பம். நாம் துன்புறவேண்டும், மடியவேண்டும் என்பது இறைத் திருவுளமாக இருக்க முடியாது. இதனை நம் விசுவாசத்தின் அடிப்படைக் கோட்பாடாக ஏற்றுக்கொள்ள வேண்டும். இரண்டாவதாக, நாம் நிறைவாழ்வு பெறவேண்டும் என்பது இயேசுவின் விருப்பம். வாழ்வது ஒருமுறை, அந்த ஒரு வாழ்வும் நிறைவானதாக, முழுமை பெற்றதாக அமைய வேண்டும். மானிடர்களின் உளவியல் தேவைகள் பற்றி ஆய்வுசெய்த ஆபிரகாம் மாஸ்லோ என்னும் அறிஞர் “ஆளுமை நிறைவுத் தேவை” (Self Actualization) என்பதையே மானிட நிறைவுத் தேவையாகக் குறிப்பிட்டார். இயேசுவின் நிறைவாழ்வு என்பதுவும் அதுவே. எந்த நோக்கத்துக்காக இறைவன் நம்மைப் படைத்தாரோ, அந்த நோக்கம் நிறைவேறும்படி வாழ்வதுதான் நமது நிறைவாழ்வு. “தந்தை எனக்குக் கொடுத்த வேலையைச் செய்துமுடிப்பதே என் உணவு” (யோவா 4:...

இறைவன் அனைவருக்கும் தந்தை

இஸ்ரயேல் மக்கள் தாங்கள் தான் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் என்ற எண்ணத்தில் வாழ்ந்து கொண்டிருந்தனர். அவர்களின் இந்த எண்ணம் மற்றவர்களை ஏளனமாகப்பார்க்கக் காரணமாகியது. தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட இனம் என்கிற எண்ணம் பரந்துபட்ட பார்வையில் நல்லதுதான். ஆனால், அத்தகைய எண்ணம் தான், இஸ்ரயேல் மக்களின் அழிவுக்கும் காரணமாக அமைந்தது. தங்கள் வழியாக மற்றவர்களும் ஆசீர்வதிக்கப்பட வேண்டும் என்ற பரந்துபட்ட எண்ணத்தைக்கொண்டிராமல், தங்கள் மூலம் இறைவன் மற்றவர்களை அழித்தொழிக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள். தொடக்கத்திலிருந்தே இறைவாக்கினர்கள் இந்த கருத்தை மெதுவாக மக்கள் மனதில் விதைத்துக்கொண்டுதான் இருந்தார்கள். ஆனால் மக்கள்தான் அதனை முழுமையாக ஏற்றுக்கொள்ள இயலாத அளவுக்கு, அதனை மூடிவைத்திருந்தனர். நற்செய்தியாளர்கள் ஒவ்வொருவரும் அவரவர் பாணியில் நற்செய்தியை எழுதினாலும், ஒட்டுமொத்தத்தில், இந்த உலகம் முழுவதிற்கும் ஆண்டவர்தான் அரசர் என்ற கருத்தை ஒட்டுமொத்தமாக வலியுறுத்தினர். ஆண்டவர் அனைவருக்கும் பொதுவானவர். அனைவரையும் அன்பு செய்யக்கூடியவர். ஆண்டவரின் பார்வையில் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற வேறுபாடு இல்லை. வேற்றுமையை அகற்றி, அனைவரையும்...