Tagged: இன்றைய வசனம்

இன்றைய வாக்குத்தத்தம்: அன்றியும் அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம். ரோமர் 8:28

இன்றைய வாக்குத்தத்தம்: அன்றியும் அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம். ரோமர் 8:28

நாவின் அதிகாரம்

அன்பின் இறைவா! இந்நாளின் கிருபைக்காக உம்மிடம் வருகிறோம். நாவினால் நாங்கள் பாவம் செய்யாதபடிக்கு உமது பிள்ளைகளாய் ஒவ்வொருவரும் உம்மிடத்தில் வருகிறோம். அன்பான சகோதர,சகோதரிகளே, நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் கடவுளின் நியாயத்தீர்ப்பில் கணக்கு கொடுக்க வேண்டும் என்று  வாசிக்கிறோம். மத்தேயு 12:36-37. நாம் நம் பேச்சிலும், வார்த்தையிலும், அடிக்கடி தவறுகிறோம். பேச்சில் தவறாதோர் நிறைவு பெற்றவராவர். அவர்களே தம் முழு உடலையும் கட்டுப்படுத்த வல்லவர் என்று காண்கிறோம். யாக்கோபு 3:2. கப்பலை பாருங்கள், அது எத்தனை பெரியதாக இருந்தாலும் கடுங்காற்றில் அடித்து செல்லப்பட்டாலும், கப்பல் ஓட்டுவர் சிறியதொரு சுக்கானைக்கொண்டு தாம் விரும்பும் திசையை நோக்கி கப்பலை திருப்புவார்கள். நம்முடைய நாக்கும் அதுபோல் நம் உடம்பில் மிக சிறிய உறுப்பாக இருந்தாலும் பெரிய காரியங்களை சாதிப்பதாக பெருமை அடிக்கிறது. யாக்கோபு 3:4. அதுமட்டுமல்ல தீப்பொறியை போல் நாம் பேசும் தகாத வார்த்தைகளால் வாழ்க்கை சக்கரம் முழுவதையும், எரித்துவிடுகிறது. அன்பானவர்களே, நல்ல நீரும், உவர்ப்பு நீரும், எப்படி ஒரே ஊற்றிலிருந்து சுரக்காதோ, இதைப்போல் நம் வாயில்...

ஒருவரை ஒருவர் வாழ்த்துங்கள்

கடவுளின் பேரில் நம்பிக்கை கொண்டு அவரையே தெய்வமாக ஏற்றுக்கொண்டு, கடவுளின் பிள்ளைகள் என்ற உரிமையை பெற்று வாழும் எனக்கு அன்பானவர்களே! உங்கள் ஒவ்வொருவரையும் நானும் நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய பெயரால் வாழ்த்துகிறேன். யோவான் 1:12. பிரியமானவர்களே! உங்களுக்கு ஓன்று தெரியுமா? நாம் எதை மற்றவர்களுக்கு செய்ய நினைக்கிறோமோ, அதுவே நமக்கும் கிடைக்கும். நீங்கள் உங்கள் அடுத்திருப்போரை வாழ்த்துவீர்களானால் நீங்கள் கடவுளால் வாழ்த்தப்படுவீர்கள். அதனால்தான் ஆண்டவர் பகைவரிடமும், அன்பு கூருங்கள். உங்களை துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். இதைச் செய்தால் நாம் விண்ணகத்தந்தையின் மக்கள் ஆவோம். மத்தேயு 5:44-45.   உங்களிடம் அன்பு செலுத்துவோரிடம் மட்டும் அன்பு செலுத்தினால் அதினால் கைம்மாறு என்ன கிடைக்கும்? இதை உலக மக்கள் யாவரும் செய்கிறார்கள்.நாம் கடவுளின் பிள்ளைகள் என்பதற்கு என்ன சாட்சி இருக்கிறது? உங்கள் சகோதர,சகோதரிகளுக்கு மட்டும் வாழ்த்து சொல்வீர்களா னால் நீங்கள் விசேஷித்து செய்த காரியம் ஒன்றுமில்லையே? மத்தேயு 5 – 47. பவுல் எழுதிய ஒவ்வொரு கடிதத்திலும் கடைசியாக வாழ்த்து கூறி எழுதியிருக்கிறதை காணலாம். விவிலியம்...

சகோதர அன்பு

 நாம் யாவரும் கடவுளின் மக்கள் என்று அழைக்கப்படுகிறோம். கடவுள் நம்மிடம் எத்துனை அன்பு கொண்டுள்ளார்,என்று பாருங்கள். 1 யோவான் 3:1. ஆண்டவரிடம் எந்தவொரு பாரபட்சமும் இல்லை. அவருடைய  சாயலாக படைக்கப்பட்ட நம் எல்லோரையும் சகோதர,சகோதரிகளாய்  அவருடைய உறுப்பாய் இருக்கும்படி படைத்திருக்கிறார். உடல் ஒன்றே: உறுப்புகள் பல, உடலின் உறுப்புகள் பலவாயினும் உடல் ஒன்றாயிருப்பதுபோல நாமும் கிறிஸ்துவின் உறுப்புகளாய் இருக்கிறோம். 1 கொரிந்தியர் 12 :12- 13. நீங்கள் யூதரா? கிரேக்கரா? செல்வந்தரா? அடிமையா? நாம் எல்லோரும் ஒரே தூய ஆவியால் ஒரே உடலாய் இருக்கும்படி திருமுழுக்கு பெற்று அந்த ஒரே ஆவியையே பானமாகவும் பெற்றோம். இவ்வாறு கடவுள் நம்மை படைத்திருக்கும்பொழுது நமக்குள் ஏன்  கோபம், சண்டை, பொறாமை, பகைமை, பிரிவினை, கட்சிமனப்பான்மை, கலாத்தியர் 5:20. இதையெல்லாம்விட்டு நாம் யாவரும் ஆண்டவர் விரும்பும் பிள்ளைகளாக மாறி வாழுவோம். ஆவியின் கனியாகிய அன்பு மகிழ்ச்சி,அமைதி,பொறுமை,பரிவு,நன்மை,நம்பிக்கை,கனிவு, தன்னடக்கம்,இவைகளைப் பற்றிக்கொண்டால் நம்மிடம் அன்பு நீரூற்றைப்போல் ஊறும். கலா 5: 22 நாமும் அவருடைய உறுப்பாய் மாறுவோம் என்பதில் ஐயமில்லையே! ஒருவர்...

பரிந்து பேசுகிற நம் தந்தை

கடவுளுக்கு மிகவும் பிரியமான அன்பான செல்வங்களே!!!      இன்று நீங்கள் எனக்காக பரிந்து பேச யாருமில்லையே! என்று கவலைப்படுகிறீர்களா? நான் என்ன செய்தாலும் அதில் குறை, குற்றம்,என்று சொல்கிறார்களே என்று கலங்கித் தவிக்கிறீர்களா?      உங்களுக்காக பரிந்து பேசுகிற ஒருவர் உண்டு, என்பதை நீங்கள் யாவரும்  தெரிந்து கொள்ள வேண்டும், என்று விரும்புகிறேன். அவரே நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து. 1 யோவான் 2 :1 மற்றும் 2 என்ற வசனத்தை வாசித்து பார்ப்போமானால் நன்கு விளங்கும்.     அதுமட்டுமல்ல, நாம் அறிந்தோ,அறியாமலோ, செய்யும் பாவங்களை நமக்கு மன்னித்து விண்ணுலகின் தந்தையிடம் பரிந்து பேசி நமக்கு எல்லா கவலைகளிலும் இருந்து விடுதலை வாங்கித் தருகிறார்.அவரை ஏற்றுக்கொண்டு அவரையே நம்புவீர்களா? பிள்ளைகளே, தந்தையரே, தாய்மார்களே, வாலிப சகோதரரே,  சகோதரிகளே, சிறுவர்களே, நீங்கள் யாவரும் கடவுளின் கடவுளின் வார்த்தையில் நிலைத்திருங்கள். 1 யோவான் 2 :12லிருந்து 17 வரை உள்ள வார்த்தைகளை தியானியுங்கள். உலகின் மீதும் அதில் உள்ளவை மீதும் அன்பு...