Tagged: இன்றைய வசனம் தமிழில்

செபத்தின் வல்லமை

சோதனைகளும், சோகங்களும் தவிர்க்க முடியாதவை. அந்த சோதனைகளையும், சோகங்களையும் எதிர்கொள்வது எளிதானதும் அல்ல. அதே வேளையில் அவற்றிற்கு நாம் பலியாகிவிடக்கூடாது என்று, இயேசு நமக்கு அழைப்புவிடுக்கிறார். நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே, இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. அவர் இந்த மண்ணகத்தில் வாழ்ந்தபோது, சந்திக்காக சோதனைகளும், சோகங்களும் கிடையாது. ஆனால், அவற்றையெல்லாம், அவர் தவிடுபொடியாக்கினார். தன்னுடைய சோகங்களை, சோதனைகளை தவிடுபொடியாக்கிய தனது அனுபவத்தின் மூலமாக, நமக்கும் அவர் இன்றைய நற்செய்தி வாசகத்தின் மூலமாகக் கற்றுத்தருகிறார். இயேசு நமக்கு தருகிற ஆலோசனை: ”விழிப்பாயிருந்து மன்றாடுங்கள்”. செபம் தான், வாழ்வின் சோதனைகள் மற்றும் சோகங்களிலிருந்து நமக்கு விடுதலை தரவல்லவை. கண்ணியிலிருந்து சிக்க வைப்பதற்கு வல்லமை படைத்தவை. நமது வாழ்க்கை செபத்தில் கட்டியெழுப்பப்பட வேண்டும். நாம் சரியான முடிவுகள் எடுப்பதற்கும், நமது வாழ்வை சரியான பாதையில் நடத்துவதற்கும் செபம் தான் சிறந்த அருமருந்து. இயேசு பகல் முழுவதும் மக்களுக்குப் போதித்து வருகிறார். பல தூரங்களுக்கு கால்நடையாக நடந்து...

இயற்கையைப் பாதுகாப்போம்

இயற்கை நமக்கு இறைவனால் கொடுக்கப்பட்டிருக்கிற வரப்பிரசாதம். மரங்களும், விலங்குகளும் இயற்கையோடு இணைந்தவை. அவை நமக்கு சில அடையாளங்கள் வழியாக பல செய்திகளைத் தருகிறது என்பது நாம் அறிந்த ஒன்று. குறிப்பாக, மரங்கள் செழித்து வளர்வது, இலைகளை உதிர்ப்பது, காய் காய்ப்பது, கனி தருவது என்பதான ஒவ்வொரு செயலும், பருவநிலைகளைப்பற்றிய செய்திகளின் வெளிப்பாடாகத்தான் இருக்கிறது. ஒரு மரத்தை வைத்தே, காலத்தையும், நடக்க இருக்கிற நிகழ்வுகளையும் நாம் அறிந்து கொள்ள முடியும். அப்படித்தான் இன்றைய நற்செய்தியிலும், அத்திமரத்தை வைத்து, இயேசு நமக்கு ஒரு செய்தியைத் தருகிறார். இயற்கையோடு இணைந்த வாழ்வு தான் இயேசுவின் வாழ்வு என்றால் அது மிகையல்ல. இயேசு இயற்கையை அதிகமாக நேசித்தார். இயற்கையை வைத்தே பல செய்திகளை, இறையாட்சியைப் பற்றிய கருத்துக்களை மக்களுக்கு வழங்கினார். இன்றைய நவீன உலகில் மனிதன் இயற்கையை விட்டு எங்கோ சென்றுவிட்டான். அதன் பலனையும் அதற்காக அனுபவிக்கத் தொடங்கிவிட்டான். புதுப்புது நோய்கள், மனக்குழப்பங்கள், மன நலன் சம்பந்தப்பட்ட...

எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள் !

இன்று திருவருகைக் காலத்தைத் தொடங்குகிறோம். ஆண்டுக்கு ஒருமுறை இறைமகன் இயேசுவின் இரு வருகைகளைப் பற்றியும் நமக்கு நினைவூட்டுகிறது திருச்சபை. முதல் வருகை மீட்பின் வருகை. வரலாற்றில் நிகழ்ந்து முடிந்துவிட்ட ஒன்று. அந்த வருகையை மகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்து கொண்டாடவும், நன்றி கூறவும், மீட்பின் ஒளியில் வாழவும் அழைக்கப்படுகிறோம். இரண்டாம் வருகை தீர்ப்பின் வருகை. இனிமேல்தான் நடக்க இருக்கிற வருகை. அந்த வருகைக்காக ஆவலுடன் காத்திருக்கவும், ஆயத்தமாயிருக்கவும் நினைவூட்டப்படுகிறோம். இந்த நினைவூட்டலில் மூன்று தளங்கள் இருக்கின்றன: 1. எப்பொழுதும்: நம் ஒவ்வொருவரின் இறப்பும் நமக்கு இரண்டாம் வருகைதான். அது எந்த நேரத்திலும் நிகழலாம். 2. விழிப்பாயிருந்து: எல்லா நேரமும் நமது சிந்தனையும், சொற்களும், செயல்களும் இறைவனுக்கேற்றதாக இருக்கும்படி கவனமாக வாழ்வது விழிப்புணர்வு. 3. மன்றாடுங்கள்: இந்த விழிப்புணர்வோடு சேர்ந்து செல்வது மன்றாட்டு. செபிக்கும்போதுதான் நாம் விழிப்பை அடைகிறோம். விழி;ப்பாயிருந்தால்தான் நாம் செபிக்கவும் முடியும். எனவே, விழிப்பும் செபமும் ;இணைந்தே செல்ல வேண்டும். தாய்;த் திருச்சபையின்...

காத்திருப்போம்

தொடக்ககால கிறிஸ்தவர்களை கொடுங்கோல் மன்னன் நீரோ, கடுமையாக வதைத்தான். கொடுமைப்படுத்தினான். அவர்களை தீப்பந்தங்களாக அரண்மனையில் எரியவிட்டான். இவ்வளவு சித்திவதைக்கு நடுவிலும் இயேசுவை பற்றிப்பிடிக்க கிறிஸ்தவர்களைத் தூண்டியது அவர்களின் விசுவாசம். தங்களை அடித்தாலும், உதைத்தாலும், சிலுவையில் அறைந்தாலும், ஈட்டியால் குத்தினாலும், பொறுமையோடு அனைத்தையும் ஏற்றுக்கொள்ள திருத்தூதர்களைத்தூண்டியது இந்த விசுவாசம். தனது மகளைக்கொன்ற கொலைகாரனை தனது மகனாக ஏற்றது மட்டுமல்லாமல், அவன் விடுதலைபெற முயற்சி எடுத்த அருட்சகோதரி. இராணி மேரியின் குடும்பத்திற்கு உந்துசக்தியாக இருந்தது, அவர்கள் இயேசுவில் கொண்டிருந்த விசுவாசம். விசுவாசம் என்றால் என்ன? அபகூக்கு 2: 3 ”குறித்தகாலத்தில் நிறைவேறும் என்று எதிர்பார்க்கின்ற காட்சி ஒருக்காலும் பொய்க்காது. அது காலந்தாழ்த்தி வருவதாகக்கூறினாலும், எதிர்பார்த்துக் காத்திரு” என்று சொல்கிறது. இங்கே “காத்திரு” என்கிற வார்த்தைக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது. விசுவாசம் என்பது காத்திருத்தல். எப்படிக் காத்திருக்க வேண்டுமாம்? எபிரேயர் 11: 1 ல் சொல்லப்படுவது போல, ”எதிர்நோக்கி இருப்பவை கிடைக்கும் என்ற உறுதியோடு” காத்திருக்க வேண்டுமாம்....

யெருசலேமின் மேன்மை

யெருசலேம் தேவாலயம் இஸ்ரயேல் மக்களின் வாழ்வில் மையமாக இருந்தது. அது ஏதோ வானுயர்ந்த, மகிமைக்குரிய கட்டிடம் மட்டும் அல்ல. மாறாக, அது கடவுளின் பிரசன்னம் நிறைந்த இடம். கடவுள் வாழும் இடமாகக் கருதப்பட்டது. பகைவர் முதலில் கைப்பற்ற விரும்பும் இடமாகவும், அது கருதப்பட்டது. அப்படிப்பட்ட யெருசலேமையும், அதன் மையத்தில் அமைந்திருந்த தேவாலயத்தையும் பார்த்து, இயேசு இறைவாக்கு உரைக்கிறார். இயேசுவின் இறைவாக்கு அவரின் உயிர்ப்பிற்கு பிறகு வரலாற்றில் நிறைவேறியது. கி.பி. 70 ம் ஆண்டில், உரோமைப்படைகள் யெருசலேமிற்குள் நுழைந்தன. கற்கள் மேல் கற்கள் இராதபடி, அனைத்தும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். இலட்சக்கணக்கான பேர் நாடு கடத்தப்பட்டனர். தேவாலயம் தீக்கிரையாக்கப்பட்டது. யெருசலேம் கடவுளுக்கு பிரியமான இடம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதனால் தான், அங்கு அவருடைய பிரசன்னத்தைக் காட்டினார். ஆனாலும், இடம் மட்டும் கடவுள் வாழ்வதற்கான காரணமாகிவிடாது. மனிதர்களும் விசாலமானவர்களாக இருக்க வேண்டும். யெருசலேம் கள்வர்களின் குகையாகிப்போனது. ஏழை, எளியவர்களை...