Tagged: இன்றைய வசனம் தமிழில்

பாறைமீது கட்டப்பட்ட வீடு

ஆண்டவரே, ஆண்டவரே, என்று சொல்பவர், செபிப்பவர் விண்ணரசு சேரமாட்டார். மாறாக, தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வார் என்னும் ஆண்டவரின் மொழிகள் இறை நம்பிக்கையுடைய அனைவருக்கும் அறைகூவல் விடுக்கும் வசனம் இது. நமது இறைப்பற்று சொல்லில் முடங்கி விடாமல், செயல்களில் வெளிப்பட வேண்டும். செப ஆர்வலர்களுக்கும் வெல்விளியாக இச்சொல் அமைந்துள்ளது. செபக்குழுக்களில் சேர்ந்து செபிக்கிறவர்கள் தங்கள் வாழ்வு தந்தையின் விருப்பப்படி அமைய முயற்சிக்க வேண்டும். இல்லாவிட்டால், செபம் பயனற்றதாக மாறிவிடும். நமது இறைப் பற்றும் பாறைமீது கட்டப்பட்ட வீடு போல அமையட்டும். மன்றாடுவோம்: அழைத்தலின் நாயகனே இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். புனித சவேரியாரை மறைப்பணியாளராக அழைத்து, அவர் வழியாக நீர் எங்களுக்குத் தந்த விசுவாசம் என்னும் கொடைக்காக நன்றி கூறுகிறோம். அவரது எடுத்துக்காட்டாலும், பரிந்துரையாலும், எங்கள் வாழ்வும் தந்தையின் திருவுளத்திற்கேற்ப அமைவதாக! உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென். ~ அருள்தந்தை குமார்ராஜா

இயேசுவின் மகிழ்ச்சியான வாழ்வு

முப்பது ஆண்டு காலம் தனது பெற்றோருடன் மகிழ்ச்சியாக, கீழ்ப்படிதலோடு வாழ்ந்த இயேசு தனது பணிவாழ்வைத் தொடங்குகிறார். சாதாரண மக்களில் ஒருவராக வாழ்ந்த இயேசு, இனி தன்னை அடையாளப்படுத்தக் கொள்ள வேண்டிய நேரம் வந்ததும், அதற்கு தன்னையே தயார்படுத்துகிறார். இதுவரை அவரது வாழ்க்கையில், கவலை ஒன்றும் இல்லை. தனது தாயோடு, தாய்க்கு நல்ல மகனாக, வாழ்வின் இனிமையை உணர்ந்து, பூரிப்போடு இருக்கிறார். வாழ்க்கை இப்படிப்போனால், அது நன்றாகத்தான் இருந்திருக்கும். ஆனால், இயேசு அதற்காக வரவில்லை. அதையும் தாண்டிச்செல்லக்கூடிய பயணம் தான் அவரது வாழ்க்கை. அதற்காகத்தான் அவர் வந்திருக்கிறார். தனது நேரம் வருமளவும் பொறுமையோடு, பணிவோடு காத்திருக்கிறர். நேரம் வந்ததும், அதற்கான முழுவீச்சில் தனது பணியை ஆரம்பிக்கிறார். முப்பது ஆண்டுகள் தனது குடும்பத்தோடு வாழ்கிறபோது, அதை மகிழ்வோடு நிறைவோடு வாழ்கிறார். மூன்று ஆண்டு காலம் பொதுவாழ்க்கையில் ஈடுபட்டு, வாழ்ந்தபோதும் மகிழ்ச்சியாக வாழ்கிறார். ஆக, எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தாலும், மகிழ்வோடு வாழ்கிறார். இன்றைய நமது வாழ்க்கை...

இயேசுவைப்பின்தொடர்வோம்

இன்றைய வாசகம் (லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 21-24) மூன்று சிந்தனைகளைத் தருகிறது. முதல் சிந்தனை, எளிமையைப்பற்றியது. கடவுளின் திட்டத்தை ஞானிகளும், அறிஞர்களும் அறிந்துகொள்ளவில்லை. அவர்களால் புரிந்து கொள்ளவும் முடியவில்லை. மாறாக, குழந்தைகளுக்கு வெளிப்படுத்தப்பட்டது. குழந்தைகள் எதையும் திறந்த மனதோடு, இருப்பதை இருப்பதாகப்பார்ப்பவர்கள். எந்த ஒரு முன்சார்பு எண்ணத்தையும் வைத்துக்கொள்ளாதவர்கள். எளியவர்கள். அவர்களுக்குத்தான் கடவுளின் திட்டம் வெளிப்படுத்தப்படுகிறது. அர்னால்ட் பென்னட் என்கிற அறிஞர் சொல்வார்: ஒரு சிறந்த புத்தகம் எழுத வேண்டுமென்றால், நிகழ்வுகளை குழந்தையின் பார்வையில் பார்க்க வேண்டும். அது முற்றிலும் உண்மையானது. பெரியவர்களாகிய நாம் பலவித முன்சார்பு எண்ணங்களால் சிறைப்பிடிக்கப்பட்டு, நிகழ்வுகளை எளிமையாகக்காணாமல், முரண்பாடுகளோடு பார்க்கிறோம். அது தவறான பார்வை. இயேசுவுக்கும் தந்தைக்குமான தனித்துவமிக்க உறவை இங்கே நாம் பார்க்கிறோம். எனவேதான், யோவான் நற்செய்தயாளர் (யோவான் 1: 14) வார்த்தை மனுவுருவானார் என்று எழுதுகிறார். 10: 31 ல் இயேசு சொல்கிறார்: ”நானும் தந்தையும் ஒன்றாக இருக்கிறோம்”. 14:...

மனிதர்களை கடவுளின் சாயலாகப்பார்ப்போம்

நூற்றுவர் தலைவர்கள் புதிய ஏற்பாட்டில் மதிப்போடு குறிப்பிடப்படுகிறார்கள். இயேசு சிலுவையில் அறையப்பட்ட போது, இயேசுவை “உண்மையிலே இறைமகன்” என்று ஒரு நூற்றுவர் தலைவர் சொன்னதை நாம் வாசித்திருக்கிறோம்.(மத்தேயு 27: 54). இயேசுவை ஏற்றுக்கொண்ட முதல் புறவினத்தார் கொர்னேலியு ஒரு நூற்றுவர் தலைவர். (தி.பணி 10: 22) பவுல் உரோமைக்குடிமகன் என்று கேள்விப்பட்டதும், அவரைக்கலகக்கும்பலிடமிருந்து காப்பாற்றியவர் ஒரு நூற்றுவர் தலைவர். (தி.பணி 22: 26) யெருசலேமுக்கும் செசரியாவிற்கும் இடையே பவுலைக் கொல்ல முயற்சி நடந்தபோது, அந்த சதியை ஆயிரத்தவர் தலைவரிடம் சொல்ல பவுலால் ஏற்பாடு செய்யப்பட்டவர் ஒரு நூற்றுவர் தலைவர்.(தி.பணி 23: 17) ஆளுநர் பெலிக்ஸ், பவுலை நன்றாகக்கவனித்துக்கொள்ள ஏற்பாடு செய்ததும் ஒரு நூற்றுவர் தலைவன்தான்.(தி.பணி 24: 23) உரோமைக்கான இறுதிப்பயணத்தின் போது, வெள்ளத்தினால் கப்பல் அலைக்கழிக்கப்பட்டபோது, அவருக்குத் தேவையான அனைத்தையும் செய்துகொடுத்து, பவுலை தலைவராக ஏற்றுக்கொண்டதும் ஒரு நூற்றுவர் தலைவர் தான். (தி. பணி 27ம் அதிகாரம்). இன்றைய நற்செய்தியில் (+...

இறைவாக்கை வாழ்வோடு இணைப்போம்!

மத்தேயு நற்செய்தியில் இறுதிக்காலம் பற்றி வருகின்ற ஒரு பகுதியை இன்று வாசிக்கக் கேட்கிறோம் (மத் 24:37-44). இயேசுவின் இரண்டாம் வருகையை விழிப்போடு எதிர்பார்த்திருக்க வேண்டும் என்று இங்கே கிறிஸ்தவ சமூகத்திற்குச் செய்தி வழங்கப்படுகிறது. இதில் மூன்று சிறு உவமைகள் உள்ளன. அவற்றில் மானிட மகன் திடீரென்று, எதிர்பாராத நேரத்தில் வருவார் என்பது வலியுறுத்தப்படுகிறது. முதல் உவமை நோவா பற்றியது. அவருடைய காலத்தில் வாழ்ந்த மக்கள் அன்றாட செயல்களைச் செய்வதில் மூழ்கியிருந்தனர். அப்போது எதிர்பாராத விதத்தில் பெருவெள்ளம் வந்து அவர்களை அடித்துச்சென்றது. கிறிஸ்தவ சமூகமும் அன்றாடக் கவலைகளில் மூழ்கியிருந்துவிட்டுத் தங்கள் வாழ்க்கையின் இறுதி நோக்கத்தை மறந்துவிடலாகாது. அவர்களுக்கு வழங்கப்படும் செய்தி: விழிப்பாயிருங்கள்! கிறிஸ்துவை அணிந்துகொண்டு, கிறிஸ்துவின் வருகைக்காகக் காத்திருப்பதே உங்கள் வாழ்க்கைக் குறிக்கோளாகும் என்பதை மறந்துவிடாதீர்கள்! திருவருகைக் காலம் “எதிர்நோக்கிக் காத்திருக்கும்” காலம் ஆகும். எபிரேய மக்கள் மெசியாவின் வருகையை எதிர்பார்த்தனர் என்றும் அவர்களுடைய எதிர்பார்ப்புக்கள் இயேசு கிறிஸ்துவில் நிறைவேறின எனவும் நாம்...