இயேசுவின் பார்வையில் பெண்கள்
இயேசு முதன் முதலாக ஒரு பெண்ணிற்கு உயிர்த்த பிறகு தோன்றுகிறார். யூத சமுதாயம் ஓர் ஆணாதிக்கம் கொண்ட சமுதாயம் என்பது நமக்கு நன்றாகத் தெரியும். பெண்களை ஒரு பொருட்டாக மதிக்காத சமுதாயம். இயேசுவும் இந்த சமுதாயத்தில் பிறந்தவர் தான். ஆனாலும், பெண்களைப்பற்றிய இயேசுவின் பார்வை வேறுபாடுள்ளதாக இருக்கிறது. தான் வாழ்ந்தபோதே, பெண்களை மிகுந்த மதிப்போடு நடத்தியவர் இயேசுகிறிஸ்து. அவருடைய பார்வையில் ஆண், பெண் வேறுபாடு இல்லை. அனைவரும் கடவுளின் பிள்ளைகள். அனைவரும் கடவுளால் படைக்கப்பட்டவர்கள். எனவேதான், தனது தாயை அதிகமாக அவர் நேசித்தார். இயேசுவின் இந்த பார்வை பெண்களைப்பற்றிய உயர்ந்த பார்வை பார்ப்பதற்கு வழிகாட்டுகிறது. இயேசு வாழ்ந்தபோதும் சரி, இன்றைக்கு நற்செய்தியில் நாம் பார்ப்பது போல இறந்து உயிர்த்த பிறகும் பெண்ணுக்கு முன்னுரிமை கொடுக்கிறார். அன்புக்கு நாம் உதாரணமாக தாயைத்தான் சொல்கிறோம். எந்தச்சூழ்நிலையிலும், தனது பிள்ளையை விட்டுக்கொடுக்காதவர் நிச்சயம் நமது அன்னைதான். பெண்களை நாம் மதிக்கவும், அவர்களை மாண்போடு நடத்தவும் இயேசுவின்...